வரைமுறை தாண்டினால் தண்டிக்கப்படுவீர்கள் என்று சூப்பர் ஸ்டார் எச்சரித்த பின்பும், சர்ச்சை ஏற்படுத்திய கோவை ரசிகர்கள் திருந்துவதாக தெரியவில்லை.
“ரஜினி சொல்வதை கேட்கமுடியாது. நாங்கள் அவர் பெயரில் கட்சி நடத்தியே தீருவோம். அவர் படத்தையும் பயன்படுத்துவோம். எங்களை யாரும் தடுக்க முடியாது. எங்கள் மீது வழக்கு போட்டால் சந்திக்க தயார்” என்று கூறியிருக்கின்றனர் நடவடிக்கைக்கு ஆளான கோவை ரசிகர்களில் - ஒரு பிரிவினர்.
உண்மையான ரசிகர்களா?
இது தான் உண்மையான ரசிகர்களின் லட்சணமா? தலைவர் கேட்டுக்கொண்ட பிறகும் இவர்கள் இப்படி நடந்துகொள்வதை பார்த்து பெரும்பாலான ரசிகர்கள் வேதனைப்படுகின்றனர். கெட்ட பெயர் உடன் இருப்பவர்களால் தான் என்று ’பாபா’ படத்தில் சூப்பர் ஸ்டார் சொன்னது நினைவுக்கு வருகிறது.
இவர்களையும் இவர்களைப்பற்றிய செய்திகளையும் பொருட்படுத்தவேண்டாம் என்று சூப்பர் ஸ்டார் கேட்டுகொண்டதால் இத்தோடு விடுகிறேன்.
இறுதியாக நாம் கூறுவது இதுதான். தனது அரசியல் நிலைப்பாடு குறித்தும் திட்டங்கள் குறித்தும் ரஜினி இவ்வளவு தெளிவான துணிச்சலான அறிக்கை வெளியிட்ட பின்னரும், சமாதானம் அடையாமல், அவரை மேலும் சங்கடத்துக்கு உள்ளாக்கும் வண்ணம் செயல்படும் இவர்கள் ரசிகர்களே அல்ல.
மறுபடியும் குழப்பமா…
அரசியலுக்கு வருவேன் அல்லது வரமாட்டேன் என்று ஏன் ரஜினி உறுதியாக கூறவில்லை? மறுபடியும் குழப்பமா? என்று சிலர் கேட்கிறார்கள்.
“நான் அரசியலுக்கு வந்தாலும் வருவேன்; வராமலும் போவேன்” என்று சூசகமாக அறிக்கை வெளியிட்ட அடுத்த நாளே - முடிந்து போன குசேலன் விவகாரம் -கிளப்பிவிடப்படுகிறது. அப்படியெனில், நான் நிச்சயம் வருவேன் என்று அறிவித்தால் என்னென்ன இடைஞ்சல்கள் வரும்? இப்போது புரிகிறதா…!!
சூப்பர் ஸ்டாருக்கு துணைநிற்போம்…
மேலும் சில துஷ்ட சக்திகள், ஆங்காங்கு ரசிகர்களின் போர்வையில் ரஜினிக்கு எதிரான ஒரு அவதூறு பிரச்சாரத்தை செய்ய துவங்கியுள்ளனர். உண்மையான ரசிகர்கள் என்றும் சூப்பர் ஸ்டாருக்கு துணை நின்று, அவர் எந்திரனை முழு ஈடுப்பாட்டுடன் நடித்துமுடிக்க நம் ஒத்துழைப்பை தருவோம். கூடவே நமக்கென்று உள்ள கடமைகளை ஒழுங்காக செய்து வருவோம். இவையே நாம் அவருக்கு செய்யும் பேருதவி.
No comments:
Post a Comment