“எந்திரன் ஒரு செல்லுலாய்ட் பிரம்மாண்டம்; பொழுதுபோக்கின் உச்சம்!” – FILMFARE – 150 வது நாள் சிறப்பு பதிவு!!

ந்திரன் இன்று மகத்தான 150 வது நாள்.
இப்பொழுதெல்லாம், ஒரு திரைப்படம் ரிலீசாகி, இரண்டு மூன்று வெள்ளிகள் தாண்டுவதே அரிதான விஷயமாகிவிட்டது. (உதாரணங்களை சொல்லனுமா என்ன? நமக்கு ஏன் வம்பு!).
150 day ad J 640x478  “எந்திரன் ஒரு செல்லுலாய்ட் பிரம்மாண்டம்; பொழுதுபோக்கின் உச்சம்!” – FILMFARE  – 150 வது நாள் சிறப்பு பதிவு!!
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அக்டோபர் 1 உலகம் முழுதும் அதிகபட்ச ரெக்கார்ட் எண்ணிக்கையிலான தியேட்டர்களில் ரிலீசாகி பல தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி, இன்றும் பேபி ஆல்பட் திரையரங்கில் பகல் காட்சி ஓடிக்கொண்டிருக்கிறது.
இன்றைக்கு தினகரன் நாளிதழில் வெளியான விளம்பரத்தை இங்கு தந்திருக்கிறேன். இந்திய திரை சரித்திரத்திலேயே மிகப் பெரிய வெற்றி பெற்ற ஒரு படத்துக்கு 150 வது நாள் விளம்பரத்தை முற்றிலும் இது போல புதிய ஸ்டில்லுடன் இதை விட சிறப்பாக யாரும் வெளியிட முடியுமா என்ன? (படம் தற்போது ஓடாத தியேட்டர் பெயர்கள் எல்லாம் விளம்பரத்தில் இருந்தன. அதை மட்டும் கிராப் செய்துவிட்டு இங்கு  தந்திருக்கிறேன்.)
சரி… விஷயத்துக்கு வருவோம்.
Filmfare Editorial 640x979  “எந்திரன் ஒரு செல்லுலாய்ட் பிரம்மாண்டம்; பொழுதுபோக்கின் உச்சம்!” – FILMFARE  – 150 வது நாள் சிறப்பு பதிவு!!
கடந்த நவம்பர் மாதம் வெளியான FILMFARE இதழில் எந்திரன் படத்தின் விமர்சனமும், படத்தை பற்றிய FILMFARE இதழின் எடிட்டர் ஜிதேஷ் பிள்ளையின் ஒரு அருமையான கட்டுரையும் (கடைசி பக்க தலையங்கம்) இடம்பெற்றிருந்தது.
நடிகன் என்ற அந்தஸ்த்திலிருந்து சூப்பர் ஸ்டார் என்ற பிரம்மாண்டத்திற்கு உயர்ந்த அந்த நிகழ்வை ஆசிரியர் மிக அழகாக காண்பித்திருக்கிறார். அதில் சில வரிகளை கவனியுங்கள். சிலரின் அவதாரங்களை சேதாரம் ஆக்கியிருக்கிறார்.
FilmFare ReviewJ 640x578  “எந்திரன் ஒரு செல்லுலாய்ட் பிரம்மாண்டம்; பொழுதுபோக்கின் உச்சம்!” – FILMFARE  – 150 வது நாள் சிறப்பு பதிவு!!
அதே போல விமர்சனத்தையும் ஒரு முறை படியுங்கள். போங்கப்பா போய் படத்தை ஒரு முறை பாருங்கள். பொழுதுபோக்கின் உச்சம் இது தான். இது மாதிரி அனுபவம் கிடைக்கவே கிடைக்காது என்று கூறியிருக்கிறார்கள்.
இதை விட வேறு என்ன வேண்டும்?
[END]

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...