எந்திரனுக்கு ‘Eco-friendly’ க்ளைமேக்ஸ் செட் - தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத பிரமாண்டம்!


எந்திரனை பற்றிய செய்திகள் எத்துனை படித்தாலும் சலிக்கவில்லை. இன்றைய Times of India அளித்துள்ள இந்த செய்தியும் அப்படித்தான். (ஒரிஜினல் செய்தியை முதலில் தந்துவிடுகிறேன். தமிழாக்கம் பின்னர் வெளியிடப்படும்.)

சிறுசேரியில் ஒரு திருவிழா - எந்திரன் ஷூட்டிங்கை காண குவியும்

சினிமா ஷூட்டிங் என்றாலே திருவிழா தான். அதிலும் சூப்பர் ஸ்டாரின் ஷூட்டிங் என்றால் சும்மாவா?
பழைய மகாபலிபுரம் சாலையில் சிறுசேரியில் உள்ள சிப்காட்டில் தற்போது எந்திரன் படப்பிடிப்பு நடை பெற்றுவருகிறது. ரோபோ கெட்டப்பில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் முக்கிய காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு வருகின்றன.
ஏராளமான சாப்ட்வேர் நிறுவனங்கள் அந்தப் பகுதியில் உள்ளன. எந்திரன் படப்பிடிப்பு நடக்கும் விஷயத்தை கேள்விப்பட்டு அவரவர் தாங்கள் வேலைகளை அப்படியே போட்டுவிட்டு படப்பிடிப்பை காண வந்துவிட்டனர்.
சூப்பர் ஸ்டாரை சற்று தொலைவில் இருந்தாலும் நேரில் காணும் வாய்ப்பை பெற்றவர்கள், தாங்கள் நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும் போன் செய்து விஷயத்தை கூற, அவர்களும் அந்த பகுதியை நோக்கி படையெடுக்க, அந்த இடமே ஒரு திருவிழா பரபரப்புடன் காணப்பட்டது.
சூப்பர் ஸ்டாரை பார்க்க நேர்ந்தவர்கள் உற்சாக கூச்சலிட்டுகொண்டேயிருந்தனர். சுற்றியிருந்த செக்யூரிட்டிகள் படப்பிடிப்பை யாரும் தங்கள் மொபைலிலோ அல்லது கேமிராவிலோ படம் பிடித்துவிடாதபடி பார்த்துகொண்டனர். மீறி படம் பிடித்தவர்களின் மொபைல் பறிமுதல் செய்யப்பட்டு படங்கள் அழித்து திருப்பி தரப்பட்டது.
நம் தள வாசகர்களும் நண்பர்களுமான புவனேஷ், வெங்கடேசன் மற்றும் பலர் படப்பிடிப்பை காணும் வாய்ப்பை நேற்று பெற்றனர். அவர்கள் தங்கள் அனுபவங்களை நமக்கு அனுப்பியிருக்கின்றனர்.
இவர்களின் தகவல் அங்கு நிலவிய சூழ்நிலையை தான் பிரதிபளிக்குமேயன்றி, படத்தின் கதையையோ, சூப்பர் ஸ்டாரின் கெட்டப்பையோ பிரதிபலிக்காது.
“இதை RE-WRITE செய்து வெளியிடுமாறு நண்பர் புவனேஷ் கூறியிருந்தார். ஆனால் அவர் எழுத்தே மிகவும் யதார்த்தமாக இருப்பதால அதை அப்படியே தருகிறேன்.
அவுட்டோரில் ஷூட்டிங்கை நடத்துவதில் உள்ள முக்கிய ப்ளஸ் பாயிண்ட்
இப்படி ஷூட்டிங்கை அவுட்டோரில் நடத்துவது படப்பிடிப்பு குழுவினருக்கு கடினமான பணியாக இருந்தாலும் படத்திற்கு அது ஒரு வகையில் நல்ல விளம்பரமாக அமைந்துவிடுகிறது. விளம்பரங்களுக்கேல்லாம் அப்பாற்ப்பட்டவை தலைவரின் படங்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும் - இப்படி தலைவரை நேரில் படப்பிடிப்பில் பார்க்கும்பொழுது கிடைக்கும் சந்தோஷத்தை வேறு எதாவது தரமுடியுமா? ஆக, இத்தகு அவுட்ர் ஷூட்டிங் SCHEDULES ரசிகர்களை நிச்சயம் உற்சாகத்தில் வைத்திருக்கும். அந்த உற்சாகம் மற்றவர்களுக்கும் பரவும்.
மற்றொரு விஷயம், ஷூட்டிங்கை காண குவியும் அனைவரும் ஆவலின் காரணமாக திரையில் அதை பார்க்க நிச்சயம் வருவர்.
நன்றி
————————————————–Over to Bhuvanesh:
ஒரு வணக்கம், கொஞ்சம் டாட்டா, நெறைய புன்னைகை
அய்யோ.. நான் இவ்வளவு சந்தோசமா ஒரு பதிவ போட்டதே இல்ல.. சின்ன வயசுல இருந்தே சூப்பர் ஸ்டார்னா எனக்கு ரொம்பபபபப பிடிக்கும்.. விவரம் தெறியாத வயசுல கூட அவர் படம் போட்டு என்ன மூணு மணிநேரம் உக்கார வெச்சிருவாங்கலாம்.. அன்னைக்கு முதல் இன்னைக்கு வரை அவர்னா எனக்கு தனி மரியாதை தான்! என்னதான் அன்பே சிவம் பாத்து அசந்து போனாலும் நானெல்லாம் பாஷா, படையப்பா, முத்து, வசூல்ராஜா, கில்லி போன்ற படங்களின் ரசிகன்!
சரி சரி.. இன்னைக்கு நடந்தத சொல்லறேன்..
எங்க கம்பனி இருகிற இடத்துல ஷூட்டிங்.. இது ஒரு ஐ.டி தொழிற்பேட்டை! இங்க ஏகப்பட்ட ஐடி கம்பனி இருக்கு.. இன்னைக்கு ஷூட்டிங் தலைவர் வராருன்னு காட்டு தீ போல பரவுச்சு! ரெண்டு நாளாவே இந்த பரபரப்பு இருந்துச்சு, இணைக்கு கொஞ்சம் ஓவர்!! எங்க கம்பனி மாடில பொய் நின்னா ஷூட்டிங் பக்கத்துல தெரியும்.. அங்க போய் பாத்துட்டு தலைவர பாத்தோம், அவரு செம ஸ்டைல், காய் ஆட்டுனாருனு சில பேர் வந்து வால் ஆட்டுனாங்க! சரி நானும் போவோம்னு ஒரு செட்டு சேந்து போனா, அங்க அவரு டூப் வெச்சு ஷூட்டிங் எடுத்தாங்க.. நாங்க நிக்கரதப்பாத்து ஒரு ஸ்ட்ரிக்ட் செக்யூரிட்டி கஷ்டப்பட்டு எப்படியோ எங்க கம்பனிகுள்ள வந்து நாங்க இருக்கற இடத்துக்கும் சத்தம் இல்லாம வாந்தாரு..
செல் போன் கேமரால ஷூட்டிங் யாரும் பண்ணக்கூடாதுனு இந்த ஏற்பாடாம்… நாங்க தலைவர தேடிட்டு இருந்தோம்.. இந்த கேப்ல பீட்டர் ஹைன்ஸ் கார்ல வித்த காட்டுனாரு.. சரி போலாம்னு எல்லோரும் கிளம்பிட்டோம்.. என்னால தான் வேலை பாக்கமுடியல.. சரின்னு திரும்பவும் வேற கேங் சேத்து மொட்டைமாடி வேற இடம்.. அங்க ஒரு வேன்ல (கேரவேன்!!) தலைவர் இருக்காருன்னு சொன்னாங்க.. திடிருன்னு வேனுக்கு அந்த பக்கம் ஒரே சவுண்ட்.. எல்லோரும் போட்டோ எடுக்கறாங்க.. நான் இந்த சைடு இருந்ததால தலைவர பாக்க முடியல.. அதுக்கு மேல இருப்பு கொள்ளல!!
நான் மட்டும் வெளிய வந்து அந்த கேரவன் பக்கம் போய் நின்னிட்டேன்! சொன்னா நம்பமாட்டீங்க.. நின்ன கூட்டத்துல அறுபது சதவீதம் பொண்ணுங்க.. எல்லாம் ஐ.டி கேர்ள்ஸ்.. சினிமா பாசைல சொல்லனும்னா எல்லாம் “A” கிளாஸ்.. அட நான் பொண்ணுங்கள சொல்லலப்பா , நின்ன கூட்டத்த சொல்லறேன்!!
அங்க ஒரு BMW, ஒரு Honda City இருந்துச்சு.. BMW ஷங்கர் சார் வண்டி.. ரெண்டாவது நம்ம சிம்பிள் மேன் வண்டினு சொன்னாங்க.. நான் நம்பல.. ச்சே.. தலைவர் வண்டில சாஞ்சுட்டாவது போட்டோ எடுத்திருக்கலாம்..
ஒருத்தர் கேரவேன் உள்ள போனார்.. கார் டிரைவர் வண்டிய கேரவேன் பக்கத்துல கொண்டு போனார்.. இடம் பரபரப்பு ஆச்சு.. தலைவர் வெளிட கை ஆடிக்கிட்டே வந்தார்.. எல்லோருக்கும் ஒரு வணக்கம் வெச்சார்.. உள்ளே போய் உக்காந்தார்..“தலைவா இந்த பக்கம் திரும்பி பாக்கவே இல்ல” னு ஒரு சவுண்ட்!! உள்ள உக்காந்துட்டு இருந்தவரு, எழுந்து வந்து அந்த சைடு பாத்து ஒரு வணக்கம், கொஞ்சம் டாட்டா, நெறைய புன்னைகை, இன்னும் நிறைய உற்சாகம், அதைவிட ஸ்டைல்!!
ஒரு சூப்பர் ஸ்டார் ஒரே ஒரு குரலுக்கு மரியாதை தந்தார்.. அதுவும் படார்னு வெளிய வந்த ஸ்டைல் இன்னும் எந்த படத்துலயும் வரல..
கை தொடும் தலைவரை பாப்பேன் என்று கனவு கூட கண்டது இல்லை!
டோடல்லி I am Sooooooooooooooooooooooooooooo ooo Happpppppppppppppppppppppppppyyyyyyyyyyyyyy!!

