சிம்மாசனம் என்பது நம் தலைவனுக்கு என்ன? ‘படையப்பா’ வெற்றி விழாவில் மணிகண்டன் ஆற்றிய உரை! Exclusive!!

மிழக அரசியல் களத்தில் தேர்தல் காட்சிகள் சூடுபிடித்துவிட்டன. கொள்கைக் கூட்டணிகளை அவரவர் தங்கள் வசதிக்கேற்றபடி அமைத்துக்கொண்டுவிட்டனர். மக்களுடன் தான் இறுதி வரைக் கூட்டணி என்று சூளுரைத்தவர்கள்  நிதர்சனத்தை உணர்ந்து உரிய அடைக்கலம் தேடி சென்றுவிட்டனர். தொண்டர்களோ கைக்காசு இந்த முறையாவது தப்பித்த சந்தோஷத்தில் மிதக்கின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினி பங்கேற்று பட்டையை கிளப்ப வேண்டிய தமிழக அரசியல் களத்தில் தினம் தினம் பல காமெடி காட்சிகள் அரங்கேறுவதை கண்டு ஆங்காங்கு நம் ரசிகர்கள் பொருமிக் கொண்டுள்ளனர்.
Padayappa Launch J 640x453  சிம்மாசனம் என்பது நம் தலைவனுக்கு என்ன? ‘படையப்பா’ வெற்றி விழாவில் மணிகண்டன் ஆற்றிய உரை! Exclusive!!
(Thalaivar @ Padayappa launch)
ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். “வந்தால் வெற்றி பெறுவாரா?” என்ற கேள்விக்கு விடையை பார்ப்போம்.
ரஜினி அவர்கள் வருவதற்கு ஏற்ற அரசியல் சூழல் தற்போது இல்லை என்பதே உண்மை. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதங்களில் அரசியலை ரஜினி ஆழமாக படித்து வருகிறார். உரிய காலம் எதுவென்று அவருக்கு தெரியும். எதிர்காலத்தில் ஏற்றதொரு சூழல் ஏற்பட்டு அவர் அரசியலில் பிரவேசிக்க நேர்ந்தால், சுலபமாக சிம்மாசனத்தில் அமர்வார் என்பது மட்டும் உறுதி. எனவே, “அவர் அரசியலுக்கு வரவேண்டும்!” என்று கருதும் ரசிகர்கள், அதற்க்கு முற்றிலும் பொறுமை காக்கவேண்டும்.
‘படையப்பா’ படத்தின் வெள்ளிவிழாவில் மணிகண்டன் என்ற மாணவன் ஆற்றிய உரையின் வீடியோவை இணைத்திருக்கிறேன். (நீண்ட தேடுதலுக்கு பிறகு இந்த நிகழ்ச்சியின் வீடியோ எனக்கு கிடைத்தது. அதில் மணிகண்டனின் உரையை மட்டும் இத்துடன் தருகிறேன். பிற பகுதிகள் ஒவ்வொன்றாக YOUTUBE இல் அப்லோட் செய்யப்படும்.)
ஒரு முறை இதை பார்த்தீர்களானால், சிம்மாசனம் என்பது நம் தலைவருக்கு என்ன என்பது உங்களுக்கு புரியும்….
‘படையப்பா’ வெள்ளி விழா மேடை மணிகண்டனுக்கு கிடைத்தது எப்படி?
புகழ் பெற்ற தொலைகாட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும் நம்மைப் போல சூப்பர் ஸ்டாரும்  பல ஆண்டுகளாக விரும்பி பார்க்கும் வழக்கம் உள்ளவர். 1999 ஆம் ஆண்டு, சன் டி.வி.யில் விசுவின் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் மணிகண்டன் என்ற மாணவனின் உரையை கேட்ட சூப்பர் ஸ்டார் உருகிப் போனார். அவனது பேச்சில் தெரிந்த உறுதியும், நாட்டுப் பாற்றும், நாட்டின் மீதான நம்பிக்கையும் சூப்பர் ஸ்டாரை ஈர்க்க, அடுத்த சில நாட்களில், படையப்பாவின் நாளிதழ் விளம்பரத்தில் மணிகண்டனை பற்றி குறிப்பிட்டு, “உன்னில் விவேகானந்தரை கண்டேன். வியந்தேன். படையப்பா வெற்றி விழாவில் நீ கௌரவிக்கப் படுவாய்” என்று ரஜினியே கையொப்பமிட்டிருந்தார்.
