‘படையப்பா’ படம் முதலே ஐஸ்வர்யா ராயுடன் ஜோடி சேர விரும்பி, சூப்பர் ஸ்டார் அவரிடம் கால்ஷீட் கேட்டு வந்தார். டேட்ஸ் பிரச்னை, ஏற்கனவே ஒப்புக்கொண்ட கமிட்மென்ட்டுகள் உள்ளிட்ட பல காரணங்களால் தவிர்த்து வந்த ஐஸ்வர்யா ராய், இறுதியில் ஒரு வழியாக எந்திரனில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
ஐஸ்வர்யா ராய் எந்திரனில் நடிப்பதை பல ரசிகர்கள் அன்றைய சூழலில் விரும்பவில்லை. தீபிகா படுகோனே, கத்ரீனா கைப் உள்ளிட்ட நடிகைகள் யாராவது நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தனர். (ஆனால், நம் சாய்ஸ் தீபிகாவாக இருந்தது!).
இந்நிலையில், மேற்படி காரகடருக்கு உலக அழகி ஐஸ்வர்யா ராய் மட்டுமே பொருத்தமாக இருப்பார் என்று உறுதியாக நம்பிய ஷங்கர், அவரிடம் கதை சொல்லி, மிகப் பெரிய ஊதியத்தை அவருக்கு பேசி, சம்மதிக்க வைத்தார். ஐஸ்வர்யா ராயும் ஒப்புக்கொண்டார். (படம் வெளியான பிறகு புரிந்தது ஐஸ்வர்யா ராயை தவிர வேறு யாரும் அந்த காரகடருக்கு பொருந்தமாட்டார்கள் என்று. Wonderful selection! Stupendous performance!)
சூப்பர் ஸ்டாருடன் படப்பிடிப்பில் பழகிய நாட்கள் ஐஸ்வர்யா ராய்க்கு தலைவரின் செல்வாக்கு என்ன, அவரது ரேன்ஜ் என்ன, தான் உண்மையில் எங்கு இருக்கிறோம் என்பதை புரிய வைத்தது. விக்கை வைத்து, மேக்கப்பை போட்டு, வயதை மறைக்கும் பாலிவுட் நடிகர்களையே பார்த்து பழக்கப்பட்ட ஐஸ்வர்யா ராய்க்கு சூப்பர் ஸ்டாரின் எளிமையும், உண்மையும், யதார்த்தமும், வியப்பை தந்தன. சூப்பர் ஸ்டாரின் மக்கள் செல்வாக்கை கண்டு அவர் வியந்த பல தருணங்கள் ஷூட்டிங் சமயங்களில் நடந்தது.
“சூப்பர் ஸ்டார் ரஜினி எத்துனையோ முறை என்னிடம் தனது படங்களில் நடிக்க கூப்பிட்டிருக்கிறார். ஆனால், என்னால் டேட்ஸ் கொடுக்க இயலவில்லை. ஆனாலும் அவர் கொஞ்சம் கூட தவறாக நினைக்கவில்லை. அது தான் அவரது பெருந்தன்மை. அதற்காக நான் இப்போது வெட்கப்படுகிறேன்” என்று ஒரு தொலைகாட்சி பேட்டியில் கூட கூறியிருப்பார்.
இதோ, 2010 ஆம் ஆண்டு ரிசல்ட் வந்துவிட்டது. பாடிபில்டிங் ஹீரோக்களுடன் ஐஸ்வர்யா ராய் நடித்த ஆக்க்ஷன் ரீப்ளே, குஷாரிஷ் மற்றும் கணவர் அபிஷேக்குடன் நடித்த மணிரத்னத்தின் ராவண் ஆகியவை படு தோல்வியை தழுவ அவரை கைகொடுத்து காப்பாற்றியிருப்பது சூப்பர் ஸ்டார் மட்டுமே. 2010 ஆம் ஆண்டு வெளியான படங்களில் எந்திரன் முதலிடத்தை கைப்பற்றியது மட்டுமல்லாமல், இந்திய சினிமா சரித்திரத்தில் மிகப் பெரிய பிலாக்பஸ்டர்களில் ஒன்றாக இடம்பிடித்தது. எந்திரன் படத்தில் மட்டும் ஐஸ்வர்யா ராய் நடிக்க வில்லையெனில் அவர் இந்நேரம் முன்னால் ஹீரோயின்கள் பட்டியலில் இடம்பிடித்திருப்பார். அவரது கேரீர் கிராஃப்பை ரோபோ சற்று நீட்டித்திருக்கிறது எந்திரன் என்றால் மிகையாகாது.
ஐஸ்வர்யா ராய் நடித்தால் அவரால் தான் எந்திரன் வட மாநிலங்களில், அயல்நாடுகளில் எந்திரன் வெற்றிபெற்றது என்று யாராவது சொல்லக்கூடும் என்று கருதி, பல ரசிகர்கள் அவர் நடிப்பதை விரும்பவில்லை. ஆனால், பிற்பாடு படம் வெளியான பின்பு, விமர்சனம் எழுதிய பல வட இந்திய ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகள், தலைவரின் ஈர்ப்பாலும், ஷங்கரின் இயக்கத்தாலும் மட்டுமே எந்திரன் இந்த அளவு வெற்றி பெற்றுள்ளது என்று எழுதி கடைசியில் ஐஸை கண்டுகொள்ளவே இல்லை. சூப்பர் ஸ்டாரின் அபரிமிதமான CHARISMA உலக அழகி ஐஸ்வர்யா ராயை பின்னுக்கு தள்ளியது.
