டாக்டர் ராமதாஸ் இல்ல திருமணத்தில் சூப்பர் ஸ்டார் & பாலிவுட் டோலிவுட் இதெல்லாம் போய் இப்போ ரஜினிவுட் தான்!

1) “ரஜினிக்கு தங்கை வேடம் என்பதால் ராணாவை மறுத்தேன்” – மாதுரி விளக்கம்!
ராணாவை மாதுரி தீட்சித் மறுத்தது பற்றி நமது சென்ற Tidbits பகுதியில் செய்தி பார்த்தோம். இதற்கிடையே, ராணாவை மறுத்தது ஏன் என்று தனது ட்விட்டரில் மாதுரி கூறியிருக்கிறார்.
“ரஜினியுடன் நடிக்க யாருக்கத்தான் ஆசையிருக்காது. ஆனால், ராணாவில் அவருடைய தங்கை வேடத்தில் நடிக்க என்னை அழைத்தார்கள் ஆகையால் மறுத்துவிட்டேன். சரியான ரோல் வந்தால் நிச்சயம் நடிப்பேன்…” என்று கூறியிருக்கிறார் மாதுரி.
இதற்கிடையே ராணாவில் மாதுரிக்கு பதில் ரேகா நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாலிவுட்டின் ‘என்றும் 16′ என்று செல்லமாக  அழைக்கப்பட்டவர் ரேகா.  தலைவருக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ரேகாவும் ஒருவர். இதை அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், ரேகா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டதாக கூறப்படுகிறது. ஒரு சாரார் அது மாதுரி மறுத்த தங்கை வேடம் தான் எனவும், மற்றொரு சாரார் “இல்லை… இல்லை… அது ரஜினிக்கு ஜோடி வேடம் தான். படத்தில் மூன்று ரஜினிகளில் பெரிய ரஜினிக்கு ஜோடி இவர்.” என்றும் கூறுகிறார்கள்.
உண்மை என்னவென்று அரிய சற்று பொறுத்திருக்க வேண்டும். எது எப்படியோ, ராணா ஒரு ரகளை தான்.
2) அல்லு அர்ஜூனின் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் பங்கேற்பு!
நடிகர் சிரஞ்சீவியின் நெருங்கிய உருவினரான அல்லு அரவிந்தின் மகன் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன். இவருக்கும் ஹைதராபாத்தை சேர்ந்த சேகர் ரெட்டி என்பவரின் மகள் சிநேகா ரெடிக்கும் திருமணம் நிச்சயக்கிப்பட்டு, இவர்களது திருமணம் வரும் மார்ச் மாதம் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
திருமணத்தில் ஆந்திர மற்றும் தென்னிதிய திரையுலக முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்கவுள்ளனர். ஹைதராபாத் ஹைடெக்ஸ் மாதப்பூரில் நடக்கவுள்ள இந்த திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இந்த திருமணத்தில் கலந்துகொள்வார் என்று தெரிகிறது.
3) ராமதாஸ் இல்ல திருமணத்தில் பங்கேற்ற சூப்பர் ஸ்டார்
பா.ம.க.தலைவர் டாக்டர் ராமதாசின் பேரன் இராமசுகந்தன் – டாக்டர் கு.தீனா ஆகியோரின் திருமணம் 28/02/11 காலை எம்.ஆர்.சி. நகரில் உள்ள மாயோர் ராமநாதன் செட்டியார் ஹாலில் நடைபெற்றது. முன்னதாக நேற்று (27/02/11) மாலை திருமண வரவேற்பு நடைபெற்றது. கவர்னர் பர்னாலா, அல்டிமேட் ஸ்டார் அஜீத், சுந்தர் சி – குஷ்பூ, உள்ளிட்ட நட்சத்திரங்களும், அரசியல் பிரமுகர்களும், முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
Rajini Awards J  Tidbits # 47 : டாக்டர் ராமதாஸ் இல்ல திருமணத்தில் சூப்பர் ஸ்டார் & பாலிவுட் டோலிவுட் இதெல்லாம் போய் இப்போ ரஜினிவுட் தான்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சரியாக இரவு 8.15 க்கு தனது துணைவி லதாவுடன் எம்.ஆர்.சி. ஹாலுக்கு வருகை தந்தார். பளிச் வெள்ளை வேட்டி மற்றும் சட்டை உடுத்தியிருந்தார் தலைவர்.  அதுவரை தூய தமிழ், மற்றும் கலாச்சார பாடல்களை டிரம்ஸ் வாசித்துக்கொண்டிருந்த டிரம்ஸ் சிவமணி தலைவர் வரும் தகவல் தெரிந்ததும், அவர் உடனே ‘ஒருவன் ஒருவன் முதலாளி’ பாடலை வாசிக்க ஆரம்பித்தார். அதுவரை அங்கு இசைக்கப்பட்ட ஒரே சினிமா பாடல் அது தான்.
மண்டபத்தில் உள்ள ராமதாசின் உறவினர்கள் மற்றும் பா.ம.க.வினர் அனைவரும் தலைவரை பார்க்க ஆர்வம் காட்டினர். தலைவரை மேடைக்கு அழைத்து சென்று, மணமக்களை அறிமுகப்படுத்தினார் பா.ம.க. தலைவர்களில் ஒருவரான ஜி.கே.மணி. மேடையில் இருந்த டாக்டர் ராமதாசும் அன்புமணி ராமதாசும் சூப்பர் ஸ்டாருக்கு வணக்கம் கூற இவரும் பதில் வணக்கம் கூறினார். சூப்பர் ஸ்டாரும் திருமதி லாதாவும் மணமக்களை வாழ்த்தி பரிசு கொடுத்தனர்.  பின்னர் அன்புமணி மற்றும் டாக்டர் ராமதாஸ் ஆகியோருடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார் தலைவர்.
