சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் ஏ.வி.எம். ராஜேஸ்வரி திருமண மஹாலில் கம்பன் கழகம் சார்பாக நடைபெற்ற ‘கம்பன் விழா’வில் கம்பராமாயணத்தை பற்றிய பட்டி மன்றத்தில் சூப்பர் ஸ்டார் கலந்துகொண்ட சிறப்பு புகைப்ப்படத் தொகுப்பு இது. வேறெங்கும் வெளிவராத புகைப்படங்கள் இவை.
புகழ்பெற்ற தமிழறிஞர்கள், சான்றோர்கள் பலர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் முழுநேரம் (சுமார் நான்கரை மணிநேரம்) பார்வையாளராக பங்கேற்று சிறப்பித்தார்.
இது பற்றி ஒரு ஒரு சிறப்பு பதிவை திரு.சுகி சிவம் அவர்களின் பேட்டியோடு நாம் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தோம். நிகழ்ச்சியின் மற்ற புகைப்படங்களை விரைவில் தனி கேலரியாக தருவதாக சொல்லியிருந்தோம்.
இதோ அவை உங்கள் பார்வைக்காக.
சுவாரஸ்யத்திற்காக புகைப்படங்களுடன் நண்பர் ஈ.ரா. எழுதிய “தலைவா.. தலைவா…” நூலின் கவிதை வரிகளை அவர் அனுமதி பெற்று இங்கு தந்திருக்கிறேன். (கடந்த 2007 ஆம் ஆண்டு, சூப்பர் ஸ்டாரின் 58 வது பிறந்த நாளை முன்னிட்டு, நண்பர் ஈ.ரா. இந்நூலை வெளியிட்டார்.)
இங்கே இடம்பெற்றுள்ள புகைப்படங்களுக்கு இவ்வரிகள் பொருத்தமாக இருக்குமென எண்ணுகிறேன்.
நீ புகழ்ச்சி விரும்பாதவனாதலால்இது உன்னைப் புகழ்வதற்காகஎழுதப்பட்டது அல்ல!உன்னையே சுவாசிக்கும்அன்பு நெஞ்சங்கள்படித்து மகிழ்வதற்காக மட்டுமேஎழுதப்பட்டது..
உன் அங்கங்கள் -ஒப்பில்லா தங்கங்கள் !நேர்மை உன் இடக்கண் - நீதி உன் வலக்கண்நீ இருக்கையிலே எமக்கேது இடுக்கண்?
உன்னிப்பாகக் கேட்கும் உன் காது - நீஉப்பரிகையிலே இருக்கும் சாது!உன் உதடுகள் துடிக்கும் பொது -எம் உணர்ச்சிக்கு நிகர்தான் ஏது?
அகண்ட உன் நெற்றி -அது காட்டும் ஆயிரம் வெற்றி!
நிமிர்ந்து நிற்கும் உன் நெஞ்சம் - இதில்நிம்மியளவும் இல்லை வஞ்சம்!நெஞ்சிலே ஈரம் விஞ்சும் -நீ வந்தால் இருக்கவே இருக்காது பஞ்சம்!
நீவீர மராட்டிய குடும்பத்தில் பிறந்துகர்நாடகத்தில் வளர்ந்துதமிழ் இதயங்களில் நுழைந்துஎல்லைகள் தாண்டிஎட்டுத்திக்கும் ஆள்பவன்!
தலைவனே - நீஅகில உலகமும் பாராட்டினாலும்அடக்கம் மாறாதவன்!அறியாதவர்கள் உளரும்போதும்அதிகம் பேசாதவன்!
தலைவனே,உன்இதயத்தின்ஈரப்பதத்தைஎந்தக் கருவியாலும்அளவிட முடியாது!
இன்றைய உலகம்விளம்பரத்தையே விரும்பினாலும்சத்தமில்லாமல் நீ செய்யும் சாகசங்கள்சரித்திரத்தில் நிற்கத்தான் போகின்றன!
கொடுத்துச் சிவந்தனவாம் கரங்கள்!நீதான் கொடுப்பதே பிறர்க்கு தெரியாதே? -பின் எப்படி நாங்கள் கண்டு கொள்வது?
தலைவனே!எங்கள் நரம்பு மண்டலத்தின்நாலாபுறமும் நீ வசிக்கிறாய்!எங்கள் இரத்த அணுக்களிலே நீ மிதக்கிறாய்!எங்கள் தசைகளிலே நீ தவழ்கிறாய்!எங்கள் எலும்பின் வலிமையாய் நீ வாழ்கிறாய்!எங்கள் உறுப்புக்களிலே நீ உடனிருக்கிறாய்!சுருக்கமாகச் சொன்னால் -உச்சி முதல் பாதம் வரைகோடானு கோடி இளைஞர்களின்உயிர் மூச்சாய் நீ வாழ்கிறாய்!ஆம்!எங்களுக்குள்ளே நீ வாழ்கிறாய்!உனக்குள்ளே நாங்கள் வாழ்கிறோம்!
———————————————————————“தலைவா… தலைவா…” கவிதையின் முழு தொகுப்பிற்கு :
http://padikkathavan.blogspot.com/2008/12/blog-post_10.html
No comments:
Post a Comment