மரத்தில் இருந்து மடி மீது விழுந்த கனியை எடுத்து இதயத்திலே வைத்துக்கொண்டு கொண்டாடும் மன நிலையில் தற்போது இருக்கிறது ThinkMusic நிறுவனம்.
பலத்த போட்டிக்கிடையே எந்திரன் ஆடியோ உரிமையை கைப்பற்றியிருக்கும் ThinkMusic நிறுவனம் ஏக குஷியில் இருக்கிறது. அதே சமயம், மிகுந்த எதிர்ப்பார்ப்புக்குரிய ஒரு மிகப் பெரிய படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றியிருப்பதால் சற்று பதட்டத்துடனும் இருக்கிறது. (ThinkMusic நிறுவனம் எந்திரன் ஆடியோ உரிமையை பெற்றதை சில நாட்களுக்கு முன்பே நாம் நமது தளத்தின் ‘Flash News’ பகுதியில் வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.)
இதுவரை 74 படங்களின் ஆடியோவை வெளியிட்டுள்ள ThinkMusic நிறுவனத்தின் 75 வது படம் எந்திரன். (சென்னை சத்யம் திரையரங்க குழுமத்தை சார்ந்தது தான் ThinkMusic).
எந்திரன் ஆடியோவை பொறுத்தவரை பல புதுமைகளை யோசித்து வருகிறது ThinkMusic.
ஐ-ட்யூன்களில் (i-tunes) பாடல்கள் டவுன்லோட் செய்யும் வசதி ஏற்படுத்தப்படும் என்று தெரிகிறது. தவிர ஐ-போன்களுக்கென (i-phone application) சிறப்பு அப்ளிகேஷனை ஏற்படுத்தவிருக்கிறது. இதன் மூலம், ட்ரைலர்கள், வால்பேப்பர்கள், பாடல் வரிகள், பாடல்கள் ஆகியவற்றை பார்க்கலாம் கேட்கலாம்.
குழந்தைகளை கவரும் வகையில், எந்திரன் தொப்பிகள், டி-ஷர்ட்டுகள், பேஜ்கள், மக்குகள் என பல பொருட்கள் எந்திரன் படங்கள் லோகோ ஆகியவற்றை தாங்கி வரவிருக்கின்றன.
ஆடியோ வெளியீடு அன்றே கடைகளில் கேசட்டுகள் மற்றும் சி.டி.க்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. (மொத்த நிறுவனங்களிடம் ஆர்டர் எடுக்கும் பணி ஏற்கனவே துவங்கிவிட்டது.)
By God’s grace, இந்திய திரையுலக இசை வரலாற்றில் எந்திரன் ஒரு சரித்திர சாதனையை நிகழ்த்தப்போவது மட்டும் உறுதி.
(நன்றி: நண்பர் எம்.அருணாசலம் & பிரபு)
Watch out for more news on Endhiran Audio here in forthcoming days….!
—————————————————————————————————
Translation
by Dr.Suneel
Endhiran scoop-5
Endhiran all set to rock audio world – ThinkMusic thinking of innovative ways of marketing!
Thinkmusic is so excited for bagging the endhiran audio rights and they are guarding the happiness close to the heart..after a tough competition think music has bagged the rights ,hence they are so excited at the same time they are also little bit tensed having bagged the rights of most eagerly awaited movie of the year .(our site published the news in flash a few days back).so far it has released 74 audios now endhiran is its 75th.thinkmusic is a concern of sathyam cinemas chennai.as far as endhiran is considered several new ventures are being planned by thinkmusic.i tunes downloading will be enabled, moreover a special application for i phones are planned using this one can download and watch/listen to wall papers,trailers, lyrics, songs etc.in order to attract children, hats,t-shirts,badges and mugs are planned with endhiran stills and logo.plans are there to make sure that the audio will be available on the same date of audio release .hope by gods grace endhiran is going to set a new bench mark in the audio sales in indian history.
To summarise the above in points:
1. They are making the songs available in iTunes for legal download
2. They are doing iphone app also; it will have songs, trailer, wallpapers lyrics etc
3. Endhiran Merchandise are coming soon like mugs, badges, tshirts, magnets etc.
4. They r trying to ensure audio CDs & casettes are available on the day of audio launch itself at all d places.
5. Pricing not yet known
6. All the info on launch date and place will revealed soon. One thing sure – “this is goin to be the history in indian music..”
No comments:
Post a Comment