பூப்பாதையால் கண்ட பலன் தான் என்ன?

கீழ் கண்ட தினத்தந்தி செய்தி உங்களில் சிலருக்கோ அல்லது பலருக்கோ தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்காக இந்த பதிவு.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற ஒரு எளிய நிகழ்ச்சி இது. இதில் கலந்து கொண்டு பேசியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பாக்யராஜ் மற்றும் மோகன்பாபு ஆகியோர். ஆக்ட்சுவலாக இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் கலந்து கொள்வதாக இருந்தது. தற்போதிருக்கும் சூழ்நிலையில் அவர் அதில் கலந்துகொள்ள விரும்பவில்லை. ஏனெனில் கலந்துகொண்டால் குசேலன் பிரச்னை குறித்து ஏதாவது பேசவேண்டும். அவர் எதை பேசினாலும் அதை ஒரு கூட்டம் சர்சையாக்கி காசு பார்த்துவிடுகிறதே…எனவே அவர் நிகழ்ச்சியை தவிர்த்துவிட்டார்.

நிகழ்ச்சியில் தமிழர்களின் அரவணைக்கும் தன்மை மற்றும் அவர்களது பரந்த மனப்பான்மை குறித்து டைமிங்காக பேசியிருக்கிறார் மோகன் பாபு . குசேலன் ரிலீசுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் பற்றி இது வரை ஒரு திரையுலக பிரமுகர் கூட வாய் திறக்காத நிலையில் பாக்யராஜ் அவரின் பாணியில் பேசி அசத்திவிட்டார். ரஜினி ரசிகர்கள் சார்பாக அவருக்கு நன்றி.

நண்பர் வினோ பாக்யராஜ்ஜின் உரை குறித்து ஒரு தனி பதிவு தந்துள்ளார்.
http://vinojasan.blogspot.com/

இதனிடையே நன்றாக போய் கொண்டிருந்த விழாவில் திரிஷ்டி பரிகாரம் போல் அமைந்தது சிம்புவின் திமிரான பேச்சு. ஒரு டஜன் படம் கூட நடிக்காத ஒரு பொடிப்பயல் - அதிலும் சொல்லிகொள்ளும்படி ஓடியது எதுவும் இல்லை. இவனெல்லாம் தலைவரை விமர்சிப்பது எவ்வளவு கொடுமை? அவரை விமர்சிப்பதற்கு கூட தகுதி வேண்டும்…இல்லையா?

தலையை வால் விமர்சிக்கலாம்; ஆனால் வாலில் உள்ள முடி கூடி விமர்சிப்பது என்பது இதுதான்.

படித்த பின் மனம் மிகவும் வலித்தது. பூப்பாதையால் கண்ட பலன் இதெல்லாம். சிவாஜியை இருக்கும் சூப்பர் ஸ்டார் என்று எம்.ஜி.யாராக மாறுகிறாரோ அன்று தான் இதெற்கெல்லாம் முடிவு ஏற்படும். அதுவரை அனைத்தையும் சகித்துக்கொள்ள நாம் பழகிக்கொள்ளவேண்டும்.

இணைக்கப்பட்டுள்ள தினத்தந்தி பக்கத்தை முழுமையாக படிக்கவும். பாக்யராஜ், மோகன்பாபு ஆகியோர் பேசியது நன்றாக தரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...