பிரேசில் நாட்டில் ரஜினி -ஷங்கர் டென்ஷன்
முன்னணி இதழ் ஒன்று ரஜினியின் இமேஜ் இப்போது எப்படியிருக்கிறது என்று சர்வே எடுத்திருக்கிறது. இதை படிக்கிற ரஜினி ரசிகர்கள், நூறு டிகிரி கொதி நிலைக்கு போவார்கள் என்பது மட்டும் நிச்சயம். இப்படியெல்லாம் சர்வே எடுக்காமலே தனது பிரச்சனையை புரிந்து வைத்திருக்கிறார் ரஜினி. சமீபநாட்களாக அவரது கவனம், இழந்த இமேஜை மறுபடியும் மீட்டெடுப்பது எப்படி என்பது பற்றிதானாம். தனக்கு நெருக்கமான சினிமா, மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் டிஸ்கஸ் செய்யும் ரஜினி விரைவில் அதிரடியாக எதையாவது அறிவிக்கக் கூடும். இதற்கிடையில், சூப்பர் ஸ்டாரின் டென்ஷன் டைரக்டர் ஷங்கரையும் தொற்றிக் கொண்டிருக்கிறது.
கடந்த முறை அமெரிக்காவில் ரோபோவுக்காக போட்டோ செஷன் நடந்து கொண்டிருக்கும் வேளையில்தான் தியேட்டர்காரர்களின் ஆர்ப்பாட்டம். கேள்விப்பட்ட ரஜினி, அப்படியே அதை பாதியில் போட்டுவிட்டு சென்னைக்கு வந்துவிட்டார். இதனால் கொஞ்சம் அப்செட்டில் இருந்த ஷங்கர், இந்த முறை எப்படியாகுமோ? என்ற படபடப்பில் இருக்கிறார்.
செப்டம்பர் 5-ந் தேதி பிரேசில் நாட்டில் ரோபோ படத்தின் முதல் நாள் ஷ§ட்டிங்கிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. எவ்வித டென்ஷனும் இல்லாமல் ரஜினி அதில் கலந்து கொள்ள வேண்டும் என்பதுதான் ஷங்கரின் இப்போதைய கவலையாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment