பிரேசில் நாட்டில் ரஜினி -ஷங்கர் டென்ஷன்


முன்னணி இதழ் ஒன்று ரஜினியின் இமேஜ் இப்போது எப்படியிருக்கிறது என்று சர்வே எடுத்திருக்கிறது. இதை படிக்கிற ரஜினி ரசிகர்கள், நூறு டிகிரி கொதி நிலைக்கு போவார்கள் என்பது மட்டும் நிச்சயம். இப்படியெல்லாம் சர்வே எடுக்காமலே தனது பிரச்சனையை புரிந்து வைத்திருக்கிறார் ரஜினி. சமீபநாட்களாக அவரது கவனம், இழந்த இமேஜை மறுபடியும் மீட்டெடுப்பது எப்படி என்பது பற்றிதானாம். தனக்கு நெருக்கமான சினிமா, மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் டிஸ்கஸ் செய்யும் ரஜினி விரைவில் அதிரடியாக எதையாவது அறிவிக்கக் கூடும். இதற்கிடையில், சூப்பர் ஸ்டாரின் டென்ஷன் டைரக்டர் ஷங்கரையும் தொற்றிக் கொண்டிருக்கிறது.

கடந்த முறை அமெரிக்காவில் ரோபோவுக்காக போட்டோ செஷன் நடந்து கொண்டிருக்கும் வேளையில்தான் தியேட்டர்காரர்களின் ஆர்ப்பாட்டம். கேள்விப்பட்ட ரஜினி, அப்படியே அதை பாதியில் போட்டுவிட்டு சென்னைக்கு வந்துவிட்டார். இதனால் கொஞ்சம் அப்செட்டில் இருந்த ஷங்கர், இந்த முறை எப்படியாகுமோ? என்ற படபடப்பில் இருக்கிறார்.

செப்டம்பர் 5-ந் தேதி பிரேசில் நாட்டில் ரோபோ படத்தின் முதல் நாள் ஷ§ட்டிங்கிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. எவ்வித டென்ஷனும் இல்லாமல் ரஜினி அதில் கலந்து கொள்ள வேண்டும் என்பதுதான் ஷங்கரின் இப்போதைய கவலையாம்.

மௌனம் கலைப்பாரா சூப்பர் ஸ்டார்?


எல்லாரும் தங்கள் பங்கி்ற்கு செய்தாயிற்று

கிட்ட தட்ட அனைத்து பத்திரிக்கைகளும் கவர் ஸ்டோரி, விவாத மேடை, மொட்டை கடிதம், பகிரங்க கடிதம் உள்ளிட்ட அனைத்தையும் எழுதி தீர்த்துவிட்டன.

ரசிகர்களும் அவர்கள் பங்கிற்கு நோட்டீஸ், துண்டு பிரசுரங்கள், கோரிக்கை மனுக்கள் உள்ளிட்ட பலவற்றை ரஜினிக்கு அனுப்பி தீர்த்துவிட்டனர்.

ப்ளாக் மற்றும் வெப் சைட் நடத்துபவர்கள் தங்கள் பங்கிற்கு ரஜினிக்கு ஆலோசனைகள் அள்ளி வழங்கிவிட்டனர்.

(The above pic is very high resolution. Just CLICK to Zoom)

தற்காலிக வெற்றியில் திளைத்துகொண்டிருக்கும் வயிற்றெரிச்சல் கும்பல் குசேலன் தோல்விக்கான காரணங்களையும் வசூல் குறித்த புள்ளிவிவரங்களையும் வெளியிட்டு அதை தினம் தினம் படித்து அல்ப சந்தோஷப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

திரையுலகில் உள்ள சிலர்/பலர் தங்கள் கவலைகளை தற்காலிகமாக மறந்துவிட்டு குசேலன் சர்ச்சை குறித்து நிம்மதி பெருமூச்சு விட்டுகொண்டிருக்கின்றனர்.

ஒவ்வொரு முறையும் ரஜினியை சோதனைக்காலம் சூழும்போதும் தங்கள் பங்கிற்கு அவரை தாக்கி அறிக்கைவிட்டு குளிர்காயும் அரசியல்வாதிகள் மட்டும் இம்முறை விட்டுவிட்டனர். (தங்கள் எதிரி அவர் அல்ல என்று நினைத்தார்களோ என்னவோ?)

ஆனால் மகா அழுத்தக்காரரப்பா நம்ம ஆள். ஏதாவது ஒன்றுக்காவது - வெளிப்படையாக ஒரு சின்ன ரியாக்க்ஷனாவது - காட்ட வேண்டுமே…? ஹூ…ஹூம்…!!

சூப்பர் ஸ்டார் மனம் திறக்க வேண்டும்…

நம் வலைத்தளத்தில் கமெண்ட் செய்பவர்கள் உள்ளிட்ட மற்றும் நான் சந்திக்கும் பிற நண்பர்கள், சூப்பர் ஸ்டார் - இந்த சூழ்நிலையில் - ‘வருத்தம்‘ சர்ச்சை மற்றும் குசேலன் வியாபாரம் குறித்து மனம் திறந்து - நடந்தது என்ன என்று ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் சொல்லவேண்டும் என்றும், கண்டிப்பாக சொல்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர். மற்றும் பலர் சூப்பர் ஸ்டாரின் உரையை இது சம்பந்தமாக கேட்பதற்கு ஒவ்வொரு நொடியும் காத்திருப்பதாக தெரிவித்தனர்.

ஆனால் அவர் மௌனம் கலைப்பாரா?

அவரை நன்கு அறிந்தவர்கள் மற்றும் அவர் நடவடிக்கைகளை இது போன்ற சூழ்நிலைகளில் பல காலம் கூர்ந்து கவனித்தவர்கள் கூறுவதாவது, “வருத்தம் குறித்த சர்ச்சையில் ரஜினி மேலும் விளக்கமளிப்பார் என்று ஒரு எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் கிட்டத்தட்ட மறக்கபட்டுவரும் அந்த நிகழ்வை மறுபடியும் பேசி ரஜினி நினைவூட்டமாட்டார். அப்படி ‘வருத்தம்‘ சர்ச்சையை பற்றி அவர் வெளிப்படையாக பேசினால், மக்களுக்கு விளக்கிகூறினால், அரசியலில் உள்ள மூத்த தலைவர் ஓருவருக்கும், திரையுலகில் அவர் மிகவும் மதிப்பு வைத்துள்ள ஒருவருக்கும் தான் சங்கடங்கள் நேரும். அது அவருக்கு நன்கு தெரியும். ஏனெனில் வருத்தம் சர்ச்சையில் ஒருவருக்கு நேரடியாகவும் இன்னொருவருக்கு மறைமுகமாகவும் தொடர்பு உண்டு.”

மனம் திறந்து பேசுவதில் உள்ள சிக்கல்

காவிரி உண்ணாவிரத அறிவிப்பின்போது கொதித்தெழுந்து ஆவேசத்துடன் அவர் ஆற்றிய உரை போன்று இப்பொழுதும் ஆற்றமுடியும். ஆனால் அப்படி உரையாற்றினால் ஹொகேனக்கல் பிரச்னையில்ன் தமிழக மக்களுக்கு உண்மையிலேயே துரோகம் செய்தது யார் என்று அவர் கூறவேண்டியிருக்கும். அதே போன்று வருத்தம் சர்ச்சையில் நடந்தது என்ன என்று அவர் உள்ளபடி கூறினால் திரையுலக முக்கியஸ்தர் ஒருவரது மண்டை தான் உருளும். எனவே மேற்கண்ட பிரச்னையில் அவர் தனது தரப்பு நியாங்களை கூற வழியே இல்லை.

ஒரு குடும்பத்து பிரச்னை

அதேபோல், குசேலன் விற்பனை மற்றும் அதன் நஷ்டம் குறித்து வெளிப்படையாக தனது கருத்தை அவர் கூறவும் வாய்ப்பேயில்லை. பத்திரிக்கைகள் அவற்றை முதல் பக்க செய்தியாகிவிட்டபோதும், அவர் அதை தனது கலை குடும்பத்து பிரச்சனையாகவே பார்க்கிறார். நடக்கும் சம்பவங்களை கூர்ந்து பார்த்தால் சாய் மீரா கூட இது குறித்து எதுவும் பகிரங்கமாக பேசவில்லை என்பது புலனாகும்.

ஒரு குடும்பத்துள் நடக்கும் இந்த சங்கதிகளை ஒரு சில விஷம சக்திகளின் தூண்டுதலினால் திரையரங்கு உரிமையாளர்கள் பகிரங்கபடுத்திவிட்டனர். சூப்பர் ஸ்டார் யார் என்ன நினைத்தாலும் இது குறித்து பகிரங்கமாக பேசமாட்டார். (பாபா படத்தின்போது கூட நஷ்ட ஈடு வழங்குவதை அவர் வெளிப்படையாக பேசியதில்லை. புள்ளிவிவரங்களை அடுக்கியதில்லை. அது ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் விஷயம் என்று அவர் நினைத்தது தான் காரணம்)

இது போன்ற சூழ்நிலைகளில் அவர் செய்வது என்ன?

இது போன்ற “அவர் கருத்தை” எதிர்பார்க்கும் சூழ்நிலைகளில் அவர் பெரும்பாலும் ஏதாவது நிகழ்ச்சிகளையோ அல்லது மேடைகளையோ பயன்படுத்திகொள்வார். இல்லையெனில் தனது அடுத்த படத்தில் அதற்கான பதிலை வைப்பார். நீண்ட காலமாக ரஜினியிடம் உள்ள வழக்கம் இதுதான்.

கோவை குண்டுவெடிப்பிற்கு பிறகு நடந்த 1998 பாராளுமன்ற தேர்தலில் அவர் ஆதரவு தெரிவித்த தி.மு.க. - தா.மா.கா. கூட்டணி தோல்வியடைந்தபோது ரசிகர்கள் மத்தியில் இதே போன்று ஒரு இறுக்கமான சூழல் நிலவியது. (முதல் தேர்தல் வாய்ஸ் தோல்வியல்லவா!) ஆனால் பல பத்திரிக்கைகள் பலவாறு எழுதியும், சூப்பர் ஸ்டார், தோல்வி குறித்து வாயே திறக்கவில்லை. அவரது பதிலை தெரிந்து கொள்ள அடுத்த ஆண்டு படையப்பா படம் வரும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

அதே சமயம் தன்னை குறித்த விமர்சனங்களுக்கு பதில் கூற நிகழ்ச்சிகளை பயன்படுத்திகொள்வதாக இருந்திருந்தால் சமீபத்தில் மோகன் பாபு பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியையே பயன்படுத்திகொண்டிருந்திருப்பார். ஆனால் இம்முறை அவரிடம் அப்படி ஒரு எண்ணமேயில்லை.

ரசிகர்கள் தான் அவரை குறித்த விமர்சனகளை கண்டு கவலைப்படுவார்களே தவிர தன்னை பற்றிய விமர்சனங்களை கண்டு கவலைப்படும் போக்கு ரஜினியிடம் என்றுமே இருந்ததில்லை.

(”என்னை பற்றிய விமர்சனங்களுக்கு நான் எந்த காலத்திலும் கவலைப்பட்டதே இல்லை.” - 1996 ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு அறிக்கையில் ரஜினி கூறியது.)

அவர் கவனம் தற்போது?

சீக்கிரம் குசேலன் பிரச்னையை தீர்த்துவிட்டு அடுத்த படமான ரோபோவி்ற்கு போவதில்தான் அவர் முழு கவனமும் உள்ளதாக தெரிகிறது. விமர்சனங்களை அவர் பொருட்படுத்தமாட்டார் என்றே தெரிகிறது.

எதிர்ப்பாளர்களுக்கு பதிலடி கொடுப்பதாக இருந்தால் கூட அது திரைப்படம் சார்ந்ததாகத்தான் இருக்குமே தவிர அவரிடமிருந்து தனிப்பட்ட முறையில் பேட்டியோ, அறிக்கையோ அல்லது உரையோ கிடைக்காது. மேலும் அவர் அது பேசினாலும் செய்தாலும் முன்னெப்போதையும்விட இப்பொழுது அதிகம் சர்ச்சையாக்கபடுவதால் மேற்கூறிய வழிகளை ரஜினி செலக்ட் செய்வதற்கு வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை.

எனவே அடுத்த படம் வெளிவரும் வரை காத்திருப்பதை தவிர வழியேஇல்லை. அதே சமயம் இந்த கணிப்புகளையெல்லாம் மீறி அவர் பேசினால் அது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்.

இவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள், செய்திகளுக்கு பிறகு அவர் குமுதம் குழுமத்திற்கோ அல்லது விகடன் குழுமத்திற்கோ இடையில் பேட்டி கொடுப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

சரி இதற்க்கு என்ன தான் தீர்வு?

என் அறிவிற்கு எட்டியதை கூறுகிறேன். இந்த கருத்து அனைவரிடமும் பரவினால் நன்று.

அதாவது இதற்குமுன் காவிரி பிரச்சனை எழுந்தபோது, இதே போல் ஒரு சூழ்நிலையை சந்தித்தார் ரஜினி. அப்பொழது உண்ணாவிரதம் இருந்து மக்கள் தன் பக்கம் என்பதை நிரூபித்தார். அதுவரை அவரைப்பற்றி தாறுமாறாக எழுதிவந்த பத்திரிக்கைகள் அதற்குபிறகு “மக்கள் எவ்வழியோ, பத்திரிக்கைகள் அவ்வழி” என்னும் முதுமொழிக்கேற்ப ரஜினியை ஆதரிக்க துவங்கின.

