Robot crackers - one of the hot sellers of this Diwali


Deccan Chronicle explores the hot sellers among crackers of this DiwalI…
Apart from rocket packs featuring the PSLV, Rajinikanth’s Robot crackers are hot sellers
As Chennaiites revel in the spirit of Diwali, firecracker manufacturers in the city are cashing in on the latest trends and current affairs that made the headlines this year. On the eve of the festival, they have even come up with a fitting tribute to the dedicated scientists of our country who successfully launched India’s first unmanned mission to the moon — the Chandrayaan 1.
One of the most popular items on sale this year is the rocket pack inspired by the same. Patriotically packaged in a cover with a picture of (brace yourselves), the PSLV (Polar Satellite Launch Vehicle), it is replete with an illustration of the national flag on its fuselage. Other variants include rockets with illustrations of astronauts on them. NM Kasim, a firecracker vendor at Flower Bazaar says, “The PSLV crackers are quite popular with kids this year. Apart from being reasonably priced, they have a certain novelty and curiosity factor to them as well.” And novelty seems to be the name of the game as even the film stars, whose pictures have adorned the pack ages of these firecrackers have undergone a major overhaul. K Jeyaraj, the proprietor of Kasi Enterprises and a fireworks dealer says, “This year the most popu lar actresses to grace the firecracker packages are Shriya, Nayanthara and Asin compared to last year when Namitha and Khushboo’s pictures were on the cover of almost every other firecracker. It goes with out saying that these stars are one of the main draws, which helps sell the crackers.” K Raghuraman, a civil engineer who was finishing up on the last minute purchases for Diwali says, “Shriya happens to be my favourite actress and it’s an added incentive to have her picture on the firecrackers as well.” But when one speaks about Kollywood, how can Rajinikanth be far behind?
A family pack called Robo – The Almighty, which is inspired by the superstar’s upcoming film, is another hot seller this year. Jeyaraj explains, “The price of raw materials for the crackers shot up by almost 30 to 40 per cent this year. This is reflected in the prices as well. So the manu facturers have to resort to such attractive packaging styles to entice customers into buying them for Diwali.”

கோலிவுட் வெடிகள் - எது எப்படி வெடிக்கும்?


அனைவருக்கும் நம் உள்ளம் கனிந்த தீபாவளி நாள் வாழ்த்துக்கள்.
இந்த நன்னாளில் உலகின் சண்டையும் சச்சரவும் நீங்கி அமைதி தவழட்டும். பசுமை செழிக்கட்டும். எல்லாரும் எல்லா வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.
…………………………………………………………………………………………………………………
நண்பர்களே, இன்று தீபாவளி என்பதால் கோலிவுட்டின் தீபாவளி வெடிகள் குறித்து நம் கற்பனை இது. பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
கோலிவுட்டின் லேட்டஸ்ட் வெடிகள்
சிம்பு வெடி:இந்த வெடியை பத்தவைத்துவிட்டு, அழகான ஹீரோயின்கள் பெயரைச் சொல்லவேண்டும். அப்போது தான் வெடிக்கும். சத்தம் மட்டும் நான்கு வருடத்துக்கு ஒரு முறை தான் கேட்கும்.
சத்யராஜ் வெடி : தமிழ், தமிழ் என்று கத்தும் ஆனால் வெடிக்காது. அருகில் குஷ்பூ வெடி, நமீதா வெடி எதாவது ஒன்றை வைத்தால் தான் வெடிக்கும். வெடிக்கும் போது காதை பொத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் “கே…கூ…பூ…” என்று பைந்தமிழ் வார்த்தைகள் கேட்கும்.
கேப்டன் வெடி :இந்த வெடியின் அருகில் டிஜிட்டல் பேனர் வைக்கவேண்டும். பத்தவைத்தவுடன் வெடிப்பதற்கு பதில் பேச ஆரம்பித்துவிடும். தள்ளாடிக் கொண்டே பேசுவது இதன் ஸ்பெஷாலிட்டி. பெரிய சத்தத்துடன் வெடிக்கும் என்று நினைக்கும்போது புஸ் என்று புஸ்வானம் ஆகிவிடும்.
சரத்குமார் வெடி:இது போணியாகாத வெடி. பேசிப் பயன் இல்லை.
விஜய் வெடி:இந்த வெடியை அப்பாக்கள் தான் பத்தவைக்கவேண்டும். சும்மா ஊசிப் பட்டாசு கணக்காகத்தான் சத்தமின்றி வெடிக்கும். ஆனால் அதற்கே ஊரை கூட்டிவிடும்.
டி.ஆர். வெடி: (கரடி மார்க்):இந்த வெடியை யாருமே கண்டுக்க மாட்டார்கள். அது மட்டும் தனியாக வெடித்துகொண்டிருக்கும்.
சிபிராஜ் வெடி:இது கடைசிவரைக்கும் வெடிக்கவே வெடிக்காது.
பாரதிராஜா வெடி:இந்த வெடி யார் மேல் எப்போது விழுந்து வெடிக்கும் என்று தெரியாது. அதற்கான காரணமும் புரியாது. வேலை வெட்டியற்றவர்கள் பத்தவைத்தால் நன்றாக வெடிக்கக் கூடியது.
சூப்பர் ஸ்டார் வெடி:பத்தவைத்தவுடன் இது எப்போது, எப்படி வெடிக்கும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் வெடிக்க வேண்டிய நேரத்தில் - கண்டிப்பாக - மிகப் பெரிய சத்தத்துடன் வெடிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்த வெடி இது. கடைக்காரர்களுக்கு வாழ்வளிப்பதே இந்த வெடி தான்.

சந்திரமுகி – கல்லா கட்டும் சன் டிவி!


ரஜினியின் தயவில் இந்த ஆண்டும் சன் டிவிக்கு அமர்க்கள தீபாவளியாக விடிகிறது.
சூப்பர் ஸ்டாரின் சாதனைப் படம் சந்திரமுகியை தீபாவளி சிறப்புத் திரைப்படமாக அக்டோபர் 27-ம் தேதி ஒளிபரப்புகிறது சன் டிவி.
சந்திரமுகியின் சாதனை உலகமறிந்தது. ரஜினியின் படங்களில் அதிக நாட்கள் ஓடிய படம், அதிக திரையரங்குகளில் 100 நாட்கள் கொண்டாடிய படம், விநியோகஸ்தர்கள் ஷேர் என்ற வகையில அதிக லாபம் சந்பாதித்துக் கொடுத்து, அந்த சாதனையை இதுவரை எந்தப் படமும் தொட முடியாத உயரத்தில் உள்ள படம்.
சந்திரமுகியை மிகப்பெரிய விலைக்கு சன் டிவி வாங்கியிருந்தது. இப்போது அதைவிட பல மடங்கு அதிக விளம்பரதாரர் வருவாயுடன் ஒளிபரப்பப் போகிறது.
ரஜினியின் பாட்ஷா என்ற ஒரு படத்தின் மூலம் சன் சம்பாதித்த தொகை அந்தப் படத்தை வாங்கிய விலையை விட 20 மடங்கு அதிகம் என்கிறார்கள் சன்னில் பணியாற்றும் நமது நண்பர்கள்!
அதிக விலைக் கொடுத்து வாங்கினார்கள், இப்பேது அந்த ரிஸ்க் எடுத்த்தற்கு பலனாக நல்ல லாபம் சம்பாதிக்கப் போகிறார்கள். இதில் உங்களுக்கென்ன வந்தது என சிலர் கேட்கக் கூடும். வியாபாரத்தில் சென்டிமெண்ட் பார்க்கக் கூடாதுதான்.
ஆனால் சிவாஜி, குசேலனை தங்களுக்குத் தராத கோபத்தில் சன் நிகழ்த்திய கோயபல்ஸ் பிரச்சாரம் இருக்கிறதே... சகிக்க முடியாத, மனிதத்தன்மையற்ற செயல் அது. அது என்ன வகை வியாபார தர்மம்?தனக்கு வேண்டியவர் என்பதற்காக ஒரேயடியாகத் தலையில் தூக்கி வைத்து ஆடுவதும், அவரே வேண்டாதவராகிவிட்டால், ஒரேயடியாக குழிதோண்டிப் புதைக்க முயல்வதும் சன் குழும நியாயங்கள்.
ரஜினி படங்களை ஒளிபரப்புவதற்கான வர்த்தக உரிமை வேண்டுமானால் சன்னுக்கு இருக்கலாம். ஆனால் தார்மீக உரிமை கிடையவே கிடையாது!

ஒரு ரொமான்ஸ் காட்சி, ஒரு சண்டைக் காட்சி - எந்திரன் ஷூட்டிங் தகவல்கள்!!


நண்பர்களே, இந்த வார குமுதத்தில் வந்த எக்ஸ்க்ளூசிவ் சிறப்பு கட்டுரை இது. கோவாவுக்கு சென்று கவர் செய்துவந்திருக்கிறார்கள்.
படத்தில் கலாபவன் மணி, கொச்சின் ஹநீபா (நிஜமாவே குத்திட்டான் சார்), ஆகியோர் நடிப்பது இந்த ஸ்பெஷல் கட்டுரை மூலம் நமக்கு தெரிகிறது. நல்ல சாய்ஸ்.
படம் களை கட்டும் என்று எதிர்பார்க்கலாம்.
…………………………………………………………………………………………………………………
Over to குமுதம்
…………………………………………………………………………………………………………………

நூறடிக்கு ஒரு செக்யூரிட்டி வாக்கிடாக்கியுடன் நிற்க, எட்டிப் பார்த்தால் கூட தெரிந்து விடக்கூடாது என்ற சூழலில் ரஜினி_ஐஸ்வர்யா நடிக்கும் `எந்திரன்’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் ஷங்கர். மேலே குட்டிக் குட்டியாய் நீங்கள் பார்க்கும் படங்கள் கோவா ஷூட்டிங் ஸ்பாட்டில் தூரத்திலிருந்து ஜூம் கேமராவில் நாம் கிளிக்கியது. குடைகளுக்குள் ரஜினியும் ஐஸ்வர்யாவும், இன்னொரு படத்தில் ஐஸ்வர்யாவும் கணவர் அபிஷேக்கும். அம்புக்குறி போட்டு, லென்ஸ் வைத்துப் பார்க்க வேண்டிய படங்களா கத்தான் பத்திரிகைகளுக்கு இப்போது எந்திரன் ஸ்டில்கள் கிடைக்கின்றன. எல்லாம் ஷங்கர் ராஜ்ஜியம்.
அணுகுண்டு ரகசியத்தைவிட, ரகசியம் காக்கிறார்கள் படக் குழுவினர். படப்பிடிப்பு தளத்தில் ஏகப்பட்ட விதிகள்.
ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து 100 மீட்டருக்கு யாரும் உள்ளே நுழைந்துவிடாதபடி பம்பாயி லிருந்து வரவழைக்கப்பட்ட தனியார் செக்யூரிட்டிகள். யாராவது செல்போனில் படமெடுக்கிறார்களா என்பதை கண்காணிக்கவே நான்கு ஸ்பெஷல் செக்யூரிட்டிகள்.
இன்று எங்கு ஷூட்டிங் என்று அன்று காலைதான் அறிவிக்கிறார் ஷங்கர்.
படப்பிடிப்புக் குழுவினர் வெளியாட்களிடம் வாயைத் திறக்கக்கூடாது என்ற கட்டளை கடுமையாக பின்பற்றப்படுகிறது.
ஷூட்டிங் ஸ்பாட்டில் சுதந்திரமாய் இருப்பது மூவர்தான். ரஜினி, ஐஸ்வர்யா, ஷங்கர்.
`எந்திரன்’ படத்தின் படப்பிடிப்பு எப்படி நடக்கிறது என்பதை சொல்லியாகிவிட்டது. இனி என்ன காட்சிகள் எடுத்தார்கள் என்ற விவரம் குமுதம் வாசகர்களுக்கு எக்ஸ்க்ளூசிவ்வாக.
கோவாவின் தலைநகர் பன்ஜிம் (பானாஜி) ஐநாக்ஸ் தியேட்டர் அருகே, கம்பால் ஓட்டல். புல்வெளியில் பிரெஞ்ச் தாடியுடன், புளூ ஜீன்ஸ், சந்தன கலர் ஷர்ட், கருப்பு கலர் கோட் ஜாக்கெட்டுடன் விஞ்ஞானியாக புயலென வருகிறார் ரஜினி. எதிரே ஐஸ் நிற்கிறார்.“ஆக்ஷன்” ஷங்கர் உரக்கக் கத்துகிறார்.
தன் கையிலிருந்த ஃபைலைக் காட்டி ஐஸ்ஸுடன் ரஜினி ஏதோ விவரிக்க, ஐஸ் கோபமாகப் பேசுகிறார். ரஜினி விளக்கிக் கூறிய பின்பும் ஐஸ் கோபம் தீரவில்லை, ஃபைலை டேபிள் மீது கோபத்துடன் வீசி எறிகிறார் ரஜினி.
“கட். ஷாட் ஓக்கே!”
அடுத்த சீன்…
ரஜினி அதே இடத்தில் நிற்க,
ரஜினியின் கழுத்தைப் பிடித்து இழுத்து, கட்டிப்பிடித்து கன்னத்தில் “இச் இச்” என்று முத்தங்கள் வைக்கிறார் ஐஸ்.
கோபமாய் ஃபைல் வீசிய காட்சி ஒரே டேக்கில் படமாக்கப்பட, ரஜினிக்கு ஐஸ் கொடுத்த முத்தக் காட்சி மூன்று டேக்குகளுக்குப் பிறகுதான் ஓகே ஆனது. (ஹி ஹி)
அடுத்த சீன் கிரீன் பார்க் ஹைவேஸ் ரோடு, ரஜினியும் ஐஸும் வெள்ளை நிற காரில் பேசிக்கொண்டே போகும் காட்சி.
அடுத்து `தேரி’ கடற்கரையில். காரிலிருந்து இருவரும் இறங்கிவர, ஐஸ்வர்யா ரஜினியிடம் கோபித்துக்கொண்டு தனியாகப் போய் அமர்வது போன்ற இன்னொரு காட்சி.
அடுத்து ஒரு சண்டைக்காட்சி. கடற்கரையில் அஜோப்பா மந்திர் என்ற இடத்தில் படமாக்கப்பட்டது.
மரம் ஏறும் தொழிலாளியாக வரும் கலாபவன் மணி ஐஸ் கையைப் பிடித்து இழுத்து வம்பு பண்ணுகிறார். அங்கே ஐஸ்வர்யாவைக் காப்பாற்றுவதற்காக கலாபவன் மணியோடு ரஜினி மோதுகிறார்.
அடுத்து இன்னொரு ஓட்டலுக்கு படப்பிடிப்புக்குழு இடம்மாறுகிறது. கைப்பையை எடுத்துக்கொண்டு ஐஸ்ஸை இழுத்துக்கொண்டு வேகமாக ரஜினி காரில் ஏற முயல்கிறார். அப்போது ஐஸ் மயங்கிக் கீழே விழ, அவரைத் தாங்கிப்பிடித்து காரில் ஏற்றிக்கொண்டு ரஜினி வண்டியைக் கிளப்ப, டிராபிக் போலீஸாக வரும் கொச்சின் ஹனீபா `போலீஸ் போலீஸ்’ என்று வண்டியை நிறுத்த முயற்சிக்கிறார். வண்டி நிற்காமல் செல்கிறது. இது அங்கு எடுக்கப்பட்ட காட்சி.
விஞ்ஞானி ரஜினியும், ரோபோ ரஜினியும் சந்தித்து ஆக்ரோஷமாகப் பேசும் காட்சியும் கோவாவில் ஒரு ஓட்டலில் எடுக்கப்பட்டது. வீல் சேரில் சுற்றிச் சுற்றி ரோபோ ரஜினி கர்ஜிக்க, அதே இடத்தில் விஞ்ஞானி ரஜினி ஆவேசமாய் பேசும் காட்சியும் எடுக்கப்பட்டது. இந்த இரண்டு காட்சிகளும் தனித்தனியாக எடுக்கப்பட்டாலும் திரையில் இருவரும் எதிரெதிரே பேசுவதுபோல் பரபரப்பாக வருமாம். ரோபோ ரஜினிக்கு கருப்பு ஜீன்ஸ், கருப்பு டி.ஷர்ட், கருப்பு கண்ணாடி இதுதான் காஸ்ட்யூம்.
ஒரு வாரம் நடந்த ஷூட்டிங்கில் ஒருநாள் ஐஸ்ஸைப் பார்க்க கணவர் அபிஷேக் வந்து போனார். அந்தப் படத்தையும் நூறு மீட்டர் தூரத்திலிருந்து ஜூம் போட்டு எடுத்ததில் முதுகுகள் மட்டும் தெரிந்தன. இந்தப் படத்துக்கும் அம்புக்குறியும் லென்ஸும் தேவை.
படத்தில் இன்னொரு விசேஷம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் அஸிஸ்டெண்ட் இயக்குநராக வேலை பார்ப்பது. எதைக் கேட்டாலும் `சஸ்பென்ஸ்’ என்கிறார்.
ஒரு வருடம் கழித்து படம் வரும் போது எல்லா சஸ்பென்ஸும் தீர்ந்து விடும்..
- கோவாவிலிருந்து நேரடி ரிப்போர்ட் அரவிந்த்.
என்ன சாப்பிடுகிறார்கள்?
ஐஸ்ஸுக்குப் பிடித்த மெனு சப்பாத்தி, சிக்கன் குழம்பு, சிக்கன் லாலிபாப். மதியம் சுடச்சுட 6 லாலிபாப் வேணுமாம்.
ரஜினிக்குப் பிடித்த மெனு மீன் குழம்பு, மீன் ரோஸ்ட்தானாம்.
ஷங்கருக்கு, உப்புக்கறிதான், அதற்காகவே தனி சமையல் ஆள் உப்புக்கறி சமைக்கிறார்.

அது ஒரு ‘பாண்டியன்’ காலம்!

எத்தனையோ தீபாவளிகள் வந்து போனாலும், 1992-ம் ஆண்டு தீபாவளியை இப்போது நினைத்தாலும் மனதுக்குள் மத்தாப்பு மழை…
பாண்டியன் ரிலீசான வருடம் அது… இத்தனைக்கும் அதற்குப் பிறகு உழைப்பாளி, முத்து என இரு ‘மெகா தீபாவளிகள்’ கடந்திருந்தாலும், பாண்டியன் மட்டும் ‘சம்திங் ஸ்பெஷல்’!
காரணம்… அந்தப் படம் எங்கள் ஊரில் நேரடி ரிலீஸ்!!திருப்பத்தூருக்குப் பக்கத்திலுள்ள சற்றே பெரிய கிராமம் கெஜல்நாயக்கன்பட்டி. பெயரிலேயே தெரிகிறதல்லவா
ஊரின் அந்தஸ்து!
உண்மையில் இந்த ஊருக்கு பெரிய அந்தஸ்தைத் தந்ததே அந்த ஊரின் நடுவில் அமைந்திருக்கும் ராமு தியேட்டர்தான். கிட்டத்தட்ட 32 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட தியேட்டர் என்றாலும் இப்போது பார்த்தாலும், ஏதோ ரஷ்ய பாணி திரையரங்கம் மாதிரி கம்பீரமாக நிற்கிறது.
இரண்டு மூன்று வாரங்களுக்கு ஒரு எம்ஜிஆர் படம், ரஜினி படம் கண்டிப்பாக வந்துவிடும். திரையரங்க உரிமையாளர் மகன் எங்க
ள் வகுப்புத் தோழன். தீவிர ரஜினி வெறியன். அவனுக்காகவே ரஜினி படங்களை அடிக்கடி போடுவார் அவன் தந்தை. கிட்டத்தட்ட எங்கள் பள்ளி / கல்லூரி இளமையின் பெரும்பகுதி நாள்களைக் கழித்த இடம்!
அது என்னமோ தெரியவில்லை… அந்தத் திரையரங்கம் இன்னொருவருடையது என்ற நினைப்பே எங்கள் யாருக்கும் இருந்ததில்லை. ஏதோ நம் சொந்த வீடு, நிலம் மாதிரி… நம்ம ராமு திரையரங்கம். திரையரங்க உரிமையாளர், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வேறு. சமயத்தில் அவரே டிக்கெட்டும் கொடுப்பார் அல்லது கிழிப்பார்.
எப்போதெல்லாம் ரஜினி படம் அல்லது எம்ஜிஆர் படம் ரிலீஸாகிறதோ அன்றைக்கு நிச்சயம் அவரது அட்டெண்டன்ஸில் நாங்கள் இருப்போம். அடுத்த நாள் தலைமையாசிரியர் அறைக்குக் கூப்பிட்டு லிஸ்ட்டைப் படிப்பார். ஆனால் அந்த மிரட்டலெல்லாம் நமக்கு ஜுஜூபி…!
பொதுவாக ரஜினி படங்கள் குறைந்த பட்சம் ஒரு வருடம் கழித்துதான் இங்கு ரிலீசாகும். அதுவரை யாரும் பொறுத்திருக்க மாட்டார்கள். சைக்கிளில் ஏறி ஒரு மிதி மிதித்தால் திருப்பத்தூர் டவுன். தடுக்கி விழுந்தால் திரையரங்குகள். அங்கு ஏற்கெனவே பார்த்த ரஜினி படங்களை, இன்னொரு முறை ராமு தியேட்டரில் பார்ப்பதற்கே முதல் மூன்று நாள் கூட்டம் அலைமோதும். எந்தப் படமாக இருந்தாலும் இங்கு அதிகபட்சம் மூன்று நாட்கள்தான். எம்ஜிஆர் / ரஜினி படமென்றால் 5 நாட்கள். இந்த திரையரங்கில் அதிக பட்சம் 33 நாட்கள் ஓடியது ஒரு ரஜினி படம் மட்டுமே!
அண்ணாமலை என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தை ரஜினி கொடுத்திருந்த நேரம் அது… தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றம் வரப்போகிறது ரஜினியால் என்ற நம்பிக்கை ஆழமாக வேரூன்றத் தொடங்கியிருந்தது. இந்தப் படம்தான் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்தது அந்த ஊரில்.
இந்த சூழலில் யாருமே எதிர்பார்க்காமல் ஒரு அதிசயம் நடந்தது-
அது… 1992 தீபாவளிக்கு ராமு திரையரங்கில் பாண்டியன் நேரடி ரிலீஸ்!
என்னால் நம்பவே முடியவில்லை.
எப்படியாவது தங்கள் தலைவர் ரஜினி படத்தை நேரடியாக ரிலீஸ் செய்தே தீரவேண்டும், அந்தப் படத்தை குறைந்தபட்சம் 50 நாட்களாவது ஓட வைப்போம் என்று அந்தப் பகுதி ரஜினி ரசிகர்களும் ராமு திரையரங்க உரிமையாளருக்கு வாக்குறுதியளித்திருந்தனர் (இன்னொரு பக்கம், பாண்டியன் படத்தை ரிலீஸ் செய்யலேன்னா… தற்கொலை செய்து கொள்வேன் என்று உரிமையாளரை மிரட்டிவிட்டானாம் அவரது மகன்!)
அவரும் துணிந்து இறங்க, திருப்பத்தூர் டவுனே அதிர்ந்து விட்டது. இத்தனை பெரிய திரையரங்குகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்த சின்ன கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண திரையரங்குக்கு எப்படி ரஜினி பட உரிமை கொடுத்தார்கள் என்ற அதிர்ச்சி அது. ஏற்கெனவே அண்ணாமலையை இரண்டு திரையரங்குகளில் வெளியிட்டு நல்ல லாபம் பார்த்திருந்ததால், பாண்டியனை நழுவ விட்டுவிட்டோமே என்ற ஆதங்கம்.
இடையில் ஒரு பெரிய திரையரங்க உரிமையாளர், ராமு உரிமையாளரிடம் சமரசம் பேசி திருப்பத்தூர் நியூ சினிமாவிலும் ரிலீஸ் செய்து கொள்ள ஒப்பந்தம் போட்டார்கள்.
படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பிருந்தே கெஜல்நாயக்கன்பட்டியிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் ‘பாண்டியனின் தீபாவளி’ தொடங்கிவிட்டது.
வண்ண விளக்குகள் மின்ன புதிய அரங்கம் போல ஜொலித்தது ராமு. ரஜினியின் 90 அடி கட்-அவுட்டுகள் இரண்டு மிரட்டலாய் நிறுத்தப்பட,
அதைப் பார்ப்பதற்கென்றே எப்போதும் ஒரு கூட்டம் திரையரங்கைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது.
அக்டோபர் 24-ம் தேதி இரவே அமர்க்களப்பட்டது ஊர். முதல் காட்சி இரவு 12 மணிக்குத் தொடங்கியது. கிருஷ்ணகிரி நெடுசா
லையில் அமைந்திருக்கிறது அந்தத் திரையரங்கு. டிக்கெட் கவுண்டரிலிருந்து குறைந்தது 300 மீட்டர் தூரத்துக்கு வரிசை நீண்டது. பருகூர், மத்தூர், நாட்றம்பள்ளி என அந்த சுற்று வட்டாரத்தின் பெரிய ஊர்களிலிருந்தெல்லாம் ரசிகர்கள் திரண்டு வந்து திருவிழாக் கோலாகலத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். விடிய விடிய பாண்டியன் சிறப்புக் காட்சிகள்…
ரஜினி கட் அவுட்டுக்கு மாலை மரியாதை பாலாபிஷேகமெல்லாம் அமர்க்களமாக நடந்தது. அந்த கூட்டத்துக்குள் சுற்றிச் சுற்றி வந்து, நண்பர்களையெல்லாம் ஒன்று திரட்டி, முதல் காட்சிக்கு வந்திருந்த ரசிகர்களுக்கு இனிப்புகள் கொடுத்து, கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் பைவ் தவுசண்ட் வாலா வெடித்தும் கொண்டாடிய அந்த தீபாவளி… இன்னும் எத்தனை தீபாவளிகள் வந்தாலும் மறக்க கூடுமா என்ன!!
பின்குறிப்பு: பாண்டியன் அந்த ஊரில் 51 நாட்கள் ஓடியது. ஷீல்டும் வழங்கப்பட்டுள்ளது, இன்னமும்கூட திரையரங்கில் மின்னிக்கொண்டிருக்கிறது. தயாரிப்பாளருக்கு ஓரளவு லாபம்.
அவருக்கு அதைவிடப் பெருமை, இந்தப் படத்தை நேரடியாக வெளியிட்டதால் ரஜினியை நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. தன் மகனையும் அழைத்துப் போய் ரஜினியைப் பார்த்துவிட்டு வந்தார்.
இதைத் தொடர்ந்து ரஜினி கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து நடித்த வள்ளி படமும் இங்கு நேரடியாக ரிலீசானது. ரஜினியே இவருக்கு விருப்பப்பட்டு அந்தப் படத்தைக் கொடுத்தாராம்!

எனக்கு குரு தலைவர்தான். இதை எங்கும் சொல்வேன்..

அஜீத்-
அறிமுகம் தேவையில்லாத முன்னணி நடிகர். தலைவருக்குப் பிறகு மெகா ஓப்பனிங் உள்ள நடிகர் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் பெயரெடுத்துள்ளவர்.
எப்போதும் சர்ச்சை நாயகனாகத் தெரிந்தவர்... இப்போது சாந்த நாயகனாக மாறியிருப்பவர்.
Rajinifans.com என்றதும் கையை ஒருகணம் இறுகப் பற்றியவர், ஒரு அஞ்சு நிமிஷம் இருங்க பாஸ் என்று கூறிவிட்டு, வந்திருந்தவர்களுடன் அவசர அவசரமாகப் போட்டோ செஷன் முடித்துவிட்டு வந்தார். நமக்காக அஜீத் ஒதுக்கியது 10 நிமிடங்கள். அதில் ஒன்பதரை நிமிடங்கள் அவர் பேசியது தலைவர் ரஜினியைப் பற்றி!
ரஜினியைப் பற்றி பேசும்போது அவர் குறிப்பிடுவது இரண்டு வார்த்தைகளைத்தான்... தலைவர் அல்லது சார்...
அவரது வாழ்க்கையின் திருப்புமுனை எப்படி நிகழ்ந்தது...? ரஜினி என்ற மந்திரம் அவருக்குள் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தியது?
இனி அஜீத் பேசுகிறார்...
அடிப்படையில் நான் தலைவரின் ரசிகன். அவரைப் பார்த்து, அவரைப் போலவே வரவேண்டும் என்ற ஆசையோடு வந்தவன். நான் நடித்த படங்களில் என்னால் முடிந்த வரை, ஒரு ரஜினி ரசிகனாக அவர் புகழ் பாடியிருக்கிறேன். அடிப்படையில் உங்களைப் போன்றே மிகத் தீவிரமாக அவரை ரசித்து மகிழும் ரசிகன் நான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
இடையில் நான் பேசியவை, அவை எந்த மாதிரி வடிவம் பெற்று மீடியாவில் வந்தன என்பதெல்லாம் எல்லோரையும்விட சாருக்கு நன்கு தெரியும்.
ஆனால், முன்பெல்லாம் நானாக அவரிடம் இதுபற்றிப் பேசினாலும் கூட அவர் தவிர்த்துவிடுவார். ‘விடுங்க... நீங்க சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. கொஞ்சமா பேசுங்க... நிறைய செய்ங்க. அப்புறம், நீங்க பேசாவிட்டாலும் இவர்கள் அனைவரும் உங்களைப் பற்றித்தான் பேசிக் கொண்டே இருப்பார்கள்’ என்றார்.
எத்தனை சத்தியமான, அனுபவப்பூர்வமான வார்த்தைகள் பாருங்கள்!
அவர் எனக்கு தி ஹிமாலயன் மாஸ்டர் புத்தகம் கொடுத்தார். ஒரு குருவைப் போல அது எனக்கு வழிகாட்டும் என்றார். எனக்கு குரு தலைவர்தான். இதை எங்கும் சொல்வேன், எப்போதும் சொல்வேன். ரஜினி சாரின் ரசிகர்களுக்கு இதைச் சொல்லுங்கள், ப்ளீஸ்...
பில்லாவில் நான் நடிக்கிறேன் என்று தெரிந்த பிறகு எத்தனை விதமாக அதைக் கெடுக்க நினைத்தார்கள் தெரியுமா... ஆனால் அப்போதெல்லாம், சாருடைய ஆதரவுதான் எனக்கு மிகுந்த உற்சாகம் தந்தது. அந்தப் படம் துவங்கியதிலிருந்து, ரிலீஸ் வரை அனைத்திலும் ரஜினி சாரின் நேரடிப் பார்வை இருந்தது. யாருக்கும் கிடைக்காத பாக்கியம் அது என்றுதான் சொல்வேன்.
இதோ.. ஏகன் ரிலீஸ். மிகுந்த சந்தோஷம் என்று சொல்ல மாட்டேன். நிறைவாக இருக்கிறது. இந்தப் படம் எப்படி வந்திருக்கிறது எனக் கேட்டுத் தெரிந்து கொண்டார் தலைவர்.
தலைவரிடம் நான் கற்றுக் கொண்ட முக்கியமான விஷயம், எப்போதும் உண்மையாகவே இருக்க வேண்டும் என்பது. அவரைப் பாருங்கள்... யாரிடமாவது தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற ரீதியில் பழகியிருப்பாரா... பேசியிருப்பாரா...! அவரே அப்படியென்றால் நாமெல்லாம் எந்த மூலைக்கு பாஸ்!!
அவரது ரசிகன் என்று சொல்லிக் கொள்வது உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது.
நான் அமைதியாகிவிட்டதாகக் கூறுகிறார்கள்... உண்மைதான். எதற்கு அவசரப்பட வேண்டும். கிடைப்பது நிச்சயம் எனக்குக் கிடைத்தே தீரும் என்ற தலைவரின் வார்த்தைகளை நம்புகிறேன். அந்த நம்பிக்கையை நான் பெறும் வரையில்தான் அமைதியற்ற மனநிலையில் இருந்தேன்..., என்ற அஜீத், ஒரு புன்முறுவலுடன் விடை கொடுத்தார்.