எந்திரன் - சில தகவல்கள்!! Endhiran -some snippetts!!

எந்திரனை பற்றிய எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து பணிகளையும் முடித்து, ரிலீசுக்கு படத்தை தயார் செய்யும் பணிகள் துவக்கவிருக்கின்றன. படத்தை எப்படியும் ஏப்ரல் 2010 இல் ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் தீவிரமாக இருக்கிறது.
இதோ எந்திரனை பற்றி, சன் பிக்சர்ஸ் குழும இதழான ‘வண்ணத்திரை’ யில் வெளியான ஒரு சிறிய தொகுப்பு. (செய்திகளை நீங்கள் கேள்விப் பட்டிருந்தாலும், அசத்தலான படத்துக்காகவே இந்த பதிவை அளிக்கிறேன்.)
(*English translation provided below)

Endhiran - some snippets
Expectations are soaring up day by day for Endhiran. Even a small piece of info about this mammoth project are making headlines in newspapers.
Here are a few snippets about the most-expected movie of the Tamil cinema:
* Climax portion of the movie was shot in ECR (East Coast Road) where Rajini fights with 100s of robots.
* A crucial CG portion of the movie was shot in Prasad labs and Perungudi in gigantic sets where Superstar and animation experts took part in the shoot for more than 50 days.
* Endhiran will be eco-friendly. Yes… ACP (Aluminium Composite Panel) is used to erect set which can be recycled.
* So far three songs have been picturised and three top choreographers have choreographed the songs.
Song shot in Machu Pichu, Peru - Raju SundaramSong shot in Hollywood - Raghavendra LawrenceSong shot in Ramoji Rao film city, Hyderabad - Prabu Deva
* Two more songs need to be completed… and with that shooting will call it a day.
* Shankar has set target to complete all the works by December 2009 and after that CG and other time-consuming works will proceed in full pace.
* As on date, Endhiran will be probably a summer 2010 release.
[END]

மும்பையில் சூப்பர் ஸ்டாரின் ஓவியங்கள் & ரஜினி ஸ்டைலை பின்பற்றுங்கள்… நாணயம்

1) மும்பையில் சூப்பர் ஸ்டாரின் ஓவியங்கள்மும்பையில் ஓவியங்கள் விற்பனை செய்யும் மிகப் பெரிய கடை ஒன்று சமீபத்தில் திறக்கப்பட்டதாக நாளிதழ் ஒன்றில் சமீபத்தில் படித்தேன்.
அந்த கடையில் சூப்பர் ஸ்டாரின் பிரமாண்ட ஓவியங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. (அருகே படத்தை இணைத்துள்ளேன்.)

மும்பை நண்பர்கள் அந்தக் கடை மும்பையில் எங்கு திறக்கப்பட்டுள்ளது, மற்றும் மேலும் விபரங்களை பற்றி விசாரித்து மேலும் தகவல்களை அளித்து உதவினால் நன்றாக இருக்கும்.
(தகவல் கிடைத்தால் simplesundar@gmail.com என்ற முகவரியில் எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும். உடனடியாக உங்களை தொடர்பு கொள்வேன். நன்றி.)
2) “உங்கள் விளம்பரங்கள் தனித்து நிற்க வேண்டுமா?” ரஜினி ஸ்டைலை பின்பற்றுங்கள்… நாணயம் விகடன் டிப்ஸ்
சூப்பர் ஸ்டாரின் வெற்றிக்கான காரணங்களுள் அவரை தனித்து அடையாளம் காட்டிய அவரது ஸ்டைலும் ஒன்று.
ஸ்டைல் என்றால் சிகரட்டை தூக்கி போடுவது, தலையை கோதிவிடுவது என்ற அர்த்தம் மட்டும் அல்ல. மற்றவர்களிலிருந்து தனக்கென ஒரு வழிமுறையை உருவாக்கி அந்த வழியில் செல்வதே. (கமல் 50 விழாவில் ரஜினி தனது வெற்றிக்கான காரணமாக கூறியது இதை தான்.)
ரஜினி போல தங்களுக்கென்று தனி ஸ்டைலை பின்பற்றினால் அனைவரும் தங்கள் முயற்சியில் வெற்றியடையலாம் என வர்த்தகர்களுக்கு நாணயம் விகடன் டிப்ஸ் வழங்கியுள்ளது.
//ரஜினிகாந்த் என்றவுடன் உங்களுக்கு என்ன ஞாபகம் வரும்? கொத்தாக முன்பக்கம் வந்துவிழும் தலைமுடியை கைவிரல்களாலேயே வாரிவிடும் அழகு; கைவிரல்களில் இருக்கிற சிகரெட்டை லாகவமாகச் சுண்டிவிட, அது கச்சிதமாக உதடுகளை அடையும் நளினம்; கறுப்புக் கண்ணாடியைக் சுழற்றியபடி மாட்டிக்கொள்ளும் வசீகரம். இப்படி ரஜினி எதைச் செய்தாலும் அவரது ஸ்டைல் மட்டும் தனியாகத் தெரியும்.
ஒரு நடிகனாக மாறியபிறகுதான் ரஜினி இதையெல்லாம் செய்தாரா என்றால் இல்லை. பெங்களூருவில் 13-ம் நம்பர் பஸ்ஸில் கண்டக்டராக இருந்தபோது அவர் ரஜினிகாந்த் அல்ல, சிவாஜிராவ் கெய்க்வாட். என்றாலும் மக்கள் அந்த சிவாஜியை விரும்பக் காரணம், அவரிடமிருந்த ஸ்டைலும் வேகமும்தான். பெங்களூரு மக்கள் மட்டுமல்ல, நம் ரசிகர்களும் ரஜினியை மறக்காமல் விரும்பக் காரணம் இந்த ஸ்டைல்தான்! நம்மோடு எந்தச் சம்பந்தமும் இல்லாத ஜப்பான் நாட்டு ரசிகர்கள் ரஜினியை மறக்காமல் இருக்கக் காரணம் அதே ஸ்டைலும் வேகமும்தான்!
ஆனால், ரஜினி மாதிரி எல்லா விளம்பரங்களும் ஆச்சரியத்தை நிகழ்த்தி மக்கள் மனதில் மறக்க முடியாத ஓர் இடத்தைப் பிடிக்க முடியவில்லை என்பதே உண்மை. ரஜினியை நாம் மறக்காமல் இருக்க அவர் பல ஸ்டைல்களைச் செய்தது போல, நம் விளம்பரங்களும் சில விஷயங்களைச் செய்தால் வாடிக்கையாளர்கள் அந்தப் பொருட்களை மறக்கவே மாட்டார்கள். இந்த உண்மையைப் புரிந்துகொண்டு உருவாக்கப்பட்ட விளம்பரங்கள்தான் இன்றும் கொடிகட்டிப் பறக்கின்றன.//
(நன்றி: நாணயம் விகடன்; தகவல் உதவி: புயலமான்)
3) விஜய், அஜீத் - யார் சூப்பர் ஸ்டார்? தினத்தந்தி குருவியார் நச் பதில்
நாம் விரும்பி படிக்கும் பத்திரிகை பகுதிகளுள் தினத்தந்தியில் ஞாயிறு தோறும் வெளிவரும் குருவியார் பதில்களும் ஒன்று. இந்த வாரம் வெளியான ஒரு கேள்வி பதிலை பாருங்கள்.
கேள்வி: விஜய், அஜீத் இருவரும் 50 படங்களை நெருங்கிவிட்ட நிலையில் யார் சூப்பர் ஸ்டார்?
குருவியார் பதில்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.
(எந்த நடிகர் வந்தாலும் போனாலும் ‘சூப்பர் ஸ்டார்’ என்றால் அது தலைவர் மட்டும் தான் என்று சொல்லாமல் சொல்லியுள்ள குருவியாருக்கு ஒரு ஜே.)
(தகவல் உதவி: Peraveen)