ஒரே வழி: மக்களை சந்திப்பது தான்

சமீபத்தில் நடந்த ஹொகேனக்கல் உண்ணா விரதத்து பேச்சின்போது கூடமக்கள் தன் பக்கம் என்று உணர்த்தினார் ரஜினி. வருத்தம் சர்ச்சை அதை தலைகீழாக்கி விட்ட நிலையில் அவர் மக்களை சந்திப்பது தான் இழந்துவிட்டதாக கூறப்படும் செல்வாக்கை மீட்க ஒரே வழி!

சும்மா தமிழகம் முழுதும் ஒரு சுற்றுபயணம் செய்தால் போதும். சுற்றுபயணம் செய்து அந்தந்த மாவட்டத்தில் உள்ள ரசிகர்களை சந்திப்பது, மன்றத்து பிரமுகர்களின் இல்லத்து திருமணங்களில் கலந்துகொள்வது போன்ற நிகழ்ச்சிகளே போதும். சுருங்கக்கூறினால் ரசிகர்களிடமும் மக்களிடமும் அவர் நெருங்கி வரவேண்டும். மைக்கை பிடித்து மக்கள் பிரச்னைகள் சிலவற்றை பட்டியலிட்டு தனது கவலைகளை அவர் பகிர்ந்து கொண்டால் கூடுதல் நலம். அவர் ஒரு அடி மக்களை நோக்கி எடுத்து வைத்தால் மக்கள் அவரை நோக்கி பத்து அடி எடுத்து வைப்பார்கள்.

அவருக்கு திரளும் மக்கள் சக்தி ஒன்றே பத்திரிக்கைகளின் வாயை மூடும் உலை மூடி.
(என்ன, ரஜினிக்கு அரசியல் ஆசை வந்துவிட்டது என்று கூறுவார்கள். பரவாயில்லை. எதையெல்லாமோ எழுதி்விட்டார்கள். இதை எழுதுவதால் என்னவாகப்போகிறது?)

இது போன்று ‘இமேஜ் மீட்பு’ நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல் அவர் நேரடியாக தனது அடுத்த படத்தை வெளியிடுவது மிக மிக ஆபத்து. இதற்க்கு முன்பு இருந்த சூழல் தற்போது இல்லை.

நண்பர்கள் தயவு செய்து புரிந்துகொள்ளவேண்டும். நான் அவர் அரசியக்கு வரவேண்டும் என்று சொல்லவில்லை. மக்களை சந்திக்கவேண்டும் என்று தான் சொல்கிறேன்.

இதுவரை இந்த முப்பதாண்டுகளில் சென்னையை விட்டு தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு ஒன்றிரண்டு முறைகள் மட்டுமே ரஜினி வந்துள்ளார். அவர் சென்னையை விட்டு நகராமலே இந்தளவு மக்கள் செல்வாக்கை பெற்றிருக்கிறார். அவர் மக்களை சந்திக்க துவங்கினால் எப்படியிருக்கும்? என்னவாகும் தமிழக அரசியல்?

இப்போது புரிகிறதா அரசியல் கட்சிகள்/பத்திரிக்கைகள் ரஜினியை மட்டும் ஏன் இப்படி குறி வைக்கின்றன என்று?

“தனது பலம் தானறியாத ரஜினி இதையெல்லாம் செய்வாரா?”

உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அது தான் எனக்கும் தோன்றுகிறது.

என்ன செய்வது? இறைவனை வேண்டுவதை தவிர வேறு வழி இல்லை!!

Robot to take off by September 1st week?


While the possibility of a quickie before Robot is still under speculation and no further news could be collected regarding that here comes a news abt Robot from Ayngaran - the producer himself.
Reports say that once Superstar solves the Kuselan crisis - after a few days break - he will start the Robot. Meanwhile he will sketch out a plan to energize his fans and bring back them to normalcy.
I already said that predicting the right move of the Superstar is not an easy task and even giant media houses fail in that.
The news about possible quicky is just circulating in websites and blogs like us. But till now we don’t know what is in Superstar’s mind. Whatever he decides, it will be right and we should support that. He knows to decide wisely in such critical situations.
The following news is from Ayngaran.com
News Date: 23rd Aug, 08//The Mega (budget) and Maha (technical) Project of Tamil Film Industry “ROBOT” shoot is planned by Ayngaran (Producer) to start on September 1st Week of 2008. The squad is being prepared by a huge team who are working 24×7 to complete the first schedule shoot in a big way at Brazil. For regular updates about ROBOT, visit www.ayngaran.com at regular intervals.//
http://www.ayngaran.com/newsdetails.php?newsid=45

Rajini and politics: A complete analysis!! - rediff.com


Friends, just sharing an article from rediff which i read. This article analyzes political fortunes of Superstar. Just passing you what i read. Thanks to our reader Subramanian for informing me about this article.
Why Rajnikanth won’t enter politics

Why Rajnikanth won’t enter
politics


August 29, 2008
M R VENKATESH


At the outset I owe a frontal confession — I am an unabashed fan of
Rajnikanth.


I literally grew up with Rajni, his mannerisms, quirky actions, peculiar
delivery style, not to mention his punch dialogues. I recall that he was the
popular hero during our college days. My colleagues in college competed with
each other to mimic him — from copying his hairstyle to the manner in which he
walked, talked and danced.


That was when he was a popular hero. Slowly yet surely in the next few years
by the dint of his hard work, Rajni went on to acquire a larger than life image.
I have watched him grow from that position into a star and from a star into a
successful star and then into super star.


No wonder fans, media and more crucially his opponents interpreted his every
move. I distinctly recall how even an innocuous dialogue in one of his films in
the mid-nineties was interpreted to be politically loaded against the then chief
minister of the day, J Jayalalithaa. The story of the film incidentally was all
about taming of the shrew, which added more fuel to the political fire in the
state.


The climax of his first brush with politics followed almost instantly.
Claiming that if Jayalalithaa were to get re-elected, Rajni thundered, “Even God
cannot rescue Tamil Nadu.”


Leveraging the anti-Jaya wave that prevailed in the state at that point in
time, the state Congress actually split under the leadership of the late G K
Moopanar. It was not all. The Congress in its new
avatar as the Tamil Manila Congress, which till then held the Dravida Munnetra
Kazagham as responsible for the assassination of its leader Rajiv Gandhi,
suddenly began courting the party. Such was the power of Rajni who could make
and break political alliances.


Rajni has kept his fans
guessing


August 29, 2008


Following his clarion call, the DMK and TMC rode on his popularity to rout
the All India Anna Dravida Munnetra Kazagham and Jaya.


And when the DMK came to power in 1996, political analysts often remarked
that it was Rajni who defeated Jaya. The DMK and the TMC were mere
instrumentalities in that particular election. It was Rajni’s time. Yet he chose
not to take the plunge then.


Since then Rajni has kept his fans guessing (according to
die-hards, it is actually ‘waiting’). Even duets with his leading ladies were
strangely penned only for Rajni keeping in mind his probable entry into
politics. ‘Will he or won’t he,’ has been one of the questions that has kept his
fans, media and politicians in the state engrossed in a animated debate for over
a decade and a half.


While much water has flown through the Cauveri — the big question remains
unanswered even to this date.


Nevertheless, with each passing film his dialogues became more politically
loaded than the previous one, leaving lesser number in the audience in doubt on
his entry into politics. One realises, in hindsight that all these were aimed
more at satiating the appetite of his fans rather than implying anything
serious.


Readers may note that Rajni was the Tamil counterpart of the Big B (Amitabh
Bachchan) who has been labelled by the media as the angry young man of Hindi
cinema, but with a crucial difference. Rajni went a step further — he not only
protested against the system as Big B did, but also promised to cleanse the
system, even change it for the better.

நடப்பவற்றை கூர்ந்து கவனித்துவரும் சூப்பர் ஸ்டார்


குசேலன் படம் தொடர்பாக நாம் எதிர்பாராமல் நடந்த பல விஷயங்கள் சூப்பர் ஸ்டாரை மிகவும் சிந்திக்க வைத்துவிட்டதாம். நடக்கும் அனைத்தையும் அவர் தற்போது கூர்ந்து கவனித்து வருவதாகவும் சம்பவங்களை உள்வாங்கிகொண்டிருப்பதாகவும் நமக்கு கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
இதனிடையே ரசிகர்கள் தங்களுக்கு கிடைக்கும் அனைத்துவிதமான வாய்ப்புகள் மூலமாகவும் நோட்டீஸ்கள், துண்டு பிரசுரங்கள், கடிதங்கள் இவற்றை ரஜினியின் பார்வைக்கு அனுப்பி வருகின்றனர்.
ரசிகர்கள் இந்த அளவிற்க்கு மனம் வெதும்பும்படி அமைந்துவிட்டதே என்று அவர் மிகவும் வருத்தபடுவதாக தகவல்.
ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டியாயதன் அவசியத்தை அவர் உணர்ந்தேயிருக்கிறார்.
அவரது கவனத்தில் இருப்பது ஒன்றே ஒன்று தான்: அவரது அடுத்த ஸ்டெப் மிகவும் முக்கியமாதலால் அதை மிகவும் கவனத்துடன் எடுத்து வைக்க தீர்மானித்திருக்கிறார். தன் மீது சுமத்தப்பட்டுள்ள பழியை தீர்க்கும் விதமாக அது அமையவேண்டுமே என்ற தீவிர சிந்தனை அவருள் எழுந்துள்ளது.
இணைக்கப்பட்ட மாலை மலர் செய்தியில் நாம் ஏற்கனவே கூறியபடி திரையரங்கு உரிமையாளர்களின் முடிவு மற்றும் ரசிகர்கள் கூட்டத்திற்கு தளபதி சத்தி போட்ட தடை ஆகியவை குறித்து விரிவான தகவல் இடம்பெற்றுள்ளது.

பூப்பாதையால் கண்ட பலன் தான் என்ன?

கீழ் கண்ட தினத்தந்தி செய்தி உங்களில் சிலருக்கோ அல்லது பலருக்கோ தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்காக இந்த பதிவு.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற ஒரு எளிய நிகழ்ச்சி இது. இதில் கலந்து கொண்டு பேசியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பாக்யராஜ் மற்றும் மோகன்பாபு ஆகியோர். ஆக்ட்சுவலாக இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் கலந்து கொள்வதாக இருந்தது. தற்போதிருக்கும் சூழ்நிலையில் அவர் அதில் கலந்துகொள்ள விரும்பவில்லை. ஏனெனில் கலந்துகொண்டால் குசேலன் பிரச்னை குறித்து ஏதாவது பேசவேண்டும். அவர் எதை பேசினாலும் அதை ஒரு கூட்டம் சர்சையாக்கி காசு பார்த்துவிடுகிறதே…எனவே அவர் நிகழ்ச்சியை தவிர்த்துவிட்டார்.

நிகழ்ச்சியில் தமிழர்களின் அரவணைக்கும் தன்மை மற்றும் அவர்களது பரந்த மனப்பான்மை குறித்து டைமிங்காக பேசியிருக்கிறார் மோகன் பாபு . குசேலன் ரிலீசுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் பற்றி இது வரை ஒரு திரையுலக பிரமுகர் கூட வாய் திறக்காத நிலையில் பாக்யராஜ் அவரின் பாணியில் பேசி அசத்திவிட்டார். ரஜினி ரசிகர்கள் சார்பாக அவருக்கு நன்றி.

நண்பர் வினோ பாக்யராஜ்ஜின் உரை குறித்து ஒரு தனி பதிவு தந்துள்ளார்.
http://vinojasan.blogspot.com/

இதனிடையே நன்றாக போய் கொண்டிருந்த விழாவில் திரிஷ்டி பரிகாரம் போல் அமைந்தது சிம்புவின் திமிரான பேச்சு. ஒரு டஜன் படம் கூட நடிக்காத ஒரு பொடிப்பயல் - அதிலும் சொல்லிகொள்ளும்படி ஓடியது எதுவும் இல்லை. இவனெல்லாம் தலைவரை விமர்சிப்பது எவ்வளவு கொடுமை? அவரை விமர்சிப்பதற்கு கூட தகுதி வேண்டும்…இல்லையா?

தலையை வால் விமர்சிக்கலாம்; ஆனால் வாலில் உள்ள முடி கூடி விமர்சிப்பது என்பது இதுதான்.

படித்த பின் மனம் மிகவும் வலித்தது. பூப்பாதையால் கண்ட பலன் இதெல்லாம். சிவாஜியை இருக்கும் சூப்பர் ஸ்டார் என்று எம்.ஜி.யாராக மாறுகிறாரோ அன்று தான் இதெற்கெல்லாம் முடிவு ஏற்படும். அதுவரை அனைத்தையும் சகித்துக்கொள்ள நாம் பழகிக்கொள்ளவேண்டும்.

இணைக்கப்பட்டுள்ள தினத்தந்தி பக்கத்தை முழுமையாக படிக்கவும். பாக்யராஜ், மோகன்பாபு ஆகியோர் பேசியது நன்றாக தரப்பட்டுள்ளது.

