After Endhiran, what’s next for Rajini ??? Check our EXCL. INTERVIEW in cover story of Kumudam Reporter!!


எந்திரனுக்கு பிறகு என்ன??? குமுதம் ரிப்போர்ட்டர் கவர் ஸ்டோரியில் நமது பிரத்யேக பேட்டி!!
எந்திரனுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் என்ன செய்யப் போகிறார்; என்ன முடிவெடுக்கப் போகிறார்? என்று தெரிந்து கொள்ளும் ஆவலும் கேள்வியும் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, பத்திரிக்கைகளுக்கும் உள்ளது.
எந்திரனுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் அரசியலில் ஈடு படக்கூடும் என்ற தகவல் ஒரு புறம், ஆன்மீகத்தில் ஈடுபடக்கூடும் என்ற ஜோதிடம் ஒரு புறம், இல்லை… இல்லை… இன்னும் சில ஆண்டுகள் அவர் நடிக்கக்கூடும் என்ற கணிப்பு இன்னொரு பக்கம்… இப்படி சூப்பர் ஸ்டாரின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்த ஹேஷ்யங்களுக்கு பஞ்சமில்லை.
நம்மை பொறுத்தவரை, தலைவர் கீதை கூறியுள்ளபடி எப்பொழுதும் நிகழ் காலத்தில் வாழ்பவர். “நான் என்றுமே நாளை பற்றி மட்டுமே யோசிப்பேன். நாளை மறுநாள் பற்றிக் கூட யோசிக்க மாட்டேன்” என்று அவர் சமீபத்தில் ஒரு விழாவில் கூறியதையே நாம் அவரது நிலையாகக் கொள்ளலாம். நிகழ் காலத்தை சரியாக பயன்படுத்தினால் தான் வருங்காலத்தை தன் வசமாக்கமுடியும் என்பது அவருக்கு தெரியும். தற்போது அவரது முழு கவனமும் தற்போது எந்திரன் மீது தான் இருக்கிறது. சிவாஜியின் சாதனைகள் அனைத்தையும் ‘எந்திரன்’ முறியடித்து தமிழ் சினிமாவின் வீச்சை உலக அரங்கில் எடுத்துச் செல்ல அவர் அயராது உழைத்துவருகிறார். மற்றபடி இப்போதைக்கு அவரது சிந்தனையில் வேறு விஷயங்களுக்கு இடமில்லை என்றே கருதுகிறேன்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ரசிகர் சந்திப்பில் கூட “எந்திரன் முடிந்த பிறகு தான் எதுவாயினும்” என்று அவர் அழுந்தந்திருத்தமாக கூறிவிட்டார். காரணம் அவர் எதில் ஈடுபட்டாலும் அதில் முழுமனதுடன் - முழுமையாக - ஈடுபடவேண்டும் என்று விரும்புகிறவர். அதே சமயம் தான் எந்த முடிவு எடுத்தாலும் ரசிகர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கப்படும் என்பதையும் அப்போதே தெளிவுபடுத்திவிட்டார். “நீங்கள் உங்கள் கடமைகளை சரி வர செய்து வாருங்கள். நாம் மறுபடியும் உடகார்ந்து பேசி முடிவெடுப்போம்” என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. வரும் நவம்பர் மூன்றாம் தேதியோடு அவரது ரசிகர் சந்திப்பு முடிந்து ஒரு வருடம் ஆகிறது. இந்த ஆண்டு எப்போது சந்திப்பார் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
உண்மையான ரஜினி ரசிகர்கள் அவர் என்ன முடிவெடுத்தாலும் அவருடன் தான் இருப்பார்கள் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. நாமும் அவருடன் தான் இருப்போம். ஒன்றை மட்டும் ஆணித்தரமாக கூறமுடியும்: தமிழக மக்களின் விருப்பத்தை, நலனை கருத்தில்கொண்டே அவரது முடிவு அமையும். சுயநலத்துக்காக அவர் எந்த முடிவும் எடுத்ததில்லை, எடுக்கவும் மாட்டார்.
ரிப்போர்ட்டரில் நமது தளம் சார்பாக வெளியாகியுள்ள பேட்டி
குமுதம் ரிப்போர்டரிலிருந்து, சில நாட்களுக்கு முன்பு நம்மை தொடர்பு கொண்டு, “எந்திரனுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் என்ன செய்யப்போகிறார் என்பது பற்றி ஒரு கட்டுரை ரிப்போர்டரில் வரவிருக்கிறது. அக்கட்டுரையில் பிரசுரிக்க, இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிவிக்கவேண்டும். உங்களுடைய சிறிய பேட்டி ஒன்றை தரவேண்டும்” என்று கேட்டார்கள்.
கிடைக்கும் வாய்ப்பை பாஸிட்டிவாக பயன்படுத்தி நமது தள வாசகர்கள் கருத்தையும் நமது கருத்தையும் தெரிவிக்கலாம் என்று முடிவு செய்து அதன் படியே நமது கருத்தையும் அளித்தோம்.
இதோ அக்டோபர் 25, 2009 சனிக்கிழமை வெளியாகியுள்ள ரிப்போர்ட்டரில் பிரசுரமாகியுள்ள அந்தக் கட்டுரையும் நமது பேட்டியும் உங்கள் பார்வைக்கு.
இந்த கட்டுரை குறித்தும் நமது கருத்து குறித்தும் எனக்கு தொலைபேசியிலும், மின்னஞ்சல்களிலும் பாராட்டுக்களையும் தகவல்களையும் பகிர்ந்துகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
அதே போல இந்த தளத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், நமது நண்பர்களுக்கும், பத்திரிகை அன்பர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...