After Endhiran, what’s next for Rajini ??? Check our EXCL. INTERVIEW in cover story of Kumudam Reporter!!


எந்திரனுக்கு பிறகு என்ன??? குமுதம் ரிப்போர்ட்டர் கவர் ஸ்டோரியில் நமது பிரத்யேக பேட்டி!!
எந்திரனுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் என்ன செய்யப் போகிறார்; என்ன முடிவெடுக்கப் போகிறார்? என்று தெரிந்து கொள்ளும் ஆவலும் கேள்வியும் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, பத்திரிக்கைகளுக்கும் உள்ளது.
எந்திரனுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் அரசியலில் ஈடு படக்கூடும் என்ற தகவல் ஒரு புறம், ஆன்மீகத்தில் ஈடுபடக்கூடும் என்ற ஜோதிடம் ஒரு புறம், இல்லை… இல்லை… இன்னும் சில ஆண்டுகள் அவர் நடிக்கக்கூடும் என்ற கணிப்பு இன்னொரு பக்கம்… இப்படி சூப்பர் ஸ்டாரின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த ஹேஷ்யங்களுக்கு பஞ்சமில்லை.
நம்மை பொறுத்தவரை, தலைவர் கீதை கூறியுள்ளபடி எப்பொழுதும் நிகழ் காலத்தில் வாழ்பவர். “நான் என்றுமே நாளை பற்றி மட்டுமே யோசிப்பேன். நாளை மறுநாள் பற்றிக் கூட யோசிக்க மாட்டேன்” என்று அவர் சமீபத்தில் ஒரு விழாவில் கூறியதையே நாம் அவரது நிலையாகக் கொள்ளலாம். நிகழ் காலத்தை சரியாக பயன்படுத்தினால் தான் வருங்காலத்தை தன் வசமாக்கமுடியும் என்பது அவருக்கு தெரியும். தற்போது அவரது முழு கவனமும் தற்போது எந்திரன் மீது தான் இருக்கிறது. சிவாஜியின் சாதனைகள் அனைத்தையும் ‘எந்திரன்’ முறியடித்து தமிழ் சினிமாவின் வீச்சை உலக அரங்கில் எடுத்துச் செல்ல அவர் அயராது உழைத்துவருகிறார். மற்றபடி இப்போதைக்கு அவரது சிந்தனையில் வேறு விஷயங்களுக்கு இடமில்லை என்றே கருதுகிறேன்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ரசிகர் சந்திப்பில் கூட “எந்திரன் முடிந்த பிறகு தான் எதுவாயினும்” என்று அவர் அழுந்தந்திருத்தமாக கூறிவிட்டார். காரணம் அவர் எதில் ஈடுபட்டாலும் அதில் முழுமனதுடன் - முழுமையாக - ஈடுபடவேண்டும் என்று விரும்புகிறவர். அதே சமயம் தான் எந்த முடிவு எடுத்தாலும் ரசிகர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கப்படும் என்பதையும் அப்போதே தெளிவுபடுத்திவிட்டார். “நீங்கள் உங்கள் கடமைகளை சரி வர செய்து வாருங்கள். நாம் மறுபடியும் உடகார்ந்து பேசி முடிவெடுப்போம்” என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. வரும் நவம்பர் மூன்றாம் தேதியோடு அவரது ரசிகர் சந்திப்பு முடிந்து ஒரு வருடம் ஆகிறது. இந்த ஆண்டு எப்போது சந்திப்பார் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
உண்மையான ரஜினி ரசிகர்கள் அவர் என்ன முடிவெடுத்தாலும் அவருடன் தான் இருப்பார்கள் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. நாமும் அவருடன் தான் இருப்போம். ஒன்றை மட்டும் ஆணித்தரமாக கூறமுடியும்: தமிழக மக்களின் விருப்பத்தை, நலனை கருத்தில்கொண்டே அவரது முடிவு அமையும். சுயநலத்துக்காக அவர் எந்த முடிவும் எடுத்ததில்லை, எடுக்கவும் மாட்டார்.
ரிப்போர்ட்டரில் நமது தளம் சார்பாக வெளியாகியுள்ள பேட்டி
குமுதம் ரிப்போர்டரிலிருந்து, சில நாட்களுக்கு முன்பு நம்மை தொடர்பு கொண்டு, “எந்திரனுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் என்ன செய்யப்போகிறார் என்பது பற்றி ஒரு கட்டுரை ரிப்போர்டரில் வரவிருக்கிறது. அக்கட்டுரையில் பிரசுரிக்க, இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிவிக்கவேண்டும். உங்களுடைய சிறிய பேட்டி ஒன்றை தரவேண்டும்” என்று கேட்டார்கள்.
கிடைக்கும் வாய்ப்பை பாஸிட்டிவாக பயன்படுத்தி நமது தள வாசகர்கள் கருத்தையும் நமது கருத்தையும் தெரிவிக்கலாம் என்று முடிவு செய்து அதன் படியே நமது கருத்தையும் அளித்தோம்.
இதோ அக்டோபர் 25, 2009 சனிக்கிழமை வெளியாகியுள்ள ரிப்போர்ட்டரில் பிரசுரமாகியுள்ள அந்தக் கட்டுரையும் நமது பேட்டியும் உங்கள் பார்வைக்கு.
இந்த கட்டுரை குறித்தும் நமது கருத்து குறித்தும் எனக்கு தொலைபேசியிலும், மின்னஞ்சல்களிலும் பாராட்டுக்களையும் தகவல்களையும் பகிர்ந்துகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
அதே போல இந்த தளத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், நமது நண்பர்களுக்கும், பத்திரிகை அன்பர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

What next for Endhiran?

