
குசேலன் படத்தில் சில புதிய காட்சிகள் சேர்க்கப்படுவதாக ஒரு வதந்தி எழுந்தது. இது நேற்றைய நிலவரம். இன்று அதை ஒருசேர மறுத்திருக்கிறார்கள் படத்தின் தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமியும், இயக்குனர் பி.வாசுவும்.
குசேலன் படத்தை பொறுத்தவரை எந்த முடு மந்திரமும் இல்லை. படம் தயாரிப்பில் இருக்கும்போதே இது கத பறயும் போள் படத்தின் ரீமேக் என்பதை தெளிவாக சொல்லிவிட்டோம். படத்தில் தனது பங்கு இருபத்தைந்து சதவீதம்தான் என்பதை ரஜினியும் தெளிவாக கூறிவிட்டார். எனவே ரசிகர்களின் திருப்திக்காக மேலும் சில காட்சிகள் சேர்ப்பதாக வந்த செய்திகளில் உண்மையில்லை என்று கூறியிருக்கிறார்கள் இருவரும்.
தனது படங்களில் பெண் ரசிகைகளை கவர்வதற்காகவே சில சென்ட்டிமென்டுகளை வைத்திருக்கும் பி.வாசு, இந்த ஆடி மாதம் முடிந்தால் தியேட்டரில் பெண்களின் கூட்டம் வர வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார். அவர் சொன்ன மாதிரியே, தீமிதி, திருவிழாக்களை முடித்துவிட்டு பெண்கள் கூட்டம் குசேலனை விசாரிக்க வர துவங்கியிருக்கிறதாம்.
பி.வாசுவின் நம்பிக்கை வெற்றியடைந்தால் சந்தோஷம்!
No comments:
Post a Comment