ர‌ஜி‌னியை ‌சீ‌ண்டிய ‌சி‌‌ம்பு‌வி‌ன் ‌சிலேடை!

எ‌ன்னை தெ‌ரியுமா? பட ‌விழாவு‌க்கு ‌சி‌ம்பு‌வு‌ம் வ‌ந்‌திரு‌ந்தா‌ர். பட‌த்‌தி‌ன் நாயக‌ன் மனோ‌ஜ் குமா‌ர் ‌சி‌ம்பு‌வி‌ன் உ‌ற்ற ந‌ண்பரா‌ம். ஒரே வகு‌ப்‌பி‌ல் படி‌த்தவ‌ர்களா‌ம் இவ‌ர்க‌ள்.ந‌ண்பனு‌க்காக பட‌த்‌தி‌ல் இர‌ண்டு பாட‌‌ல்க‌ள் பாடி‌யிரு‌க்‌கிறா‌ர் ‌சி‌ம்பு. ‌சி‌ம்பு‌க்கு பாடுவதுட‌ன் ‌சிலேடையு‌ம் தெ‌ரியு‌ம் எ‌ன்பது அவ‌ர் பே‌ச்ச‌ி‌ல் வெ‌ளி‌‌ப்ப‌ட்டது.மனோ‌ஜ் குமா‌ர் எ‌ன்னுடைய ந‌ண்ப‌ர். அதனா‌‌ல் ‌விழாவு‌க்கு வ‌ந்‌திரு‌க்‌கிறே‌ன். மோக‌ன்பாபு‌வி‌ன் (மனோ‌ஜ் குமா‌ரி‌ன் த‌ந்தை) நெரு‌ங்‌கிய ந‌ண்ப‌ர் ர‌ஜி‌னி. ஆனா‌ல் அவ‌ர் வர‌வி‌ல்லை என‌்று த‌ன்னையு‌ம் ர‌ஜி‌னியையு‌ம் ஒ‌ப்‌பி‌ட்டு பே‌சினா‌ர். அதோடு முடி‌ந்ததா? இ‌ல்லை!பெ‌‌ரிய ஹ‌ீரோவாக இரு‌ந்தாலு‌ம் கதை‌யிரு‌ந்தா‌ல்தா‌ன் பட‌ம் ஓடு‌ம் எ‌ன்று குசேலனை கு‌த்‌தியவ‌ர், இ‌னிவரு‌ம் கால‌த்‌தி‌ல் டைர‌க்ச‌ன் தெ‌ரி‌ந்த நடிக‌ர்க‌ளி‌ன் பட‌ங்க‌ள் ம‌ட்டுமே ஓடு‌ம் என இடி‌த்துரை‌க்கவு‌ம் செ‌ய்தா‌ர்.வயது‌க்கு ‌மீ‌றி ‌திறமை இரு‌ந்தா‌ல் ர‌சி‌க்கலா‌ம். பே‌ச்‌சிரு‌ந்தா‌ல்...? ‌‌நிஜ‌த்தை பே‌சினாலு‌ம் நெருட‌த்தானே செ‌ய்யு‌ம்!

இந்த சூழ்நிலையில் வேண்டாமே…ரசிகர்களுக்கு தளபதி சத்தி வேண்டுகோள்!!

சென்னையில் வரும் புதன் கிழமை நடைபெறுவதாக இருந்த ரசிகர்கள் கூட்டத்திற்கு வெளிமாவட்டங்களிலிருந்து யாரும் வரக்கூடாது என்று தளபதி சத்யநாராயணன் தடை விதித்திருக்கிறார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இது போன்ற நடவடிக்கைகள் எவற்றிலும் ஈடுபட வேண்டாம் என்று ரசிகர் மன்ற பிரமுகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
ரசிகர்கள் அவசர கூட்டம் கூட்டபோவதாக அறிவிப்பு வெளியானதிலிருந்தே சூப்பர் ஸ்டாரின் தலைமை மன்றத்தில் பரபரப்பி தொற்றிகொண்டது.
இந்த சிக்கலான சூழ்நிலையில் இது போன்ற ஒரு கூட்டம் (எந்த நோக்கத்திற்காகவும்) நடை பெறுவதை தலைமை மன்றம் விரும்பவில்லை. எனவே சத்தி வெளிமாவட்டங்களுக்கு போன் செய்து “இங்கு கூட்டம் எதுவும் யாரும் ஏற்பாடு செய்யவில்லை. தயவு செய்து வரவேண்டாம். இன்றைய சூழ்நிலையில் இது போன்ற ஒரு ரசிகர் கூட்டம் நடைபெறுவதை ரஜினி சிறிதும் விரும்பமாட்டார். உங்களது கோரிக்கைகளையும், எண்ணங்களையும் நிச்சயம் அவரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். உங்களையே அது குறித்து அவரிடம் பேச ஏற்பாடு செய்கிறேன். அது வரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள். அவசரப்பட்டு ஏதாவது செய்து தலைவருக்கு சங்கடங்கள் ஏதும் ஏற்படுத்திவிடாதீர்கள்,” என்று தன்னிடம் பேசும் அனைத்து ரசிகர் மன்ற பிரமுகர்களுக்கும் அறிவுரை கூறியிருக்கிறார் சத்தி.
இது குறித்து நம்மிடம் பேசிய சென்னை நகர மன்ற நிர்வாகி ஒருவர் கூறியதாவது, “தளபதி சத்தி கூட்டம் பற்றி கேள்விப்பட்டால் நிச்சயம் இது போன்று கடிவாளம் போடுவார் என்று எங்களுக்கு தெரியும். அதனால் தான் பெயர் கூட போடாமல் அறிக்கை வெளியிட்டோம். அதையும் மீறி தளபதி எங்களை அடையாளம் கண்டுவிட்டார். அவரது வார்த்தையை தட்ட முடியாது. இருப்பினும் சூப்பர் ஸ்டாருக்கு எதிராக செய்யப்படும் அவதூறுகளுக்கும் குசேலன் படத்திற்க்கு எதிராக ஏவப்படும் பிரச்சாரங்களுக்கும் பதிலடி கொடுப்பது குறித்தாவது ஆலோசிக்க அனுமதி கோரியிருக்கிறோம். இது குறித்து மாற்ற மன்ற பிரமுகர்களுடன் பேசி வருகிறோம். நல்ல முடிவு எடுக்கப்படும்.”(அப்படி கூட்டம் நடந்தால் அதை உங்களுக்கு விரிவாக எனது இணையத்தில் விளக்குகிறேன்)
என்னை பொறுத்தவரை தளபதி சொல்வது சரிதான். மீடியா மேற்படி ரசிகர் மன்ற கூட்டத்தை ரஜினிக்கு எதிராகவே பிரச்சாரம் செய்யும் அபாயமிருக்கிறது. நல்லதோ கெட்டதோ - மீடியாவுக்கு ரஜினி வேண்டுமே…வலிய போய் பிரச்சனையை வாங்குவானேன்?
இந்த ரசிகர் மன்ற செய்தியை முதலில் பிரசவித்ததே நாம் தான். அப்படியிருக்க அதற்க்கு கை கால் வாய் முளைத்து எப்படியெல்லாம் ரஜினிக்கு எதிராக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பரவியிருக்கிறது தெரியுமா?
நண்பர் சரத் கண்ணன் எனக்கு ஒரு ஆங்கில வெப் சைட்டின் லிங்க் அனுப்பியிருந்தார். (கமெண்ட்ஸ் பகுதியில் அண்ணன் வஸி கூட இதைத்தான் கூறியிருக்கிறார்.) அதை ஓபன் செய்து பார்த்து அதிர்ந்துவிட்டேன். “குசேலன் தோல்வியை சரிக்கட்ட ரசிகர்கள் கூட்டத்தை கூட்டும் ரஜினி.” - இது எப்படி இருக்கு?
ஒரு செய்தி எப்படியெல்லாம் திரிக்கப்படுகிறது பார்த்தீர்களா?
தனது புதிய படங்களை கருத்தில் கொண்டு ரஜினி இது போல் ரசிகர் கூட்டத்தை தனது ராகவேந்தரா மண்டபத்தில் கூடியிருக்கிறாராம். இதற்கு முன் பாபா தோல்வியின் பொது கூட இப்படி செய்திருக்கிறாராம். அடப்பாவிகளா…பிரச்சனையே அது தானே!! இப்படியெல்லாம் எங்கள் தலைவனுக்கு சிந்திக்க தெரிந்திருந்தால் அவர் இந்நேரம் பிரதம மந்திரியாகவே ஆகியிருப்பாரே…
ஹூம்…!!

குசேலன் பிரச்னையை பதட்டப்படாமல் நேர்த்தியாக ரஜினி கையாளும் விதம்…வாவ்!!

If I had been in Rajini’s place in this trying period only two things could have happened. Either I would have split my hairs and run away to a far-off place or died due to heart-attack.
There are no words to describe the agony we (fans) have gone through in the past few weeks especially days. Just imagine his position!
In the midst of so much negative news!
Kuselan’s “alleged” loss as headlines in some TV channels, every now and then a new (false) statistics of Kuselan’s collections and frequenting articles/opinion in magazines/dailies reg Rajini’s so-called “apology”. Apart from these we have the vultures - Vikatan, Kumudam and Nakkeeran, the leeches like Express, Dinamalar and Dinakaran. Then there are a few “close” people, many from the film fraternity, who are eagerly waiting for his (Rajini’s) fall. If these are not enough, then there are some fans who refuse to understand Rajini’s stand and thoughts.
In spite of being bombarded by so many problems from so many directions, the way Rajini has handled this Kuselan issue without any anxiety - WOW! He has handled this issue in the same manner as that of an experienced diplomat. Its the way a true leader of people should handle the delicate and sensitive issues.
I was really worried that Thalaivar will get tensed on seeing so many false propaganda against him and the issue will turn more serious. But, he has once again proven his maturity and shown to us that he is different.
Without any ego he has held discussions with all the concerned people (producers, distributors and theatre owners), patiently listened to their views and arguments and at no circumstances getting angry he has almost solved this problem single-handedly in his own inimitable way.
From my point of view, this approach itself is proof that he is fully qualified to manage a country.
There is one news which is hidden in this issue. It seems that Rajini was ready for even 100% compensation. But, some important members of the Actors’ Association and the Producers’ Council had told Rajini - “Don’t make the theatre owners to get habituated to this by compensating them with money. Many recent films have bombed at the box-office one after the other. If they start demanding compensation for all those films, where shall we go?” On the other side, the theatre owners are issuing warnings/threats. What will he do?
The fun here is, the people who are asking Rajini not to compensate for the losses are not saying that in open and are doing that through the back door. Is it because an open statement will mean that they are supporting Rajini? Enna kodumai ithu?
On Friday when the theatre owners met Rajini they said 35% is fine. But, the next day they are demanding 70%. Now what do you call this act? Finally they will get 100% i.e. 100% kicks, both from Rajini fans and public.
Looks like they want to see whether the old Shivaji Rao is still there inside Rajini. If he awakens then …
Lets watch the proceedings patiently and act accordingly. (Translation by D R Sharath)
ரஜினியின் இடத்தில் நானாக இருந்தால்…
ரஜினியின் இடத்தில் நானாக இருந்தால், இந்நேரம் மண்டையை பிச்சுகிட்டு எங்காவது ஓடியிருப்பேன் அல்லது இதயம் வெடிச்சி, போய் சேர்ந்திருப்பேன்.
கடந்த சில நாட்களாக நம்மில் பலர் அடைந்த மன உளைச்சல் சொல்லி மாளாது. அப்போ தலைவருக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துகொள்வேன்.
இத்தனைக்கும் நடுவில்…
ஈவு இரக்கம் துளியும் இல்லாமல் இந்த சூழ்நிலையில் கூட மீடியாவில் வரும் வருத்தம் குறித்த தவறான தகவல்கள், சேனல்களில் முக்கிய செய்தியாக ஒளிபரப்பப்படும் குசேலன் நஷ்டம் போன்ற செய்திகள், ஒவ்வொரு மணி நேரமும் புதிது புதிதாக தவறாக கிளப்பிவிடப்படும் குசேலன் வசூல் குறித்த புள்ளிவிவரங்கள், இதை தவிர விகடன், குமுதம், நக்கீரன் போன்ற பிணந்தின்னி கழுகுகள், தினமலர், தினகரன் போன்ற புளுகு மூட்டைகள், கூடவே இருந்து தனது வீழ்ச்சியை காண துடிக்கும் தமிழ் திரையுலக நண்பர்கள் (?!!) இவை எல்லாவற்றுக்கும் மேல் தன்னை இன்னும் சரியாக புரிந்துகொள்ள மறுக்கும் ரசிகர்கள் - இப்படி பன்முனை தாக்குதல்களுக்கு இடையே குசேலன் பட பிரச்சனையை ரஜினி லாவகமாக பதட்டப்படாமல் அணுகிய விதம் இருக்கிறதே…வாவ்….ஒரு தலைவனின் பண்பு அது. ஒரு சிறந்த நிர்வாகியின் நிர்வாகத்திறன் அது. அனுபவம் மிக்க ஒரு மக்கள் வேந்தனின் அணுகுமுறை அது.
உண்மையில் நான் மிகவும் கவலைப்பட்டது - நடக்கும் அநியாயங்களை பார்த்து தலைவர் டென்ஷன் ஆகி பிரச்னை மேலும் சீரியஸ் ஆகிவிடப்போகிறதே என்று தான். ஆனால் தலைவர் தான் எதிலும் ‘தனிப்பட்டவர்’ என்று நிரூபித்துவிட்டார்.
கோபப்படாமல், நிதானமாக…
பிரச்னை சம்பந்தப்பட்ட அனைவருடனும் (தயாரிப்பாளர்கள், சாய் மீரா மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள்) சிறிதும் ஈகோ பார்க்காமல் பேச்சு வார்த்தை நடத்தி, அவர்கள் தரப்பு நியாயங்களை, வாதங்களை செவி கொடுத்து கேட்டு , எந்த சூழ்நிலையிலும் கோபப்படாமல், நிதானமாக இந்த பிரச்னையை தனது நேர்த்தியான அணுகுமுறையால் கிட்ட தட்ட தீர்த்துவிட்டார் ரஜினி. (சன் குழுமம் சம்பந்த பட்டவர்களை மீண்டும் மீண்டும் தூண்டி விட்டால் அவர் என்ன செய்வார் பாவம்?)
நினைத்துபாருங்கள் - இந்த பிரச்னைக்கும் ரஜினிக்கும் ஏதாவது நேரடி சம்பந்தம் இருக்கிறதா? தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும், திரை அரங்கு உரிமையாளர்களும் பேசி தீர்க்க வேண்டிய பிரச்னை இது.
இந்த அணுகுமுறை ஒன்றே போதும் - என்னை பொறுத்தவரை அவர் அரசாளும் முழு தகுதியும் பெற்றுவிட்டார்.
திரைமறைவில்…
இந்த பிரச்சனயில் நடந்த - மூடி மறைக்கப்படும் விஷயம் ஒன்று உள்ளது: ரஜினி 100% கூட இழப்பீடு வழங்க தயாராக இருக்கிறாராம் . ஆனால் ஒரு பக்கம் நடிகர் சங்க முக்கிய பிரமுகர்களும் தயாரிப்பாளர் சங்கமும் அவரிடம் “நீங்கள் இப்படி பணம் ரிடர்ன் கொடுத்து பழக்கபடுத்தாதீர்கள். இங்கு நிறைய படம் அடுத்தடுத்து சமீபத்தில் தோல்வி அடைந்துள்ளன. அவற்றுக்கெல்லாம் இதே போல் நஷ்ட ஈடு கேட்டால் எங்கே போவது?” என்று கூறியதாக தெரிகிறது. இன்னொரு பக்கம் நஷ்ட ஈடு கேட்டு அட்டகாசம் செய்யும் திரையரங்கு உரிமையாளர்களின் மிரட்டல் வேறு. ஒரு பக்கம் செய்யாதே என்கிறார்கள். இன்னொரு பக்கம் ஒருவர் செய் அல்லது நடப்பதே வேறு என்கிறார்கள். அவர் என்னதான்யா பண்ணுவாரு?
இதில் கொடுமை என்னவென்றால் நஷ்ட ஈடு கொடுக்க தேவையில்லை என்று கூறும் மேற்படி நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் அதை வெளிப்படையாக கூறாமல் திரைமறைவில் ரஜினியிடம் கூறி வருவது தான். வெளிப்படையாக கூறினால் அது ரஜினிக்கு ஆதரவாக கருதப்படுமே…அதற்க்கு இடம் கொடுக்க கூடாது என்ற நல்ல எண்ணமோ?
எது எப்படியோ சிங்கம் ஒற்றை ஆளாக மறுபடியும் கிட்டத்தட்ட சாதித்துவிட்டது.
100% நிச்சயம். எது?
இந்நிலையில் ரஜினியை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்தபோது 35% போதும் என்று கூறிய திரையரங்கு உரிமையாளர்கள் பின்னர் அடுத்த நாள் நடந்த கூட்டத்தில் செய்தது இருக்கிறதே…அதற்க்கு பெயர் தான் பல்டி. தற்போது 70% வேண்டுமாம். இப்படியே அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தால் கிடைக்கபோகிறது - பொதுமக்களிடமிருந்தும் ரஜினி ரசிகர்களிடமிருந்தும் - 100% உதை!!
சிங்கம் என்றால் இவ்வளவு அமைதியாகவா இருக்கும் என்று நினைத்தார்களோ என்னவோ, இன்னும் கொஞ்சம் விளையாடி பார்போம் என்று எரிமலையை மறுபடியும் சீன்டிகொண்டிருக்கிறார்கள். என்னதான் நடக்குது என்று பொறுத்திருந்து பார்போம்.

