சூப்பர் ஸ்டார் தற்போது என்ன செய்கிறார்? ஏன் இந்த தாமதம்?


நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் செய்தி…
மிகவும் முயற்சி செய்து திரட்டிய தகவல் இது. உண்மையாக இருக்கலாம். இல்லாமலும் போகலாம். (வர வர இது போன்ற பதிவை போடுவதற்கே மிகவும் யோசிக்க வேண்டியிருக்கிறது.)
தற்போதைய நிலவரம் குறித்து கலவரத்துடன் பலர் என்னை விசாரித்துவருகின்றனர். கவலைப்பட ஒன்றும் இல்லை.
ரஜினி தற்போது தன் உறவினர்களிடமும் நலம் விரும்பிகளிடமும் ஆலோசித்து வருகிறார். ரசிகர்களை சந்திப்பதற்கு முன்பாகவே ஒரு நல்ல முடிவை அறிவித்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கவேன்டும் என்று அவர் நினைப்பதாலேயே இந்த தாமதம். (அது அரசியல் அறிவிப்பாகத்தான் இருக்கும் என்பதில்லை).
அல்லது ரசிகர்களை சந்திப்பதற்கு முன்பாக ஒரு முடிவிற்கு வந்து, அதை ரசிகர் சந்திப்பின் போது அவர் அறிவிக்கக்கூடும். அதற்க்கு முன்பு ஏதாவது அறிக்கை வெளியிட்டு அது ரசிகர்கள் மத்தியில் இன்னும் எதிர்ப்பார்ப்பை கிளறிவிட்டுவிட்டால் என்ன செய்வது…எனவே தான் இந்த மௌனம்.
அநேகமாக வரும் அக்டோபர் 9 (விஜயதசமி அன்று) இதற்கான பூர்வாங்க அறிவிப்பு வெளியாகலாம் என்று - நான் - நினைக்கிறேன்.
சற்று பொறுத்திருந்து பார்ப்போமே!!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...