Titbits 7: The choice of the beauty & the real tribute







Friends, i have provided translation too along with the Tamil version of the bits. I would try to provide the translation to the articles whenever and wherever possible. Just time is the constraint for me.
- Sundar
…………………………………………………………………………………………………………………
அனுஷாவின் ஓட்டும் ரஜினிக்கே
அனுஷா டண்டேகர். எம்.டி.வியின் புகழ் பெற்ற வீ.ஜே இவர். சுண்டியிழுக்கும் அழகு. சமீபத்தில் ஒரு வார இதழுக்கு பேட்டியளித்திருந்தார்.
அதில் சினிமா என்றாலே வடக்கை பொறுத்தவரை அது அமிதாப்பும் ரஜினியும் தான் என்று கூறியிருக்கிறார். . ஏற்கனவே ஒரு சிறிய ரோலில் அமிதாபுடன் ஒரு படத்தில் நடித்துவிட்டாராம். ரஜினியுடன் நடிக்க கொள்ளை ஆசையாம். ரஜினியுடன் நடிப்பது என்றால் உடனே தேதிகள் தரத் தயாராம்.
ஆசை நிறைவேற வாழ்த்துவோம்.
Anusha’s vote too is for Rajini
Anusha Dandekar is a famous VJ of MTv. She’s a stunning beauty well known to tv viewers.
She’s already acted in a few bollywood movies including the one with Big B. Recently she has said in an interview to a vernacular magazine that, in North cinema means it is only Big B and Rajini. She expressed her wish to act with Superstar Rajini as she has already acted with Big B. The damsel added that she’s ready to give dates if anybody approach with the dates of Superstar.
Hope her dream comes true.
சூப்பர் ஸ்டார் வீட்டு கொலு…பங்கேற்ற வி.வி.ஐ.பி.க்கள்….
இந்த செய்தி கொஞ்சம் லேட். இருந்தாலும் பரவாயில்லை.
ஒவ்வொரு வருடமும் சூப்பர் ஸ்டார் வீட்டில் நவராத்திரியை முன்னிட்டு கொலு வைக்கபடுவது வழக்கம்.
இந்த முறையும் திருமதி. லதா ரஜினி அவ்வாறு கொலு வைத்திருந்தார். இந்த கொலு பூஜையை பார்வையிட முதல்வரின் துணைவியார் தயாளு அம்மாளையும், உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்காவையும் அழைத்திருந்தார். நவராத்திரியின் போது இருவரும் அதில் பங்கேற்றனர். இருவரையும் லதா ரஜினி வரவேற்று உபசரித்தார்.
இவர்கள் தவிர, பல திரையுலக முக்கியஸ்தர்களும், அரசியல் தலைவர்களின் குடும்பத்தினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு, அவரவர்களின் குடும்பத்தார் இந்த கொலு பூஜையில் பங்கேற்று கொலுவை பார்வையிட்டு சென்றனர். அனைவரையும் லதா ரஜினி சிறந்த முறையில் வரவேற்று உபசரித்து அனுப்பினார். (இணைக்கப்பட்டுள்ள படம் வேறொரு நிகழ்ச்சியில் எடுத்தது)
VIPs throng Superstar’s residence for Navarathiri pooja
This news is little bit late. However, just wish to share with you.
Each and every year Mrs.Latha Rajiini used to perform Golu Pooja on the eve of Navarathiri. This year a grand golu was arranged and pooja was conducted. Better halves of many bureaucrats and higher officials partcipated in the pooja. Families from political circles too participated and had a glance of the golu.
Latha Rajini played a perfect host and welcomed all the visitors with a smiling face.
Of the total visitors the star visitors of the golu pooja was Chief Minister’s wife Dhayaalu Ammal and Local Adminstration Minister MK Stalin’s wife Durga Stalin. This is not the first time they are visiting golu pooja in Rajini’s residence. They have visited a few times in past too. (Attached is a file pic from some other event)
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்…
விகடன் குழுமத்தை சன் டி.வி. வாங்கிவிட்டதோ இல்லையோ, அதில் உண்மையிருக்கிறதோ இல்லையோ, விகடனை விஷகாந்த் வாங்கிவிட்டாரோ என்று தோன்றுகிறது.
அந்தளவு விகடன் வெளியீடுகளில் தி.மு.க மற்றும் ரஜினி எதிர்ப்பு கட்டுரைகள், செய்திகள். பகிரங்கமாகவும், மறைமுகமாகவும்.
அதே சமயம் விஷகாந்த் ஏதோ வாராது வந்த மாமணி போல் புகழ்ந்து எழுதப்படும் கட்டுரைகள், புனையப்படும் செய்திகள். அவர்தான் தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் என்ற ரீதயில் இவர்கள் கொடுக்கும் பில்ட்-அப்பை பார்த்தால் “அட உங்களுக்கே இது ஓவராக தெரியலியா?” என்று தான் கேட்க தோன்றுகிறது. (அதுவும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள விஷகாந்தின் நகர்வலம் -ரொம்ப ஓவர். சினிமா ஷூட்டிங் தோற்றது போங்கள்!!)
விஷகாந்தை ஆதரிப்பதைவிட அவரைவிட சற்று வலுவாக இருக்கும் ஜெ.வை இவர்கள் ஆதரிக்கலாமே? ஏன் விஷகாந்தை ஆதரிக்க வேண்டும்? என்று அப்பாவியாக கேட்பவர்களுக்கு:இவர்கள் ஆதரித்து நாளையே ஜெ. மீண்டும் ஆட்சியை பிடித்தால் இவர்கள் சொல்வது போலெல்லாம் அவர் ஆடமாட்டார். அதற்க்கு வாய்ப்பும் இல்லை. (அவர் தானாகவே ஆடுபவர். அது வேறு விஷயம்!!) ஆனால் விஷகாந்தை நினைத்தபடியெல்லாம் ஆட்டுவித்து தங்கள் காரியத்தை சாதித்துகொள்ளலாமே….அந்த பேராசை தான்.
இது தான் இவர்கள் விஷகாந்தை ஆதரிக்கும் பின்னணி. இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கணக்குடன் தஞ்சாவூர் கணக்காக விஷகாந்தை நாளை ஆட்டுவிக்கலாம் என்று எண்ணி தங்களால் இயன்றதை செய்துவருகின்றனர்.
ம்….பார்ப்போம் என்ன தான் நடக்குது என்று…!! (விகடன் சந்தாவை கான்சல் செய்யாத நண்பர்கள் தயவுசெய்து உடனே அதை செய்யவும். இவர்கள் எந்தக் காலத்திலும் இனி மாற வாய்ப்பேயில்லை.)
Sooriyan (Sun) solraan joker (Vikatan) mudikkiraan
Whether there is truth in the news that Bun Tv has bought Vikatan or not it looks like that Vijayakanth has bought Vikatan. Because anti-Rajini news and Anti-DMK news flood the magazines of Vikatan group directly and indirectly these days.
At the same time, they are portraying Vishakanth as if he is ‘Born to Rule’ the state. The articles, news and other stuff in the magazines including Junior Vikatan and Ananda Vikatan ascertain this well. But the ‘build-up’ they are giving to this is intolerable. And the recent series on Vishakanth named Nagarvalam in AV looks as if a cinema shooting. Irritating.
Some are asking: Why they are supporting Vishakanth? If they support Jaya it would yeild more benefit to them as she is the mighty opponent to DMK…
Yes..they could support Jaya. But if she assumes power, she won’t dance and all to these fellows’ tunes. (She would dance on her own!!) But they are thinking that they could attain whatevert they wanted if Vishakanth assumes power. Surely he would act as per their command. They have started propaganda for this within their means in their channels and magazines. Let’s wait and see what’s going to happen….
(Fans who are yet to cancel their subscription to Vikatan group of magazines are requested to do so immediately without fail. They won’t change forever.)
இப்போ சொல்லுங்கள்…எது உண்மையான அஞ்சலி…?
என்ன இருந்தாலும் ஸ்ரீதர் மறைவுக்கு அஞ்சலி செலுத்த ரஜினி செல்லாதது எங்களுக்கு வருத்தமே என்று நம் நண்பர்கள் சிலர் என்னிடம் போனிலும் கமெண்டுகள் வாயிலும் கருத்து தெரிவித்தனர். அவர்களுக்கு நான் உரிய பதில் அளித்துவிட்டேன்.
இருப்பினும் இன்னும் திருப்தியடையாதவர்களுக்கு தான் இந்த செய்தி.
நான் ஏற்கனவே கூறியபடி சுக துக்க நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதும் கலந்துகொல்லாததும் அவருக்கு அப்போது இருக்கும் சூழ்நிலையை பொறுத்தது. நம்மை போலவே அவரும் ஒரு மனிதர் என்று வாதம் செய்பவர்கள் இதையும் நினைத்துப் பார்க்கவேண்டும். மேலும் இது போன்ற துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள் தங்களது கடமை இத்தோடு முடிந்தது என்று சென்றுவிடுவர். ஆனால் ரஜினி அப்படியல்ல. தான் கலந்துகொண்டாலும் கொள்ளாவிட்டாலும், இறந்தவரின் குடும்பத்தினரின் உண்மைத் தேவைகளை கேட்டறிந்து யாருக்கும் தெரியாமல் சத்தமின்றி உதவுவார். இப்படி அவரால் பயனடைந்த கலை குடும்பங்கள் நிறைய.
சூப்பர் ஸ்டாரை வைத்து மாப்பிள்ளை, படிக்காதவன், தர்மதுரை போன்ற வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ராஜசேகர். தர்மதுரை நூறாவது நாளன்று அவர் இறந்துவிட்டார். இவர் மறைவிற்கும் ரஜினி செல்லவில்லை. இது பற்றி கடும் விமர்சனங்கள் கிளம்பியது. அப்போது வெளிவந்த கழுகு என்ற பத்திரிகை (நக்கீரன், நெற்றிக்கண் போல) இதை கடுமையாக விமர்சித்திருந்தது.
ஆனால், ரஜினி ராஜேசேகரை மறக்கவில்லை. அவரது குடும்பத்தினரை கைவிடவில்லை. பின்னாளில் அவரது மகளுக்கு திருமணம் செய்ய பொருளுதவி அளித்து அந்த குடும்பத்திற்கு ஏராளமான உதவிகளும் செய்தார். விளம்பரங்கள் இன்றி.
இந்த இடத்தில் விஷகாந்தை பற்றி குறிபிட்டாக வேண்டும். விஷகாந்தின் ‘நரசிம்மா’ படத்தை இயக்கியவர் திருப்பதிசாமி. படம் வெளிவரும் முன்னே ஒரு விபத்தில் பலியாகிவிட்டார். இன்று வரை அவர்கள் குடும்பத்தை திரும்பி கூட பார்க்கவில்லை இந்த விளம்பர விரும்பி விஷகாந்த். ஆனால் அஞ்சலி செலுத்த மட்டும் முதல் ஆளாக போய் நின்றார் அப்போது.
Which is the real tribute?
Some fans have expressed their dissatisfaction over Superstar’s absence to pay tributes to veteran director Sreedhar. (Sathyanarayana paid homage to Sridhar on behalf of Superstar). I have answered them in comments and through phone.
However it seems they are yet to satisfied with my explanation. This news is for them.
Superstar may have personal reasons and situations to attend any function or cermony or death. We don’t know the real reasons behind his presence or absence.Those who are arguing that he is also a human being, should keep in mind this also. At the same time, those who pay homage to the departed souls in such occasions, would mind their way once they pay tributes. But Superstar whether he attends such death events or not would enquire the requirement of the concerned family and would extend his help to them. Without the knowledge of third person. There’s lots of art families in Kollywood who have received such assistance from Superstar.
Do you know director Rajasekhar who has directed super-hit films such Maappillai, Dharmadurai with Superstar? When he expired during Dharmadurai 100 days, Superstar didn’t go to pay tributes and this sparked off controversies that time and an yellow magazine called ‘Kazhugu’ pointed this that time and ridiculed Rajini for his absence.
But Superstar in reality didn’t let down Rajasekhar’s family. He helped his daughter in getting married and also extended his financial support to the director’s family without any publicity.
I should definitely mention about Vishakaanth here. Do you remember Thirupathisamy who directed Vishaykanth’s Narasimma? He unexpectedly met with an accident even before the film’s release and passed away. Till now, it is said that Vishakanth has not even turned towards his family. But he was there to pay tributes when he passed away!!
உண்ணாவிரதம்…தயாராகும் நடிகர் சங்கம்!!
ராமேஸ்வரத்திருக்கு போகாதது ஒரு விதத்தில் நல்லதாக போய்விட்டது என்று சில நடிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுகொண்டிருக்கின்றனர். காரணம் ஏதாவது உணர்ச்சிவசப்பட்டு பேசி இப்போது சீமானும், அமீரும் வம்பில் மாட்டியதைப் போன்று நாமும் மாட்டியிருப்போம். நடிக்கும் ஒன்றிரண்டு பட ஷூட்டிங்கும் நடிக்க முடியாமல் போயிருக்கும் என்று தங்களை சமாதானப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
ராமேஸ்வரம் போராட்டத்தில் பேசிய பெரும்பாலனவர்கள், எதற்கு போனோமோ அதைவிட்டுவிட்டு நடிகர்களை பிடிபிடியென்று பிடித்தது நடிகர் சங்கத்தில் உள்ளவர்களை ஆத்திரப்படுத்தியிருக்கிறது. ஆனாலும் ஒன்றாம் தேதி நடக்க இருக்கும் உண்ணாவிரதத்தில் பதிலடி ஏதும் தரவேண்டாம், பொறுமை காப்போம் என்று முடிவெடுத்துவிட்டனர். யாரும் உணர்ச்சிவசப்பட்டு இயக்குனர்களை தாக்கி பேசக் கூடாது. மேலும் சர்ச்சைக்குரிய வகையில் எதுவும் பேசக்கூடாது என்று ஏகப்பட்ட கட்டுபாடுகளை விதித்துவிட்டனர் இப்போதே. மீறி பேசினால் மைக் பிடுங்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் நடிகர் சங்க வளாகம் மிகவும் சிரியதாயிற்றே, இது போன்ற போராட்டங்களுக்கு அந்த இடம் போதுமா என்ற சந்தேகங்களும் தற்போது எழும்பியுள்ளது. இருப்பினும், இந்த போராட்டம் பொது மக்கள் முன்னிலையில் இல்லாமல் ஒரு வளாகத்துள் நடைபெறுவதால் சிரமம் இருக்காது என்று விளக்கம் கொடுக்கின்றனர் நடிகர் சங்கத்தில் உள்ள முக்கியஸ்தர்கள். அதுமட்டுமல்லாது, நடிகர் திலகம் சிவாஜி மற்றும் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் ஆகியோர் நடிகர் சங்கத் தலைவர்களாக இருந்தபோது வேறு சில பிரச்னைகளுக்காக இதே இடத்தில் உண்ணாவிரதம் நடைபெற்றிருக்கிறது. அதனால் இந்த உண்ணாவிரதம் சாத்தியமே என்று கூறப்படுகிறது.
உண்ணாவிரதம் ஒரு வளாகத்துக்குள் - பொதுமக்கள் முன்னிலையில் அல்லாமல் - இந்த முறை நடைபெறுவதால், கூட்டத்தை பார்த்ததும் உளறல்களை அடுக்கும், நா கூசும் வார்த்தைகள் பேசும் பேச்சுக்கள் இருக்காது என்று எதிர்ப்பார்க்கபடுகிறது. (ஏனெனில், புரட்டு தமிழனுக்கு கூட்டத்தை பார்த்தால், கே…கூ…பூ… என்று பைந்தமிழ் பிய்த்துக்கொண்டு வருமே…அதனால் சொல்கிறேன்…!!)
Nadigar Sangam: Gearing Up for the fast
Many actors feel that it was a wise decision to skip Rameswaram protest organised by Tamil filmdom recently. ss directors Seeman and Ameer are facing wrath and has been arrested by the state police on separatism charges. Actors feel that if they have had attended the fast, they would have delivered emtional speech which would have lend them in trouble.
At the same time, prominent office bearers of nadigar sangam are furious over Directors’ remarks over actors in the protest. However, they have decided not to indulge in verbal war over this and it has been uanimously decided to stay calm in the fast. If any actor despite this opens up regarding it and speaks unneccessarily the mike would be plucked the next moment - warns the actors’ association.
Some actors expressed their concern over the venue of the fast - Nadigar Sangam buildings. As it is too small to accomodate the crowd. Since the fast would be a private one and not a public one as that of Hogenakkal, Nadigar Sangam says the present venue is more than enough. They cite that, in the past when Sivaji Ganesan and SSR were presidents of Nadigar Sangam similar fasts (for other issues) has been conducted successfully. They question: why not now…?
Moroever, since the fast is going to be held inside a premises, it is expected there would be no blabbering of some actors with the words like Kae…koo…Poo etc. as they turn emotional once they saw the crowd.

“ரஜினி என் தெய்வம்!” கொண்டாடும் விந்தை ரசிகர்..!!




