குசேலனின் பிரமிக்கத்தக்க வசூல் - சில ஆதாரங்கள்!!


குசேலன் நஷ்டம் - எந்த அளவிற்க்கு உண்மை?
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று கூறுவார்கள். ஆனால் இங்கு பல சோறு பதம்!! இது ஏதோ எங்களால் திரட்ட முடிந்த ஆதாரம்.
இதையெல்லாம் படித்த பிறகு நிச்சயம் நீங்கள் சொல்வீர்கள் : “நம்ப முடியவில்லை - குசெலனால் நஷ்டம் என்று கூறப்படுவதை.”

கீழ்கண்ட டேபிளில் (Daily Collection Report) காணப்படுவது - அசல் கணக்கு. அதாவது திரையரங்கு உரிமையாளர்கள் தாக்கல் செய்யும் ஒரிஜினல் கணக்கு. (மற்றது எவ்வளவு இருக்கும் என்று யூகித்துக்கொள்ளுங்கள்). சின்ன சின்ன சிற்றூரில் கூட குசேலன் செய்திருக்கும் வசூல் பிரமிக்கத்தக்கது.
முதல் மூன்று வார வசூல் கணக்குப்படி பார்த்தால் தமிழில் இதுவரை அதிக வசூல் புரிந்தது மூன்றே படங்கள். (கவனிக்க - முதல் மூன்று வார வசூல் கணக்கு)
1) சிவாஜி
2) தசாவதாரம்
3) குசேலன்
(சந்திரமுகியை இதில் சேர்க்க முடியாது. ஏனெனில் மேற்கூறிய படங்களுடன் ஒப்பிடும்போது அது குறைந்த தியேட்டர்களில் வெளியானது.)
எந்த கொம்பனும் மேற்கண்ட சாதனையை மறுக்க முடியாது. மறைக்க வேண்டுமானாலும் செய்யலாம். பிரமிட் சாய்மிராவின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி - குசேலன் முதல் வார நிகர வசூல் 21 கோடி என்பது நினைவிருக்கலாம்.
தசாவதாரத்தை - யாரும் வாங்க முன்வரவில்லை. ஆஸ்கார் ரவியே நிறைய இடங்களில் சொந்தமாக ரிஸ்க் எடுத்து ரிலீஸ் செய்தார். அவர் நேரம் அது வொர்க் அவுட் ஆனது. சிவாஜிக்கும் குசேலனுக்கும் நிலைமை வேறு. சிவாஜியை மிகவும் ரிஸ்க் எடுத்து 6.5 கோடிக்கு சென்னை உரிமையை வாங்கினார் அபிராமி ராமநாதன். “50 நாட்கள் தொடர்ந்து அவுஸ் புல்லாக ஓடினால் தான் போட்ட பணம் கிடைக்கும்” என்றும் பேட்டிகளில் கூறியிருந்தார். அவர் நேரம் போட்ட பணத்தை (6.5 கோடியை) முப்பதே நாட்களுக்குள் எடுத்துவிட்டார். அதற்கு பிறகும் சிவாஜிக்கு கிடைத்த அமோக வரவேற்பில் அது மொத்தம் 12 கோடிக்கும் மேல் வசூலித்து கொடுத்தது. (இது official கணக்கு).
அதில் கிடைத்த வருவாயில் தற்போது இன்று சொந்தமாக இரு புது படங்களை தயாரித்து கொண்டிருக்கிறார் அபிராமி ராமநாதன்.
தசாவதாரம் வசூலுக்கும் சிவாஜி வசூலுக்கும் உள்ள வித்தியாசம் இது.
குசேலனும் சிவாஜியை போன்ற ஒரு சாதனையை தான் நிகழ்த்தியிருக்கிறது. இத்தனை எதிர்ப்பு மற்றும் சோதனைகளுக்கிடையே - 20 நாட்களில் சென்னையில் மட்டும் 4.43 கோடி ரூபாய்.
ஏன்? ஏன்? ஏன்?
நான் ஒரு முழு நேர பத்திரிக்கையாளன் அல்ல. எனக்கே இத்தனை விவரங்கள் கிடைக்கும்போது இதையே தொழிலாக கொண்டு அதில் பெயரும் பெற்றுவிட்ட மற்ற பத்திரிக்கைகளுக்கும் வெப் சைட்டுகளுக்கும் (sify, gapsawoods etc.) இது போன்ற பாசிடிவ் தகவல்கள் கிடைக்காதா? ஏன் அவர்கள் அவற்றை வெளியிட மறுக்கிறார்கள்? குசேலன் ஏதோ மிகப்பெரிய தோல்விப்படம் போன்று பிரச்சாரம் செய்கிறார்கள்? பார்க்க வரும் ரசிகர் அல்லாத கூட்டத்தையும் வர விடாமல் தடுக்கிறார்கள்?
எதிர்மறையான செய்திகளையே வெளியிட்டு வக்கிரத்தை அரங்கேற்றி வரும் காட்டுமிராண்டி சிஃபி கும்பலுக்கு (sify.com) இது தெரியாமல் போனது எப்படி? (இதை விட கடுமையான வார்த்தைகள் இனி வருங்காலங்களில் அவர்கள் மீது பிரயோகிக்கப்படும்!!)
விதண்டா வாதத்திற்காக (அதை புத்திசாலித்தனம் என்று நினைத்து) கேள்வி எழுப்பும் என் நண்பர்களே…கொஞ்சம் இதை புரிந்து கொள்ளுங்கள்!! மற்றவர்களுக்கும் புரியவையுங்கள்.
இப்போ சொல்லுங்கள் குசேலன் தோல்விப்படமா?
மலைடா…அ ண் ணா ம லை !!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...