சன்டிவி - கோயபல்ஸ் கும்பல்!

கோயபல்ஸை நம்மில் யாரும் பார்த்ததில்லை... சன் - தினகரன் குழுமத்தினர் பெரிய மனது பண்ணி அந்த விஷ மனிதனின் வாரிசுகளாக தங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தினகரன் குழும இதழ்கள் சன் நெட்வொர்க்குக்கு கை மாறியபோது ஒரு வாரப் பத்திரிகை இப்படி எழுதியிருந்தது.“ஏற்கெனவே சாராயத்தைக் குடித்த குரங்கை ஒரு குளவியும கொட்டிவிட்டால் எப்படியிருக்கும்.... அப்படி ஒரு ஆட்டத்தை இனி இந்த குழுமம் தமிழகத்தில் நிகழ்த்துவதைப் பார்க்கலாம். சக பத்திரிகைகளான தினத்தந்தி, தினமலருக்கு மட்டுமல்ல... ஒட்டு மொத்த பத்திரிகை உலகத்துக்குமே ஒரு அபாய மணியாகத்தான் இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது...”கிட்டத்தட்ட அதை 100 சதவிகிதம் உறுதிப்படுத்தி வருகிறார்கள் சன் குழுமத்தினர். கோயபல்ஸ் பிரச்சாரம் என்ற வார்த்தை திமுக முகாம்களில் அடிக்கடி பிரயோகிக்கப்படுவதைக் கேட்டிருப்பீர்கள். அந்த ஒரிஜினல் கோயபல்ஸ் வாழ்ந்தது ஹிட்லர் காலத்தில். இந்த தலைமுறை அவனைப் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தைத் தீர்த்து வைத்துள்ளது சன் நெட்வொர்க். ஒரே பொய்யை தன்னிடம் உள்ள அத்தனை வித மீடியா மூலமாகவும் உண்மை போலவே ஜோடனை செய்து வெளிப்படுத்தும் இவர்களது டெக்னிக்கைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்திருந்தால் அந்த ஒரிஜினல் கோயபல்ஸே வெட்கித் தலைகுனிந்திருப்பார். அறவழிப் போராட்டமாவது செய்யுங்கள்!இனி ரஜினி படங்கள் தங்கள் தொலைக்காட்சிக்கு கிடைக்காது என்ற உண்மை ஒருபக்கம், கலைஞருக்குப் பிந்தைய வெற்றிடம் ரஜினிக்காக என்று ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற பயம்... இப்படி அவர்களின் நடவடிக்கைகளுக்கு சுயநல காரணங்கள் நிறைய. எனவே இவர்கள் செய்தியைப் பார்த்து நண்பர்கள் மனக் கவலையடைவதை விட, அறவழிப் போராட்டம் எதையாவது உடனே செய்யலாம். குசேலன் விவகாரம் நிஜமாகவே தீர்ந்து விட்டாலும் கூட, இவர்கள் வேண்டுமென்றே அதைக் கிளறிக் கொண்டுதான் இருப்பார்கள்.முதல் நாள் 40 கோடி நஷ்டம் என்று தியேட்டர்காரர்கள் சொன்னதாகப் போட்டார்கள். இப்போது 40 கோடி, 7 கோடியாகக் குறைந்திருக்கிறது. வருகிற தீபாவளிக்கு சன் டிவியில் ரஜினி சிறப்புப் பேட்டி கொடுக்க ஒப்புக் கொண்டால், குசேலன், குபேரனாகிவிடும்! நஷ்டப் பழி போயே போய்விடும்!!ஊரெல்லாம் பயங்கரவாதம் தலைவிரித்தாடுவதாகப் பிதற்றும் பத்திரிகைகள் தங்களுக்குள்ளேயே பெரும் பயங்கரவாதியாய், சமூகத்தை அரிக்கும் கிருமியாய் உருவெடுத்து வரும் இந்த மோசமான பத்திரிகை பயங்கரவாதத்தை எப்படி ஒழித்துக் கட்டப் போகிறார்கள்? குறைந்தபட்சம் எதிர்த்து, கண்டித்து ஒரு எடிட்டோரியல் எழுதும் தைரியமாவது இவர்களுக்கு உள்ளதா...(சோ விதிவிலக்கு)? காலை விடிந்ததிலிருந்து இரவு முடியும் வரை ரஜினி படங்கள், ரஜினி பாடல்கள்,. ரஜினி பட காமெடி என்று கல்லா கட்டும் இவர்கள், அடுத்து தங்கள் செய்திகளில் அவதூறு பரப்பவும் அதே ரஜினி தலையைத்தான் உருட்டுகிறார்கள். குடித்த தாயின் மார்பை அறுத்துப் பார்க்கும் ஈன புத்திக்காரர்களுக்கும் இப்படிப்பட்ட ஆட்களுக்கும் வித்தியாசம் ஏதாவது உள்ளதா...?இவர்களுக்கு பாடம் புகட்ட, ரசிகர்களுக்கு உடனடித் தேவை நிறைய அழகிரிகள்! ரஜினியிடமிருந்து ஒரு முடிவான ஆனால் பாஸிடிவ் பதில் வந்தால் போதும், அழகிரிகளுக்குக் கூட அவசியமிருக்காது!!

எத்தனை முறை நீ பணிவாய்?


குசேலனை வெளியிடமாட்டோம் என்று மிரட்டிய கன்னட ரவுடிகளுக்கு பணிந்தோம்.... கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்பதா என்று மிரட்டிய தமிழ் மீடியாவுக்கு தலை பணிந்தோம்.... மனம் திறந்து நீ பேசிய வசனத்தை நீக்கியாக வேண்டும் என்று சொன்ன அடாவடி ரசிகர்களுக்கும் தலை பணிந்தோம்... ஒரே வாரத்தில் ஒட்டுமொத்த பணத்தையும் வசூல் செய்துவிட்டு இன்னும் கிடைப்பதையும் சுருட்ட நினைக்கும் விநியோகஸ்தர்களுக்கும் தலை பணிந்தோம்... எத்தனை முறை தலை பணிவது... இன்னும் எத்தனை பேருக்கு தலை பணிவது.... வேண்டாம் தலைவா... முடிவெடு... ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை நீ சொல்லிவிடு.... முப்பது வருஷ பந்தம் இது... இனி மேலும் முன்வைத்த காலை பின் வைக்க வேண்டாம்… ஆணையிடு தலைவா! அழித்துவிடுகிறோம்....

Rajini’s offer rejected: Kuselan trouble intensifies

The financial mismanagement of Kuselan seems to have stirred up quite a storm as the distributors and theater owners stepped up their demands of compensation. We had reported earlier that Rajinikanth had flown down from USA to sort out issues and arrive at an amicable solution. He had offered to make a payment of 7 crores to the affected
distributors and exhibitors to cover the losses.A meeting was held today which had representatives from the three councils – producers, distributors and theater owners. At the meeting the distributors and exhibitors strongly resisted the offer of 7 crores and said that it was inadequate to meet their losses. Their stand is at 13 crores which at present is not acceptable to Pyramid Saimira who had bought Kuselan from Kavithalaya. The net worth of Kuselan’s sales to distributors is estimated to be around 60 crores.Kuselan was a small movie made on a rather medium budget in quick time. The only big thing about Kuselan was the presence of Superstar. Yet the movie was sold for such huge prices because of the competition that existed between distributors and theater owners of the same areas who fought tooth and nail to get Kuselan. This artificially pushed up the rates of the movie. This has spiraled into a stand off between the distributors and Pyramid Saimira.In view of the current stalemate of matters, it is more than sure that there will be another round of talks shortly to reach a settlement. Whether Pyramid Saimira bows to pressure or the distributors agree to step down from their demands will be interesting to watch. Or maybe the Superstar will have to take it upon himself once more to save the day.

ரோபோவுக்கு முன்பு ரஜினி படம்?