‘Endhiran’ that is shaping up in the hands of Shankar with the help of Rajini-Aishwarya Rai Bachchan’s perfect blend is nearing its final stage now!
The shoot of this mega budget film had been on the roll from September 2008. First Shankar took his team to Peru for shooting a duet between the lead pair. Then the team was in Goa, Chennai and then Vellore. Now 90% of the film’s shoot is over and 2 song sequences with some part of the climax fight are there to be shot, say the sources.
Last year on 26th, 27th and 28th of December the fight scene in which the Robo Rajini fights with the original Rajini was shot at VIT University in Vellore. What we hear from the sources is that the remains of the climax will be shot in the same college. Moreover the scenes which will be shot with the help of blue matte will be done in Prasad Studios.
Appada... Oru Vazhiya Shoot Mudiyapodhu...

Rajinikanth goes to Hyderabad

This November 7th a starry night is to be held in Hyderabad to raise funds for helping Andhra Pradesh's flood victims.
This grand event will see Superstar Rajinikanth and many more celebs from Tamil and Hindi cine industry scorching the event with their benign presence.
Dasari Narayana Rao, ace film personality confirmed the same recently to the media. As the event is meant to raise money for a noble cause, support is coming from various quarters. In fact, Telugu industry is preparing for the event in a big way and Dasari's call for everyone to attend seems to have been taken seriously by all and sundry.
If the event becomes a success like the A R Rahman's Jai Ho Concert, a huge fund will be raised for the flood victims.
We wish for the best guys!

Rajini and Vijaykanth chip in to help


The recent floods in Andhra Pradesh have left the state devastated with a huge loss of life and property. The government’s allocation of Rs. 1000 crores as relief fund is still insufficient to meet the expenses, considering the heavy losses. The film fraternity is now gearing up to help the state recover from the devastation by conducting a star night show to collect funds and help the victims through it.It has been confirmed that Tamil film stars including Rajinikanth, Vijaykanth, and Sarath Kumar will participate in the event. Bollywood stars Jitendra and Rajesh Khanna will also grace the occasion. Further, there are expectations that Malayalam superstars Mammootty and Mohanlal could also grace the occasion. The Tamil Film Producers’ Council has donated Rs. 10 lakhs for the victims.

Soundarya Rajinikanth’s JV with Mahesh Bhupathi


Soundarya Rajinikanth’s Ocher Studios and tennis player Mahesh Bhupathi’s Globosport has entered into a joint venture agreement to focus on the untapped potential and a relatively new concept to the South Indian cinema - Celebrity Management. Apart from helping talented artistes in managing endorsements, the venture will also concentrate in New Media rights of South Indian celebrities and the South Indian Film Awards Extravaganza. The awards will be a tribute to the achievements of South Indian film artistes and technicians working on and off the screen.In a press release, Soundarya was quoted as saying, “The South can boast of some of the biggest talents in the Indian Film Industry. Recognizing talent is as important as sustaining it. I am very excited about our association with Mahesh Bhupathi and this Joint Venture.” According to Mahesh Bhupathi, “It is great to be involved with the South that is often considered to be the Mecca of Indian cinema.”

‘You and Suriya can work again’- Rajini



We all know that our Superstar is one person who never fails to appreciate hard work and quality products, we have one such incident here...
Rajinikanth had gone for a special screening of Suriya’s ‘Aadhavan’ along with his family. We heard that Latha Rajinikanth, Soundarya, Aishwarya Dhanush and our Superstar’s grand son Yathra were in Four Frames Preview Theatre on October 16th.
The whole family was enjoying the show so much that our Superstar laughed loud heartily over the comedy scenes. (The fact we all know is that no hero can be as comical as Rajini is... He is a multifaceted Superstar!) Rajini was visibly having a great time laughing over the scenes between Suriya and Vadivelu particularly and came out of the theatre with a big smile. Rajini had wished the film’s producer Udhayanidhi saying, “The film has come out so well. Congratulations for your whole team. Suriya-Vadivelu combination has worked out so well.” Then Rajini had immediately called K S Ravikumar and said, “Ravi Sir, the film is really excellent. You have used Suriya so well. You and Suriya can work again.”

ரஜினியின் 'சுல்தான்' வெளிவர தாமதம் ஏன்?


ரஜினி நடிக்கும் அனிமேஷன் படமான 'சுல்தான்- தி வாரியர்' 2010ம் ஆண்டு மத்தியில் வெளியாகும் என்று அப்படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினி தெரிவித்துள்ளார்.இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட இந்தப் படம், 70 சதவீத அளவுதான் முடிந்திருக்கிறது.ரஜினி- விஜயலட்சுமி ஜோடியாக நடிக்க, ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம் எப்போது வெளிவரும் என்று ரஜினி ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. காரணம் வரும் 2010ம் ஆண்டு எந்திரன் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்தப் படத்துக்கு முன்பு சுல்தான் வருமா அல்லது பின்னர் வருமா என்று கேட்டு வருகிறார்கள்.இதுகுறித்து சமீபத்தில் சௌந்தர்யா அளித்துள்ள பேட்டியில்,ரஜினியை வைத்து நான் கார்ட்டூன் படம் எடுக்கவில்லை. இது முற்றிலும் வித்தியாசமான அனிமேஷன் படம். சர்வதேச தரத்தில் தயாராகும் இந்த 3 டி படத்தை சீக்கிரத்தில் எடுத்துவிட முடியாது. வெளி நாடுகளில் கூட இது போன்ற படத்தை எடுக்க ஏழு வருடங்கள் வரைகூட ஆகும்.பல விஷயங்களை ஆராய்ச்சி செய்து, மிகப் பிரமாண்டமாக அதே நேரம் ரசிகர்களுக்குப் பிடித்தமான விதத்தில் எடுத்து வருகிறோம். என்னைப் பொருத்தவரை இது ஒரு தமாமதமே அல்ல… மிக சராசரியான கால அளவுதான். சில தினங்களுக்கு முன் சொன்னதைப் போல, இப்போதைக்கு 70 சதவீகித பணிகள் முடிந்துள்ளன.இந்தத் தேதியில்தான் ரிலீசாகிறது என என்னால் இப்போது சொல்ல முடியாவிட்டாலும், நிச்சயம் 2010 மத்தியில் வெளியாகிவிடும். இது உறுதி...என்று கூறியுள்ளார்.

Enthiran Has 1-Song And Climax Fight Pending

Earlier buzzes stated that the climax sequence of ‘Enthiran’ is already shot in a running bus with the ambience of extreme fires. But now the inner reports stated that the climax fight sequence between the dual-role Rajnikanth: Scientist and Robot are yet to be shot.According to the closer hands of ‘Enthiran’ team, it has been revealed that 90% of the filming is done. Merely now, they’ve got a song sequence in abroad and a climax fight to be canned. Soon after the completion of shooting, director Shankar has tentatively scheduled post production works for next 5 months of time.When asked whether the film’s villain Danny Denzongpa will present for the climax sequence, the sources didn’t reveal much about it.

Rajini, Kamal films in Russia

Attempts are being made to screen Tamil blockbusters, including Rajinikanth’s ‘Muthu’ and Kamal Hassan’s ‘Vettaiyadu Vilayadu’ in Russia, along with some of the evergreen classics of Tamil cinema.
The Indo-Russian Chamber of Commerce and Industries is holding discussions with producers of movies like ‘Saraswati Sabatham’, ‘Vasantha Maligai’ and ‘Pudhiya Paravai’, according to the Chamber’s secretary P Thangappan. Thangappan was quoted as saying that a Russian Film Festival will be organised in Chennai in December, which will be followed by an Indian Film Festival in January 2010 in Moscow, the Russian capital.
Production companies such as Kavithalaya are in discussion with the Chamber to screen ‘Muthu’ in Russian cities. ‘Punnagai Mannan’ and ‘Netri Kann’ also figure in the list. Also, Kamal-starrer ‘Vettaiyadu Vilaiyadu’, which is being dubbed in Hindi as ‘The Smart Hunt’, will also hit the Russian cinema halls.
The film’s producer Manicam Narayanan said, “The subject is unique and would attract Hindi audience. It will be screened in Russia with sub-titles.”

வடிவேலு காமெடி - ரஜினி சிரிப்பு!