(முன் குறிப்பு: ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்பும், அவர் அரசியலுக்கு வருவார் என்று நம்பும் அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய ஒரு பதிவு இது.)
ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பதற்க்காக சமூக நலப்பணிகள், பிரார்த்தனைகள் செய்யும் ஒரு விந்தை ரசிகரின் கதை இது.
சமீபத்திய நக்கீரன் (அக். 25 ) இதழில் ஒரு விந்தை ரஜினி ரசிகர் பற்றி இருபக்க கட்டுரை வெளியாகியிருக்கிறது. அவசியம் படியுங்கள் சுந்தர் என்று நண்பர் எனக்கு sms அனுப்பியிருந்தார்.
பிரமிப்பு….
படித்துவிட்டு என்னால் பிரமிப்பை அடக்க முடியவில்லை. ரஜினியின் பெயரைச் சொல்லி அவர் விரும்பாதவற்றை எல்லாம் செய்யும் ரசிகர்களுக்கு மத்தியில், இப்படியும் ஒருவரா என்று வியந்தேன். உடனடியாக அவர் நம்பரை எல்.ஐ.சி. ஸ்ரீதர் உதவியுடன் தேடிப் பிடித்து பேசினேன்.
பாலம் அமைப்பை சேர்ந்த நூலகர் கல்யாணசுந்தரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். தனது வருவாய் அனைத்தும் ஏழைகளுக்கு அள்ளிகொடுத்து தனக்கென்று எதுவும் வைத்துகொள்ளத உத்தமர் அவர். (சூப்பர் ஸ்டார் சிறிது காலம் தனது வீட்டில் அவரை விருந்தினராக வைத்திருந்தார்). அவரைப் போன்றே மென்மையான குரல் இந்த ரசிகருக்கும். ஆனால் இவரது பணிகள், அது எழுப்பியிருக்கும் சாதனைகள் ஒரு இரும்புக் கோட்டை.
இவர் வழி…தனி வழி…!!
பெரும்பாலான தீவிர ரசிகர்கள் ரஜினியை தெய்வமாகத்தான் கொண்டாடுகின்றனர். இந்த ரசிகரும் அப்படித்தான்.
“மனித தெய்வம் ரஜினி பொதுநல இயக்கம்” என்ற அமைப்பை நடத்தி வரும் திருப்பூரை சேர்ந்த முருகேசன், ரஜினியை தனது தெய்வம் என்றே கூறிவருகிறார். ஆனால் இவர் பாலாபிஷேகம் செய்வதில்லை, சூடம் கொளுத்துவதில்லை. ஆனால் ரஜினியின் பெயரைச் சொல்லி பல நல்ல காரியங்கள் செய்து வருகிறார்.
வள்ளலே ரசிகனாக
ரியல் எஸ்டேட் துறையில் உள்ள இவர், இதன் மூலம் கிடைக்கும் வருவாய் அனைத்தையும் ஏழைகளுக்கே - ரஜினி பெயரைச் சொல்லி - அள்ளி கொடுத்துவிடுகிறார். அது தவிர தன் சொந்தப் பணத்துல நூற்றுகணக்கான ஏழைகளுக்கு வீட்டு மனைகள் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல ரஜினியின் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் ஆயிரம் பேரை திரட்டி ரத்த தானம் செய்வார். அது தவிர பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இலவச நோட்டு புத்தகங்களை வழங்குகிறார். ஊனமுற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்குகிறார். இது தவிர எங்காவது தீ விபத்து நடந்தால் முதல் ஆளாக ஓடி சென்று நிவாரணங்களை வழங்குவார். ரஜினி பொது நல இயக்கம் என்ற பெயரில் இப்படி இவர் செய்து வரும் அரும்பணிகள் ஏராளம், ஏராளம். பட்டியலிட்டால் நீண்டுகொண்டே போகும்.

ஒரே ஒரு முறை தான்
இப்படி பிறர்க்கு செய்யும் இவர், தன்கென்று எதுவும் வைத்துகொள்வதில்லை. இப்படி 26 வருடங்களாக ரஜினியின் பெயரைச் சொல்லி யாருமே செய்யமுடியாத நல்ல பணிகளை அனாயசமாக செய்யும் இவர், ரஜினியை ஒரே ஒரு முறை தான் நேரில் சந்தித்திருக்கிறாராம். அதுவும் இருபது ஆண்டுகளுக்கு முன்பு.
நமக்காக தனி சந்திப்பு உண்டு
படிக்கும் போதே இந்த ரசிகரைப் பற்றி அதிகம் இன்னும் தெரிந்துகொள்ளவேண்டும் என்று தோன்றுகிறதல்லவா? நேற்று இரவு அவருடன் பேசினேன். நமது onlyrajini.com வலைத்தளத்துக்காக ஒரு தனி சந்திப்புக்கு ஒப்புக் கொண்டார். தீபாவளி கழிந்து அது நடைபெறும். அப்போது இன்னும் பல விரிவான சுவையான தகவல்களுடன் உங்களை சந்திக்கிறோம் இருவரும்.
“எங்களுடன் வந்துவிடுங்கள்” - பிற கட்சியினரின் தூண்டில்களை புறக்கணித்தார்
இந்த விந்தை ரசிகரைப் பற்றி கேள்விப் பட்ட அரசியல் கட்சியினரும், மற்ற நடிகர்களும் இவரை தங்களது கட்சிக்கும் வரும்படியும், பெரிய பதவியை தருவதாகவும் ஆசைகள் காட்டியும், “நான் எப்பவும் மனித தெய்வம் ரஜினி பக்கம் தான் இருப்பேன்” என்று கூறி அவர்களது தூண்டில்களை புறக்கணித்துவிட்டார்.
இவரைப் பற்றி கேள்விப்பட்ட நடிகர் சரத், தன்னுடன் வந்துவிடும்படி நேரில் சந்தித்து கேட்டார். அப்போது கூட “நான் என்றும் என் தெய்வத்தின் பக்கம்தான்” என்று கூறி மறுத்துவிட்டார். (இது அன்பால சேர்ந்த கூட்டம் சரத் அவர்களே…!!)
எங்கள் தெய்வம் ஆளவேண்டும் என்பதே என் ஆசை
“மத்தவங்களுக்கு எப்படியோ தெரியாது. எனக்கு ரஜினி தான் கடவுள். அவர் பெயரில் சேவைகள் செய்வதைப் பிறவி பயனாக கருதுகிறேன். நான் இவ்வளவு சேவைகள் அவர் பெயரில் செய்வதே அவர் தமிழகத்தை ஆட்சி செய்யவேண்டும் என்பதற்காகத்தான். நான் எந்த கட்சியிலும் சேரமாட்டேன். எந்த அரசியல் தலைவரையும் பின்பற்றமாட்டோம். அவர் காலம் தாழ்த்தாமல் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை. இதற்காக அவரை வற்புறுத்தமாட்டோம். ஆனால் முக்கிய கோவில்களில் வழிபாடு நடத்த இருக்கிறோம்.
எம்மதமும் சம்மதம்
இதற்காக நூறு நூறு பேர் கொண்ட டீமை வைத்து மதுரை மீனாட்சியம்மன், திருவண்ணாமலை அண்ணாமலையார், பழனி முருகன், கும்பகோணம் கும்பேஸ்வரர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் உள்ளிட்ட முககிய கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும், ஆராதனைகளும், அன்ன தானமும் செய்ய இருக்கிறோம். அதுமட்டுமல்ல, வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கும், நாகூர் தர்காவுக்கும் செல்வோம். தலைவருக்கு மட்டுமல்ல எங்களுக்கும் எம் மதமும் சம்மதம்தான்.”
“எங்கள் மனித தெய்வத்துக்கு மனமாற்றம் ஏற்படவேண்டும் என்பதற்காகத்தான் இந்த பிரார்த்தனை. இதன் பலனாக அவர் அரசியலுக்கு வருவார். அதற்கான சூழல் விரைவில் ஏற்படும் என்று நம்புகிறோம். அவரும் ஆட்சி பீடத்தில் ஏறுவார். மக்களுக்கு நல்லாட்சி தருவார்.” முருகேசன் வார்த்தைகளில் நம்பிக்கை தெரிகிறது.
ரஜினியை சங்கடப்படுத்தும் ரசிகர்கள் எங்கே…இவர் எங்கே…
ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பதற்காக அவரை சங்கடப்படுத்தும் ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் முருகேசன் பாராட்டப்படவேண்டியவர். போஸ்டர்கள், பேனர்கள், தலையங்கங்கள், பகிரங்க கடிதங்கள், மொட்டை கடிதங்கள், நம்மை போன்ற அறிவு ஜீவிகளின் (??!!) விவாதங்கள், கருத்துக்கள் - இவை எதுவும் சாதிக்காததை நிச்சயம் இவர் பிரார்த்தனை சாதிக்கும்.
இவர் இப்படி சொன்னவுடன், என்னால் இயன்ற ஒரு மிகச் சிறிய தொகையை இவரது அரும்பணிகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் அளிப்பதாக வாக்களித்திருக்கிறேன். நான் கொடுக்கும் சிறிய தொகை அவருக்கு தேவையில்லை. அதை அவர் எதிர்ப்பார்ப்பவரும் அல்ல. இருப்பினும் நல்ல முயற்சிக்கு என்னால் இயன்ற ஒரு துளி அர்பணிப்பு.
இவரிடம் பேசிய பிறகு, நான் ஒரு பெரிய ரஜினி ரசிகன், அவருக்காக ஏதோ பெரிதாக செய்துகொண்டிருக்கிறேன் என்று என்னுள் - ஒரு ஓரமாக - சிறிதளவு - இருந்த ஆணவம் சுத்தமாக போயே போய்விட்டது. இவரது சேவைகளுடன் ஒப்பிடும்போது என் பணி ஒரு கால் தூசு என்று புரிந்தது.
“உங்களையும் உங்கள் குடும்பத்தையும் முதலில் நன்றாக கவனித்துகொள்ளுங்கள். அதைத் தான் ரஜினியும் விரும்புவார்” என்று கூறி விடைபெற்றேன்.
இந்த உண்மை ரசிகருக்கு தலைவணங்குவோம்.
குறிப்பு: இவருடன் ஒரு விரிவான நேர்காணல், புகைப்படங்களுடன் விரைவில் நமது வலைத்தளத்தில் வர இருக்கிறது.

Superstar Rajini’s 1995 Doordarshan interview


தூர்தர்ஷனுக்கு இப்படி ஒரு பேட்டியை பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சியாக அளிக்கலாம் என்று எஸ்.வி.ரமணன் ரஜினியுடன் கலந்து பேசி முடிவு செய்தவுடன் “இந்த பேட்டியில் உங்கள் கேள்விகளை ரஜினியிடம் கேட்கலாம் - உங்கள் கேள்விகளை அனுப்பவும்” என்று நாளிதழ்களில் விளம்பரம்செய்தனர் .
(எஸ்.வி.ரமணன் சூப்பர் ஸ்டாரின் மனைவி வழி உறவினர் ஆவார். ஜெயஸ்ரீ பிக்சர்ஸ் என்ற விளம்பர நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஐடெக்ஸ் கண் மை விளம்பரத்தில் ஒலிக்கும் குரல் நினைவிருக்கிறதா? அது இவர் தான். கணீரென்ற குரல்லுக்கு சொந்தக்காரர் இவர். டி.வி.க்களில் பாடல் சம்பந்தபட்ட நிகழ்ச்சிகளில் வருவது வேறொரு ரமணன். அவர் பெயர் ஏ.வி.ரமணன்.)
உலகம் முழுதும் இருந்து வந்து குவிந்த கடித மலைகளுள் சிறந்த 100 கேள்விகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்க்கு சூப்பர் ஸ்டார் பதில் சொல்லியிருந்தார். ஒவ்வொரு பதிலுக்கும் பொருத்தமான பாடல் காட்சிகள், வசனங்கள், க்ளிப்பிங்குகள் காட்டப்பட்டன. அது நிகழ்ச்சிக்கு இன்னும் மெருகூட்டியது. ஒவ்வொன்றும் அவ்வளவு அருமை…இப்போ பார்த்தாலும் உடம்பெல்லாம் சிலிர்க்கும்!! (நமது rajinifans.com ராம்கியும் அதில் ஒரு கேள்வி கேட்டிருந்தார்.)
சஸ்பென்ஸ் ஏற்படுத்திய ரஜினியின் தோற்றம்
ரஜினி எத்தகு தோற்றத்தில் பேட்டியில் காட்சியளிப்பார் என்று ரசிகர்களுக்குள் பெரிய பட்டி மன்றமே அப்போது நடந்தது. இதற்க்கு முன்பு அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது (Sep 27, 1995) புகைப் பிடித்தவாறு பேட்டியளித்தது பல விமர்சனங்களை கிளப்பியது. எனவே இந்த முறை பேட்டி கொடுக்கும் விதத்தில் கூடுதல் கவனம் செலுத்தும்படி ரஜினியை அவருக்கு நெருக்கமானவர்கள் கேட்டுகொண்டனர்.
சூப்பர் ஸ்டார் எந்த தோற்றத்திலும் வசீகரித்துவிடுவார் என்பதற்கு இந்த பேட்டியும் ஒரு சாட்சி. (மீசையில்லாமல், கண்ணாடியுடன் ஒரு வித்தியாசமான, அட்டகாசமான கெட்டப்பில் காட்சியளித்தார்.)
சந்தேகங்களுக்கு விடை
இன்னொரு முக்கிய விஷயம் இந்த பேட்டி அளித்த காலகட்டம், பாட்ஷா படம் பேரு வெற்றி பெற்று ரஜினிக்கு அடுத்த தலைமுறை ரசிகர்கள் நிறைய பேர் கிடைத்திருந்தனர். குழந்தை ரசிகர்களும் எண்ணிக்கையில் கூடியிருந்தனர்.
அத்தோடு ஏற்கனவே இருந்த நீண்டகால ரசிகர்கள் மனதில் அவர் கம்பீரமாக வீற்றிருந்த காலம். இப்போது நமக்கு தலைவரைப் பற்றிய சில சந்தேகங்கள் இருக்கிறதல்லவா அது போல அப்போதுகூட பல சந்தேகங்கள் மனதில் இருந்தன. உதாரணத்துக்கு: (இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவது, தமிழ் நாட்டை தமிழன் தான் ஆளவேண்டும் என்று கூறப்படுவது பற்றி அவர் கருத்து, அவர் காந்தியவாதியா அல்லது ஆன்மீகவாதியா இப்படி பல பல சந்தேகங்களுக்கு இதில் விடை கிடைத்தன.) இப்படி பல கேள்விகளுக்கு ரஜினி இந்த பேட்டியில் பதில் சும்மா நச் நச் என்று பதில் அளித்திருந்தார். அதனால் இந்த பேட்டிக்கு பின்னர் ரசிகர்கள் காலரை தூக்கி விட்டு நடந்தனர். (அது ஒரு அழகிய கனாக்காலம்).
வெட்கமில்லா விஷகாந்த்
இப்படி ஒரு பேட்டியை ரஜினி கொடுத்தவுடன் நொந்துபோன விஷகாந்த் உள்ளுக்குள் ஆற்றாமையுடன் இருந்தார். இந்த பேட்டி ஒளிபரப்பான அடுத்த வாரம் வந்த குமுதம் இதழ் ரஜினியிடம் கேட்கப்பட்ட அதே 100 கேள்விகளை விஷகாந்திடம் கேட்டது. விஷகாந்தும் கொஞ்சம் கூட வெட்கமின்றி அந்த கேள்விகளுக்கு பதில் கூறியிருப்பார். (அப்போதிலிருந்தே அந்தாளு இப்படித்தான்!!) (கேக்கவே கொடுமையா இருக்கே…படிக்க எப்படியிருந்திருக்கும்??!!)
ரசிகர்களாக மாறிய நடுநிலையாளர்கள்
ரஜினியின் இமேஜ் பொதுமக்கள் மத்தியில் உயர்ந்ததற்கு இந்த பேட்டியும் ஒரு முக்கிய காரணம் என்றால் மிகையாகாது. அதேபோல் தங்கள் தலைவரைப் பற்றியும் அவரது பரந்த மனப்பான்மை மற்றும் முதிர்ச்சி, வாழ்வியல் கண்ணோட்டம், சமூக சிந்தனை மற்றும் இன்ன பிறவற்றை ரசிகர்கள் தெரிந்துகொள்ள முழு வாய்ப்பையும் இந்த பேட்டி ஏற்படுத்திகொடுத்தது. இந்த கேள்வி-பதில் தொகுப்பை பார்த்து ரஜினியின் ரசிகர்களாக மாறிய நடுநிலையாளர்கள் எண்ணற்றோர் உண்டு.
பல ரசிகர்களுக்கு தலைவரின் பெருந்தன்மை, மற்றும் அவரது நல்ல உள்ளத்தை புரிந்து கொள்ள இந்த பேட்டி மிகவும் உதவியாக இருந்தது.
நாட்டுப்பற்று, குடும்ப நலன், தொழில் பக்தி இவற்றை பார்த்து இவரது நலம்விரும்பிகளாக மாறிய தாய்குலங்கள் அநேகம். அந்த அளவு இந்த பேட்டி ரஜினியின் இமேஜை உயர்த்தியது. இந்த பேட்டி ஏற்படுத்திய தாகம் தான் அடுத்து வந்த பொது தேர்தலில் மக்களை நேரடியாக சந்திக்கமலேயே வெறும் சன் டி.வி பேட்டியின் மூலமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார் ரஜினி.
அன்றைய காலகட்டத்தில் தூர்தர்ஷன் தான் சாட்டிலைட் கிங். எனவே தூர்தர்ஷனில் ஒளிபரப் பப்பட்டதால், இந்த பேட்டியின் ரீச் அபாரமாக இருந்தது. இந்த பேட்டி கொடுத்த இமேஜ் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்றால் பார்த்துகொள்ளுங்களேன். எனவே சூப்பர் ஸ்டார் இதே போல் மறுபடியும் ஒரே ஒரு - ஒரு - பேட்டி அளித்தால் போதும் அவரை புரிந்துகொள்ளாத பல மரமண்டைகளுக்கு உறைக்கும், அவரது இமேஜ்ஜும் பல மடங்கு உயரும். நமக்கும் மன பாரம் பெரிதளவு குறையும்.
ரஜினிக்கு ஒரு வேண்டுகோள்
சூப்பர் ஸ்டார் தனது கொள்கைகளை தளர்த்தி, இரண்டு வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திருக்கு ஒரு முறையோ அல்லது பண்டிகை காலங்களிலோ இத்தகைய நிகழ்ச்சிகள் வாயிலாக சின்னத் திரை மூலமாகவாவது மக்களை சந்திக்க வேண்டும். (காலம் மாறிவிட்டது. எனவே இது போன்ற விஷயங்களில் நாம் பின் தங்கி விடக்கூடாது தலைவா!!)
ஒவ்வொரு கேள்வி பதிலும் இன்றைய காலகட்டத்திலும் கூட பொருத்தமாக இருப்பது ஆச்சரியம். முரண்பாடு துளிகூட இல்லை. அதுவும் அந்த அரசியல் தொடர்பான ஸ்டார் கேள்வி பதில், சூப்பர். (பொறுமை…பொறுமை….!!)
உதாரணத்துக்கு ஒரு கேள்வி பதில்
அன்றைய காலகட்டங்களில், நடிகர் மன்சூரலி கான் டி.வி.க்களிலும் பத்திரிக்கைகளிலும் ரஜினியை கண்டபடி விமர்சித்து வந்தார். இப்போது எப்படியோ அப்போதும் நாம் குய்யோ முய்யோ என்று குதித்தோம். ஆனால் சூப்பர் ஸ்டார்?
…………………………………………………………………………………………………………………
கேள்வி: பத்திரிக்கைகளிலும் டி.வி. பேட்டிகளிலும் ஒரு நடிகர் தங்களை கண்டபடி விமர்சனம் செய்துவருகிராரே? இது பற்றி நீங்க என்ன சொல்றீங்க? ரத்தம் கொதிக்கிது தலைவா…
ரஜினி : ஹா…ஹா…ஹா…(சிரிக்கிறார்) கண்ணா, இது ஜனநாயக நாடு. அரசியல் சட்டம் நம் அனைவருக்கும் பேச்சு சுதந்திரம் கொடுத்திருக்கு. அவங்கவங்க கருத்துக்களை சொல்ல அவங்கவங்களுக்கு முழு உரிமை உண்டு. விமர்சனங்களை - நான் - வரவேற்கிறேன்.”
…………………………………………………………………………………………………………………
(உடனே பாட்ஷா படத்தில் ஆனந்தராஜ், ரஜினியை கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கும் காட்சியும், அதன் தொடர்ச்சியாக அவரது தம்பி, “ஒரு பூனை கூட ஒரு அறையில வெச்சு நாம கார்னர் பண்ணினா புலியா மாறிடும். ஆனா அண்ணா, உங்களுக்கு கோவமே வராதா?” என்று கேட்கும் காட்சியும் அதற்க்கு ரஜினி பலமாக சிரிப்பதும் காட்டப்பட்டது. (கேட்கும்போதே சிலிர்க்குது இல்ல? இப்போ உள்ள சூழ்நிலைக்கும் ரொம்ப பொருத்தம் இந்த காட்சி!)
முன்னோட்டம் தொடரும்…