திரியை கிள்ளாமலே தீ வைப்பதில் நம்ம ஆட்கள் கில்லாடிகளாச்சே! கோடம்பாக்கத்தை கொஞ்ச நாட்களாக வலம் வந்து கொண்டிருக்கிறது இந்த செய்தி. குசேலன் படத்தின் நஷ்டத்தை சமாளிக்க, இலவசமாக ஒரு படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார் ரஜினி. இன்னும் இரண்டே மாதங்களில் துவங்கப்பட இருக்கும் இப்படத்தை இயக்கவிருப்பது ஏ.ஆர்.முருகதாஸ். இப்படி கூசாமல் கொளுத்திப் போடும் மேற்படி ஆசாமிகள், அதை உண்மை என்று நம்ப வைக்க 'பெட' கட்டக்கூட தயாராக இருக்கிறார்கள்! இந்த வேடிக்கை விநோத செய்திக்கு பின்னால் இருப்பது உண்மையா? அல்லது கருப்பாக பல்லிளிக்கும் பொய்யா? குசேலன் படத்தில் தனக்கு கெஸ்ட் ரோல்தான் என்று ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார் ரஜினி. அதன்பின்பும் பெரும் எதிர்பார்ப்போடு உள்ளே போன ரசிகர்கள், ரஜினியின் ஒன்றிரண்டு டயலாக்குகள் தம்மை புண்படுத்துவதாக நினைத்து பொங்கி எழுந்தார்கள். இந்த நேரத்தில் ரஜினியின் கர்நாடகா மன்னிப்பும் ரசிகர்களை உசுப்பிவிட, வரலாறு காணாத அளவுக்கு அவரது ரசிகர்களே கவலைப்பட்டார்கள். இந்த டயலாக், கர்நாடக பேச்சு இவை இரண்டும் ரஜினியின் தனிப்பட்ட கருத்தாகவே அமைந்ததுதான் சிக்கலுக்கு காரணம். கதையோடு ஒட்டிய வசனங்களும், காட்சிகளும் பிரச்சனை எழுப்பியிருந்தால், இயக்குனரின் பக்கம் கையை காட்டிவிட்டு ஒதுங்கியிருக்க முடியும். ஆனால், தேடிப்போய் வாங்கிய சாபம் ஆகிவிட்டது இந்த விவகாரம்! அதனால்தான் இந்த நஷ்டத்தை சரி கட்டுவதில் ரஜினியின் பங்கு கட்டாயம் ஆகியிருக்கிறது. தங்களுக்காக ஒரு படத்தில் நடித்துத் தரும்படி ரஜினியை விநியோகஸ்தர்கள் வற்புறுத்தி வருவது மட்டும் உண்மை. முருகதாஸ் சமாச்சாரமெல்லாம் உடான்ஸ் என்கிறார்கள். ரஜினி விஷயத்தில் எதுவும் நடக்கலாம். அல்லது நடக்காமலும் போகலாம்.

குசேலன் நஷ்டத்தைச் சரிகட்ட இலவசமாய் சரோஜா?

நம்பத்தான் முடியவில்லை... ஆனாலும் வருகிற செய்திகளை சொல்லாமலும் இருக்க முடியவில்லை.சூப்பர் ஸ்டார் ரஜினியின் குசேலன் படம் வெளியாகி வெறும் 25 தினங்களே ஆன நிலையில் அந்தப் படம் தோல்வி என்றும், நஷ்டம் என்றும் முழுமயாக முடிவு செய்துவிட்ட திரையரங்கு உரிமையாளர்களின் வேகம் ஒட்டுமொத்த திரையுலகையே திகைக்க வைத்திருக்கிறது.ஒருபக்கம் குசேலனின் சென்னை நகர் வசூல் மட்டும் ரூ.4.43 கோடிகள் என புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. பிரமிட் சாய்மிரா நிறுவனத் தலைவர் சுவாமிநாதனோ, இதுவரை இந்தப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.26 கோடி வசூலித்திருப்பதாகக் கூறுகிறார்.எண்பது திரையரங்குகளின் (மொத்தம் 375 தியேட்டர்கள்) டிசிஆர் எனப்படும் கலெக்ஷன் ரிப்போர்ட், ஒரு வார வசூலாக ரூ.8 கோடி வரைக் காட்டுகிறது. ஆனாலும் நஷ்டம் எப்படி என்றுதான் பலரும் வியப்புடன் கேட்கிறார்கள்.ஆனால் தியேட்டர்காரர்களோ, எம்ஜி தொகை அதிகமாகக் கொடுத்து விட்டோம். அதை ஈடுகட்டும் அளவுக்கு அடுத்தடுத்த வார வசூல் நிலவரம் இல்லை, என்கிறார்கள்.இப்போது கொடுக்கப்பட்டுள்ள நஷ்டக் கணக்கைச் சரிபார்த்து உண்மையைக் கண்டறியக் கூட யாருக்கும் அவகாசம் அளிக்கவில்லை திரையரங்கு உரிமையாளர்கள்.சரோஜா இலவசம்... எனவே வேறு வழியில்லாமல், குசேலன் திரைப்படத்தால் தங்களுக்கு நஷ்டம் என்று புகார் கொடுத்துள்ள திரையரங்கு உரிமையாளர்கள் அனைவருக்கும், தான் விநியோக உரிமை பெற்றுள்ள சரோஜா திரைப்படத்தை இலவசமாகத் தருகிறதாம் பிரமிட் சாய்மிரா நிறுவனம்!!டி.சிவாவின் அம்மா கிரியேஷன்ஸ் தயாரித்து வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தின் மொத்த உரிமையையும் பிரமிட் சாய்மிரா நிறுவனம் சில தினங்களுக்கு முன் வாங்கியது. ஆகஸ்ட் 30-ம் இந்தப் படத்தை உலகெங்கும் ரிலீஸ் செய்வதாகத் திட்டம்.இப்போது குசேலன் ஓடிக்கொண்டிருக்கும் அனைத்து திரையரங்குகளும் (எல்லாருமே நஷ்ட ஜோதியில் தங்களையும் சேர்த்துக் கொண்டார்கள்... அகப்பட்ட வரை லாபம்தானே..!) ஒரு பைசா கூட பெற்றுக் கொள்ளாமல் சரோஜாவைத் தருகிறார்கள் பிரமிட் சாய்மிரா.ஆக, ஒரு பெரிய பட்ஜெட் படத்தையே இலவசமாகக் கொடுக்கும் அளவுக்கு பிரமிட் சாய்மிரா லாபம் பார்த்திருக்கிறது குசேலனில் என எடுத்துக் கொள்ளலாமா...'லாபம் எவ்வளவு என்பது தெரியாது. ஆனால் சாய்மிராவுக்கு குசேலனால் நஷ்டமில்லை என்பதுதான் உண்மை. அதனால்தான் அவர்கள் இந்த அளவு இறங்கி வந்திருக்கிறார்கள். ஆனாலும் இது ஆரோக்கியப் போக்கல்ல... இனி, ஒரு படம் முதல் இரு வாரங்களுக்குள் லாபம் சம்பாதிக்காவிட்டால் தோல்விப் படம் என முத்திரை குத்தி விடுவார்களா தியேட்டர்காரர்கள்...இந்தப் போக்குத் தொடர்ந்தால் சினிமா என்ற தொழில் இருக்காது. அந்தப் பெயரில் சூதாட்டம் நடக்கவே உதவும். இதே தியேட்டர்காரர்கள் ரஜினியின் அடுத்தடுத்த படங்களில் கோடிகளைக் குவித்தவர்கள்தானே... இன்னும் ஒரு மாதம் கூட பொறுத்திருக்க முடியாதா இவர்களால்..., என்கிறார் ஒரு பெரிய தயாரிப்பாளர் கோபத்துடன். இன்னொரு பக்கம் இப்படிப்பட்ட செய்கைகளால் ரஜினி போன்ற பெரிய நடிகர்கள் படம் பண்ணாமல் ஒதுங்கிப் போகும் சூழலும் உருவாகிவிடும். அது சினிமாவுக்குத்தானே இழப்பு என்கிறார் அவர்.நியாயம்தானே!

குசேலனில் புதிய காட்சிகள்?


குசேலன் படத்தில் சில புதிய காட்சிகள் சேர்க்கப்படுவதாக ஒரு வதந்தி எழுந்தது. இது நேற்றைய நிலவரம். இன்று அதை ஒருசேர மறுத்திருக்கிறார்கள் படத்தின் தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமியும், இயக்குனர் பி.வாசுவும்.
குசேலன் படத்தை பொறுத்தவரை எந்த முடு மந்திரமும் இல்லை. படம் தயாரிப்பில் இருக்கும்போதே இது கத பறயும் போள் படத்தின் ரீமேக் என்பதை தெளிவாக சொல்லிவிட்டோம். படத்தில் தனது பங்கு இருபத்தைந்து சதவீதம்தான் என்பதை ரஜினியும் தெளிவாக கூறிவிட்டார். எனவே ரசிகர்களின் திருப்திக்காக மேலும் சில காட்சிகள் சேர்ப்பதாக வந்த செய்திகளில் உண்மையில்லை என்று கூறியிருக்கிறார்கள் இருவரும்.
தனது படங்களில் பெண் ரசிகைகளை கவர்வதற்காகவே சில சென்ட்டிமென்டுகளை வைத்திருக்கும் பி.வாசு, இந்த ஆடி மாதம் முடிந்தால் தியேட்டரில் பெண்களின் கூட்டம் வர வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார். அவர் சொன்ன மாதிரியே, தீமிதி, திருவிழாக்களை முடித்துவிட்டு பெண்கள் கூட்டம் குசேலனை விசாரிக்க வர துவங்கியிருக்கிறதாம்.
பி.வாசுவின் நம்பிக்கை வெற்றியடைந்தால் சந்தோஷம்!

அனைத்து மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூடி அவசர ஆலோசனை; ரஜினியை சந்திக்க முடிவு!!

தமிழகம் முழுதும் உள்ள ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சென்னையில் வரும் 27ஆம் தேதி கூடி அவசர ஆலோசனை நடத்த உள்ளனர். முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி ரஜினிக்கும் தலைமை மன்றத்துக்கும் கோரிக்கைகள் வைக்க உள்ளனர்.
நடிகர்களில் ரஜினிக்கு தான் ரசிகர் மன்றங்கள் அதிகம் உள்ளன. பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யபடாத மன்றங்கள் என சுமார் ஒரு லட்சத்துக்கும் மேல் மன்றங்கள் உள்ளன. இதில் அங்கீகரிக்கப்பட்டமன்றங்களின் எண்ணிக்கை மட்டும் சுமார அறுபதாயிரத்தை தாண்டும். தமிழகம் தவிர மஹாராஷ்டிரம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், புது டில்லி, கொல்கத்தா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் ஜப்பான், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட பல அயல்நாடுகளிலும் ரஜினிக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன.
தற்போது அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் சென்னையில் ஒன்று கூடி குசேலன் பட விவகாரத்தில் ரஜினிக்கு எதிராக செய்யப்படும் பிரச்சாரம் மற்றும் அவருக்கு எதிராக பத்திரிக்கைகளில் செய்யப்படும் அவதூறுகளுக்கு தக்க பதிலடி கொடுப்பது குறித்தும் ஆலோசனை செய்யவுள்ளனர்.
மேலும் மாறிவரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மன்றங்களை புனரமைத்தல் மற்றும் புதுப்பித்தல், நிறுத்தப்பட்ட பதிவு எண்களை உடனடியாக வழங்குதல், புதிதாக மன்றம் வைக்க விரும்புபவர்களுக்கு அனுமதியளித்தல், காலியாக உள்ள இடங்களுக்கு உடனடியாக நிர்வாகிகளை நியமித்தல், மன்ற பிரமுகர்கள் ரஜினி சந்திக்க பிரதி மாதம் தேதி ஒதுக்குதல், ரசிகர் மன்ற கொடியினை அங்கீகரித்தல், மாணவரணி, வழகறிஞர் அணி, விவசாயிகள் அணி என மன்றங்களில் பல்வேறு கிளைகளை அதிகாரபூர்வமாக துவக்க அனுமதி கோருதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றி ரஜினியிடமும் தலைமை மன்றத்திடமும் அளிக்க முடிவு செய்துள்ளனர். இதை ஏற்க மறுக்கும் பட்சத்தில் உண்ணாவிரதம் உள்ளிட்ட அறப்போராட்டங்களில் ஈடுபட அனைத்து மாவட்ட நிர்வாகிகளும், அதன் உறுப்பினர்களும் ஒரு மனதாக தீர்மானித்துள்ளனர்.
இது குறித்து, சென்னையில் உள்ள மன்ற நிர்வாகி ஒருவர் கூறியதாவது, “தனது பலம் என்னவென்று தலைவருக்கு தெரியவில்லை. மன்ற சீரமைப்பு மற்றும் பதிவு எண் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றினால் அது அவருக்கு புரியும். மேலும் போவோர் வருவோர் எல்லாம் ரஜினியை விமர்சனம் என்ற பெயரில் புழுதி வாரி தூற்றுவதை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே அமைப்பு ரீதியிலான பலம் தற்போது மிகவும் அவசியமாகிறது. ரசிகர் பலமே இல்லாத நடிகர்கள் கூட கட்சி ஆரம்பித்து உலா வரும் நிலையில், தனது பின்னால் லட்சோப லட்சம் ரசிகர்படை மற்றும் மக்கள் சக்தி உள்ள ரஜினி இப்படி அமைதியாய் இருப்பது ஏன் என்று புரியவில்லை. இருப்பினும் வருங்காலத்தில் அவர் நல்லதொரு முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம்,” இவ்வாறு அந்த மன்ற பிரமுகர் கூறினார்.
தற்போது மாறிவரும் தமிழக சூழ்நிலையில் ரஜினி ரசிகர்கள் தாங்கள் தனித்துவிடப்பட்டது போன்று உணர்கின்றனர். ஏற்கனவே தமிழ் நாட்டில் விஜயகாந்த், சரத்குமார் போன்ற நடிகர்கள் கட்சி ஆரம்பித்துள்ள நிலையில், தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியும் கட்சி ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் குறித்தும் மன்ற சீரமைப்பு குறித்தும் தெளிவான ஒரு முடிவை அறிவிக்கும்படி சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்து மேற்படி ரசிகர்கள் வற்புறுத்துவார்கள் என்று தெரிகிறது.