தீபாவளிக்கு வெளியான ஆதவன் திரைப்படத்தை குடும்பத்துடன் பார்த்த ரஜினி, படத்தில் இடம் பெற்ற மற்ற காட்சிகளை விட வடிவேலு காமெடியைத்தான் வெகுவாக ரசித்து சிரித்தாராம்.

இதைப் படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி கூறியுள்ளார்.

அவர் கூறுகையில்,

ஆதவன் படத்துக்கு ரசிகர்கள் அளித்துள்ள வரவேற்பு நாங்களே எதிர்பார்க்காதது. மொத்தம் 516 தியேட்டர்களில் வெளியிட்டோம். என்எஸ்ஸி ஏரியாவில் மட்டும் ரூ.1 கோடியைத் தாண்டிவிட்டது படத்தின் வசூல்.படத்தை தமிழக முதல்வர் கலைஞர் பார்த்துவிட்டு, நல்ல ஜனரஞ்சகமான படம் என்று பாராட்டினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பத்துடன் இந்தப் படத்தைப் பார்த்தார். அவருக்குப் படத்திலேயே வடிவேலு காமெடிதான் பிடித்திருந்தது. வடிவேலுவின் காமெடி அருமையாக இருந்ததாகவும், சந்திரமுகிக்குப் பிறகு இந்தப் படத்தில் வடிவேலு தூள் கிளப்பியிருப்பதாகவும் கூறிப் பாராட்டினார்.கூடவே, எனக்கும் சூர்யாவுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்" என்றார் உதயநிதி.

சுல்தான் - இம்ப்ரஸ் ஆன ரஜினி & கலக்கப்போகும் எந்திரன் கிராபிக்ஸ்

1) த்ரீ-டி அனிமேஷன் என்பது அத்துணை சுலபம் அல்ல - சௌந்தர்யா ரஜினி
சௌந்தர்யாவை பார்க்கும் எல்லோரும் கேட்கும் ஒரே கேள்வி சுல்தான் எந்த ஸ்டேஜில் இருக்கிறது? எப்பொழுது ரிலீஸ்? என்பது தான். ஒரு வார இதழுக்கு “கோவா” பட டீம் அளித்துள்ள பேட்டியில் ‘சுல்தான்’ பற்றிய கேள்விக்கு சௌந்தர்யா கூறியிருக்கும் பதில் பல சந்தேகங்களை தீர்க்கும் என நம்பலாம். (தனது பதில் முழுக்கசூப்பர் ஸ்டாரை ‘தலைவர்’ என்றே குறிப்பிடுகிறார் சௌந்தர்யா).
“தென் கிழக்கு ஆசியாவிலேயே முதன் முதலில் தயாருகிற 3D அனிமேஷன் படம் இது. கார்டூன் படம் இல்லை. ரஜினி ரஜினியாவே அவரோட முகம், பாடி லேங்குவேஜ், ஸ்டைல்ன்னு எதுவும் மாறாமல் அப்படியே வர்றார். அவருக்கு ஜோடி கூட உண்டு. ஏ.ஆர்.ரஹ்மான் ம்யூசிக்ல பாடல்கள் கூட இருக்கு. பீட்டர் ஹெயினோட திரில்லான ஃபைட் இருக்கு.”
சௌந்தர்யா மேலும் கூறுகையில், “ஜாக்கி சானை வெச்சு டி.வி.க்காக ஒரு கார்டூன் படம் எடுத்தாங்க. ஆனா ரியாளிஸ்டிக்கான 3D அனிமேஷன் படத்துல நடிச்ச முதல் தென் கிழக்கு ஆசிய ஹீரோ தலைவர் தான். கதை அவோரடது தான். டைரக்டரா நான் ஸ்க்ரீன் ப்ளே பண்ணி காண்பிச்சேன். அதுல நம்பிக்கை வந்து தான் ஒத்துகிட்டார். 15 நாள் பாடி ஸ்கேனிங்குக்கு பெல்ஜியம் வந்தார். பாடி சூட் போட்டுக்கிட்டு 47 INFRA-RED கேமிராவுல ஷூட் பண்ண நடிச்சார். இதுவரைக்கும் தயாரான படத்தை ரஷ் பார்த்துட்டு ரொம்ப உற்சாகமா இருக்கார். பொதுவா இந்த மாதிரி படங்களை தயாரிக்க வெளிநாடுகள்ளயே 7 அல்லது 8 வருஷம் கூட ஆகும். அத்தனை வேலை இருக்கு. இது வரைக்கும் 75% படம் முடிஞ்சிருக்கு.”
சூப்பர் ஸ்டார் குடும்பம்… ஒரு நடுத்தரக் குடும்பம்….
சூப்பர் ஸ்டாரை பற்றி மேலும் கூறுகையில், வீட்ல எல்லாருமே பயங்கர பிசி. அதுனால் கிடைக்குற நேரத்தை மிஸ் பண்றதில்லை. எப்படியும் மாசம் ரெண்டு தடவை டின்னர் சாப்பிட போயிடுவோம். சூப்பர் ஸ்டார் ஃபேமிலின்னா எல்லாமே வேற மாதிரி இருக்கும்னு நினைக்கவேண்டாம். ஒரு மிடில் க்ளாஸ் குடும்பத்துல இருக்குற நடைமுறைகள் தான் எங்க குடும்பத்திலயும் இருக்கும்.
தீபாவளிக்கு கூட அப்படித்தான். காலைல குளிச்சுட்டு சாமி கும்பிட்டுட்டு தலைவர் வந்து பட்டாசு வேடிச்சாத் தான் தீபாவளியே… அதுக்கு பிறகு தான் சாப்பாடெல்லாம்.
தனது தாயார் லதா ரஜினியை பற்றி மறக்காமல் குறிப்பிடுகிறார் சௌந்தர்யா. “அம்மா, அத்துணை பிஸிலயும் குடும்பத்தை அத்தோட கட்டு குலையாம நடத்துற விதமே தனி அழகு.

2) எந்திரன் - ஒவ்வொரு ஃபிரேமும் பேசப்படும்
சிறந்த SPECIAL EFFECTS சுக்கான தேசிய விருதை ‘சிவாஜி’ படத்துக்காக பெற்றிருப்பவர்கள் INDIAN ARTISTS என்ற நிறுவனத்தை நடத்தி வரும் ஸ்ரீநிவாஸ் மோகன் & ஜெயகுமார்.
‘சிவாஜி’ படத்தில் ஒரு கூடை சன்லைட் பாடலுக்கு சிறப்பான முறையில் SPECIAL EFFECTS செய்ததற்காக இவர்களுக்கு அந்த விருது கிடைத்துள்ளது. அந்த பாடலுக்காக இவர்கள் மேற்கொண்ட முயற்சிகளின் மற்றும் இயக்குனர் ஷங்கர் தலைமையிலான சிவாஜி படக்குழுவினர் எடுத்துக்கொண்ட சிரத்தைகள் பற்றி பட்டியலிடுகிறார்கள் இந்த இரட்டையர்கள். எந்திரனுக்கும் இவர்கள் தான் SPECIAL EFFECTS என்பது சிறப்பு.

சரி… எந்திரன் பற்றி என்ன கூறுகிறார்கள் இருவரும்?
“எந்திரனில் நீங்கள் பார்க்கப்போகும் இந்த VISUAL EFFECTS படத்தின் ஒவ்வொரு FRAME ஐயும் பேச வைக்கும். படம் துவங்குவதற்கு முன்னர் PRE-PRODUCTION பணிகளுக்காக பல மாதங்கள் செலவிட்ட நாங்கள் இப்போது கிராபிக்ஸ் பணிக்காக (CG) அதைவிட அதிக மாதங்கள் செலவிட்டு வருகிறோம். ஆனால் எங்கள் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்பொழுது, வேறு என்ன வேண்டும்…!!” நம்பிக்கையுடன் கூறுகிறார்கள் இருவரும்.
நம்பிக்கை வெற்றிபெற வாழ்த்துக்கள்.