விளம்பரங்களை விரும்பாத ரஜினி

நண்பர்களே, தூர் தர்ஷன் பேட்டி தொடர்பான பதிவை தயார் செய்ய நிறைய நேரம் இழுக்கிறது. அதனால் அது குறித்து ஆவலுடன் உள்ள நண்பர்கள் இன்னும் சற்று பொறுத்திருக்கவும். நாளை அது கண்டிப்பாக போஸ்ட் செய்யப்படும்.
அதுவரை உங்கள் ஏமாற்றத்தை தவிர்க்கவே இந்த சிறு பதிவு. (ஹி…ஹி..II)

…………………………………………………………………………………………………………………
அந்தக் கட்சி மாநாடு முடிந்து நான்கைந்து நாட்கள் ஆகிவிட்ட நிலையில், மழைவிட்டும் தூவனாம் விடாத குறையாக, அந்த மாநாட்டின் சாதனை பற்றி நாளிதழ்களில் ‘காக்கா’ விளம்பரங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.
இதன் பின் புலத்தை விசாரித்தால் கிடைக்கும் தகவல் மிகவும் அதிர்ச்சியாக இருக்கும். அது நமக்கு தேவையில்லை.
ரஜினி இந்த இடத்தில்….
இந்த சூழ்நிலையில் சூப்பர் ஸ்டார் எனக்கு நினைவுக்கு வருகிறார்.
1996 ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.-தா.மா.க. வெற்றிக்கு சூப்பர் ஸ்டார் எந்த அளவு காரணம் என்று அனைவருக்கும் தெரியும்.
ஆனால் அந்த வெற்றியை கொண்டாடியபோது அதை “CLAIM” செய்ய அவர் அங்கு இல்லை. அமெரிக்காவில் உள்ள தனது குருநாதர் சச்சிதானந்த ஸ்வாமிகள் ஆசிரமித்தில் இருந்தார்.
அனைத்தும் முடிந்த பிறகு எந்த அறிவிப்பும் இன்றி சென்னை திரும்பினார். “மறுபடியும் உங்களை கோட்டையில் சந்திக்கிறேன்” என்று கலைஞரிடம் சொன்னபடி அவரை கோட்டையில் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் கேட்க்கப்பட்ட கேள்விகளுள் ஒன்று தான் நீங்கள் அருகே காண்பது.
அதற்க்கு அவர் கூறிய பதிலை பாருங்கள். தொண்டர்களை விளம்பரங்களுக்காக வற்புறுத்தும் தலைவரோடு இதை ஒப்பிட்டு கொள்ளுங்கள்.
செய்தியாளர்கள்: “முன்னறிவிப்பு இன்றி இப்படி திடீரென்று சென்னை திரும்பியிருக்கிறீர்களே?”
ரஜினி: “வீண் தொந்தரவுகளை தவிர்ப்பதற்காகத் தான் இப்படி எந்த வித விளம்பரங்களும் வரவேற்புகளும் இல்லாமல் சுதந்திரமாக வர ஆசைப்பட்டேன்”
(அவர் தொந்தரவு என்று குறிப்பிட்டது தனக்கில்லை, மற்றவர்களுக்கு…!! இதை வேறு ஒரு பேட்டியிலும் ரஜினி தெளிவாக குறிப்பிட்டுள்ளார்)

Rajini is the choice of Booker Winner Arvind Adiga


Friends, those who are waiting for updates pls take this light refreshment from today’s Times of India, Goa edition.
I am preparing a post which you would love to read and cherish forever. It will posted soon.
Those who are eagerly anticipating updates should keep in mind, each post consumes considerable amount of time. Since i wanted to be distinct, i take utmost care in giving each and every news and articles and avoid Copy&Paste from crap sites.
Meanwhile, translation too consumes more and more time. (Any translation volunteers pls assist me in this regard.)
Hope you understand and co-operate with me.
thanks.

ரஜினியின் இமேஜை உச்சிக்கு கொண்டு சென்ற படங்கள்

ரஜினி நடித்த பல ரீமேக் படங்கள் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் அவருடைய இமேஜையும் உயர்த்தின.
தில்லுமுல்லு (கோல்மால்)
பில்லா (டான்)
குப்பத்து ராஜா (தோ யார்)
நான் வாழ வைப்பேன் (மஜ்போர்)
தீ (தீவார்)
விடுதலை (குர்பானி)
அடுத்தவாரிசு ( ராஜாராணி)
நான் மகான் அல்ல (விஸ்வனாத்)
நான் சிகப்பு மனிதன் (ஆஜ் கி ஆவாஸ்)
நான் அடிமை இல்லை (பியார் ஷுக்தா நஹின்)
தர்மத்தின் தலைவன் (கஷ்மே வாடெ)
குரு சிஷ்யன் ( இன்சாஃப் கி புகார்)
வேலைக்காரன் (நமக் ஹலால்)
மாவீரன் (மர்த்,இந்தி)
மிஸ்டர் பாரத் (திரிசுல்)
படிக்காதவன் (குத்தார்)
பணக்காரன் (லாவரிஸ்)
சிவா (கூன் பசினா)
அண்ணாமலை (குத் கர்ஸ்)
பாட்ஷா (ஹம்) ஆகியவை இந்தியிலிருந்தும்,
போக்கிரிராஜா (சுட்டலுனாரு ஜாக்ரதா)
நல்லவனுக்கு நல்லவன் (தர்மத்முடு)
மாப்பிள்ளை (அத்தகி எமுடு அம்மகி மொகுடு)
அதிசயபிறவி (யெமுடுகி மொகுடு)
வீரா (அல்லரி மொகுடு)
ஆகியவை தெலுங்கில் இருந்தும்
பொல்லதவன் (பிரமதே கனிகெ)
புதுகவிதை (நா நினா மரியலரே)
கை கொடுக்கும் கை (கத சஙகமா)
மன்னன் (அனூரகா அரலித்)
பாண்டியன் (பாம்பே தாதா)
தர்மதுரை (தேவா)
ஆகியவை கன்னடத்தில் இருந்தும்
முத்து (தேன்மாவின் கொம்பத்)
சந்திரமுகி (மணிசித்ர தாழ்)
குசேலன் (கதபறயும் போல்)
ஆகிய படங்கள் மலையாளத்தில் இருந்தும் ரீமேக் செய்யப்பட்டவை.வெற்றி சதவிகிதம் என்று பார்த்தால் இவற்றில் பெரும்பாலான படங்கள் பெருவெற்றி பெற்றவை. வெகு சில படங்கள் மட்டுமே தோல்வி அடைந்தவை. ரஜினியின் இமேஜை உச்சிக்கு கொண்டு சென்ற பல படங்கள் ரீமேக் படங்களே. இந்த அபார வெற்றி சதவிகிதத்துக்கு காரணம் என்று பார்த்தால்1. பெரும்பாலும் வெற்றி அடைந்த படங்களே ரீமேக் செய்யப்படும். அவற்றிலும் தனக்கு சூட் ஆகும் படங்க்ளை மட்டுமே ரஜினி கவனமாக தேர்ந்தெடுத்தார். பெரும்பாலான அமிதாப்பின் வெற்றி படங்களை ரீமேக் செய்த ரஜினி அக்காலத்தில் வெளியான கபி கபி போன்ற படங்களை தவிர்த்திருப்பார். பைரவி,முள்ளும் மலரும் போன்ற படங்களின் மூலம் கிடைத்த ஆக்‌ஷன் இமேஜை கெடுத்துவிடாத படங்களை மட்டும் தெரிவு செய்தார். இப்போது கூட பிளாக்,சர்க்கார்,சீனிகம்,ஏகலைவா போன்ற அமிதாப்பின் படங்களை கண்டும் காணாதது போல் தவிர்த்துவிட்டார்.2. இந்த படங்களை கவனித்தால், ரஜினிக்கு முழுவதும் சூட்டாகாத படமெனில் எஸ்ஸென்ஸை மட்டுமே பயன்படுத்தியிருப்பார்கள். தேன்மாவின் கொம்பத் படத்தையும் முத்து படத்தையும் இதைப்பற்றி அறியாத ஒருவர் பார்த்தால் இரண்டும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத படங்கள் என்றே சொல்லுவார். நல்லவனுக்கு நல்லவன் படமும் பல மாற்றம் செய்யப்பட்டதே.3. பல இந்திப்படங்கள், முண்னனி நாயகர்கள் இணைந்து நடித்ததே. ஆனால் தமிழில் இதை கவனமாக தவிர்த்திருப்பார்கள். இரண்டாவது கதானாயகன் பெரும்பாலும் டம்மிதான்.வேலைக்காரன் - சரத்பாபு, படிக்காதவன்- தம்பி கேரக்டர்,பணக்காரன் - சரண்ராஜ், தீ - தம்பி சுமன் டம்மி. இவையெல்லாம் அங்கே நல்ல ஸ்கோப் உள்ள கேரக்டர்கள். இதையெல்லாம் விட மிஸ்டர் பாரத் படத்தில் எஸ் வி சேகரை படு டம்மியாக்கி இருப்பார்கள். திரிசூல் என அப்பா, இரு மகன்களுக்கும் சம்மான ஸ்கோப் உள்ள படம் அது. படப்பிடிப்பில் சேகர் சத்யராஜிடம் சொன்னாராம் இது தோசூல் என. சில நாள் கழித்து சத்யராஜ் சொன்னாராம், படம் ஏக்சூல் என. ஆனால் படம் பெப் குறைவாக இருந்ததால் சத்யராஜின் சீன்களை அதிகப்படுத்தினார்கள். தமிழ்னாட்டில் இது சகஜம் தான். வணிக மதிப்புள்ள முண்ணனி நாயகர்கள் சேர்ந்து நடிப்பது இங்கு அரிதே. கடைசியாக அப்படி வந்த படமென்றால் பிதாமகனை சொல்லலாம். இவ்வாறு டம்மியாக்கப்படும் நடிகர்களின் நல்ல சீன்கள் ரஜினி கணக்கில் வரவு வைக்கப்பட்டு அவரது இமேஜ் உயர காரணமாய் அமைந்தது. 4. இவ்வாறு சில கேரக்டர்களை குறைத்தாலும், நடிக நடிகையர் தேர்வில் ரஜினி மிக கவனமாக இருப்பார். அப்போது உச்சத்தில் இருக்கும் வில்லன்,நாயகிகளை மட்டுமே தேர்வு செய்தார். ஆன்ஸ்ட் ராஜ் ல் தூள்கிளப்பிய தேவனை பாட்ஷா க்கு தேர்வு செய்ததை உதாரணமாக கொள்ளலாம். முத்து படத்திற்க்கு முதலில் அரவிந்த்சாமியை கேட்டனர். அவர் மறுக்கவே சரத்பாபு.5. இப்படங்களின் பின்னால் இருந்த திரைக்கதை,இயக்குனர்கள் நல்ல அனுபவம் பெற்றவர்கள். பஞ்சு அருணாசலம்,எஸ் பி முத்துராமன்,ராஜசேகர்,சுரேஷ்கிருஷ்ணா,குகனாதன்,பாலசந்தரின் உதவியாளர்கள் போன்றோரின் உழைப்பு இவற்றை மெருகேற்றியது6. தமிழ் மக்களின் ரசனை மற்ற மாநிலங்களை விட சற்று வேறுபட்டது. இதை ரஜினி நன்கு உணர்ந்திருந்தார். அதனால்தான் இந்தி படங்களின் நீளம்,மலையாள படங்களின் தளர்வேகம்,தெலுங்கின் எதிலும் அதிகப்படி போன்ற கூறுகள் தமிழில் தலைகாட்டாமல் பார்த்து கொண்டார்.7. தனக்கு ஏற்ற பில்டப் காட்சிகளை கவனமாக அமைத்திருப்பார். ஹம் மில் அமிதாப் முதன்முறையாக கோபப்படும் காட்சியை விட இங்கே ரஜினிக்கு அமைக்கப்பட்ட காட்சி பலமடங்கு பவர்புல்லானது.8. செண்டிமெண்ட் காட்சிகளிலும் கவனமாக இருப்பார். இந்தி படங்களில் இருக்கும் அண்ணியுடன் சகஜமாக பழகும் காட்சிகள்,தெலுங்கில் இருக்கும் மாமியாரை சைட் அடிக்கும் காட்சிகள் இவை இங்கு நடக்காது.9. அந்த பாத்திரங்களை உள்வாங்கி தன் ஸ்டைலில் நடிப்பை வழங்குவதும் வெற்றிக்கு முக்கிய காரணம். இரண்டு மூன்று நாயகர்கள் சேர்ந்து கொண்டுவரும் ரிச்னெஸ்ஸை தன் பாடி லாங்குவேஜாலும்,புதுவகை மேனரிஸங்களாலும், ஸ்டைலான மேனரிசத்தாலும் ஒருவராகவே கொண்டுவரும் திறமை ரஜினிக்கே உண்டு.