அனைத்து மாவட்ட ரஜினி ரசிகர்கள் ஒன்று கூடி அவசர ஆலோசனை!! - Onlyrajini.com Exclusive

The below article/news item has been collected by us from our own efforts and sources.
And with our consent this news has been carried by other websites including http://www.maalaimalar.com/ and thatstamil.oneindia.in
Commercial and popular websites are requested to get permission from us before taking content from here for their respective sources.
You can reach us at: sankar713@yahoo.com
Regards,
Sundar,http://www.rajinispecial.blogspot.com/

குசேலனின் பிரமிக்கத்தக்க வசூல் - சில ஆதாரங்கள்!!


குசேலன் நஷ்டம் - எந்த அளவிற்க்கு உண்மை?
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று கூறுவார்கள். ஆனால் இங்கு பல சோறு பதம்!! இது ஏதோ எங்களால் திரட்ட முடிந்த ஆதாரம்.
இதையெல்லாம் படித்த பிறகு நிச்சயம் நீங்கள் சொல்வீர்கள் : “நம்ப முடியவில்லை - குசெலனால் நஷ்டம் என்று கூறப்படுவதை.”

கீழ்கண்ட டேபிளில் (Daily Collection Report) காணப்படுவது - அசல் கணக்கு. அதாவது திரையரங்கு உரிமையாளர்கள் தாக்கல் செய்யும் ஒரிஜினல் கணக்கு. (மற்றது எவ்வளவு இருக்கும் என்று யூகித்துக்கொள்ளுங்கள்). சின்ன சின்ன சிற்றூரில் கூட குசேலன் செய்திருக்கும் வசூல் பிரமிக்கத்தக்கது.
முதல் மூன்று வார வசூல் கணக்குப்படி பார்த்தால் தமிழில் இதுவரை அதிக வசூல் புரிந்தது மூன்றே படங்கள். (கவனிக்க - முதல் மூன்று வார வசூல் கணக்கு)
1) சிவாஜி
2) தசாவதாரம்
3) குசேலன்
(சந்திரமுகியை இதில் சேர்க்க முடியாது. ஏனெனில் மேற்கூறிய படங்களுடன் ஒப்பிடும்போது அது குறைந்த தியேட்டர்களில் வெளியானது.)
எந்த கொம்பனும் மேற்கண்ட சாதனையை மறுக்க முடியாது. மறைக்க வேண்டுமானாலும் செய்யலாம். பிரமிட் சாய்மிராவின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி - குசேலன் முதல் வார நிகர வசூல் 21 கோடி என்பது நினைவிருக்கலாம்.
தசாவதாரத்தை - யாரும் வாங்க முன்வரவில்லை. ஆஸ்கார் ரவியே நிறைய இடங்களில் சொந்தமாக ரிஸ்க் எடுத்து ரிலீஸ் செய்தார். அவர் நேரம் அது வொர்க் அவுட் ஆனது. சிவாஜிக்கும் குசேலனுக்கும் நிலைமை வேறு. சிவாஜியை மிகவும் ரிஸ்க் எடுத்து 6.5 கோடிக்கு சென்னை உரிமையை வாங்கினார் அபிராமி ராமநாதன். “50 நாட்கள் தொடர்ந்து அவுஸ் புல்லாக ஓடினால் தான் போட்ட பணம் கிடைக்கும்” என்றும் பேட்டிகளில் கூறியிருந்தார். அவர் நேரம் போட்ட பணத்தை (6.5 கோடியை) முப்பதே நாட்களுக்குள் எடுத்துவிட்டார். அதற்கு பிறகும் சிவாஜிக்கு கிடைத்த அமோக வரவேற்பில் அது மொத்தம் 12 கோடிக்கும் மேல் வசூலித்து கொடுத்தது. (இது official கணக்கு).
அதில் கிடைத்த வருவாயில் தற்போது இன்று சொந்தமாக இரு புது படங்களை தயாரித்து கொண்டிருக்கிறார் அபிராமி ராமநாதன்.
தசாவதாரம் வசூலுக்கும் சிவாஜி வசூலுக்கும் உள்ள வித்தியாசம் இது.
குசேலனும் சிவாஜியை போன்ற ஒரு சாதனையை தான் நிகழ்த்தியிருக்கிறது. இத்தனை எதிர்ப்பு மற்றும் சோதனைகளுக்கிடையே - 20 நாட்களில் சென்னையில் மட்டும் 4.43 கோடி ரூபாய்.
ஏன்? ஏன்? ஏன்?
நான் ஒரு முழு நேர பத்திரிக்கையாளன் அல்ல. எனக்கே இத்தனை விவரங்கள் கிடைக்கும்போது இதையே தொழிலாக கொண்டு அதில் பெயரும் பெற்றுவிட்ட மற்ற பத்திரிக்கைகளுக்கும் வெப் சைட்டுகளுக்கும் (sify, gapsawoods etc.) இது போன்ற பாசிடிவ் தகவல்கள் கிடைக்காதா? ஏன் அவர்கள் அவற்றை வெளியிட மறுக்கிறார்கள்? குசேலன் ஏதோ மிகப்பெரிய தோல்விப்படம் போன்று பிரச்சாரம் செய்கிறார்கள்? பார்க்க வரும் ரசிகர் அல்லாத கூட்டத்தையும் வர விடாமல் தடுக்கிறார்கள்?
எதிர்மறையான செய்திகளையே வெளியிட்டு வக்கிரத்தை அரங்கேற்றி வரும் காட்டுமிராண்டி சிஃபி கும்பலுக்கு (sify.com) இது தெரியாமல் போனது எப்படி? (இதை விட கடுமையான வார்த்தைகள் இனி வருங்காலங்களில் அவர்கள் மீது பிரயோகிக்கப்படும்!!)
விதண்டா வாதத்திற்காக (அதை புத்திசாலித்தனம் என்று நினைத்து) கேள்வி எழுப்பும் என் நண்பர்களே…கொஞ்சம் இதை புரிந்து கொள்ளுங்கள்!! மற்றவர்களுக்கும் புரியவையுங்கள்.
இப்போ சொல்லுங்கள் குசேலன் தோல்விப்படமா?
மலைடா…அ ண் ணா ம லை !!

Dr. Abdul Kalam in Robot!

Its speculated that RajiniKanth’s movie would be of very big and crossing above 100 Crores. The Movie which is directed by shankar and his crew is produced by EROS international. ratnavelu has been roped for cinematographer.



The Most importanat new is Abdul Kalam going to act in robot. Its been discussed that in robot shankar has all set to plan to show addul kalam as a scientist who lead rajini and he has planed to meet him once the schedule of the movie is completed in US. Lets hope this happens as this would be the greatest of all.

தெரிந்தே தான் படத்தை வாங்கினார்கள் - இப்போது குறைகூறுவது என்ன நியாயம்? கவிதாலயா கேள்வி!!


Pushpa Kandasamy on Kuselan and its rumours…
Kavithaalaya’s Pushpa Kandasamy brushed aside allegations by the exhibitors that they have been misguided by the production house regarding the movie.
Speaking to Daily Thanthi she said,”Kuselan was born from the Malayalam movie Katha Parayumbol in which the Malayalam Superstar Mammooty has performed a guest role. Since Rajini has acted in this movie as an actor, director P.Vasu has created and added a few more scenes for Rajini.
On the launch of this movie itself Rajini had openly said that his contribution in this film will be 25%, Vadivelu’s will be 25% and Pasupathi will be 50%.
Those who have watched the Malayalam version will know how much screen presence was given to Mammooty and how much more is given to Rajini. Inspite of knowing these informations, few have started talking that this movie did not get the response from the fans and audience as expected. We have not made this film by hiding any of the facts.
Pyramid Saimira who have bought this film and screened it, saw this film 1 week prior to the release and were fully satisfied. From this itself one can understand that we have not sold this film by hiding the facts.
Screening this film in many number of theaters, increasing the ticket fares of this film are few of the reasons which denied the film the response it deserves.
This is a family subject. Ladies will certainly watch and enjoy this film. If the ads for this film are focussed in this direction, definitely the film will keep getting the patronage of the ladies crowd.
If we had made a film based on a new story, then they could have said that they did not know the story. But, people who bought this film and those who screened all have seen the Malayalam version. Now how can they complain that Rajini’s portion in this movie is very less?
Now the same story is being made in Hindi by Shahrukh Khan with the title “Billoo Barber” and he himself is portraying the role essayed by Rajini in Tamil. He has started this project only the confidence he has on this story.
We did not hide anything about this film. Also, there is absolutely no thought of adding any new scenes in this film.”
நேற்று பத்த்ரிக்கைகளில் புதிதாக ஒரு கதை கிளம்பியது. படத்தை தியேடர்களிலிருந்து எடுத்த்துவிட்டு புதிதாக காட்சிகள் சேர்த்து மறுபடியும் வெளியிடப்போகிறார்கள் என்று.
என் நண்பர்கள் கூட சில பேர் இது பற்றி என்னிடம் கேட்டார்கள். நான் கூறினேன், “அது ஒரு கட்டுக்கதை. அது போன்ற ஆதாரமற்ற செய்திகளை நம்ப வேண்டாம்” என்று.
சரி விஷயத்திற்கு வருவோம். படத்தை வாசுவும் கவிதாலயாவும் தங்களிடம் ஏமாற்றி விற்றுவிட்டனர் என்ற திரையரங்கு உரிமையாளர்களின் குற்றச்சாட்டுக்கு கவிதலயாவை சேர்ந்த புஷ்பா கந்தசாமி சரியான பதில் அளித்துள்ளார். மேற்படி காட்சிகள் சேர்ப்பு விவகாரத்திற்கும் முற்று புள்ளி வைத்துள்ளார்.
இணைக்கப்பட்ட தந்தி கட்டிங்கை காண்க. (English translation will be available later today)

Kuselan 25th day posters: A honour to legendary friends!!


Friends, Kuselan 25th day posters have been stuck all over the city walls and it is quite distinct this time. The design of the poster is unique so that legendary friends associated with Tamil Nadu politics have been put in the backdrop of Superstar with Pasupathy’s photo.
Politics?!!
Thespians like MGR, Sivaji Ganesan, MK, Kannadasan, Indira Gandhi, Kamarajar, EVR, Annadurai, Nagesh, Rajiv Gandhi, Asokan are seen in the backdrop image.
Hats off to the soul which originated this idea.

If the makers brush aside all negative feedback and vigorously promote the film - still there’s a chance to make this film to collect more. Many films in the past have been made to collect more by vigorous promotion.
But what an irony in our case is nobody wants to give a breathing space for the movie and just curious to make maximum gain in the chaos.

Rajini’s works on new strategy for Kuselan loss


With protests and discussions over Kuselan’s failure by all those who suffered losses due to it reaching its peak, sources close to Rajinikanth say that the star is back from the US to settle the issue amicably. The Kuselan issue took an ugly turn when the Kancheepuram and Thiruvellore District Theatre Owner’s Association, in their extraordinary general body meeting, decided not to extend cooperation to the production houses Kavithalaya and Seven Arts – the producers of Kuselan – until their losses are settled.Reports that Rajini had consented to pay about Rs. 10 crores to make do the losses, however, turned out to be false and the actor is now engaged in consultations with experts to salvage the loss.

அடேங்கப்பா…ஆச்சரியப்படுத்தும் குசேலன் முதல் வார வசூல்!!

படைத்தவனின் துணையிருக்க அடுத்தவனின் துணை எதற்கு?
இதயத்திலே துணிவிருக்க, வருத்தமிங்கே உனக்கெதற்கு?!!

