நண்பர்களே, ரசிகர்களின் நிர்பந்தத்தின் எதிர்விளைவுகள் குறித்து நம் நண்பர்கள் தங்கள் கவலைகளை என்னுடன் பகிர்ந்துகொண்டனர்.
அவர்கள் கூறுவதில் நியாயமிருக்கிறது. அதே சமயம் ஒரு விஷயத்தை அனைவரும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். ரசிகர்களின் தற்போதைய விருப்பங்கள் என்ன தெரியுமா?
ரசிகர்களின் தற்போதைய விருப்பங்கள்
1)சூப்பர் ஸ்டாருடன் உடனடியாக ஒரு சந்திப்பு. 2) மன்றத்தை பலப்படுத்த உடனடி நடவடிக்கைகள். அவ்வளவே!!
அவர் உடனடியாக அரசியலுக்கு வரவேண்டும் என்று ரசிகர்கள் விரும்பினாலும், அதை சந்திப்பின் போது வற்புறுத்தினாலும், தலைவர் அதை இன்றைய சூழ்நிலையில் நேரடியாக சொல்லுவார் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் எதிர்ப்பார்ப்பது ஒரு சேவை அமைப்பு. அது இல்லாத பட்சத்தில் சிதிலமடைந்து கிடக்கும் மன்றங்களையாவது பலப்படுத்த அவர் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அவ்வளவுதான்.
நட்சத்திரத்திற்கு ஆசைப்பட்டால் தான் அட்லீஸ்ட் நிலாவையாவது பிடிக்க முடியும் என்று அவர்கள் கணக்கு போடுகிறார்கள். இந்த அளவிற்கு வேண்டுகோள்கள் வைத்தால்தான் தலைவர் ஒரு சிலவற்றையாவது டிக் செய்வார் என்று அவர்கள் நினைகிறார்கள்.
தலைவரால்தான் முடியும்
இப்போது கூட, நல்லதே நடக்கும் என்றுதான் ரசிகர்களுக்கு பெருமளவு நம்பிக்கை ஊட்டிவருகிறேன். சந்திப்பின்போது பேசவேண்டிய பல உருப்படியான விஷயஙகளை அவர்களுக்கு கூறியிருக்கிறேன். இருப்பினும் தினகர் கூறுவது போல் என்னால் ஒரு சில ரசிகர்களின் மனதை தான் மாற்ற முடியும். (அதையும் உறுதியாக கூறமுடியாது. காரணம் நான் அவர்கள் மன்றத்திலோ அல்லது வேறு எந்த ஒரு மன்றத்திலோ இல்லை. அவர்களுடன் அடிக்கடி பேசுகிறேன். அவ்வளவே.) ஒட்டுமொத்த ரசிகர்களையும் மாற்றுவது தலைவர் கையில் தான் உள்ளது.
விரக்தி ஏன்?
இங்கு சமீபகாலங்களாக இங்கு நிலவும் சூழ்நிலைகள் சிலவற்றால் நான் நொந்துபோயிருப்பது உண்மை. அதனால் தான் கடந்த சில நாட்களாக என் பதிவில் விரக்தியும் கோபமும் தென்படுகிறது. இதற்க்கு சிகரம் வைத்தாற்போல், தொடர்தோல்விக்கு சொந்தக்காரரான நடிகர் ஒருவரின் தந்தைக்குலம் சில நாட்களுக்கு முன்பு மாலை நாளிதழ் ஒன்றில் கொடுத்த அரைப்பக்க மற்றும் முதல் பக்க விளம்பரங்கள் தான் என்னை ஆவேசத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. (என்னை மட்டும்மல்ல - பல ரசிகர்களை.)
இதை வெளியில் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் நான் பட்ட அவஸ்தை இருக்கிறதே…கொடுமை.
ஹொகேனக்கல் உண்ணாவிரதத்தில் தலைவரை வைத்துகொண்டே சத்யராஜ் பேசிய பேச்சு எப்படி தலைவரை சூடாக்கி பிரச்னையில் சிக்க வைத்ததோ, அது போன்று இவ்விளம்பரங்கள் என்னை கொந்தளிக்கவைத்தது. (அட சும்மா உங்களுக்கு புரியவைக்கத்தான் இந்த கம்பேரிசன். தப்பா நினைக்காதீங்க.) வலைத்தளத்தில் என்னை பொறுமையிழந்து எழுத வைத்தது. (நீங்கள் அவ்விளம்பரங்களை அந்த பேப்பரில் நேரடியாக பார்த்திருந்தால் என்னைவிட இன்னும் கொதித்துபோயிருப்பீர்கள்!)
அந்த நடிகரின் விளம்பரத்தில் காணப்பட்டது என்ன?
ஒரு விளம்பரத்தைத்தான் நீங்கள் பார்த்திருப்பீர்கள். இரண்டு விளம்பரங்களை பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.
1) //ஆறுகோடி இதயத்தில் குடியிருக்கும் ஏழைகளின் தலைவரே! நாளைய முதல்வரே!!வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி!!//
இப்படிப்பட்ட வாசங்களுடன் அந்த நடிகர் கும்பிடுவது போல நாளிதழ் ஒன்றில் முதல் பக்க வண்ண விளம்பரம்.
அது மட்டுமல்ல,
2) //வாழ்ந்தவர் கோடி; மறைந்தவர் கோடி;மக்கள் மனதில் நிற்ப்பவர் யார்?எங்கள் இளைய தளபதி என்று கருத்துக்கணிப்பு நடத்தியஉங்கோய்யலா கல்லூரிக்கு நன்றி!!//
இப்படிப்பட்ட வாசங்களுடன் அந்த தொடர் தோல்வி நடிகர் ஒரு சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பது போல மற்றுமொரு ஒரு அரைபக்க வண்ண விளம்பரம் அதே பேப்பரில்.
உபயம் அந்த நடிகரின் வேலை வெட்டியற்ற தந்தைக்குலம்.
விளம்பரத்தை பார்த்த நம் ரசிகர்கள் அனைவரும் கொதித்துபோய் விட்டனர். ரசிகர்களின் நிர்பந்தத்திற்கு ஆதரவாக நான் பேசியது, கூட இதனால் தான். இப்போது புரிகிறதா?

No comments:
Post a Comment