சூப்பர் ஸ்டாரின் வரலாற்று புகழ் 1995 தூர்தர்ஷன் பேட்டி - Part 1


சூப்பர் ஸ்டாரின் வரலாற்று புகழ் மிக்க 1995 தூர்தர்ஷன் பேட்டியின் முழு தொகுப்பும் கடும் முயற்சிக்கு பின் (செய்தித்தாள் வடிவில்), நமக்கு கிடைத்திருக்கிறது.
நமது வலைத்தள நண்பர்கள் நிறைய பேர் இதை பிரசுரிக்குமாறு என்னிடம் பலமுறை கேட்டனர். நான் என்னிடம் வைத்திருக்கும் தொகுப்புகளில் இந்த பேட்டியின் முதல் பகுதி மட்டுமே இருந்தது. (13 வருடங்கள் பத்திரமாக வைத்திருப்பது என்ன சும்மாவா? நான் வைத்திருந்த இது தொடர்பான கட்டிங்குகள் எலியார் மற்றும் கரையான் புண்ணியத்தால் சுக்கு நூறாகி விட்டது.) இதனால், இதன் முழு தொகுப்பையும் கடந்த ஒரு வருடமாக தேடிகொண்டிருந்தேன். தெரிந்தவர்கள் அனைவரிடமும் கேட்டுகொண்டிருந்தேன். மிகவும் பழையது என்பதால், யாரிடமும் இருக்கவில்லை.
ஆண்டுகள் உருண்டோடியதில், இவற்றை சேமித்துவைத்திருந்த பலர், விரக்தியின் காரணமாக தூக்கி போட்டுவிட்டது தெரியவந்தது. மனம் வலித்தது. இருப்பினும் கடும் முயற்சிக்கு பின், இந்த பேட்டியின் தொகுப்பை பத்திரமாக முழுதுமாக வைத்திருந்த ஒருவர் கிடைத்தார். உங்களுக்காக அதை இங்கு அளிக்கிறேன்.
கேள்வி பதிலை படிக்குமுன், அந்த நிகழ்ச்சியை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
கேள்வி பதிலுக்கு செல்வதற்கு முன்பு அது பற்றிய - முன்னுரைகளே மிகவும் சுவாரஸ்யம் என்பதால் - மேலும் அவற்றை நீங்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால் - அதையே இன்னும் சில பதிவுகளில் ப்டிக்க இருக்கிறீர்கள்.
தமிழகமே எதிர்ப்பார்த்த பேட்டி
எஸ்.வி.ரமணன் தயாரித்த இந்த கேள்வி-பதில் தொகுப்பின் முழு உரிமையும் தூர்தர்ஷன் வாசம் உள்ளது. இப்போது இருந்தது போல் அன்றைய சூழ்நிலையில் ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்த தனது முடிவை இந்த பேட்டியில் அறிவிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்ததால், இந்த பேட்டி மிகவும் பரபரப்பாக மக்கள் மதியில் எதிர்ப்பார்க்கப்பட்டது. (அந்த பிரசித்தி பெற்ற கேள்வி பதில் கடைசியாக உங்கள் பார்வைக்கு வைக்கப்படும்.) அதே போல் பரபரப்பாக பேசப்பட்டது. அடுத்த நாள், பத்திரிக்கைகளில் முக்கிய முதல் பக்க செய்தியாக சூப்பர் ஸ்டாரின் கேள்வி-பதில்கள் இடம் பெற்றன. போஸ்டர்களில் ரஜினியின் படத்துடன் தலைப்பு செய்தியாக இடம்பெற்றது. கிட்டத்தட்ட அன்றைய நாளில் வெளியான தினசரிகளில் அனைத்திலும் இந்த கேள்வி-பதில் தொகுப்புகள் வெளிவந்தன.
சூப்பர் ஸ்டார் நடத்திய பந்த்
இந்த பேட்டி ஒளிபரப்பான 12/12/1995 மற்றும் 13/12/1995 அன்று மொத்த மக்களும் டி.வி. பெட்டிகள் முன் குழுமிவிட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. கிட்டத்தட்ட தமிழகம் முழுதும் பேட்டி ஒளிப்பரப்பான நேரம் அறிவிக்கபடாத பந்த் போல் காணப்பட்டது. அன்றைய அ.தி.மு.க அரசின் புண்ணியத்தால் பல இடங்களில் பேட்டி ஒளிபரப்பான நேரம் மின் தடை செய்யப்பட்டது. பல தடைகளை மீறி அப்போது மத்தியில் தகவல் ஒலிபரப்பு துறை மந்திரியாக இருந்த, திரு.சங்மா அவர்களின் முழு ஒத்துழைப்போடு பேட்டி ஒளிபரப்பட்டது. ஒரு கட்டத்தில் நிகழ்ச்சியின் இயக்குனர் திரு எஸ்.வி.ரமணனை தாக்க அவர் அலுவலகத்துக்கு ஆடோக்களில் வன்முறை கும்பல்கள் வந்தன. இத்தனை தடைகளையும் தகர்த்து இந்த பேட்டி ஒளிபரப்பானாது.
ஏன்…ஏன்…ஏன்…பல புரியாத புதிர்களுக்கு விடைகள் கிடைத்தன…!!
ரசிகர்களை ஏன் அவர் சந்திப்பதில்லை, ஏன் இமயமலைக்கு அடிக்கடி போகிறார், ஒவ்வொரு படம் முடிந்த பின்னர் வெளிநாட்டு பயணம் ஏன் இப்படி பல கேள்விகளுக்கு மிகவும் அருமையான பதிலை அவர் கூறியிருப்பார்.
தமிழன் தான் தமிழ் நாட்டை ஆளவேண்டும் என்று சிலர் சொல்கிறார்களே? நீ எப்போ தான்யா அரசியலுக்கு வருவே? தவறு செய்பவர்களை தண்டிக்க வேண்டுமா அல்லது மன்னிக்க வேண்டுமா? - இது போன்ற - எந்தக் காலத்துக்கும் பொருந்தக் கூடிய கேள்விகளுக்கு சூப்பர் ஸ்டார் இதில் சூப்பரான பதிலை கூறியிருப்பார்.
மொத்தத்தில் ரஜினியின் இமேஜை பல மடங்கு மக்கள் மத்தியில் உயர்த்திய நிகழ்ச்சி இது.
……………………………………அடுத்த பதிவில் தொடரும்…………………………………………

Director Sridhar’s self-esteem


Veteran director Sridhar (80) who has directed various classics including Superstar’s film “Ilamai Oonjalaadugiradhu” and other hit movies has passed away this morning because of serious illness.
Superstar shared a good rapport with the the veteran during his life days.

Superstar when produced Arunachalam to bail out some senior producers and stalwarts who were suffering at that time, offered the help to Sridhar also. (He was actually in the first list of 8 producerswho were supposed to produce the film). But Sridhar politely rejected the offer stating that he is having a better livelihood and Superstar can offer the help to any other director or producer who are in real need.
He visited Superstar’s residence in wheel chair without informing him on his birthday in the year 1997 and wished him directly.
Our deep condolences to the veteran’s family and we pray the almighty to rest his soul in peace.
…………………………………………………………………………………………………………………
ரஜினியின் உதவியை ஏற்க மறுத்த ஸ்ரீதர்
பிரபல இயக்குனரும் மூத்த கலைஞருமான திரு.ஸ்ரீதர் இன்று காலை சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார்.
சூப்பர் ஸ்டாரின் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்குள்ள இவர் சூப்பர் ஸ்டாரின் அன்பிற்கும் மரியாதைக்கும் பாத்திரமானவர்களுள் ஒருவர்.
மூத்த நலிவுற்ற கலைஞர்களுக்கு உதவும் பொருட்டு அருணாசலம் படத்தை சூப்பர் ஸ்டார் தயாரித்த போது, அதில் எட்டு பங்குதாரர்களுள் ஒருவராக முதலில் ஸ்ரீதருக்கு தான் வாய்ப்பை அளித்தார். ஆனால், ஸ்ரீதர் அதை ஏற்கமருத்துவிட்டார். “நான் ஆண்டவன் புண்ணியத்தில் எந்தவித குறையுமின்றி வசதியாக இருக்கிறேன். என்னை விட தேவைகள் உள்ள யாருக்காவது இந்த வாய்ப்பை அளியுங்கள் ரஜினி” என்று பெருந்தன்மையாக கூறிவிட்டார்.
மேலும் 1997 ஆம் ஆண்டு வந்த சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளின் போது, சக்கர நாற்காலியிலேயே அவரை வீட்டில் (ரஜினியிடம் முன் கூடியே சொல்லாமல்) சென்று சந்தித்து வாழ்த்து கூறினார்.
அன்னாரது குடும்பத்தினருக்கு நம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவர் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.

சச்சின் டெண்டுல்கர் & ரஜினி: சாதனையாளர்களுக்குள் உள்ள ஒற்றுமை


கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் உலக சாதனை படைத்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் தீவிர கிரிக்கெட் ரசிகர். முன்பொருமுறை சச்சின் உலக சாதனை நிகழ்த்திய போது, மேட்ச்சை பார்த்துக் கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் எழுந்து நின்று கை தட்டினார். உடன் மேட்ச் பார்த்கொண்டிருந்த தன் மகளையும் அவ்வாறு செய்யுமாறு கூறினார்.
எனவே, சச்சினுக்கு மரியாதை அளிக்கும் விதமாக அவரது சாதனை பற்றி நம் வலைத்தளத்தில் ஒரு பதிவை போடுமாறு, நண்பர் மனோகரன் கேட்டிருந்தார். இதோ சச்சினை பற்றிய ஒரு செய்தி. சூப்பர் ஸ்டாருக்கும் அதில் தொடர்புண்டு. படியுங்கள். புரியும்.
கீழ்கண்ட இந்த செய்தி இன்றைய தினமலரில் வந்தது. முழுதும் படிக்கவும்.

மாற்றமும் ஏமாற்றமும் - நமக்காகத்தான்!!


இந்த பதிவை படிப்பவர்கள் நான் ரஜினி கட்சி ஆரம்பிக்க வில்லை என்ற கடுப்பில் இதை எழுதியதாகவோ அல்லது விஜயகாந்தின் மீதுள்ள பொறாமையின் காரணமாகவோ இதை எழுதியதாகவோ நினைக்க வேண்டாம்.
இந்திய நாட்டில் தொடங்கப் பட்டிருக்கும் அத்தனை கட்சிகளையும் அலசும் ஒரு விமர்சகனாகவும் அன்றாடம் நாட்டு நடப்புக்களை பார்த்து மாறிக்கொண்டிருக்கும் மனநிலை கொண்ட ஒரு சராசரி வாக்காளனின் எண்ணமாகவும் இதை எடுத்துக்கொள்ளும்படி கேட்டுகொள்கிறேன்.
நம் வலைத்தளத்திற்கு இந்த விஷயத்தில் நேரடியாக தொடர்பு இல்லையென்றாலும், இன்றைய சூழ்நிலையில் இந்த பதிவை அளிப்பது அவசியம் என்று தோன்றியதால்தான் இந்த பதிவு.
இன்று அந்த நடிகரின் கட்சி மாநாடு சென்னையில் நடைபெறுகிறது.
எங்கு பார்த்தாலும் அந்த நடிகர் இரு கையை நீட்டி நம்மை வரவேற்பது போன்ற பேனர்கள், போஸ்டர்கள். ஜெ.வின் வளர்ப்பு மகன் திருமணத்துக்கு பிறகு சென்னை இந்த அளவு இப்போது தான் அமளி துமளி படுகிறது. எங்கு பார்க்கினும் வாழைமரங்கள், தோரணங்கள், டிஜிட்டல் பேனர்கள், அலங்காரங்கள்.
நாளிதழ்களில், வாரப் பத்திரிக்கைகளில் திரும்பிய பக்கமெல்லாம் லட்சக் கணக்கில் செலவு செய்து தரப்பட்டுள்ள விளம்பரங்கள். அந்த எலும்பு துண்டுகளுக்காகவும் வேறு சில எதிர்பார்ப்புகளோடும் அந்த நடிகரை புகழ்ந்து சம்பந்தப்பட்ட பத்திரிக்கைகள் எழுப்பும் கட்டுரைகள், கடிதங்கள்…
நம் ரசிகர்கள் சிலர் இவற்றை பார்த்து தங்களது ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டனர். நான் அவர்களிடம் சொன்னேன்: “எனக்கும் முதலில் உங்களைப் போல் ஆதங்கமாகவும், பிரமிப்பாகவும் தான் இருந்தது. ஆனால் இப்போது சலிப்பும் வெறுப்பும் தான் ஏற்படுகிறது. எனக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும்தான். அந்த நடிகர் தனக்கு இருக்கும் பெயரை தானாகவே அழித்துகொண்டிருக்கிறார். அவருக்கு எதிரி அவர்தான். அதனால் இது குறித்து நாம் ஆதங்கப் படவோ அல்லது பொறாமைப்படவோ எதுவுமில்லை. நடக்கும் கூத்துக்களை வேடிக்கை வேண்டுமானால் பார்க்கலாம்,” என்றேன்.
காரணம் அனைத்தும் ஓவர்டோஸாக போய் மக்களுக்கு இப்போது மிஞ்சுவது எரிச்சல் மட்டுமே. மின் தட்டுப்பட்டால் மக்கள் அவதிப்படும் இந்த சூழ்நிலையில் விளக்கொளியில் இவர்கள் மாநாட்டு திடல் மின்னுவது மக்களை இன்னும் கோபத்தில் தள்ளும். (ஜெனரேட்டர்கள் மூலமாகத்தான் என்றாலும் பசியோடிருப்பவன் முன் அறுசுவை உணவு உண்பதைப் போல் தான் இதுவும்).
மேலும் வெற்று படாடோபங்களை வெளிச்சம் போட்டு காட்டுவதில் கழகங்களையே தூக்கி சாப்பிடுவது போல் இவர்கள் செய்யும் பந்தா வரைமுறை தாண்டி போய்விட்டது.
இந்த படாடோபங்களால் மாற்றம் தேடி சென்ற மக்களுக்கு இப்போது மிஞ்சுவது ஏமாற்றமே. மேலும் குடும்ப அரசியலை கிண்டலடித்துவருகிறார் இவர். ஆனால் இவரது கட்சியின் விளம்பரங்களில் இவரைவிட இவரது மனைவிக்கும், மைத்துனனுக்கும் அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கழங்கள் மட்டுமே இதுவரை செய்து வந்த நாளிதழ்களில் கொடுக்கப்படும் - ‘பில்ட் அப்’ - விளம்பரங்களிலும் இவர்கள் அவர்களை ஓவர்டேக் செய்துவிட்டனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக இவரது ஆணவம் தோய்ந்த பேச்சை யாருமே ரசிக்கவில்லை என்பது கண்கூடு.
இன்னும் என்னால் ஏராளமாக இது போல் கூறமுடியும்.
இவைகள் இன்றி அவரால் நீடிக்க இயலுமா?
சரி..மக்களுக்கு பிடிக்காத இவற்றையெல்லாம் நிறுத்திவிடலாம் என்று அவர்கள் நினைத்து நிறுத்தினால் என்னாகும்? தண்ணீராலேயே உயிர் வாழும் மீன், அந்த தண்ணீரை விட்டு வெளியில் வந்தால் என்னாகுமோ அது தான் அந்த நடிகருக்கும் ஆகும். வெற்று படாடோபங்களால் முன்னுக்கு வந்த அந்த நடிகர், அவரை அடையாளம் காட்ட அவை இல்லையெனில் அதன் மூலமே காணாமல் போய்விடுவார். இத்தகு விளம்பரங்கள் இன்றி அந்த நடிகர் தனது கட்சி இருப்பதை மக்களுக்கு மன்றத்தில் காட்ட மிகவும் போராட வேண்டியிருக்கும்.
இதைத்தான் கண்ணதாசன் பிரபல பாடல் வரிகளில் கூறியிருப்பார், “விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்கை நிரந்தரமாகாது…தம்பி…நிரந்தரமாகாது..” என்று!!
மேலும் அந்த நடிகர் ஒன்றும் ரஜினி அல்லவே. விளம்பரங்கள் இன்றி உட்கார்ந்த இடத்திலேயே மக்களை சுண்டி இழுக்க!!
அனைத்திற்கும் ஒரு காரணம் உண்டு
காரணங்கள் இல்லாமால் காரியங்கள் நடப்பதில்லை. பிரபஞ்சத்தில் அனைத்திற்கும் ஒரு காரணம் உண்டு.
“கண்ணா, இப்படியெல்லாம் தான் ஒரு கட்சியை நடத்த கூடாது… பாத்து பாடம் படிச்சிக்க.. அதுக்குதான் இந்த ஆளை உனக்கு முன்னே நான் இறக்கி விட்டேன். எல்லாம் உன் நன்மைக்கு தான்,” என்று ஆண்டவன் இந்த கூத்துக்களை யாருக்கோ சுட்டிக்காட்டி எச்சரிக்கை விடுக்கிறான் என்று மட்டும் எனக்கு புரிந்தது.
உங்களுக்கு புரிகிறதா?

எல்லாம் அவன் செயல


சூப்பர் ஸ்டாரின் நிலைப்பாடு பற்றி சென்ற வாரம் எனக்கிருந்த மனநிலை வேறு… இப்போது இருக்கும் மனநிலை வேறு… இரண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம்.