ரஜினி திரும்பி செல்கையில், “அம்மா என்றழைக்காத உயிரில்லையே…” பாடல் வாசிக்கப்பட்டது.  முற்றிலும் பா.ம.க.வினரும், டாக்டர் ராமதாசின் உறவினர்களுமே நிரம்பியிருந்த இந்த நிகழ்ச்சியில் தலைவருக்கு கிடைத்த வரவேற்ப்பு மறக்கமுடியாதது.
4) விருந்தினர்களுக்கு தலைவர் பரிசளிக்கும் மினியேச்ச்சர் சிலை
தன்னை காண வரும் விருந்தினர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி இப்போதெல்லாம் புதிய பரிசு ஒன்றை அளித்து பரவசப்படுத்தி வருகிறார். அவரது “ராஜாதி ராஜா” தோற்றம் கொண்ட மினியேச்ச்சர் சிலைகள் தான் அவை.
lena family with ss10  Tidbits # 47 : டாக்டர் ராமதாஸ் இல்ல திருமணத்தில் சூப்பர் ஸ்டார் & பாலிவுட் டோலிவுட் இதெல்லாம் போய் இப்போ ரஜினிவுட் தான்!
அதற்க்கு காரணம் என்ன? அந்த சிலைகளை வீட்டில் வைத்துவிட்டு, அவற்றை பார்க்கும்போதெல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் பரவசப்படுவார்கள். எக்கச்சக்கமான பாசிட்டிவ் வைப்ரேஷன்கள் வெளிப்படும்.
சமீபத்தில் அவரிடம் அப்படி பரிசு வாங்கியது, லேனா தமிழ்வாணன் மற்றும் ரவி தமிழ்வாணன் குடும்பத்தினர்.
5) “ஐ லவ் யூ ரஜினி!” – சூப்பர் ஸ்டாருக்கு காதலை சொல்லும் நடிகை!
ஜெனிஃபர் கோத்வால் – பிரபல விளம்பர மாடல் மற்றும் லேட்டஸ்ட் சினிமா வரவு. மூன்று மாநிலங்களிலும் அம்மணி மிகவும் பிரபலம். பாலிவுட்டில் மூன்று படங்கள் நடித்துவிட்டார். கன்னடத்தில் இவர் சிவராஜ்குமாருடன் நடித்த ‘ஜோகையா’ படம் மிகப் பெரிய ஹிட்.
தமிழில் சரியான வாய்ப்புக்காக காத்திருக்கும் ஜெனிஃபர், சிறு வயது முதலே, சூப்பர் ஸ்டாரின் ரசிகையாம். விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: “இப்போ கூட என் பெட்ரூம் எல்லாம், ரஜினி போஸ்டர்கள் தான் அலங்கரிக்குது. அதுவும் ரோபோ பார்த்ததுலேயிருந்து அவரோட வெறித்தனமான பேன் ஆயிட்டேன். அவரை காதலிக்க கூட ஆரம்பிச்சுட்டேன். உங்க மூலமாவே என் காதலை சொல்றேன். ஐ லவ் யூ சோ மச் ரஜினி” என்கிறார்.
அவரை விடுங்கம்மா… எத்துனை பேர் தான் அவரை காதலிக்கிறதாம். இங்கே ‘Eligible Bachelors’ நிறைய பேர் இருக்கிறார்கள். அவங்களை கொஞ்சம் பார்க்கிறது… (நான் சிம்பு, பரத் இவங்களை சொன்னேன்…. ஹி.. ஹி..! )
6) “பாலிவுட், கோலிவுட் இதெல்லாம் கிடையாது. எல்லாம் இப்போ ரஜினிவுட் தான்” – சமீரா அதிரடி
தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக முன்னேறியிருக்கிறார் சமீரா ரெட்டி. நடுநிசி நாய்கள் படத்தையடுத்து, தற்போது பிரபுதேவா இயக்கத்தில் விஷாலுடனும், லிங்குசாமி இயக்கத்தில் ஆர்யாவுடனும் கைகோர்த்து டாப் லிஸ்ட்டில் இடம் பிடித்திருக்கிறார். சூப்பர் ஸ்டாருடன் எப்படியாவது ஒரு படத்தில் தலைகட்டிவிடவேண்டும் என்று துடியாய் துடிக்கிறார்.
பாலிவுட்டுக்கும் கோலிவுட்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் பற்றி கேட்டால், அதற்க்கு புது விளக்கத்தை தருகிறார் இந்த ஹாட் ப்யூட்டி.
“பாலிவுட்டோ, கோலிவுட்டோ எனக்கு அதெல்லாம் தெரியாது. எனக்கு தெரிஞ்சு இந்திய சினிமாவே ரஜினிவுட்டா தான் இருக்கு. அந்த ஸ்டைல், புகழ், ரசிகர்கள் கூட்டம், ஒரு படத்துக்குக் கிடைக்கும் ஓப்பனிங் எல்லாம் மிரள வைக்குது. உலகம் முழுக்க ரசிகர்களை வெச்சிருக்கிற அவரோட சேர்ந்து ஒரு படம் பண்ணணும். அதான் என்னோட ஆசை.”
வாழ்த்துக்கள் சமீ. (பேர் வெச்சிடோம்ல!)
[END]

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...