Padayappa 175 Days 640x409  சிம்மாசனம் என்பது நம் தலைவனுக்கு என்ன? ‘படையப்பா’ வெற்றி விழாவில் மணிகண்டன் ஆற்றிய உரை! Exclusive!!
(Padayappa – 175 days function)
அதே போல ‘படையப்பா’ வெள்ளி விழா கமல் முன்னிலையில், இயக்குனர் சிகரம் கே.பி. தலைமையில் நடைபெற்ற போது, மணிகண்டனுக்கு ஐந்து பவுனில் சூப்பர் ஸ்டாரின் கையால் தங்கச் சங்கிலி அணிவிக்கப்பட்டது. பரிசை பெற்ற மணிகண்டன், அம்மேடையில் எழுச்சி மிகு உரை ஒன்றை ஆற்றினான். ரஜினி ரசிகர்களின் ஒட்டுமொத்த கருத்துக்களையும் எதிர்ப்பார்ப்புக்களையும் செந்தமிழால் வடித்து, சூப்பர் ஸ்டாருக்கு விண்ணப்பம் வைத்தான் மணிகண்டன். சூப்பர் ஸ்டாருக்கு அவரது பலம் என்ன என்பதையும் எடுத்துக் கூறினான்.
தனிப்பட்ட முறையில் மணிகண்டனை அழைத்து பாராட்டியிருந்தால், அது அத்துணை சிறப்பாக இருந்திருக்காது. முக்கியஸ்தர்கள் முன்னிலையில் – அதுவும் படையப்பா வெள்ளிவிழா மேடையில் – அவன் கௌரவிக்கப்பட்டதால், தமிழகம் முழுக்க மக்கள் அவனை அறிந்துகொண்டனர். அவனது புகழ் பன்மடங்கு பெருகியது. இரண்டாவது, மணிகண்டனை மேடைக்கு அழைத்து தங்கச் சங்கிலி அணிவித்து கௌரவிக்கும் திட்டம் மட்டுமே முதலில் இருந்தது. அவன் மேடையில் உரையாற்றுவது திட்டத்தில் இல்லை. ஆனால், அந்த மேடையில்; நிச்சயம் தாம் சில கருத்துக்களை சொல்லவேண்டும் என்று மணிகண்டன் சூப்பர் ஸ்டாரிடம் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொண்டதால், கடைசியில் அதற்க்கு அனுமதி அளிக்கப்பட்டது.
மணிகண்டனின் பேச்சை கேட்டவுடன் நமக்கே ஒரு கணம் உயர பறப்பது போல இருக்கிறதே. ஆனால், விழா நாயகனான சூப்பர் ஸ்டார் ரஜினியோ எவ்வித சலனமும் இன்றி மணிகண்டன் பேசுவதை அமைதியாக கேட்டுக்கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது. வேறு யாராவது இருந்திருந்தால், இந்த உரைக்கே அரசியல் பிரவேசத்தை அறிவித்திருப்பார்கள். ஆனால், தலைவருக்கு எத்துனை பொறுமை அப்பப்பா….. புகழ்ச்சிகளை ஹேண்டில் செய்வது எப்படி என்று தலைவரிடம் தான் கற்றுக்கொள்ளவேண்டும்.
இன்றும் இந்த வீடியோவில் உள்ள கருத்துக்கள் தலைவருக்கு பொருந்துவது தான் இதன் சிறப்பு.
என்ன பேசினார் மணிகண்டன்?
Manikandan’s speech in Padayappaa Silver Jubilee Function 1999
VIDEO
[Youtube Upload & தயாரிப்பில் உதவி: கோடம்பாக்கம் நவீன்]

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...