அடேங்கப்பா…ஆச்சரியப்படுத்தும் குசேலன் முதல் வார வசூல்!!

படைத்தவனின் துணையிருக்க அடுத்தவனின் துணை எதற்கு?
இதயத்திலே துணிவிருக்க, வருத்தமிங்கே உனக்கெதற்கு?!!

குசேலன் படம் குறித்து இத்தனை எதிர்மறை விவாதங்கள், செய்திகள், சதி வேலைகள், மற்றும் இன்ன பிற இன்னல்கள் - இவையெல்லாம் மீறி குசேலன் செய்வது சாதனையல்ல….சரித்திரம்!!
ரஜினி ஒரு வற்றாத வைர சுரங்கம்… இயக்குனர் வாசு கொஞ்சம் தவறான திசையில் தோண்டிவிட்டார். அவ்வளவுதான். வேறு ஒன்றும் இல்லை. அப்படியிருந்தும் அந்த சுரங்கம் ஏமாற்றம் அளிக்கவில்லை. அதுதான் ரஜினி…!!
தோழர் சேட்டு , தனது ப்ளாக்கில் குசேலன் வசூல் குறித்து சும்மா பிய்த்து உதறியிருக்கிறார். அவர் அனுமதியுடன் அதை உங்களுக்கு இங்கு தருகிறேன்.
இது போன்தகவல்கள் நமக்கு கிடைக்கவில்லையெனில் நாம் எவ்ளோ பெரிய இழப்பாளிகள் ஆவோம்? நினைக்கவே பதறுகிறது…
சேட்டுவிர்ற்கு நம் இதயங்கனிந்த நன்றி…


தமிழகம்: குசேலன் முதல் வார வசூல் ரூ.21 கோடி! உலகமெங்கும் ரூ.43 கோடி!!
சூரியன் ஒருபோதும் தன்னை உச்ச நட்சத்திரம் என்று அறிவித்துக் கொள்வதில்லை. யார் ஒப்புக் கொண் டாலும் மறுத்தாலும் சூரியன்தான் சூப்பர்ஸ்டார்.
அது போலத்தான் தமிழ்த் திரையுலகில் ரஜினியும்.
திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி சிவாஜி வெள்ளி விழாவில் சூப்பர் ஸ்டாரைப் பற்றிக் கூறிய வார்த்தைகள்:
‘இந்த உலகின் உச்ச நட்சத்திரம் சூரியன். திரையுலகின் உச்ச நட்சத்திரம் அதாவது சூரியன், தம்பி ரஜினிகாந்த் அவர்கள்தான். எத்தனை நட்சத்திரங்கள் இருந்தாலும், ஒரு சூரியனுக்கு மட்டும்தான் உச்ச நட்சத்திரம் என்ற பெருமை உண்டு…’நண்பர்கள் யாரும் இதை மறந்திருக்க மாட்டீர்கள்…
எனவே ரஜினிக்கு குசேலனால் இழுக்கு நேர்ந்துவிட்டது… அல்லது படத்தின் கடைசிக் காட்சியில் பசுபதிக்கு ரஜினி கொடுக்கும் அறையை, வாசுவுக்குக் கொடுத்திருக்க வேண்டும் (இப்படி ஒரு படம் எடுத்ததற்காகவாம்!) என்றெல்லாம் நாமே கூறிக்கொண்டிருக்க வேண்டாம்.
சூரியன் மீது எவ்வளவு அழுக்குகளைக் கொட்ட முயற்சித்தாலும் அந்த அழுக்கோடு சேர்த்து கொட்டியவர்களும் எரிந்து போவார்கள்.

காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளுங்கள்!
நண்பர்களே… காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளுங்கள்… இனி எவருக்கும் நீங்கள் பதில் சொல்ல சின்ன தயக்கம் கூடக் காட்டத் தேவையில்லை.சூப்பர் ஸ்டார் மீண்டும் ஒருமுறை புடம்போட்ட தங்கமாய் ஜொலிக்க நல்ல தருணம் கூடி வருகிறது..
யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்… படத்தை வாங்கி உலகமெங்கும் விநியோகித்த பிரமிட் சாய்மிராவே பொய் சொன்னால் கூட (குசேலனால் சாய்மிராவுக்கு ஒரு நஷ்டமும் இல்லை), பாக்ஸ் ஆபீஸ் எனப்படும் முதல் வார இறுதி வசூல் நிலவரப்படி குசேலன் படம் வசூலித்துக் கொடுத்துள்ள தொகை உலகமெங்கும் ரூ.45 கோடி!இதற்கான முழு புள்ளி விவரத்தையும் உங்களுக்கு கட்டாயம் இன்னொரு பதிவில் தருகிறேன்.
சூப்பர் ஸ்டார் ‘ச்சும்மா’ கெஸ்ட் ரோலில் வந்த ஒரு படத்தின் ஒரு வார கலெக்ஷன் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.21 கோடி. இதையும் நாமாகச் சொல்லவில்லை, பிரமிட் சாய்மிரா நிறுவன தலைவர் பி.எஸ்.சாமிநாதன், தி டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் (உண்மையை ரொம்ப நாள் மறைக்க முடியாது சாமிநாதன் சார்!).
ரஜினியை மிகக் கடுமையாக விமர்சித்த ஒரு நண்பர் அவர். பாக்ஸ் ஆபீஸ் புலி. இதற்காக பத்திரிகையே நடத்துகிறார்.
அவர் சொன்ன புள்ளி விவரப்படி, குசேலன் திரைப்படம் 7 நாட்களில் அவர் கணக்கெடுத்த 80 திரையரங்குகளில் (சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை போன்ற பெரிய நகரங்கள் தவிர்த்து) மட்டும் வசூல் எவ்வளவு தெரியுமா… ரூ. 8.40 கோடி (இது அரசுக்குக் காட்டப்பட்ட கணக்கு!) குசேலன் ரிலீசான மொத்த திரையரங்குகளின் வசூல் இல்லம்மா இது… வெறும் 80 தியேட்டர்களின் வசூல்…!
இதுக்குமேல கலெக்ஷன் பண்ணக்கூடிய ஒரு படத்தை யாராலாவது காட்ட முடியுமா… அல்லது இப்படி மக்கள் செல்வாக்குள்ள ஒரு நடிகரைத்தான் காட்ட முடியுமா?வேதாரண்யத்தில் ப்ரியா என்ற திரையரங்கில் 3 லட்சம் கொடுத்து எடுத்திருக்கிறார்கள் படத்தை. முதல்வார முடிவில் இந்தப் படம் வசூலித்த தொகை ரூ.2 லட்சத்து 25 ஆயிரம். இன்னும் 75 ஆயிரம் வசூலித்தால் படம் சமநிலைக்கு வந்துவிடும்.
நண்பர்களே… நான் குறிப்பிடுவது நகரம் சார்ந்த திரையரங்கு கிடையாது.சென்னை எல்லையைத் தாண்டி உள்ள தமிழகத்தின் எல்லா திரையரங்குகளிலும் ரஜினி படத்துக்கு ‘பிளாட் ரேட்’ டிக்கெட்தான். ரூ. 50, 100 என்றுதான் கவுண்டரிலேயே வசூலிப்பார்கள். உபரி இருக்கைகள் வேறு. இப்போது கூட்டிக் கழித்துப் பாருங்கள், அந்த திரையரங்கு இன்று லாபம் சம்பாதித்திருக்குமா இல்லையா என்று!
காஞ்சிபுரத்தில் ஒரு திரையரங்கில் முதல் இரு வாரங்களுக்குப் பிறகு, இப்போது குசேலன் கட்டணம் ரூ.10, 30, 50 என போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். அப்படியென்றால்… இதற்கு முன் ரூ.50,.100 என்று டிக்கெட் விற்றதாகத்தானே அர்த்தம்!
சென்னை தவிர, தமிழகத்தின் எல்லா நகரப் பகுதிகளிலுமே இப்படிப்பட்ட போஸ்டர்களை இப்போது பார்க்க முடிவதாக நமது நண்பர்கள் கூறுகிறார்கள்.
இந்தச் சூழலை மனதில் கொண்டு குசேலன் வசூல் எவ்வளவு இருக்கும் என இப்போது கணக்கிட்டுப் பாருங்கள்… வாங்கிய அனைவரையும் குபேரனாக்காவிட்டாலும், குசேலானாகாமல் காப்பாற்றியிருக்கிறார் ரஜினி என்ற உண்மை புரியும்.
நிற்க…
மலேஷியா, சிங்கப்பூர் நாடுகளில் குசேலன் கலக்கிக் கொண்டிருப்பதை அடுத்த பதிவில் பார்க்க..!



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...