* படத்திற்கான பூஜை நிச்சயம் இந்த மாதம் கிடையாது. ஏப்ரல் மாதம் தான்.
* டிஸ்கஷன் மற்றும் இதர பாத்திரங்களை இறுதி செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
* சூப்பர் ஸ்டாரும் கே.எஸ்.ரவிக்குமாரும் கலந்துகொள்ளும் டிஸ்கஷன் பெரும்பாலும், தலைவரின் கேளம்பாக்கம் பண்ணை வீடு அல்லது அவரின் பெங்களூர் பிளாட் ஆகிய இடங்களில் தான் நடக்கிறது. தற்போது தி.நகரில் உள்ள ரெசிடன்சி டவர்ஸ் ஓட்டலில் நடைபெற்றுவருகிறது.
* படத்தில் அண்மையில் புக் செய்யப்பட்டிருப்பவர் வித்யா பாலன். படத்தில் மொத்தம் இரண்டு ரஜினிக்கு தான் ஜோடி. அதில் ஒன்று நிச்சயம் தீபிகா படுகோனே. நடுத்தர வயது ரஜினிக்கு ஜோடி வித்யா பாலன் என்று சமீபத்தில் வெளியான செய்தி கூறுகிறது. அதே நேரம் வித்யா பாலன் அல்ல, ரேகா தான் என்றும் கூறப்படுகிறது. நமக்கு தெரிந்து மாதுரி மறுத்த படத்தில் உள்ள ஒரு பவர்புல்லான தங்கை வேடத்துக்கு தான் வித்யா பாலன் புக் செய்யப்பட்டிருப்பதாக அறிகிறோம். ரேகா ? அவர் பெரிய ரஜினிக்கு ஜோடி.
* இரண்டு ரஜினிக்கு ஜோடி என்றால், அப்போது மூன்றாம் ரஜினி? அங்கு தான் படத்தின் ஹைலைட்டே … மூன்றாவதாக வரும் ரஜினிக்கு ஜோடி கிடையாது. அது ஒரு பக்கா வில்லன் கேரக்டர். வில்லன் என்றால் அப்படி இப்படி அல்ல. இந்திய திரையுலகம் பார்க்காத ஒரு வில்லன். மகாபாரதத்தில் வரும் சகுனியும், ராமாயணத்தில் வரும் கூனியும் கலந்த இந்த வில்லன் கேரக்டருக்கு ஜோடி கிடையாது. நடுத்தர வயது தோற்றத்துடன் வரப்போகும் இந்த வில்லன் வேடத்து கெட்டப் பற்றி தான் இப்போது டிஸ்கஷன் போய்க்கொண்டிருப்பதாக தகவல்.
* சரித்திரப் படமாக இருந்தாலும், டெக்னிகல் விஷயத்தில் பல மாடர்ன் தொழில்நுட்பங்கள் படத்தில் பயன்படுத்தப் படவிருக்கின்றன. So, படத்தின் டெக்னிகல் brilliance நிச்சயம் பேசப்படும்.
* படத்தின் முதல் ஷெட்யூல் லண்டனில் நடக்கவிருக்கிறது. லண்டன் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏராளமான சிறிய மற்றும் பெரிய அரண்மனைகள் மற்றும் கோட்டைகள் இருப்பதே அதற்க்கு காரணம்.
* படத்தில் நகைச்சுவை வேடத்திற்கு முன்னணி காமெடியன்கள் பேசப்பட்டுவருகிறார்கள். இம்சை அரசனாக கலக்கிய வைகைப் புயலுக்கு பிரமாதமான வாய்ப்பிருக்கிறது.
* இதற்கிடையே, இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் படத்தின் பாடல் கம்போசிங்கை ஆல்ரெடி துவக்கிவிட்டதாக தெரிகிறது.
* படத்தில் இடம் பெறப் போகும் சண்டைக் காட்சிகளுக்காக சூப்பர் ஸ்டார் விசேஷ சண்டைப் பயிற்சி பெறப்போகிறார்.
* படத்தில் அனிமேஷனும் உண்டு. சரியான இடத்தில் சரியான முறையில் அது புகுத்தப்படும் என்பது மட்டும் உறுதி.
* இந்த காலகட்டங்களில் சரித்திரப் படம் எடுபடுமா என்ற கேள்வி ரசிகர்கள் பலருக்கு இருக்கிறது… சூப்பர் ஸ்டாருக்கு அது தெரியாமல் இருக்குமா? கதையோ, கதைக்களமோ எதுவாக இருந்தாலும் அதை கொடுக்கும் முறையில் தான் எந்த ஒரு படத்தின் வெற்றியும் இருக்கிறது. PRESENTATION DOES MATTERS. இறைவன் அருளால், எல்லோரும் விரும்பத்தக்க வகையில் ஒரு அபார வெற்றிப் படமாக, வித்தியாசமான சித்திரமாக ராணா வெளிவரும்.
[END]
No comments:
Post a Comment