சூப்பர் ஸ்டாரை வைத்து அதிக படங்களை இயக்கியவர் என்ற பெருமை பெற்றவர் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.
கேரக்டர் ரோலில் நடித்த்கொண்டிருந்த ரஜினியை ஒரு மாஸ் கமர்ஷியல் ஹீரோவாக ஆக்கிய பெருமை எஸ்.பி.எம். என்று அன்புடன் அழைக்கப்படும் எஸ்.பி.முத்துராமனையே சாரும்.
சூப்பர் ஸ்டாருக்கும் எஸ்.பி.எம்.முக்கும் எப்படியோ அதே போன்று தான் ஏ.வி.எம். நிறுவனத்திற்கும் எஸ்.பி.எம்.முக்கும் ஒரு நெருங்கிய பந்தம் உண்டு. ஏ.வி.எம்.ம்மின் பல வெற்றிப் படங்களை இயக்கியதும் எஸ்.பி.எம் தான்.
இவரின் வாழ்க்கை அனுபவங்கள் பிரபல எழுத்தாளர் ராணி மைந்தன் அவர்களின் எழுத்தில் ‘ஏ.வி.எம். தந்த எஸ்.பி.எம்’ என்னும் புத்தகமாக வெளிவந்துள்ளது. விகடன் பிரசுரம் வெளியிட்டிருக்கும் இந்த நூலை சூப்பர் ஸ்டார் நேற்று தமது இல்லத்தில் வெளியிட்டு வாழ்த்தினார்.
விகடன் பிரசுரம் பதிப்பாளர் பா.சீனிவாசன் முதல் பிரதியை வெளியிட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.
சூப்பர் ஸ்டாரின் வீட்டில் நடைபெற்ற இந்த எளிய நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன், விகடன் பதிப்பாளர் பா.சீனிவாசன், விகடன் ஆசிரியர் வி.எஸ்.வி, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் நூலாசிரியர் ராணிமைந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஏராளமான புகைப்படங்களுடன் தரமாக உருவாகியிருக்கும் இந்த நூலின் விலை ரூ.125/-. மொத்த பக்கங்கள் 384. (வெளியீட்டாளர்: விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002.)
No comments:
Post a Comment