குசேலன் படம் குறித்து இத்தனை எதிர்மறை விவாதங்கள், செய்திகள், சதி வேலைகள், மற்றும் இன்ன பிற இன்னல்கள் - இவையெல்லாம் மீறி குசேலன் செய்வது சாதனையல்ல….சரித்திரம்!!
ரஜினி ஒரு வற்றாத வைர சுரங்கம்… இயக்குனர் வாசு கொஞ்சம் தவறான திசையில் தோண்டிவிட்டார். அவ்வளவுதான். வேறு ஒன்றும் இல்லை. அப்படியிருந்தும் அந்த சுரங்கம் ஏமாற்றம் அளிக்கவில்லை. அதுதான் ரஜினி…!!
தோழர் சேட்டு , தனது ப்ளாக்கில் குசேலன் வசூல் குறித்து சும்மா பிய்த்து உதறியிருக்கிறார். அவர் அனுமதியுடன் அதை உங்களுக்கு இங்கு தருகிறேன்.
இது போன்தகவல்கள் நமக்கு கிடைக்கவில்லையெனில் நாம் எவ்ளோ பெரிய இழப்பாளிகள் ஆவோம்? நினைக்கவே பதறுகிறது…
சேட்டுவிர்ற்கு நம் இதயங்கனிந்த நன்றி…


தமிழகம்: குசேலன் முதல் வார வசூல் ரூ.21 கோடி! உலகமெங்கும் ரூ.43 கோடி!!
சூரியன் ஒருபோதும் தன்னை உச்ச நட்சத்திரம் என்று அறிவித்துக் கொள்வதில்லை. யார் ஒப்புக் கொண் டாலும் மறுத்தாலும் சூரியன்தான் சூப்பர்ஸ்டார்.
அது போலத்தான் தமிழ்த் திரையுலகில் ரஜினியும்.
திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி சிவாஜி வெள்ளி விழாவில் சூப்பர் ஸ்டாரைப் பற்றிக் கூறிய வார்த்தைகள்:
‘இந்த உலகின் உச்ச நட்சத்திரம் சூரியன். திரையுலகின் உச்ச நட்சத்திரம் அதாவது சூரியன், தம்பி ரஜினிகாந்த் அவர்கள்தான். எத்தனை நட்சத்திரங்கள் இருந்தாலும், ஒரு சூரியனுக்கு மட்டும்தான் உச்ச நட்சத்திரம் என்ற பெருமை உண்டு…’நண்பர்கள் யாரும் இதை மறந்திருக்க மாட்டீர்கள்…
எனவே ரஜினிக்கு குசேலனால் இழுக்கு நேர்ந்துவிட்டது… அல்லது படத்தின் கடைசிக் காட்சியில் பசுபதிக்கு ரஜினி கொடுக்கும் அறையை, வாசுவுக்குக் கொடுத்திருக்க வேண்டும் (இப்படி ஒரு படம் எடுத்ததற்காகவாம்!) என்றெல்லாம் நாமே கூறிக்கொண்டிருக்க வேண்டாம்.
சூரியன் மீது எவ்வளவு அழுக்குகளைக் கொட்ட முயற்சித்தாலும் அந்த அழுக்கோடு சேர்த்து கொட்டியவர்களும் எரிந்து போவார்கள்.

காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளுங்கள்!
நண்பர்களே… காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளுங்கள்… இனி எவருக்கும் நீங்கள் பதில் சொல்ல சின்ன தயக்கம் கூடக் காட்டத் தேவையில்லை.சூப்பர் ஸ்டார் மீண்டும் ஒருமுறை புடம்போட்ட தங்கமாய் ஜொலிக்க நல்ல தருணம் கூடி வருகிறது..
யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்… படத்தை வாங்கி உலகமெங்கும் விநியோகித்த பிரமிட் சாய்மிராவே பொய் சொன்னால் கூட (குசேலனால் சாய்மிராவுக்கு ஒரு நஷ்டமும் இல்லை), பாக்ஸ் ஆபீஸ் எனப்படும் முதல் வார இறுதி வசூல் நிலவரப்படி குசேலன் படம் வசூலித்துக் கொடுத்துள்ள தொகை உலகமெங்கும் ரூ.45 கோடி!இதற்கான முழு புள்ளி விவரத்தையும் உங்களுக்கு கட்டாயம் இன்னொரு பதிவில் தருகிறேன்.
சூப்பர் ஸ்டார் ‘ச்சும்மா’ கெஸ்ட் ரோலில் வந்த ஒரு படத்தின் ஒரு வார கலெக்ஷன் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.21 கோடி. இதையும் நாமாகச் சொல்லவில்லை, பிரமிட் சாய்மிரா நிறுவன தலைவர் பி.எஸ்.சாமிநாதன், தி டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் (உண்மையை ரொம்ப நாள் மறைக்க முடியாது சாமிநாதன் சார்!).
ரஜினியை மிகக் கடுமையாக விமர்சித்த ஒரு நண்பர் அவர். பாக்ஸ் ஆபீஸ் புலி. இதற்காக பத்திரிகையே நடத்துகிறார்.
அவர் சொன்ன புள்ளி விவரப்படி, குசேலன் திரைப்படம் 7 நாட்களில் அவர் கணக்கெடுத்த 80 திரையரங்குகளில் (சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை போன்ற பெரிய நகரங்கள் தவிர்த்து) மட்டும் வசூல் எவ்வளவு தெரியுமா… ரூ. 8.40 கோடி (இது அரசுக்குக் காட்டப்பட்ட கணக்கு!) குசேலன் ரிலீசான மொத்த திரையரங்குகளின் வசூல் இல்லம்மா இது… வெறும் 80 தியேட்டர்களின் வசூல்…!
இதுக்குமேல கலெக்ஷன் பண்ணக்கூடிய ஒரு படத்தை யாராலாவது காட்ட முடியுமா… அல்லது இப்படி மக்கள் செல்வாக்குள்ள ஒரு நடிகரைத்தான் காட்ட முடியுமா?வேதாரண்யத்தில் ப்ரியா என்ற திரையரங்கில் 3 லட்சம் கொடுத்து எடுத்திருக்கிறார்கள் படத்தை. முதல்வார முடிவில் இந்தப் படம் வசூலித்த தொகை ரூ.2 லட்சத்து 25 ஆயிரம். இன்னும் 75 ஆயிரம் வசூலித்தால் படம் சமநிலைக்கு வந்துவிடும்.
நண்பர்களே… நான் குறிப்பிடுவது நகரம் சார்ந்த திரையரங்கு கிடையாது.சென்னை எல்லையைத் தாண்டி உள்ள தமிழகத்தின் எல்லா திரையரங்குகளிலும் ரஜினி படத்துக்கு ‘பிளாட் ரேட்’ டிக்கெட்தான். ரூ. 50, 100 என்றுதான் கவுண்டரிலேயே வசூலிப்பார்கள். உபரி இருக்கைகள் வேறு. இப்போது கூட்டிக் கழித்துப் பாருங்கள், அந்த திரையரங்கு இன்று லாபம் சம்பாதித்திருக்குமா இல்லையா என்று!
காஞ்சிபுரத்தில் ஒரு திரையரங்கில் முதல் இரு வாரங்களுக்குப் பிறகு, இப்போது குசேலன் கட்டணம் ரூ.10, 30, 50 என போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். அப்படியென்றால்… இதற்கு முன் ரூ.50,.100 என்று டிக்கெட் விற்றதாகத்தானே அர்த்தம்!
சென்னை தவிர, தமிழகத்தின் எல்லா நகரப் பகுதிகளிலுமே இப்படிப்பட்ட போஸ்டர்களை இப்போது பார்க்க முடிவதாக நமது நண்பர்கள் கூறுகிறார்கள்.
இந்தச் சூழலை மனதில் கொண்டு குசேலன் வசூல் எவ்வளவு இருக்கும் என இப்போது கணக்கிட்டுப் பாருங்கள்… வாங்கிய அனைவரையும் குபேரனாக்காவிட்டாலும், குசேலானாகாமல் காப்பாற்றியிருக்கிறார் ரஜினி என்ற உண்மை புரியும்.
நிற்க…
மலேஷியா, சிங்கப்பூர் நாடுகளில் குசேலன் கலக்கிக் கொண்டிருப்பதை அடுத்த பதிவில் பார்க்க..!



ரோபோவுக்கு முன்பு ரஜினி படம்? உலா வரும் கலாட்டா நியூஸ்


திரியை கிள்ளாமலே தீ வைப்பதில் நம்ம ஆட்கள் கில்லாடிகளாச்சே! கோடம்பாக்கத்தை கொஞ்ச நாட்களாக வலம் வந்து கொண்டிருக்கிறது இந்த செய்தி. குசேலன் படத்தின் நஷ்டத்தை சமாளிக்க, இலவசமாக ஒரு படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார் ரஜினி. இன்னும் இரண்டே மாதங்களில் துவங்கப்பட இருக்கும் இப்படத்தை இயக்கவிருப்பது ஏ.ஆர்.முருகதாஸ். இப்படி கூசாமல் கொளுத்திப் போடும் மேற்படி ஆசாமிகள், அதை உண்மை என்று நம்ப வைக்க 'பெட' கட்டக்கூட தயாராக இருக்கிறார்கள்! இந்த வேடிக்கை விநோத செய்திக்கு பின்னால் இருப்பது உண்மையா? அல்லது கருப்பாக பல்லிளிக்கும் பொய்யா? குசேலன் படத்தில் தனக்கு கெஸ்ட் ரோல்தான் என்று ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார் ரஜினி. அதன்பின்பும் பெரும் எதிர்பார்ப்போடு உள்ளே போன ரசிகர்கள், ரஜினியின் ஒன்றிரண்டு டயலாக்குகள் தம்மை புண்படுத்துவதாக நினைத்து பொங்கி எழுந்தார்கள். இந்த நேரத்தில் ரஜினியின் கர்நாடகா மன்னிப்பும் ரசிகர்களை உசுப்பிவிட, வரலாறு காணாத அளவுக்கு அவரது ரசிகர்களே கவலைப்பட்டார்கள். இந்த டயலாக், கர்நாடக பேச்சு இவை இரண்டும் ரஜினியின் தனிப்பட்ட கருத்தாகவே அமைந்ததுதான் சிக்கலுக்கு காரணம். கதையோடு ஒட்டிய வசனங்களும், காட்சிகளும் பிரச்சனை எழுப்பியிருந்தால், இயக்குனரின் பக்கம் கையை காட்டிவிட்டு ஒதுங்கியிருக்க முடியும். ஆனால், தேடிப்போய் வாங்கிய சாபம் ஆகிவிட்டது இந்த விவகாரம்! அதனால்தான் இந்த நஷ்டத்தை சரி கட்டுவதில் ரஜினியின் பங்கு கட்டாயம் ஆகியிருக்கிறது. தங்களுக்காக ஒரு படத்தில் நடித்துத் தரும்படி ரஜினியை விநியோகஸ்தர்கள் வற்புறுத்தி வருவது மட்டும் உண்மை. முருகதாஸ் சமாச்சாரமெல்லாம் உடான்ஸ் என்கிறார்கள். ரஜினி விஷயத்தில் எதுவும் நடக்கலாம். அல்லது நடக்காமலும் போகலாம்.

ஜப்பான் ரசிகர்களுக்கு டீ! உள்ளுர் ரஜினி ரசிகர்கள் எரிச்சல்

ரஜினி தும்மனாலே அதை ஸ்கேன் செய்து பார்க்கும் வழக்கம் உள்ள ரசிகர்கள், பட்டவர்த்தனமாக ஒரு கருத்தை சொன்னால் சும்மாவா விடுவார்கள்? குசேலன் படத்தில் ஆர்.சுந்தர்ராஜனுடைய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் ரஜினி, தான் சினிமாவில் பேசிய அரசியல் வசனங்கள் தனது கருத்தல்ல என்றும் டயலாக் ரைட்டர் எழுதிக் கொடுத்ததைதான் பேசினேன் என்றும் கூறுவார். இதுதான் ரசிகர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, நான் அரசியலுக்கு வந்தா என்ன? வராட்டி உங்களுக்கு என்ன? உங்க வேலையை பாருங்க என்பார் கோபத்தோடு. இத்தனை காலம் ரஜினியின் பெருமுச்சை கூட இசையாக நினைத்து வந்த ரசிகர்கள், இந்த பதிலை கேட்டு வேதனைப்பட்டார்கள்.
மேற்படி வசனத்தை படத்திலிருந்து நீக்கும்படி ரஜினிக்கு தந்திகள் அனுப்பியும், கடிதங்கள் எழுதியும் தங்களது எதிர்ப்பை காட்ட, அதிர்ச்சியுற்ற ரஜினி, அந்த வசனங்களை நீக்கும்படி பி.வாசுவுக்கு உத்தரவிட்டிருக்கிறார். உடனடியாக வசனங்களும் நீக்கப்பட்டுவிட்டது.
இதே போல இன்னொரு விஷயமும் ரசிகர்களை காயப்படுத்தியிருக்கிறதாம். படத்தில் ரசிகர்கள் வெயிலில் நின்று ரஜினியை பார்க்க தவம் கிடக்கும்போது, அவர்களுக்கு தூரத்தில் இருந்தே கையை காட்டும் ரஜினி, ஜப்பான் ரசிகர்களை மட்டும் உள்ளே அழைத்து அவர்களுக்கு ஜப்பான் டீ கொடுத்து உபசரிக்கிற காட்சியும் அவர்களை வேதனைக்குள்ளாக்கி இருக்கிறதாம். கொடி, பேனர், கட்-அவுட்களை ஜப்பான் ரசிகர்களா வைக்கிறார்கள்? நாங்கள்தானே வைக்கிறோம். அவர்களுக்கு டீ, எங்களுக்கு போலீஸ் லட்'டீ'யா? என்கிறார்களாம் வேதனையோடு.
இந்த காட்சியையும் கட் பண்ணலாமா என்று யோசித்து வருகிறாராம் ரஜினி. இப்படியே போனால் டைட்டில்தான் மிஞ்சும் போலிருக்கிறது.

தலைவரின் புது படம் பற்றிய செய்தி – சில விளக்கங்கள்


முந்தைய பதிவில் நான் தலைவரின் புது படம் பற்றி நான் கேள்விப்பட்ட செய்திகளை கூறியிருந்தேன். அவைபற்றி கொஞ்சம் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
இது போன்ற ஊகங்கள் அடிப்படையிலான செய்திகளை நான் கூற விரும்புவதில்லை. இருப்பினும் ரஜினி பற்றிய செய்திகள் பெரும்பாலும் யூகத்தில் தான் ஆரம்பிக்கும். அதையெல்லாம் நான் சொல்லகூடாது என்றால், உங்களுக்கு எந்த செய்தியுமே தரமுடியாது. ஏனெனில் மிக பெரிய பத்திரிகைகளுக்கே சவாலான விஷயம் இது. நான் எம்மாத்திரம்?

