சினிமா ஷூட்டிங் என்றாலே திருவிழா தான். அதிலும் சூப்பர் ஸ்டாரின் ஷூட்டிங் என்றால் சும்மாவா?
பழைய மகாபலிபுரம் சாலையில் சிறுசேரியில் உள்ள சிப்காட்டில் தற்போது எந்திரன் படப்பிடிப்பு நடை பெற்றுவருகிறது. ரோபோ கெட்டப்பில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் முக்கிய காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு வருகின்றன.
ஏராளமான சாப்ட்வேர் நிறுவனங்கள் அந்தப் பகுதியில் உள்ளன. எந்திரன் படப்பிடிப்பு நடக்கும் விஷயத்தை கேள்விப்பட்டு அவரவர் தாங்கள் வேலைகளை அப்படியே போட்டுவிட்டு படப்பிடிப்பை காண வந்துவிட்டனர்.
சூப்பர் ஸ்டாரை சற்று தொலைவில் இருந்தாலும் நேரில் காணும் வாய்ப்பை பெற்றவர்கள், தாங்கள் நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும் போன் செய்து விஷயத்தை கூற, அவர்களும் அந்த பகுதியை நோக்கி படையெடுக்க, அந்த இடமே ஒரு திருவிழா பரபரப்புடன் காணப்பட்டது.
சூப்பர் ஸ்டாரை பார்க்க நேர்ந்தவர்கள் உற்சாக கூச்சலிட்டுகொண்டேயிருந்தனர். சுற்றியிருந்த செக்யூரிட்டிகள் படப்பிடிப்பை யாரும் தங்கள் மொபைலிலோ அல்லது கேமிராவிலோ படம் பிடித்துவிடாதபடி பார்த்துகொண்டனர். மீறி படம் பிடித்தவர்களின் மொபைல் பறிமுதல் செய்யப்பட்டு படங்கள் அழித்து திருப்பி தரப்பட்டது.
நம் தள வாசகர்களும் நண்பர்களுமான புவனேஷ், வெங்கடேசன் மற்றும் பலர் படப்பிடிப்பை காணும் வாய்ப்பை நேற்று பெற்றனர். அவர்கள் தங்கள் அனுபவங்களை நமக்கு அனுப்பியிருக்கின்றனர்.
இவர்களின் தகவல் அங்கு நிலவிய சூழ்நிலையை தான் பிரதிபளிக்குமேயன்றி, படத்தின் கதையையோ, சூப்பர் ஸ்டாரின் கெட்டப்பையோ பிரதிபலிக்காது.
“இதை RE-WRITE செய்து வெளியிடுமாறு நண்பர் புவனேஷ் கூறியிருந்தார். ஆனால் அவர் எழுத்தே மிகவும் யதார்த்தமாக இருப்பதால அதை அப்படியே தருகிறேன்.
அவுட்டோரில் ஷூட்டிங்கை நடத்துவதில் உள்ள முக்கிய ப்ளஸ் பாயிண்ட்
இப்படி ஷூட்டிங்கை அவுட்டோரில் நடத்துவது படப்பிடிப்பு குழுவினருக்கு கடினமான பணியாக இருந்தாலும் படத்திற்கு அது ஒரு வகையில் நல்ல விளம்பரமாக அமைந்துவிடுகிறது. விளம்பரங்களுக்கேல்லாம் அப்பாற்ப்பட்டவை தலைவரின் படங்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும் - இப்படி தலைவரை நேரில் படப்பிடிப்பில் பார்க்கும்பொழுது கிடைக்கும் சந்தோஷத்தை வேறு எதாவது தரமுடியுமா? ஆக, இத்தகு அவுட்ர் ஷூட்டிங் SCHEDULES ரசிகர்களை நிச்சயம் உற்சாகத்தில் வைத்திருக்கும். அந்த உற்சாகம் மற்றவர்களுக்கும் பரவும்.
மற்றொரு விஷயம், ஷூட்டிங்கை காண குவியும் அனைவரும் ஆவலின் காரணமாக திரையில் அதை பார்க்க நிச்சயம் வருவர்.
நன்றி
————————————————–Over to Bhuvanesh:
ஒரு வணக்கம், கொஞ்சம் டாட்டா, நெறைய புன்னைகை
அய்யோ.. நான் இவ்வளவு சந்தோசமா ஒரு பதிவ போட்டதே இல்ல.. சின்ன வயசுல இருந்தே சூப்பர் ஸ்டார்னா எனக்கு ரொம்பபபபப பிடிக்கும்.. விவரம் தெறியாத வயசுல கூட அவர் படம் போட்டு என்ன மூணு மணிநேரம் உக்கார வெச்சிருவாங்கலாம்.. அன்னைக்கு முதல் இன்னைக்கு வரை அவர்னா எனக்கு தனி மரியாதை தான்! என்னதான் அன்பே சிவம் பாத்து அசந்து போனாலும் நானெல்லாம் பாஷா, படையப்பா, முத்து, வசூல்ராஜா, கில்லி போன்ற படங்களின் ரசிகன்!