“இவ்வளவு காலம் பொறுமையாக இருந்துவிட்டோம். இப்போது அவசரப் படவேண்டாமே…இன்னும் இன்னும் ஒரு சில ஆண்டுகள் பொறுத்துதான் பார்ப்போமே. எப்படியும் நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும். முதலில் தலைவர் எந்திரனை நல்லபடியாக முடித்து சூப்பர் ஹிட்டாக்க வேண்டும்” என்று நினைக்கும் மனநிலைக்கு தள்ளப்பட்டேன்.
இந்த மாற்றம் என்னுள் எப்படி எழுந்தது என்று எனக்கு புதிராகவே இருக்கிறது. நிச்சயமாக இது அவர் வெளியிட்ட அறிக்கையினால் மட்டும் அல்ல. எனக்கு அது நன்றாக புரிகிறது. இருப்பினும், என்னுள் இந்த பொறுமை திடீரென்று தோன்றியது ஆச்சரியமாக உள்ளது.
என் நண்பர்கள் சிலர் கூட இதே கருத்தை என்னுடன் பகிர்ந்துகொண்ட போது என் ஆச்சரியம் இன்னும் அதிகமானது.
அப்போது தான் திரு.சங்கநாதன் rajinifans.com இணையத்தில் சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட ஒரு பதிவில் இடம்பெற்ற சில வரிகள் என் நினைவுக்கு வந்தது.
“இந்த மக்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற உந்துதல் எனக்கும் உண்டு. அதற்குப் பொருத்தமான நாளை அந்த ஆண்டவன் உணர்த்துவார் என்பதை ஆழமாக நம்புகிறேன் நான்.
அதுவரை இந்த மக்களை அவரே பொறுமையாக வைத்திருப்பார் என்பதையும் நம்புகிறேன்.”
- ரஜினி
எத்தனை சத்தியம்…இந்த வார்த்தைகள்!!!!!!
தலைவர் கூறியது போல், இறைவன் நம் மனதை மாற்றிவிட்டார் என்றே தோன்றுகிறது.
சரிதானே?

பெருமழை வரும்; அதுவரை பொறு மனமே!!

சூப்பர் ஸ்டாரின் தற்போதைய அறிக்கைக்கு நம் ரசிகர்கள் மதியில் ஒரு “Mixed Response” தென்படுகிறது.
அவரை நன்கு புரிந்துகொண்டவர்கள் அறிக்கையையும் புரிந்துகொண்டார்கள்.
அவரை புரிந்து கொள்ளாதவர்களுக்கு தான் அறிக்கையும் புரியவில்லை. இது தான் உண்மை.
அறிக்கை தொடர்பாக நான் வெளியிட்ட செய்திகளுக்கு நிறைய அற்புதமான “Comments” வந்தன. அவற்றில் நண்பர் ஈ.ரா. அனுப்பிய இது ஒரு ‘ஸ்டார் கமெண்ட்’ என்று சொல்வேன். அறிக்கையை புரியாமல் சூப்பர் ஸ்டார் மேல் அதிருப்தியில் இருப்பவர்களுக்கு தான் இந்த பதிவே. நண்பர் ஈ.ரா அவர்கள் நான் கேட்டுகொண்டதர்க்கிணங்க, இதை சில திருத்தங்களுடன் தந்திருக்கிறார்.
தலைவரின் அறிக்கையால் சமாதானம் அடையாதவர்கள் இதை ஒரு முறை படியுங்கள்; என்றும் நினைவில் நிற்கும்!!
- சுந்தர்
…………………………………………………………………………………………………………………
இவரைப் போய் தவறாக நினைக்கலாமா?
அன்பு நண்பர்களே,
இது வரைக்கும் தலைவர் என்னிக்குமே ஒரு குறிப்பிட்ட டைம் பிரேம் கொடுத்து ஜகா வாங்கியதில்லை… ஆனால் இந்த முறை “எந்திரன் முடியும் வரை” என்று முதன் முறையாக ஒரு வாய்தா வாங்கி இருக்கிறார்…. இதில் இருந்து அவருக்கும் கண்டிப்பாக காலத்தின் அருமை தெரிவதும், ரசிகர்களின் வேகத்தை மிக நீண்ட நாட்களுக்குத் தள்ளிப் போட முடியாது என்பதை அவர் முழுவதும் உணர்ந்திருப்பதும் நன்கு புலனாகிறது…..
உண்மையிலேயே நாடு நல்லா இருக்கணும், தலைவர் மேல நம்பிக்கை வேணும் அப்படின்னு நினைக்கிறவர்கள் தலைவர் மாதிரியே அவரவர் சக்திக்கு ஏற்ப ஒரு காரியத்தை, சாதிக்கக் கூடிய ஒரு விஷயத்தை டார்கெட்டாக வைத்துக் கொள்ளுங்கள்… தலைவர் சாதிக்கும் நேரத்தில் நீங்களும் ஏதேனும் ஒரு சாதனையை நிகழ்த்தி நெஞ்சை நிமிர்த்திக்க் கொள்ள முயற்சி செய்யுங்களேன்..
குறைந்த பட்சம் நமது நல்ல காரியங்களால் ஒரு பத்து பேராவது நம் மீது நல்ல எண்ணம் கொள்ள உறுதி கொள்வோம்….
“விசிலடிச்சான் குஞ்சுகள், “ஏன்டா இவ்வளவு படிச்சுட்டு இப்படி இருக்க?, சினிமாக்காரன் பின்னாடி சுத்தறியே வெக்கமா இல்ல? ” என்பது போன்ற அறிவு ஜீவிகளின் கேள்விகளுக்கு, நமது நல்ல காரியங்கள் எனும் மௌனக் கேடயத்தை அரணாக்குவோம்…..குத்திக் குத்தி முனை மழுங்கிய வாட்களை அவர்களே கீழே போட்டு விடுவார்கள்..
ஒரு விஷயம்…..
ரஜினி இப்படி அறிக்கை விட்டார் என்று இன்னும் சில வாரங்களுக்கு அவரை பத்திரிகைகளும் டிவிக்களும் நையாண்டி செய்யப் போகின்றன…. போலி ரசிகர்களையும், ரஜினியை உணராத மனிதர்களையும் தூண்டி விட்டு குளிர் காயும் முயற்சிகளும் நடக்கும்… ரஜினி ஏமாற்றி விட்டதாக கதை களை கட்டும். ஆனால் அதே சமயம் ரஜினி எதுவுமே வாய் திறக்காத போது ஏதோ இன்வெஸ்டிகேஷன் புலிகள் போல் மாய்ந்து மாய்ந்து பில்ட் அப் கொடுத்து எழுதி ரசிகர்களை தூண்டிய பத்திரிகைகள் தங்கள் செய்தி அனைத்தும் தவறு என்பதை மறைத்து மொத்த பழியையும் ரஜினி மேல் போடுவார்கள்….
இவர்கள் எப்பொழுதெல்லாம் கவர் ஸ்டோரிகளும் பிறரிடம் கவர் வாங்கின ஸ்டோரிகளும் எழுதுகிறார்களோ அப்போ எல்லாம் ரஜினி ஒரு மறுப்பு அறிக்கை கொடுக்கணும் என்று எதிர்பார்க்கிறார்களா? அடுத்த வாரம் புதன் கிழமை என்ன சாப்பிடுவோம் என்பதே நமக்கு தெரியாத போது என்றோ நடக்கப் போகும் (அல்லது நடக்காமலே கூட) போகும் விஷயத்தை இப்பவே உறுதி செய்ய முடியுமா?
ரஜினி என்றைக்கும் ஒரு வித்தியாசமான மனிதர்….. அவர் யோகி…. புரிந்தவர்களுக்கு அவர் புடம் போட்ட தங்கம்….
உடனடி அரசியல் விரும்பும் ரசிகர்களே,
தயவு செய்து ரஜினியைப் புரிந்து கொள்ளுங்கள்…. தலைவர் என்றைக்குமே நம்மைக் கட்டுப்படுத்தியது இல்லை…. அன்றைக்கு பிஜேபி கூட்டணியை ஆதரித்த போது கூட, இது என் நிலை தான், ரசிகர்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்… ஆனால் ரத்தம் வழிய என் ரசிகர்களை தாக்கிய பாமக இடங்களில் மட்டும் அவர்களை கண்டிப்பாக எதிர்ப்போம் என்றார்….
தான் ஒரு ஸ்திரமான முடிவுக்கு வராத போது, தன் தொண்டர்களுக்கு முழு சுதந்திரத்தையும் தர நினைக்கும் உயர்ந்த மனிதர் அவர்…. தன் சுய லாபங்களுக்காக முட்டாள் முடிவுகளுக்கு, தொண்டர்களைப் பகடைக் காய்களாக ஆக்கும் தலைவர்களையே பார்ப்பவர்களுக்கு ரஜினியின் செயலும், அதிலுள்ள தனி மனித சுதந்திர ஈடுபாடும் புரிய நியாயம் இல்லை….
இவர் ஒரு வித்யாசமான தலைவர்….இவர் விரும்புவது வித்யாசமான அமைப்பு… அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்…
நாம் நம்மைச் சுற்றி ஒரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு கட்சி, ரசிகன், தொண்டன், அமைப்பு எல்லாவற்றிற்கும் நம்மை அறியாமலேயே பிற இத்துப் போனவர்களை உதாரணமாகக் கொள்கிறோம்…. அங்குதான் பிரச்சினையே… ரஜினியுடன் கம்பேரிசன் பண்ணிப் பார்க்க இங்கு யாரும் இல்லை… அதனால் தான் அவர் ஏமாளியாகவும் கோமாளியாகவும் சித்தரிக்கப் படுகிறார். … ஆனால் என்றைக்கும் அவர் அடி மனதில் சத்தியமும் நேர்மையும் விழித்துக்கொண்டே இருக்கின்றன…..
பாலகுமாரன் ஒரு நாவலில் எழுதியிருப்பார்…. ராஜ ராஜ சோழன் பெரிய கோயிலை கட்டும்போது சிற்பிகள் கேட்டார்களாம், ” ஐயா, இந்த கோயில் காலத்தை கடந்து தங்கள் பேரைச் சொல்ல வேண்டுமே, நாங்கள் அதற்காக எங்கள் முழு திறமையையும் அதீத உழைப்பையும் செய்யட்டுமா ?” என்று… அதற்கு அவன், ” அப்படி எல்லாம் ஒன்றும் வேண்டாம்…. இது கடவுளுக்கு செய்யும் வேலை, அந்த வேலையை சத்தியத்துடன் செய்யுங்கள், சத்தியம் மட்டுமே என்றைக்கும் காலத்தைத் தாண்டி நிலைத்து நிற்கும்” என்றானாம்..
அதே போல்தான், ரஜினியின் நிலையும்…நிகழ் காலத்தில் செய்யும் காரியத்தை சத்தியத்துடன் செய்தால் எதிர்காலத்தில் அது நிச்சயம் நிலைத்து நிற்கும். மனதில் வைராக்கியமும், சமநிலையும், சத்தியமும் ஏற்பட்டு விட்டால்தான் அவர் மனதில் எழும் ஓர் உன்னத நிலையை உணர முடியும்.. ஒரு கட்சியோ, பதவியோ அது கண்டிப்பாக இப்பொழுதே வேண்டும் என்று தனக்கோ தன்னை சார்ந்தவர்களுக்கோ அளவு கடந்த ஆசை ஏற்படும்போது, அல்லது, ஏற்படுத்தப் படும்போது, இல்லை, இப்போ இது கூடாது… .. இந்த ஆர்வம் மட்டுப் படவேண்டும்… உணர்ச்சிகளை கடந்த நிலையில் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்த வேண்டும்.. தேடல் இந்த வழியில் அறிபறியில் நடக்கக் கூடாது என்று யோசிக்கும் மனிதன் தான் உண்மையான தலைவனாக, வழிகாட்டியாக வர முடியும் என்பதை அவர் உணர்ந்திருப்பதே அவர் செயல்களில் இருந்து நன்கு தெரிகிறது…தனக்கு வேண்டியதோ அல்லது தான் விரும்பியதோ அது நல்ல விஷயமாகவே இருந்தாலும் கிடைக்கவில்லை என்பதற்காக கொடுக்காதவன் மீது கொண்ட மதிப்பு குறையக் கூடாது…அப்படி குறைந்தால் குறைபாடு நம்மிடம் தான்…. “நீ மிட்டாய் தரலேன்னா உன்கூட டூ என்று சொல்லும் சிறு பிள்ளைத்தனம்தானே ?”ஆகவே, மற்ற நடிகர்களோடும், சராசரி தலைவர்களோடும் ஒப்பிட்டு இது போல் இல்லையே, அவர் போல் இல்லையே என்றெல்லாம் புழுங்கினால் நஷ்டம் நம் மனதுக்கும் உடலுக்கும் தான்….
அவருக்கு தெரியும்… காலம் எப்போது என்று…..
இந்த வரிகளைப் பாருங்கள்…
“ஒரு விதைக்குள்ள அடைபட்ட ஆல மரம் கண்விழிக்கும் அது வரை பொறு மனமே…”
- நாம் இங்கே உள்ளே புதைந்திருக்கும் விதை, இப்போ வந்தால் தான் வளரும், இல்லையேல் வளரவே முடியாது என்று நாமாகவே நினைத்துக் கொண்டு, கையில் ஒரு சிறு வாளியில் தண்ணீரோடு நின்று கொண்டிருக்கிறோம்… ஒன்றை மறந்து விட்டோம்… அந்த விதை தெய்வத்தால் தூவப்பட்டது என்பதை…. அதற்கு பெருமழை தானாகவே கிடைக்கும்…. விருட்சமாய் வளரும்… கவலைப் படாதீர்கள்…. சிறு ஆடுகள் மேய்ந்து களைத்து ஓய்ந்த பின், நிழல் தரும் பெரும்குடையாகவும் அரணாகவும் அந்த விருட்சம் தானே மேலே எழும்பும்…..
அவர் வழி என்றும் தனி வழி தான்……
வாழ்க ரஜினி இன்னும் பல்லாண்டு……..
அன்புடன்,
ஈ. ரா
http://www.aakkal.blogspot.com/

SUPERSTAR'S SUPER POSTERS


Endhiran
Shankar gets it right all the time, stills of his movies grab eyeballs, just like in Sivaji. But, this time the magic doesn’t seem to have worked. The opening still of Endhiran has gone almost unnoticed. Some said that they couldn’t recognize that it was the Superstar, others said it looked more like an English movie. The calculations on the new look seems to have gone a bit off track. The Kuselan debacle and the Hogenakkal bitterness seem to have played a part in the dull response. However, the leaked stills from the shooting spot were able to generate vibes.




Jaggubhai
For a movie that was never made, the stills of Jaggubhai received great response. It came at a time when the announcement for a Superstar movie was being long awaited. The hooded Superstar with a visible stubble, and a machine gun by his side had raised curiosity levels. The KSR factor too was a big plus.







Sivaji
One of the best Rajini stills to have ever come out. The white shirt, blue jean and swank coolers sat perfect on Superstar. The bottom angle cut was just the foil that Rajinikanth’s larger than life image needed, it was an instant hit with everyone. ‘The Boss’ tagline too was one of the catchiest ever and the Superstar-Shankar combo was one of the biggest ever.






Baba
3 years after Padaiyappa, nothing was heard of a Superstar movie. Then Baba was announced. The nonchalant stance, looking back at one’s raised foot, in a way only Rajini can pass off as style or the unforgettable ‘Baba’ mudra, the Baba posters were a rage the moment they were pasted on city walls.














Muthu
After the political excitement at the Baasha victory celebration, a lot was expected in terms of political overtones in Rajinikanth’s next movie and when the announcement and stills of Muthu came along, a wave of euphoria took over all Superstar fans.





































A Superstar movie is always a celebration for his fans. The excitement and euphoria starts as soon as the movie is launched. We take a look back at the Superstar films of the last two decades and see which are the ones that triggered huge reactions right from the word go- the first stills and posters that were special.
Thalapathi
The first time that the poster of a Rajini film looked different, in terms of an experiment with the style and font. Mani Ratnam was always known for his unique ways and his combination with the Superstar was the biggest thing in the industry at that time.