நீங்கள் இங்கு படித்ததை கண்டிப்பாக அடுத்த சில நாட்களில் அனைத்து வலைத்தளங்களிலும் ஏடுகளிலும் படிக்க போகிறீர்கள். ஏனெனில் ரஜினி பற்றி ஏதாவது செய்தி போட்டு கொண்டேயிருக்கவேண்டும் அவர்களுக்கு… நான் கொஞ்சம் முந்திகொண்டால் என்ன?
என்னை பொறுத்தவரை ரஜினி ரோபோவுக்கு முன்பாக படம் எதுவும் பண்ணமாட்டார். அப்படி பண்ணுவதாக இருந்தால் நிச்சயம் அவசரப்படமாட்டார்.
உடனடியாக படம் பண்ணுவதாக இருந்தால் கையில் ரெடி மேடாக கதை இருக்கவேண்டும். அப்படி எதுவும் இருப்பதாக தெரியவில்லை. மேலும் நடிகர் நடிகையர் தேர்வு, லொகேஷன் தேர்வு, இசையமைப்பாளர் தேர்வு மற்றும் பாடல்கள் தயார் செய்தல் என பல விஷயங்கள் உள்ளன. இவற்றிலெல்லாம் அவசரம் காட்ட முடியாது. பொறுமையுடன் கையாள வேண்டிய விஷயங்கள் இவை. கூட்டி கழித்து பார்த்தால் உடனடியாக பட அறிவிப்பு எதுவும் சாத்தியமில்லை.
ஆனால் அப்படி ஒரு செய்திக்காக உங்களை போலவே நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். (இந்த புதுப்பட செய்தி உண்மையாகும் பட்சத்தில் மட்டும் என்னை நினைத்துக் கொள்ளுங்கள். இது எப்படி இருக்கு? ஹா… ஹா… ஹா…!!)
பட அறிவிப்பு அன்றி தலைவரின் வேறு விதமான சில அதிரடி நடிவடிக்கைகளுக்கு நிறையவே சாத்தியமுண்டு. அவைபற்றி உங்களுக்கு அவ்வப்போது தெரியப்படுத்த என்னால் இயன்றவரை முயற்ச்சிக்கிறேன்.

பத்து கோடி ரிட்டர்ன் ரஜினியின் அதிரடி முடிவு

போனதே தெரியவில்லை, அதற்குள் அமெரிக்காவிலிருந்து ரிட்டன் ஆகிவிட்டார் ரஜினி. இந்த அவசரத்திற்கு காரணம், குசேலன்! இப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், மறுபடியும் ஒரு பாபாவா? என்று அதிர்ச்சியடைந்ததுடன், கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்தார்கள்.
படத்தை மொத்தமாக வாங்கிய நிறுவனமும் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தது. இந்த இருவருக்கும் இடையிலான கொடுக்கல் வாங்கல்களை சரிபடுத்த நினைத்த சூப்பர் ஸ்டார், அடுத்த வினாடியே ஃபிளைட் பிடித்து சென்னையில் லேண்ட் ஆகியிருக்கிறார். வந்த வேகத்திலேயே பேச்சு வார்த்தைகள் ஜரூராக நடந்தேற, ரஜினி தரப்பிலிருந்து சுமார் பத்து கோடி விநியோகஸ்தர்களுக்காக திருப்பி வழங்கப்படுகிறதாம்.
'சந்திரமுகியில் சம்பாதித்தவர்கள்தானே, அப்போது கிடைத்த லாபத்திலிருந்து உங்களுக்கு கொடுத்தார்களா?' என்று ரஜினிக்கு ஓதினாராம் ஒரு முக்கிய பிரமுகர். அதுமட்டுமல்லாமல், 'இந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் எம்.ஜி எனப்படும் மினிமம் கியாரண்டி அடிப்படையில்தான் வாங்கியிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது எதற்காக பணத்தை திருப்பி தரவேண்டும்?' என்றாராம் அவர். ஆனாலும் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ரஜினி, தனது எண்ணத்திலிருந்து பின்வாங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இப்படத்திற்காக சுமார் 20 கோடி வரை சம்பளமாக எடுத்துக் கொண்ட ரஜினி, அப்படத்தில் நடித்ததற்கான சரியான சம்பளத்தை எடுத்துக் கொண்டு அதிகப்படியாக வாங்கிய தொகையை திரும்ப ஒப்படைக்கிறார். அவ்வளவுதானே? என்று எதிர்மறை கருத்துகளையும் விதைக்கிறார்கள் இதே கோலிவுட்டில்.
எப்படியோ, பிரச்சனை தீர்ந்தால் சரி
-ஆர்.எஸ்.

Superstar returning Chennai; May convene a press/fans meet!!

தலைவா, பூப்பாதையால் கண்ட பயன் தான் என்ன? இனி உன் பாதை சிங்கப்பாதை தான்!
Friends, Superstar who is at an undisclosed place/abroad is returning to Chennai now. All the developments in homeland have been informed to him every now and often.
If sources are to be believed, Superstar may convene a press meet in a few days. If not - atleast he would meet fan club office bearers from Chennai city and other districts on following couple of days.
Meet with fans
District Fan club office bearers and members are pressurizing thalapathy Sathyanarayana ever since the release of Kuselan for a meet with Superstar as they all feel that the film conveys some unexpected signal to them.
Sathy has assured them that he would convey their feelings and thoughts to Superstar and will take necessary steps.
Meanwhile, Superstar has assured the concerned sources and his circles that he will take care of everything and not to worry.

Kuselan Movie New Photo Gallery











Normal cine-goers are finding Superstar Rajinikanth starrer Kuselan movie as moving and emotional film.

According to sources, when contacted Pyramid Saimira’s chairman and managing director PS Saminathan said, “As of now, Kuselan is a hit. The fate of a film how big it is can be known only after 10 days of its release. The film has collected Rs 20 crore at the box-office till now. It’s too early to tell, but we expect it to make decent profits.” He pooh poohed observations of the film being a flop. Saminathan concluded by saying: “Kuselan is not an action-oriented film. The film has no villain, no styles that are usually associated with Superstar Rajinikanth. This film focuses on family viewing and I think it will work.”

Ace director Priyadarshan, who is busy with the Hindi version of the Malayalam super hit ‘Katha Parayumpol’ with Shahrukh Khan, has lashed out at P. Vasu, director of latest Tamil version ‘Kuselan’ (‘Kathanayukudu’ in Telugu), saying the essence of the original Malayalam film ‘Katha Parayumpol’ is missing in the Tamil version.

குசேலன் விமர்சனம் (kuuselan review)


நட்பின் பெருமையை உணர்த்த வந்திருக்கும் ரஜினி படம்.

பால்ய நண்பர்களாக இருந்த இரண்டு பேர், காலச் சுழலில் பிரிகின்றனர். ஒருவர் மலையூர் கிராமத்தில் முடி திருத்தும் கடை நடத்தும் ஏழை பார்பர் பாலு. மற்றொருவர் தமிழகமே கொண்டாடும் 'சூப்பர் ஸ்டார்' நடிகர்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு நண்பர்கள் இருவரும் சந்திக்கின்றனர். அப்போது நண்பர்களின் மனநிலை என்ன என்பது மனதை கனக்க வைக்கும் க்ளைமாக்ஸ்.

வறுமையின் பிடியிலும் தன்மானத்தை இழக்க விரும்பாத பார்பர் பாலுவாக பசுபதி. நம்பி வந்த காதல் மனைவியையும், குழந்தைகளையும் வசதியாக வாழவைக்க முடியவில்லையே என்ற ஏக்கம் !

குழந்தைகளுக்கு பள்ளிக் கட்டணம் கூட கட்ட இயலாத நிலை. ஆனாலும் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்ட நண்பனை சந்தித்து உதவி கேட்க தயக்கம்.

லோயர் கிளாஸ் தாழ்வு மனப்பான்மையின் ஹை கிளாஸ் பிரதிபலிப்பு பசுபதியின் நடிப்பு.

படத்திலும் 'சூப்பர் ஸ்டார்' நடிகராக வருகிறார் ரஜினி. அவரைப்பற்றியும், ரசிகர்கள் மத்தியில் அவருக்கு உள்ள செல்வாக்கு பற்றியும் நன்றாக தெரிவித்திருக்கும் இயக்குனர் வாசு, அதை மிக நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

நிஜத்தில் ரசிகர்கள் ரஜினியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள், அதற்கு அவர் அளிக்க விரும்பும் பதில்கள் என அனைத்தையுமே குசேலன் மூலம் பரிமாறிக்கொண்டிருக்கிறார் வாசு.

இதன் மூலம், இமயமலை பயணம், கமல் பற்றிய கருத்து, அரசியல் பிரவேசம் போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கிறது ரசிகர்களுக்கு.

தனது கிராமத்துக்கு படப்பிடிப்புக்காக வரும் ரஜினியை பார்க்க ஊரே முண்டியடிக்க, பால்ய நண்பரான பசுபதி மட்டும் அவரை பார்க்க தயங்கி நிற்பதும், பழைய நினைவுகளை மறக்காத ரஜினியின் நட்பை நினைத்து பரசவமாவதும் என முத்திரை பதிக்கிறார் பசுபதி.

வழக்கம் போல் நடிப்பு, ஸ்டைல், யதார்த்தம் என கலக்குகிறார் ரஜினி. படம் தொடங்கி 30 நிமிடங்களுக்கு பிறகு வந்தாலும், கடைசி வரை இடை இடையே வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்.

ஏழை நண்பர் பசுபதியை கட்டியணைத்து உருகும் போது நடிப்பிலும் நான் தான் நிரந்தர 'சூப்பர் ஸ்டார்' என்பதை நிரூபித்திருக்கிறார்.

நயன்தாராவும் நடிகையாகவே வருகிறார். அவர் வந்து போகும் காட்சிகள் எல்லாமே ஜில் என்றாலும், மனதில் ஒட்டாமல் போகிறார்.

குடும்பப் பாங்கான வேடங்களில் ஜொலிப்பது என்றால் எத்தனை இடைவெளி விழுந்தாலும் மீனாவுக்கு நிகர் அவரே. கொஞ்சும் பேச்சும், மயக்கும் சிரிப்பும் இன்னும் அப்படியே இருக்கிறது மீனாவிடம்.

பசுபதிக்கு போட்டியாக சலூன் நடத்தும் கேரக்டரில் வடிவேலு. வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார். வலுக்கட்டாயமாக் ஆட்களை கடத்தி வந்து முடி வெட்டும் காட்சிகள் ரசனையான காமெடி.

லிவிங்ஸ்டனும், அவரது அடியாள் சந்தான பாரதியும் கிடைக்கிற இடைவெளியில் காமெடி சரவெடி கொளுத்துகின்றனர். நடிகர் பிரபு பாதுகாப்பு அதிகாரி பாத்திரத்தில் கம்பீரமாக வந்து போகிறார்.

'சினிமா... சினிமா...' பாடலை தவிர வேறு எதுவும் கேட்கிற மாதிரி இல்லாதது வருத்தம். ' வெயிலோடு விளையாடிய' ஜீ.வி. பிரகாஷ் இதிலும் இசையில் இன்னும் நன்றாக விளையாடியிருக்கலாம்.

அரவிந்த கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், கதையோட்டத்தை சிதைக்காத எடிட்டிங்கும் படத்துக்கு ப்ளஸ்.

முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி என்பதால் காட்சிக்கு கூடுதல் அழுத்தம்.

ரஜினி படப்பிடிப்புக்காக பசுபதியின் ஊருக்கு வரும்போது ' அண்ணாமலை-2ம் பாகம்' என்று காட்டுகிறார்கள். மற்றொரு காட்சியில் 'சந்திரமுகியின் 2ம் பாகம்' என்கிறார்கள். இது போன்ற காட்சி பிழைகளை நீக்கியிருக்கலாம்.

ஏழை நண்பன் ஏணியாக இருந்து தனது மற்றொரு நண்பனை உயர்ந்த நிலைக்குக் கொண்டுசெல்வதும், வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு சென்ற நண்பன், ஏழையை கட்டிக்கொண்டு அழுவதும் ஏற்கனவே விக்ரமன் படங்களில் பார்த்ததுதான்.

படத்தின் க்ளைமாக்ஸ் 'உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்' க்ளைமாக்ஸை ஏனோ நினைவுப்படுத்துகிறது.

என்றாலும் ரஜினி என்ற மூன்றெழுத்து மந்திரத்தின் முன்னால் மற்ற குறைகள் எல்லாம் கண்ணுக்கு தட்டுப்படுமா என்ன?

குசேலன், என்றும் குபேரன்!

Kuselan Download Tamil Movie









Kuselan Download Tamil Movie





Aug 7, 2008



Download Kuselan - Rajini
[i-000078-im-002165.jpg]


Good Quality

Actor : Rajini, Pasupathy
Actress : Nayantara, Meena

Rapidshare Links:






For e-books visit: Click Here

http://mimg.sulekha.com/tamil/kuselan/kuselan_m.jpg

Ziddu Links:






Megaupload Links:






Egoshare Links:






For e-books visit: Click Here










Related Posts Plugin for WordPress, Blogger...