இதோ இந்த ஆண்டு வெளியான படங்களின் ரிப்போர்ட் கார்டை ‘எகனாமிக் டைம்ஸ்’ வெளியிட்டுள்ளது. ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ள இந்த அலசலின் தமிழாக்கத்தை கீழே தருகிறேன். ஒரிஜினல் ஆங்கில எழுத்துரு கடைசீயில் தரப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு வெற்றிக்கோப்பை எந்திரனுக்கே! – ‘எகனாமிக் டைம்ஸ்’
2010 ஆம் ஆண்டு பாலிவுட்டை பொறுத்தவரை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் தோல்வியை தழுவிய நிலையில் ராஜநீதி, டபாங் ஆகிய படங்கள் மிகப் பெரிய வெற்றியை பெற்றன. ராவண், கைட்ஸ், குஷாரிஷ் உள்ளிட்ட எதிர்பார்க்கப்பட்ட படங்கள் அதிர்சியடையத் தக்க வழியில் தோல்வியை தழுவின.
அமீர்கானின் 3 இடியட்ஸ் படத்துடன் இந்த ஆண்டு சிறப்பாக துவங்கியது. சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் இந்த படம் ரிலீசானாலும் இந்த ஆண்டும் தொடர்ந்து ஓடி, வரலாறு படைத்தது.
Fans dancing in Albert theatre during Endhiran screening
ஆனால், வெற்றி மகுடம் செல்வது யாருக்கு தெரியுமா? எந்திரன். ஆம், சூப்பர் ஸ்டார் ராஜினி நடிப்பில் வெளியான எந்திரனுக்கு தான் இந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றி கோப்பை. ரஜினியின் மேஜிக் என்று சொல்லுங்கள் அல்லது இயக்குனரின் ஷங்கரின் அசத்தலான பேக்கேஜிங் என்று சொல்லுங்கள்.. எப்படி சொன்னாலும் சரி…. வெற்றி மாலை எந்திரனுக்கே. மொழி எல்லைகளை கடந்து அது குவித்த வரவேற்பும் வெற்றியும் இதை சாத்தியப்பட வைத்தது.
ரஜினிக்கு நன்றி. ஆம், ஐஸ்வர்யா ராயின் மற்ற படங்கள் (ராவண், குஷாரிஷ், அக்ஷன் ரீப்ளே) தோல்வியை தழுவ அவரை காப்பாற்றியது எந்திரன் தான்.
இதை தவிர சல்மான் கானின் வீர், அக்க்ஷை குமாரின் கட்டா மீட்ட, ஆக்க்ஷன் ரீப்ளே உள்ளிட்ட வேறு சில படங்களும் தோல்வியை தழுவின. மேற்படி தோல்விப் படங்களால் ஏற்பட்டுள்ள இழப்பு மட்டுமே சுமார் ரூ.400 முதல் 500 கோடி வரை இருக்கும். (அட… எங்க எந்திரன் மொத்த வசூலப்பா அது!)
Bollywood 2010: Masala makes comeback, biggies disappoint
MUMBAI: Hardcore commercial films with rural backdrop made a big bang in 2010 with the success of ‘Raajneeti’ and ‘Dabangg’ but many other mega budget films like ‘Raavan’, ‘Kites’ and ‘Guzaarish’ flopped at the box office.
The year began on a high note with Aamir Khan starrer ’3 Idiots’. Though the film released in late December in 2009, it continued to do well in 2010 with its feel-good appeal. The Rajkumar Hirani directed movie is now one of the biggest blockbusters of the recent times.
However, it was Rajnikanth starrer Tamil film ‘Endhiran’, that took the crown of being the biggest hit of year. Call it the sheer magic of Rajni’s presence or director Shankar’s neatly packed action-sequences, the movie transcended language barriers to emerge the highest grosser of the year.
Thanks to Rajni, Bollywood beauty Aishwarya Rai got her only hit of the year with two of her mega budget movies like ‘Raavan’ and ‘Action Replayy’ failing to do well.
Small budget films like ‘Tere Bin Laden’, ‘Udaan’, ‘Phas Gaye Re Obama’ continued to surprise the convention-loving industry by earning big bucks in theatres without any backing from big stars or producers.
Some of the major disappointments of the year came from top stars and directors. Much anticipated films like ‘Mani Ratnam’s grand cinematic effort ‘Raavan’, Ashutosh Gowariker’s freedom saga ‘Khelein Hum Jee Jaan Se’ and Hrithik Roshan and Mexican stunner Barbara Mori’s ‘Kites’ failed to take flight despite the hype surrounding them.
Apart from these movies, other biggies like Salman Khan’s ‘Veer’ and Akshay Kumar-Aishwarya Rai starrer ‘Action Replayy’, Akshay’s ‘Khatta-Meetha’ also flopped.
According to trade analyist Taran Adarsh, the failure of these movies resulted in a loss of about Rs 400 to Rs 500 crore.
Another trade analyst Amod Mehra said the losses would be more than Rs 500 crore as Salman Khan’s rustic entertainer ‘Dabangg’ and ‘Golmaal 3′ were the only two superhits of the year while Prakash Jha’s ‘Raajneeti’, Milan Luthria’s period crime thriller ‘Once upon a time in Mumbai’ and ‘I hate Luv Storys’ did well.
Shah Rukh Khan’s ‘My Name Is Khan’, Aamir Khan’s ‘Peepli Live’, which is also India’s official entry to the Oscars, and Sajid Khan’s madcap ‘Housefull’ also fared well at the box office.
Mehra said a total of 237 movies including those dubbed were released during the year. “2010 was very bad. There were more flops and a very few hits. No particular trend was witnessed except the fact that hardcore commercial films were back in the business,” he said.
http://economictimes.indiatimes.com/news/news-by-industry/media/entertainment-/entertainment/bollywood-2010-masala-makes-comeback-biggies-disappoint/articleshow/7144023.cms