‘ராணா’ படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, இவ்வார ஆனந்த விகடனில் ‘ராணா’ குறித்த பல்வேறு ருசியான தகவல்களை பரிமாறியிருக்கிறார்.
* ரஜினி, ரவிக்குமார், ரஹ்மான், ரத்னவேலு என்று படத்தின் முக்கியத் தூண்கள் அனைவரின் பெயரும் ‘ர’ என்று துவங்குவது பற்றி தலைவரிடம் சொன்னபோது தலைவர் மிகவும் ஆச்சரியப்பட்டாராம்.
* கதை 17 ஆம் நூற்றாண்டில் நடைபெறுவது போல படம்பிடிக்கப்பட இருக்கிறது.
Ananda Vikatan article – full scan image
(DOUBLE CLICK THE IMAGE TO ZOOM & READ THE TEXT)
* எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களுக்கு பிறகு ஒரு நேரடி வரலாற்று படமாக ‘ராணா’ இருக்கும் என்று அடித்து கூறுகிறார் ரத்னவேலு.
* ரஜினி ரசிகர்கள் விரும்பும் அக்மார்க் ரஜினியிசம், கே.எஸ்.ரவிக்குமாரின் கமர்ஷியல் ஃபார்முலா, தொழில்நுட்ப மிரட்டல்கள் என ராணா அமர்க்களப்படுத்தும் என்று கூறுகிறார் ராண்டி.
* ‘ராணா’ பீரியட் படமென்றாலும் அதே சமயம் கிளாடியேட்டர், 300 ஆகிய படங்களில் வருவது போல பாண்டஸியும் இருக்கும்.
* தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது. ஹிந்தியிலும் ரஜினியே டப்பிங் பேசுகிறார்.
* படம் யாரையும் எந்த அரசரையும் குறிப்பது அல்ல. முழுக்க முழுக்க பிக்க்ஷன் படம் தான்.
* தலைவரின் அறிமுகப் பாடலை ஏற்கனவே ரஹ்மான் கம்போஸ் செய்துமுடித்துவிட்டாராம்.
இப்பேட்டியில் ‘எந்திரன்’ பார்ட் 2 சாத்தியங்கள் குறித்து ரத்னவேலு கூறியிருப்பது பற்றி :
நாம் விசாரித்த வரையில், ஒட்டுமொத்த எந்திரன் டீமும் பார்ட் 2 வுக்கு ஆவலாக இருக்கிறார்கள். சன் பிக்சர்சும் படத்தை எத்துனை பட்ஜெட் போட்டுவேண்டுமானாலும் எடுக்க தயாராகவே இருக்கிறது. ஆனால், தலைவர் இன்னும் பச்சைக்கொடி காட்டவில்லை. மேற்படி ஐடியாவை தலைவரிடம் கூறிபோது, “குட் ஐடியா. பார்க்கலாம்” என்று தான் கூறியிருக்க வேண்டும். அதை வைத்து இப்படி ஒரு பேச்சு கிளம்பியிருப்பதாக நான் கருதுகிறேன்.
ஒரு படத்தில் நடிக்கும்போது, அதை வெற்றிகரமாக முடிக்கும் வரையில் தலைவர் அடுத்த படத்தை பற்றி சிந்திப்பதேயில்லை. சில சந்தர்ப்பங்களில் அடுத்த படத்தை இன்னாருக்கு நடிக்கலாம் என்று தயாரிப்பாளரை மட்டும் முடிவு செய்வதுண்டு. அவ்வளவு தான. மற்றபடி ‘எந்திரன்’ பார்ட் 2 வொர்க் அவுட் ஆனால் நமக்கு அதைவிட மகிழ்ச்சி வேறு எதுவும் இருக்க முடியாது.
[END]

No comments:
Post a Comment