சரி சரி.. இன்னைக்கு நடந்தத சொல்லறேன்..
எங்க கம்பனி இருகிற இடத்துல ஷூட்டிங்.. இது ஒரு ஐ.டி தொழிற்பேட்டை! இங்க ஏகப்பட்ட ஐடி கம்பனி இருக்கு.. இன்னைக்கு ஷூட்டிங் தலைவர் வராருன்னு காட்டு தீ போல பரவுச்சு! ரெண்டு நாளாவே இந்த பரபரப்பு இருந்துச்சு, இணைக்கு கொஞ்சம் ஓவர்!! எங்க கம்பனி மாடில பொய் நின்னா ஷூட்டிங் பக்கத்துல தெரியும்.. அங்க போய் பாத்துட்டு தலைவர பாத்தோம், அவரு செம ஸ்டைல், காய் ஆட்டுனாருனு சில பேர் வந்து வால் ஆட்டுனாங்க! சரி நானும் போவோம்னு ஒரு செட்டு சேந்து போனா, அங்க அவரு டூப் வெச்சு ஷூட்டிங் எடுத்தாங்க.. நாங்க நிக்கரதப்பாத்து ஒரு ஸ்ட்ரிக்ட் செக்யூரிட்டி கஷ்டப்பட்டு எப்படியோ எங்க கம்பனிகுள்ள வந்து நாங்க இருக்கற இடத்துக்கும் சத்தம் இல்லாம வாந்தாரு..
செல் போன் கேமரால ஷூட்டிங் யாரும் பண்ணக்கூடாதுனு இந்த ஏற்பாடாம்… நாங்க தலைவர தேடிட்டு இருந்தோம்.. இந்த கேப்ல பீட்டர் ஹைன்ஸ் கார்ல வித்த காட்டுனாரு.. சரி போலாம்னு எல்லோரும் கிளம்பிட்டோம்.. என்னால தான் வேலை பாக்கமுடியல.. சரின்னு திரும்பவும் வேற கேங் சேத்து மொட்டைமாடி வேற இடம்.. அங்க ஒரு வேன்ல (கேரவேன்!!) தலைவர் இருக்காருன்னு சொன்னாங்க.. திடிருன்னு வேனுக்கு அந்த பக்கம் ஒரே சவுண்ட்.. எல்லோரும் போட்டோ எடுக்கறாங்க.. நான் இந்த சைடு இருந்ததால தலைவர பாக்க முடியல.. அதுக்கு மேல இருப்பு கொள்ளல!!
நான் மட்டும் வெளிய வந்து அந்த கேரவன் பக்கம் போய் நின்னிட்டேன்! சொன்னா நம்பமாட்டீங்க.. நின்ன கூட்டத்துல அறுபது சதவீதம் பொண்ணுங்க.. எல்லாம் ஐ.டி கேர்ள்ஸ்.. சினிமா பாசைல சொல்லனும்னா எல்லாம் “A” கிளாஸ்.. அட நான் பொண்ணுங்கள சொல்லலப்பா , நின்ன கூட்டத்த சொல்லறேன்!!
அங்க ஒரு BMW, ஒரு Honda City இருந்துச்சு.. BMW ஷங்கர் சார் வண்டி.. ரெண்டாவது நம்ம சிம்பிள் மேன் வண்டினு சொன்னாங்க.. நான் நம்பல.. ச்சே.. தலைவர் வண்டில சாஞ்சுட்டாவது போட்டோ எடுத்திருக்கலாம்..
ஒருத்தர் கேரவேன் உள்ள போனார்.. கார் டிரைவர் வண்டிய கேரவேன் பக்கத்துல கொண்டு போனார்.. இடம் பரபரப்பு ஆச்சு.. தலைவர் வெளிட கை ஆடிக்கிட்டே வந்தார்.. எல்லோருக்கும் ஒரு வணக்கம் வெச்சார்.. உள்ளே போய் உக்காந்தார்..“தலைவா இந்த பக்கம் திரும்பி பாக்கவே இல்ல” னு ஒரு சவுண்ட்!! உள்ள உக்காந்துட்டு இருந்தவரு, எழுந்து வந்து அந்த சைடு பாத்து ஒரு வணக்கம், கொஞ்சம் டாட்டா, நெறைய புன்னைகை, இன்னும் நிறைய உற்சாகம், அதைவிட ஸ்டைல்!!
ஒரு சூப்பர் ஸ்டார் ஒரே ஒரு குரலுக்கு மரியாதை தந்தார்.. அதுவும் படார்னு வெளிய வந்த ஸ்டைல் இன்னும் எந்த படத்துலயும் வரல..
கை தொடும் தலைவரை பாப்பேன் என்று கனவு கூட கண்டது இல்லை!
டோடல்லி I am Sooooooooooooooooooooooooooooo ooo Happpppppppppppppppppppppppppyyyyyyyyyyyyyy!!
No comments:
Post a Comment