Endhiran Next Schedule In Pune


Looks like Kolkatta and Pune are becoming the favorite spots of Tamil film industry as of now. Recently, most of the films including Surya starrer ‘Aadhavan’, Manirathnam’s bilingual movie ‘Raavana’ were shot there. Likely, everyone’s focus has been turned towards Pune now.It has been revealed that Rajnikanth-Aishwarya Rai starrer ‘Endhiran’ will have the next schedule shot across exotic locations of Pune. Recently, Shankar had completed the present schedule herein Chennai where climax stunt sequences were shot. Meanwhile, officials of Sun Pictures have been making their presence throughout the production phase to curb the budget exceeding above-the-line.On the pars, Vijay too will shoot for a song in Pune along with Anushka for ‘Vettaikaran’. It was supposed to be shot in Australia and due to the denial of VISA on Vijay and Anushka, director Babu Sivan had opted for this location…

Rajinikanth in AIFEC Honours TN CM Stills, Pictures, Photo Gallery, Images






Utilise govt offers, Rajini tells peers


Superstar Rajinikanth had a suggestion to share with his colleagues at the national conference of the All India Film Employees’ Federation in Chennai on Friday.
In his address, he urged film workers to utilise properly the schemes announced by the government. “The film employees did not take the offer of land made by the previous regime of the AIADMK,” he said.
“Former Chief Minister J Jayalalithaa had announced a similar scheme, but the industry failed to make use of it. Our friends should act upon the offer this time,” the top actor said, referring to an announcement made by Chief Minister M Karunanidhi that the government would provide free houses to film workers.
Referring to Rajini’s observation, M Karunanidhi said he did not want to go into the issue but now, it was for the FEFSI president V C Guhanathan and the employees to select the site. “Once FEFSI members identify the site, the project will begin,” he said.

விபச்சார பெண்கள் பற்றி செய்தி போடாதீர்கள் - ரஜினி உருக்கம்

இரண்டு வேளை சோற்றுக்கு வழியில்லாமல் விபச்சாரத்தில் இறங்கும் பெண்களைப் படம் பிடித்து செய்தி போடுவது சரியில்லை. இதைப் பத்திரிகைகள் தவிர்க்க வேண்டும் என்றார் நடிகர் ரஜினிகாந்த் .அக்டோபர் 7 புதன்கிழமை நடந்த நடிகர் சங்க அவசரக் கூட்டத்தில் பங்கேற்று ரஜினி பேசியதாவது: பொதுவா எனக்குக் கோபம் வந்தா அதிகம் பேசமாட்டேன். ரிலாக்ஸான மைன்ட்ல இருக்கும்போது நிறையப் பேசுவேன். இப்போ நான் ரொம்ப கோபமா இருக்கேன். அந்தப் பத்திரிகையில போட்டோவோட செய்தி பார்த்தப்போ எனக்கே மனசு சரியில்லை. ஒருவேளை ஏப்ரல் ஒண்ணா இருக்குமோன்னு நினைச்சேன். ஆனா தேதியைப் பார்த்தப்போதான் இது சீரியஸ் மேட்டர்னு புரிஞ்சது. ஒரு வேலையும் ஓடல. என்ன செய்யுறதுன்னே தெரியல. பொதுவா விபச்சார வழக்குகளில் கைதாகும் பெண்களை பர்தா போட்டு மூடி போலீசார் அழைச்சிட்டுப் போறதை படம் பிடிச்சி போடறதை பார்க்கும்போதே மனசுக்கு கஷ்டமா இருக்கும். பத்திரிகைகள் தயவு செய்து இதைச் செய்யக்கூடாது.சோத்துக்குத்தானே தப்பு செய்றாங்க...கேவலம், ரெண்டு வேளை சோத்துக்குதானே இவங்க அப்படி தப்பு செய்றாங்கன்னு தோணும். தப்பு செஞ்ச அவங்க மேலேயே நமக்கு இவ்வளவு அனுதாபம் வரும்போது, தவறே செய்யாத இங்க உட்கார்ந்திருக்கிற நம்ம சகோதரிகளைப் பத்தி போட்டோவோட நியூஸ் வந்தா அவங்க மனசு என்ன பாடுபடும்... நான் சொல்றேன்... நீங்க தப்பு செஞ்சீங்களா இல்லையான்னு உங்களுக்குத் தெரியும். உங்க உறவுக்காரங்க, அப்பா அம்மா, பிள்ளைங்களுக்குத் தெரியும... அந்த ஆண்டவனுக்குத் தெரியும்... இதெல்லாம் ஒண்ணுமில்லை... மனசைத் தளர விடாதீங்க. நான் கேட்கிறதெல்லாம்... உண்மையிலேயே இவங்க தப்பு செஞ்சிருந்தாங்கன்னா, அதை ஆதாரத்தோட நிரூபிச்சி தண்டனை வாங்கிக் கொடுங்க. ஆனா இப்படி ஆதாரமில்லாம போட்டோ போட்டு அசிங்கப்படுத்தக்கூடாது. நான் ரொம்ப நேரம் பேசினா உணர்ச்சிவசப்பட்டுடுவேன். அதனால இதோட முடிச்சிக்க விரும்பறேன். இப்போ கடைசியா ஒரு நல்ல செய்தி வந்திருக்கு... அந்த நியூஸ் போட்ட பத்திரிகை ஆசிரியரை கைது பண்ணியிருக்கிறதா செய்தி வந்திருக்கு. காவல் துறையினருக்கு நன்றி... இந்த அதிரடி நடவடிக்கை எடுத்த முதல்வர் கலைஞருக்கும் நன்றி தெரிவிச்சிக்கிறேன்... என்றார் ரஜினி.

‘ஏ.வி.எம். தந்த எஸ்.பி.எம்.’ - நூலை வெளியிட்டு வாழ்த்திய சூப்பர் ஸ்டா



சூப்பர் ஸ்டாரை வைத்து அதிக படங்களை இயக்கியவர் என்ற பெருமை பெற்றவர் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.
கேரக்டர் ரோலில் நடித்த்கொண்டிருந்த ரஜினியை ஒரு மாஸ் கமர்ஷியல் ஹீரோவாக ஆக்கிய பெருமை எஸ்.பி.எம். என்று அன்புடன் அழைக்கப்படும் எஸ்.பி.முத்துராமனையே சாரும்.

சூப்பர் ஸ்டாருக்கும் எஸ்.பி.எம்.முக்கும் எப்படியோ அதே போன்று தான் ஏ.வி.எம். நிறுவனத்திற்கும் எஸ்.பி.எம்.முக்கும் ஒரு நெருங்கிய பந்தம் உண்டு. ஏ.வி.எம்.ம்மின் பல வெற்றிப் படங்களை இயக்கியதும் எஸ்.பி.எம் தான்.
இவரின் வாழ்க்கை அனுபவங்கள் பிரபல எழுத்தாளர் ராணி மைந்தன் அவர்களின் எழுத்தில் ‘ஏ.வி.எம். தந்த எஸ்.பி.எம்’ என்னும் புத்தகமாக வெளிவந்துள்ளது. விகடன் பிரசுரம் வெளியிட்டிருக்கும் இந்த நூலை சூப்பர் ஸ்டார் நேற்று தமது இல்லத்தில் வெளியிட்டு வாழ்த்தினார்.
விகடன் பிரசுரம் பதிப்பாளர் பா.சீனிவாசன் முதல் பிரதியை வெளியிட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.
சூப்பர் ஸ்டாரின் வீட்டில் நடைபெற்ற இந்த எளிய நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன், விகடன் பதிப்பாளர் பா.சீனிவாசன், விகடன் ஆசிரியர் வி.எஸ்.வி, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் நூலாசிரியர் ராணிமைந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஏராளமான புகைப்படங்களுடன் தரமாக உருவாகியிருக்கும் இந்த நூலின் விலை ரூ.125/-. மொத்த பக்கங்கள் 384. (வெளியீட்டாளர்: விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002.)

