சந்திப்பு குறித்து மிகவும் ஆவலாக இருக்கும் ஏரளமான ரசிகர்கள் நேற்று தளபதி சத்தியை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்தனர். தலைவர் இந்திரன் படப்பிடிப்புக்காக கோவா செல்வதால், அவர் திரும்பியவுடன் சந்திப்பார் என்று அவர்களிடம் கூறப்பட்டுள்ளது.
4ஆம் தேதி (சனிக்கிழமை) கோவா செல்லும் சூப்பர் ஸ்டார் 12 ஆம் தேதி , மண்டபத்தில் நடைபெறும் அவரது உதவியாளர் இல்ல திருமணத்தில் கலந்துகொள்கிறார். அதற்க்கு பிறகு இரண்டு அல்லது மூன்று நாட்கள் ரசிகர்களை சந்திப்பார் என்று தெரிகிறது.
இந்த செய்தி (கோவா படப்பிடிப்பு) எனக்கு நேற்று காலையே கிடைத்தது. இருப்பினும் உறுதி செய்துகொள்ள முடியாததால் நான் வெளியிடவில்லை. ஐங்கரன் இணைய தளத்திலும் இது பற்றி அறிவிப்பு எதுவும் இல்லை. (ஒரு வேலை படப்பிடிப்பு இந்தியாவில் என்பதாலா?) தற்போது தினத்தந்தியே வெளியிட்டுவிட்டதால் நான் கூறுகிறேன்.
மாலை நடக்கும் விழாவில் ரஜினி கலந்துகொள்வாரா?
இதற்கிடையே, கலைஞர் அரங்கத்தில் இன்று மாலை நடிகர் திலகம் சிவாஜி பிறந்த நாள் விழா, தமிழக முதல்வர் தலைமையில் நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பிதழ் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் பெயர் அதில் இல்லையென்றாலும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் உறுதி செய்யமுடியவில்லை. ஜஸ்ட் உங்கள் காதில் போட்டுவிட்டேன்.
No comments:
Post a Comment