”தலைவர்’ டாக்குமெண்டரி - சிறப்பு


ரசிகர்கள் தயாரித்த ‘தலைவர்’ என்னும் குறும்படத்தை சென்ற மாதம் வெளியிட்டு சூப்பர் ஸ்டார் ஆசீர்வதித்தது நாமெல்லாம் அறிந்ததே. ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அந்த டாக்குமெண்டரி இதோ டி.வி.டி. வடிவத்தில் வெளிவந்துவிட்டது.
இதன் தயாரிப்பாளரான கவின் கார்த்திக் டி.வி.டி. எப்படியிருக்கும் என்பதற்கு அடையாளமாக ஒரு ட்ரைலரை வெளியிட்டிருக்கிறார். இதோ உங்களுக்காக அந்த ட்ரைலரை இங்கு தருகிறேன். இந்த சிறப்பு ட்ரைலரை பார்த்தால் முழு தொகுப்பு எப்படியிருக்கும் என்று உங்களுக்கு தெரிந்துவிடும்.
டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் எழுதிய சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கை வரலாற்று நூலையடுத்து சூப்பர் ஸ்டாருக்காக வெளிவரும் பிரத்யேக வெளியீடு இது. தலைவரின் மேடைப் பேச்சுக்கள், பன்ச் டயலாக்குகள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு சிறப்பான முறையில் இந்த தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.

சரியான பஞ்ச் வசனங்களை பாடல் க்ளிப்பிங்குகளை சரியான இடத்தில் புகுத்தியிருப்பது சுவாரஸ்யத்தை கூட்டுகிறது. இசையும் அதேகேற்றார்போல அசத்தல் தான்.
இதை தயாரித்தது மிகப் பெரிய நிறுவனங்கள் அல்ல என்பதையும் - நம் ரசிகர்களின் முயற்சி இது என்பதையும் நினைவில் வைத்து நிறைகளை மட்டும் பார்க்கவும்.
Trailer Video Clip:
இது தொடர்பான பரிவர்த்தனைகள் மற்றும் உங்கள் கேள்விகள் அனைத்தையும் டி.வி.டி.யின் தயாரிப்பாளர் கவின் கார்த்திக் அளித்துள்ள கீழ்கண்ட அஞ்சல் முகவரி மற்றும் இமெயிலில் வைத்துக்கொள்ளவும்.
(தற்போதைக்கு இந்த டி.வி.டி. வேறெங்கும் கிடைக்காது. கீழ்கண்ட முகவரியில் மட்டுமே கிடைக்கும்.)
Manavamakkal Kalaikoodam,3/1242, Golden Colony, Annanagar West Extn,Chennai- 600 050Contact no.9884317577Mail your queries to :டி.வி.டி. விலை : ரூபாய்.99/- (Postage and handling charges extra applicable).
(ட்ரைலர் Downsampling & Youtube uploading உதவி : ஹரி)
END

Rajini daughter Aishwarya Dhanush ramp Stills, Images, Pictures, Photo Gallery






கமல் நடிக்க வேண்டிய எந்திரனில் நான் நடிக்க தயங்கினேன் - ரஜினி பரபரப்பு பேச்சு



நடிகர் கமலஹாசன் சினிமா துறைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி விஜய் டி.வி. அவருக்கு பிரமாண்ட பாராட்டு விழா நடத்தியது. இந்த விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.

இதில் ரஜினிகாந்த், மலையாள நடிகர் மம்முட்டி, தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், அல்லு அர்ஜுன், இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், மற்றும் தமிழ் நடிகர்- நடிகைகள் பலர் வாழ்த்தி பேசினர்.
கமலின் 50 வருட சினிமா சாதனை பற்றி ரஜினிகாந்த் பேசியதாவது:-
கமலைப்பற்றி பேச வேண்டுமானால் 2 நாள் வேண்டும். 1975-களில் அவர் சூப்பர் ஸ்டாராக இருந்த காலங்களில்தான் நான் தமிழ் சினிமாவிற்குள் வந்தேன். நாங்கள் இணைந்தும் படங்களில் நடித்து கொண்டிருந்த காலம் அது. “இளமை ஊஞ்சலாடுகிறது” படத்தில் என்னை நடிக்க சிபாரிசு செய்தவரே கமல்தான். அவர் நினைத்திருந்தால் என்னை நடிக்கவிடாமல் செய்திருக்க முடியும்.
நினைத்தாலே இனிக்கும் படம்தான் நாங்கள் இணைந்து நடித்த கடைசி படம். அப்போது கமல் என்னிடம் சொன்னார். ரஜினி நாம் இனிமேல் இணைந்து நடிக்க வேண்டாம். அப்படி நடித்தால் புகழ் பெயர் வாங்க முடியாது. நீங்கள் உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.
தமிழ் சினிமா உலகில் ஜாக்கிரதையாக இருங்கள் என்று கூறி என்னை உற்சாக மூட்டினார். இது மட்டுமல்ல நாம் பிரிந்தாலும் என் படங்களில் உள்ள கலைஞர்களை நீங்கள் பயன்படுத்துங்கள். உங்கள் படங்களில் உள்ளவர்களை நான் பயன்படுத்துகிறேன் என்று கூறினார்.
சிரஞ்சீவி, அமிதாப், மம்முட்டி, மோகன்லால் எல்லோரும் நினைக்கலாம் கமல் என்ற சூப்பர் ஸ்டார் இருக்கும்போது ரஜினி எப்படி இவ்வளவு பெரிய ஹீரோவானான். நான் கமல் நடிப்பை பார்த்துதான் இந்த அளவுக்கு முன்னேறி உள்ளேன்.
குருநாதர் பாலச்சந்தர் எங்கள் 2 பேரையும் வைத்து இயக்கினார். அப்போது சூட்டிங்கில் கமல் நடித்து கொண்டிருப்பார். நான் அவர் நடிப்பை பார்க்காமல் சிகரெட் பிடிக்க வெளியே சென்றுவிடுவேன். குருநாதர் என்னை தேடுவார். நான் வந்தவுடன் எங்கடா போனே “தம்” அடிக்கவா? ஏன்டா. கமல் நடிப்பை பாருடா நடிப்பை கத்துக்கோடா என்று கூறுவார்.

அதன் பிறகு கமல் நடிக்கும்போது அவரது நடிப்பை கவனித்தேன். தம் அடிக்க போகவேமாட்டேன். கமல் பாதை வேறமாதிரி. அதை நான் பின்பற்றாமல் எனக்கு வேற ரூட் ஒன்றை போட்டேன் கொஞ்சம் புத்தியை யூஸ் பண்ணினேன்.
நான் நடித்துக் கொண்டிருக்கும் “ரோபோ” எந்திரன், படம் கமல் நடிக்க வேண்டிய படம். அவருக்குதான் ஷங்கர் ரெடி பண்ணினார். ஆனால் சில கால தாமதத்தால் இப்போது மாறி போய் உள்ளது. ஷங்கர் ரோபோ பற்றி என்னிடம் கதையை சொல்லும்போது நான் நடிக்கமாட்டேன். இது கமலுக்காக தயார் செய்த கதை. அதில் என்னை கொண்டு வரமுடியாது என்றேன். ஆனால் ஷங்கர் சார் இது உங்களுக்காக வேறு மாதிரி செய்துள்ளேன்.
கமல் உண்மையான “சகலகலா வல்லவன்” கலையரசி தாய் மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, வெங்கடேஷ், என்னை ஆகியோரை கைகளால் பிடித்து கொண்டுள்ளார். ஆனால் கமலை மட்டும் மார்போடு அனைத்து பாதுகாத்து உள்ளார். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று நாங்களும் நடிகர்கள்தானே கலையரசியிடம் நான் கேட்டேன்.
அதற்கு அவர் சொன்னார், நீ சினிமாவிற்கு வரவேண்டும் என்று இந்த ஜென்மத்தில்தான் ஆசைபடுகிறாய். ஆனால் கமல் 10 ஜென்மத்திற்கு முன்பே இருந்து ஆசைப்பட்டு கொண்டிருக்கிறார் என்று கூறினார்.
இவ்வாறு அவர் பேசினார்.
(செய்தி உதவி: மாலை மலர்)

‘மாறுவேடத்தில் நகர்வலம்’ - கதைக் களத்தில் கல்கியும் நிஜ களத்தில் ரஜினியும்!!



சூப்பர் ஸ்டாருக்கு மாறுவேஷத்தில் சுற்றுப் பயணம் செய்வதில் உள்ள ஆர்வம் பற்றி பிரபல இயக்குனரும் நடிகருமான மணிவண்ணன் சமீபத்தில் விகடனில் கூறியிருந்தார். சும்மா மேம்போக்காக சொல்லாமல் ஆணியடித்தார்போல சில விஷயங்களை அதில் அவர் கூறியிருந்தார். சூப்பர் ஸ்டாரின் மாறுவேட ஆச்சரியங்கள் பற்றி ரசிகர்கள் பேசிக்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் இந்த பதிவை அளிப்பது பொருத்தமாக இருக்கும் என்பதால் இப்போது அதை தருகிறேன்.
தலைவர் பெரும்பாலும் மக்களின் பல்ஸ் தெரிந்துகொள்ளவும், தனது தனிமையை பாதுகாத்துகொள்ளவும், ஒரு பிரச்னையைப் பற்றியோ அல்லது தன்னைப் பற்றியோ பிறரின் உண்மையான அபிப்ராயங்களை தெரிந்துகொள்ளவும் தான் மாறுவேடங்களை விரும்பி அணிகிறார்.
பெங்களூர் சென்றால் பெரும்பாலும் மாறுவேடம் தான். ஏன், மணிவண்ணன் சொன்னது போல சென்னையிலேயே பல இடங்களில் மாறுவேடத்தில் சுற்றியிருக்கிறார்.
பல அரசியல் கூட்டங்களுக்கு மாறுவேடங்களில் சென்றிருக்கிறார் (செய்தி: டாக்டர். காயத்ரி ஸ்ரீகாந்த்)
திருமங்கலம் இடைத் தேர்தலை மாறுவேடத்தில் சென்று கண்காணித்திருக்கிறார். (செய்தி: தினமலர்)
மாறுவேடம் தரிப்பது என்பது நாட்டை ஆளும் மன்னனுக்குரிய முக்கிய குணங்களில் ஒன்று. அதன் மூலம் ஏற்படும் நன்மைகள் ஏராளம். மன்னர்கள் தமது குடிகளின் குறை நிறைகளை தெரிந்துகொள்ள மாறுவேடத்தில் நகர்வலம் வருவது தொன்றுதொட்டு வந்த ஒரு வழக்கம். ராஜ ராஜ சோழன் முதல் அசோக சக்கரவர்த்தி வரை பல மன்னர்கள் மாறுவேடத்தை புனைந்து மக்கள் குறைகளை கேட்டரிந்தவர்களே. அவ்வளவு ஏன்… முகலாய மாமன்னர் அக்பர் மற்றும் கிருஷ்ணா தேவராயர் ஆகியயோர் மாறுவேடங்கள் புனைவதில் கெட்டிக்காரர்கள். சத்ரபதி சிவாஜியின் மாறுவேட திறன் பற்றி நாளெல்லாம் கூறிக்கொண்டே போகலாம்.
அமரர் கல்கி தமது ‘பார்த்திபன் கனவு’ நூலில் நாட்டை ஆளும் மன்னன் மாறுவேடத்தை புனைவதன் அவசியத்தை நரசிம்மவர்ம சக்கரவர்த்தியின் வாயிலாகவே அழகாக விளக்குகிறார். காவியத்தில் இடம்பெறும் முக்கிய பாத்திரமான நரசிம்மவர்ம சக்கரவர்த்தி அடிக்கடி மாறுவேடத்தில் தோன்றுவார். அது குறித்து அவரது மகள் எழுப்பும் கேள்வியும், அதற்க்கு நரசிம்மவர்மன் கூறும் பதிலையும் பாருங்கள்.
மன்னனுக்கு மாறுவேடம் அவசியமா?
//அத்தியாயம் 9 - விபத்தின் காரணம்
சக்கரவர்த்தியைக் குந்தவி வியப்புடன் நோக்கினாள். அவளுடைய மைதீட்டிய பெரிய கண்கள் அதிசயத்தினால் விரிந்து மலர்ந்தன. “இது என்ன அப்பா, இது? கூத்தாடிகள் அல்லவா வேஷம் போட்டுக் கொள்வார்கள்? இராஜாக்களுக்கு எதற்காக வேஷம் போடும் வித்தை தெரிய வேண்டும்” என்று கேட்டாள். “ஒரு தேசத்தைப் பரிபாலிப்பவனுக்குப் பல கலைகளும் தெரிந்திருக்க வேண்டும் குழந்தாய், முக்கியமாக வேஷம் போட்டுக் கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் பிரஜைகளின் மனோபாவங்களை அவ்வப்போது தெரிந்துகொள்ள முடியும். இன்னும் சத்துருக்களைப் பற்றிய இரகசியங்களையும் தெரிந்து கொள்ளலாம். நாட்டில் குற்றங்கள் நடக்காமல் தடுக்கலாம்….” என்று சக்கரவர்த்தி சொல்லி வருகையில் குந்தவி குறுக்கிட்டாள். “இப்போது எந்தக் குற்றத்தைத் தடுப்பதற்காக இந்த வேஷம் போட்டுக் கொண்டீர்கள்? நான் ஏதாவது குற்றம் செய்யப் போவதாகச் சந்தேகமா?” என்று சொல்லி முல்லை மலர்வதுபோல் பல்வரிசை தெரியும்படி நகைத்தாள்.//
நண்பர்களுடனோ, தனியாகவோ வெளியே செல்லும்பொழுது தனக்கிருக்கும் புகழ் வெளிச்சம் தனது சுதந்திரத்தை எள்ளளவும் பாதித்துவிடக்கூடாது என்ற காரணத்தினால் சூப்பர் ஸ்டார் புனைந்த மாறுவேடம் காலப்போக்கில் எப்படி ஒரு நாடாளும் அரசனக்குரிய தகுதிகளுள் ஒன்றாக அமைந்துவிட்டது பார்த்தீர்களா?
[END]

Rajini hails Eeram crew



After watching the preview of the recently released Eeram at the Four Frames theater, superstar Rajinikanth congratulated the team of the movie saying that the movie was a brilliant effort. He met the crew members including director Arivazhagan, Aadhi, Shankar, Thaman and others. Rajini’s message that ‘the movie would attract female audience in line with Chandramukhi and Arundathi’ is to be used for the 25th day posters of the movie, director Arivazhagan stated.

Rajnikanth Is A Modern Guru Says Suman


Actor Suman who got a state award for his villains role in Sivaji is happy for another reason as well. ‘I got to spend one and half years almost, with none other than the superstar himself during the making of the film,” he says. This experience was an unforgettable one for the actor.Recalling those days he says, “Rajnikanth is a modern guru. He gave me a lot of advice about life, our profession, how to respect elders, how to balance work and family life and how to be a good human. He used to tell me a lot about how to be punctual and do our best for the producer who has so much riding on the projects we work in. Rajni himself would come well in advance for any shoot with make up, setting an example that we could see for ourselves. From him I learnt many things about how to face competition, how to face the future and how to live ones life to the fullest,” says Suman.It’s undoubtedly, advice that he will always remember and cherish in his life.

Superstar Rajinikanth Road - Coming soon!

Reliable source says that our Chief Minister Dr. Karunanidhi has positively nodded for the proposal to rename Eldams Road as Dr Kamal Haasan Road very soon.
Our Ulaganayagan’s 50 golden years in cinema is celebrated by everyone with great pleasure. The industry is surely proud to have an actor, who could be looked upon as a great icon. Same way our Superstar Rajinikanth is a person with equal charisma and achievements. On top of that Rajini is the only actor who has ruled the industry as the Superstar for more than 30 years now.
The latest we here from the sources close to the government is that our Superstar’s name will be given to the Poes Garden Road, where he lives or to the Arcot Road, which is the main entrance to Kodambakkam.
It’s heard that both the renaming process will happen soon as the birthday of our great stars are falling very close…
Related Posts Plugin for WordPress, Blogger...