சூப்பர் ஸ்டாருக்கு துணை நிற்போம

வரைமுறை தாண்டினால் தண்டிக்கப்படுவீர்கள் என்று சூப்பர் ஸ்டார் எச்சரித்த பின்பும், சர்ச்சை ஏற்படுத்திய கோவை ரசிகர்கள் திருந்துவதாக தெரியவில்லை.
“ரஜினி சொல்வதை கேட்கமுடியாது. நாங்கள் அவர் பெயரில் கட்சி நடத்தியே தீருவோம். அவர் படத்தையும் பயன்படுத்துவோம். எங்களை யாரும் தடுக்க முடியாது. எங்கள் மீது வழக்கு போட்டால் சந்திக்க தயார்” என்று கூறியிருக்கின்றனர் நடவடிக்கைக்கு ஆளான கோவை ரசிகர்களில் - ஒரு பிரிவினர்.
உண்மையான ரசிகர்களா?
இது தான் உண்மையான ரசிகர்களின் லட்சணமா? தலைவர் கேட்டுக்கொண்ட பிறகும் இவர்கள் இப்படி நடந்துகொள்வதை பார்த்து பெரும்பாலான ரசிகர்கள் வேதனைப்படுகின்றனர். கெட்ட பெயர் உடன் இருப்பவர்களால் தான் என்று ’பாபா’ படத்தில் சூப்பர் ஸ்டார் சொன்னது நினைவுக்கு வருகிறது.
இவர்களையும் இவர்களைப்பற்றிய செய்திகளையும் பொருட்படுத்தவேண்டாம் என்று சூப்பர் ஸ்டார் கேட்டுகொண்டதால் இத்தோடு விடுகிறேன்.
இறுதியாக நாம் கூறுவது இதுதான். தனது அரசியல் நிலைப்பாடு குறித்தும் திட்டங்கள் குறித்தும் ரஜினி இவ்வளவு தெளிவான துணிச்சலான அறிக்கை வெளியிட்ட பின்னரும், சமாதானம் அடையாமல், அவரை மேலும் சங்கடத்துக்கு உள்ளாக்கும் வண்ணம் செயல்படும் இவர்கள் ரசிகர்களே அல்ல.
மறுபடியும் குழப்பமா…
அரசியலுக்கு வருவேன் அல்லது வரமாட்டேன் என்று ஏன் ரஜினி உறுதியாக கூறவில்லை? மறுபடியும் குழப்பமா? என்று சிலர் கேட்கிறார்கள்.
“நான் அரசியலுக்கு வந்தாலும் வருவேன்; வராமலும் போவேன்” என்று சூசகமாக அறிக்கை வெளியிட்ட அடுத்த நாளே - முடிந்து போன குசேலன் விவகாரம் -கிளப்பிவிடப்படுகிறது. அப்படியெனில், நான் நிச்சயம் வருவேன் என்று அறிவித்தால் என்னென்ன இடைஞ்சல்கள் வரும்? இப்போது புரிகிறதா…!!
சூப்பர் ஸ்டாருக்கு துணைநிற்போம்…
மேலும் சில துஷ்ட சக்திகள், ஆங்காங்கு ரசிகர்களின் போர்வையில் ரஜினிக்கு எதிரான ஒரு அவதூறு பிரச்சாரத்தை செய்ய துவங்கியுள்ளனர். உண்மையான ரசிகர்கள் என்றும் சூப்பர் ஸ்டாருக்கு துணை நின்று, அவர் எந்திரனை முழு ஈடுப்பாட்டுடன் நடித்துமுடிக்க நம் ஒத்துழைப்பை தருவோம். கூடவே நமக்கென்று உள்ள கடமைகளை ஒழுங்காக செய்து வருவோம். இவையே நாம் அவருக்கு செய்யும் பேருதவி.

ரயில் பயணங்களில் ரஜினி - ஒரு பொது ஜனத்தின் பார்வை!!

சொந்த அலுவல் காரணமாக இரண்டு நாட்கள் தென்காசி வந்திருக்கிறேன். நேற்றிரவு சென்னை எழும்பூரிலிருந்து பொதிகை எக்ஸ்பிரசில் கிளம்பினேன்.
வண்டியில் என் சீட்டை தேடிக் கண்டுபிடித்து செட்டில் ஆனவுடன், எதிர் சீட்டில் உட்கார்ந்திருந்த நபர், தன் தாயாருக்காக என் பெர்த்தை மாற்றிகொள்ளமுடியுமா என்று கேட்டார். “ஒ தாரளமா, பட் செங்கல்பட்டு தாண்டியவுடன் தரட்டுமா?” என்றேன். சந்தோஷமாக தலையசைத்தார். “உனக்கு ஜன்னல் சீட் இந்த முறையும் ராசியில்லைடா மச்சி” என்று நினைத்துகொண்டேன்.
ரயில் கிளம்பிவிட்டால் செல்லுக்கு சிக்னல் கிடைப்பது சிரமம் என்பதால் சீட்டில் செட்டில் ஆனவுடன் முதல் வேலையாக, பேசவேண்டியவர்களிடம் எல்லாம் செல் பேசினேன். நான் பேசி முடித்தவுடன் எதிர் சீட்டு நபர் ஆர்வமாக, “சார்…நீங்க பத்திரிகைகாரரா?” என்று கேட்டார். (ஹி…ஹி…!!)
நம்மை முழுமையாக அடையாளப்படுத்திக் கொண்டால் இவரிடம் விஷயத்தை வாங்க முடியாது என்பதால் “நான் ஒரு Freelance Photograher. கம்ப்யூட்டர் டிசைனராக பணிபுரிந்து வருகிறேன். நண்பர்கள் அழைத்தால் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு சும்மா ஒரு பார்வையாளனாக செல்வேன் அவ்வளவுதான்,” என்று என் பணியின் ஒரு பகுதியை மட்டும் அறிமுகப்படுத்தி கொண்டேன். அவர் சிவகாசியில் ஒரு பட்டாசு கம்பெனியில் சூப்பர்வைசராக பணிபுரிபவர் என்று தெரிந்துகொண்டேன்.
ரயில் புறப்பட ஆரம்பிக்க, எங்கள் பேச்சு வளர்ந்தது. மின்வெட்டு முதல் அமெரிக்க வங்கிகள் திவால் வரை பல விஷயங்கள் பேசினோம். இறுதியாக சாமர்த்தியமாக தலைவரின் அறிக்கை குறித்து அவரிடம் பேச்சை வரவழைத்தேன்.
“இன்னிக்கி பேப்பர் பார்த்தீங்களா? நான் பார்க்க முடியல. என்ன சொல்றார் ரஜினி சார்? அரசியலுக்கு வர்ராரா இல்லியாமா?” என்றேன் அப்பாவியாக. (அவரருகில் தந்தி பேப்பர் இருந்தது!)
“கட்டயப்படுதினா எல்லாம் அரசியலுக்கு வரமுடியாது. நானா இஷ்டப்பட்டு வருவேன்னு சொல்லியிருக்கிறார்” என்றார் பதிலுக்கு.
“ரசிகர்களை ஏதோ சொல்லிட்டார்னு என் ஆபீஸ்ல சொன்னாங்க…?” - நான்
“ஒண்ணுமில்லை ஓவரா ஆடிக்கிட்டிருந்த ரசிகர்கள் வாலை நறுக்கியிருக்கிறார் அவரு,” என்றார்.
“ஏன் என்னாச்சு?”
“ஏதோ ஒரு ஊர்ல ரசிகருங்க அவர் பேர்ல கட்சியெல்லாம் ஆரம்பிச்சாங்க போல…”
“ஏன் சார் அவங்க செஞ்சதுல என்ன தப்பு? இவரா வரமாட்டாரு..இவங்களாவது வரட்டுமே?” இது நான்.
“நீங்க வேற. நாளைக்கு விளையாட்ட இவங்க எலெக்ஷன்ல நிக்கபோயி தோத்துட்டா நாளைக்கு ரஜினி பேறு இல்ல கேட்டுபோயிடும்?”
“அதுக்குத் தான் அவரை கூபிடுறாங்க…”
“அதுக்கு இது சரியான நேரம் இல்லை சார். இவனுங்க பேச்சை கேட்டு அவர் இப்போ கட்சியை ஆரம்பிச்சா அப்புறம் ஆத்துல ஒரு கல் சேத்துல ஒரு கால்ல்னு ஆயிடும். எப்போ வரணும்னு அவருக்கு தெரியும் சார். சப்போஸ் தோத்துபோன இன்னிக்கி அவரை இப்படி கூப்பிடுறவன் எல்லாம் நாளைக்கு, அவர் மேல பழிய போட்டுட்டு எஸ்கேப் ஆயிடுவான்”
“நீங்க தீவிர ரஜினி ரசிகர் போலருக்கே?”
“அப்படி இல்லை. அவர் மேல எனக்கு நல்ல மரியாதை உண்டு.” (அட்ரா சக்கை…அட்ரா சக்கை)
“எனக்கு தெரிஞ்சு இந்த பிரச்னைல நிறைய ரசிகர்கள் அவர் மேல அதிருப்தியா இருக்குற மாதிரி தெரியுது?”
“என்ன தான் அதிருப்தியா இருந்தாலும், அவர் மேல இருக்குற ஈர்ப்பு யாருக்கும் குறையாது. சும்மா பேச்சு அது…” (அப்படிப் போடு!)
“சரி வந்த அவரால ஜெயிக்க முடியுமா?”
“அதனால தான் சார் அவர் இப்போ வரலை. நாம வந்தா கண்டிப்பா ஜெயிச்சிடனும்னு அவர் நினைக்கிறார். அதனால்தான் சரியான நேரத்துக்கு வெயிட் பண்றார்.”
“எனக்கென்னவோ அவர் வரவே மாட்டாருன்னு தான் தோணுது…ரசிகர்களும் அவரை நம்ப தாயாராயில்லை” என்றேன் பதிலுக்கு.
“இல்லை சார். அவர் நிச்சயம் வருவார். பாருங்க. அப்போ இப்படி பேசுறவங்க தான் முதல்ல க்யூ கட்டி நிப்பானுங்க சேர்றதுக்கு.”
“குசேலன் படம் பார்த்தீங்களா?” என்று கடைசியாக கேட்டேன்.
“படம் எனக்கு பிடிக்கல சார். ரஜினியை வீணடிச்சிட்டாங்க.” என்றார் ஆதங்கத்துடன்.
சரி ரஜினி மீது அவர் எந்த குற்றச்சாட்டையும் வைக்கவில்லையா என்று தானே கேட்கிறீர்கள்?
அடிக்கடி அவர் பெங்களூருக்கு செல்வதை இவர் ரசிக்கவில்லை என்று புரிந்துகொண்டேன். மேலும் ஹொகேனக்கல் “வருத்தம்” பிரச்னையில் ரஜினி உறுதியாக இருந்திருக்க வேண்டும் என்றும் அந்த வகையில் தனக்கு ஏமாற்றமே என்றும் கூறினார்.
அதற்குள் ரயில் செங்கல்பட்டை தாண்ட, இன்னும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், அவரது திருமதி என்னை முறைத்துகொண்டிருப்பது புரிந்தது.
குட் நைட் கூறி ஏன் பெர்த்தில் ஏறி படுத்தேன். காலை, சிவகாசியில் இறங்குவதற்கு முன், என்னிடம் மகிழ்ச்சியாக விடைபெற்றார். அவரிடம் நம்பர் வாங்கிக்கொண்டு என் நம்பரை கொடுத்தேன்.
இவரிடம் பேசிய பலவற்றில் ரஜினி சம்பந்தமாக பேசியதையே இங்கு தந்திருக்கிறேன். ரஜினி மீது விருப்போ அல்லது வெறுப்போ அற்ற ஒரு சராசரி குடிமகனின் நிலைப்பாடு இது.
கொஞ்சம் திருப்தியாக இருக்கிறது இல்லையா?
நடுநிலையாலர்களுள் கிட்டத்தட்ட பெரும்பாலானவர்களின் கருத்து இப்படி தான் இருக்கும். அது மட்டும் உண்மை.

Soundarya Rajinikanth casts Big B


Big B of Bollywood has a big admiration always for our Super Star Rajinikanth. He once called Rajinikanth as the emperor of Indian Cinema and he heaped his praise for the simplicity and humility of the actor. Rajinikanth and Amitabh share a special friendship since the days they acted together in some Hindi Movies.
Now the recent reports say that Rajinikanth's daughter Soundarya produces a movie for her Ocher Studios for which Big B is being approached to play a pivotal role in that film, which would be directed by Gautham Vasudev Menon.
Adlabs in association with Ocher Studios are the makers of Sultan-The warrior, Rajnikant's animated mega movie.
Buzzes add that Lingusamy from Kollywood, Mohanlal, Shaji Kailash, Jayaraj from Malluwood, Mahesh Babu and Puri Jagannath from Tollywood have also signed on the dotted lines to do films for Ocher Studios. Venkat Prabhu's next film titled as 'Goa' would also be produced by this same production house.

ரஜினியை தேடிப் போய் விருது தருவதா?-அமீர்

தங்கள் வியாபாரத்துக்காக ரஜினியைத் தேடிப்போய் விருது தரும் போக்கை சிலர் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார் அமீர்.திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் தமிழில் முதன் முறையாக 2007ம் ஆண்டுக்கான திரைப்பட விமர்சகர் விருது வழங்கும் விழா நடந்தது.போர் பிரேம்ஸ் அரங்கில் நடந்த இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் கே.பாலச்சந்தர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.சிறந்த இயக்குநருக்கான விருதினை பருத்திவீரன் பட யக்குநர் அமீருக்கு வழங்கினார். விருதினைப் பெற்றுக் கொண்டு ஏற்புரையாற்றிய அமீர் கூறியதாவது:பொதுவாக விழாக்களில் சிறந்த நடிகருக்கான விருதினைத்தான் கடைசியில் வழங்குகிறார்கள். அப்படி வழங்குவதுதான் கெளரவம் என்பதால் கடைசியில் வழங்குகிறார்கள்.இது மிகவும் தவறு. ஒரு திரைப்படத்தில் நடிகனின் பங்களிப்பு மிகவும் குறைவு. இயக்குனர்கள் சொல்வதைச் செய்பவன்தான் நடிகன். எனவே இயக்குனர்களுக்குத்தான் விருது வழங்கும் விழாக்களில் முதலிடம் அளிக்க வேண்டும்.அடுத்தது, சிறந்த நடிகர் என இவர்கள் எந்த அடிப்படையில் ரஜினிக்கும், விஜய்க்கும் தருகிறார்கள்?. அவர்கள் விருதுக்குரிய கதைகளைத் தேர்வு செய்வதே இல்லையே... அவர்களுக்கு எப்படி இந்த விருதுகளை வழங்கலாம்?.ரஜினியை சிறந்த நடிகர் என அறிவித்து, அவர் இருக்கும் இடத்துக்கே போய் அந்த விருதைக் கொடுப்பது மிகப் பெரிய கேவலம். இது வியாபாரத்தனமல்லாது வேறல்ல.ரஜினியை நான் மதிப்பவன் என்பது வேறு விஷயம். ஆனால் அவர் விருதுக்குரிய கதைகளில் நடிக்காத நிலையில், அவரைத் தேடிப் போய் விருது கொடுப்பது எங்களைப் போன்றவர்களை அவமானப்படுத்தும் செயல் என்றார் அமீர்.ரஜினி, கமல் வளர்ந்ததற்கு நான் பொறுப்பல்ல!:விருதுகளை வழங்கிப் பேசிய பாலச்சந்தர் கூறியதாவது:அமீர் சொன்ன கருத்துக்களை நூறு சதவிகிதம் அப்படியே ஏற்கிறேன். ரஜினியும் கமலும் இருந்தால்தான் என்னால் படமெடுக்க முடியும் என்ற நிலை இல்லை. நான் அவர்களை வைத்துப் படமெடுத்தபோது அவர்கள் சாதாரண நடிகர்களே.இன்று அவர்கள் வளர்ந்து விட்டார்கள். அது அவர்கள் திறமை. அதற்கு நானா பொறுப்பு? இன்றைக்கு என் படத்தில் ஏதோ.. போனால் போகட்டும் என்று உதவும் நோக்கில் நடித்துக் கொடுக்கிறார் ரஜினி. மற்றபடி அமீர் சொல்வதை நான் மனப்பூர்வமாக நூறு சதவிகிதம் ஏற்கிறேன்.இந்த விருது 25 ஆண்டுகளுக்கு முன் தரப்பட்டிருந்தால் அதை நானும் வாங்கியிருப்பேன். அத்தனை சிறப்பு திரைப்பட விமர்சகர் விருது எனும் தலைப்புக்கு உண்டு. தாமதமாக என்றாலும் இப்போதாவது வழங்கப்படுவதில் எனக்கு மகிழ்ச்சி, என்றார் பாலச்சந்தர்.சிறந்த படமாக பருத்தி வீரனுக்கு விருது வழங்கப்பட்டது. சிறந்த திரைக் கதாசிரியர் வெங்கட் பிரபு (சென்னை - 28), சிறந்த இசையமைப்பாளர் (யுவன் சங்கர் ராஜா) சிறந்த கதாசிரியர் ராம் (கற்றது தமிழ்), சிறந்த வசனகர்த்தா விஜி (மொழி), சிறந்த ஒளிப்பதிவாளர் கதிர் (கற்றது தமிழ்), சிறந்த பாடலாசிரியர் முத்துக்குமார் ஆகியோருக்கு திரைப்பட இயக்குனர் பாலசந்தர் விருதுகளை வழங்கினார்.பத்திரிகையாளர் சங்கத்துக்கு நிதியுதவி செய்த ஜே.கே.ரித்தீசுக்கு விழாவில் சங்கத்தின் சார்பில் பாலச்சந்தர், அமீர் ஆகியோர் மரியாதை செய்தனர்.சத்யராஜ் சிறந்த நடிகராகவும் (ஒன்பது ரூபாய் நோட்டு), ப்ரியாமணி (பருத்தி வீரன்) சிறந்த நடிகையாகவும் தேர்ந்தெடுக்ப்பட்டனர்.முன்னதாக, திரைப்பட பத்திரிகையாளர் சங்க நிறுவனத் தலைவர் ஐயப்ப பிரசாத் வரவேற்றுப் பேசினார். சங்கத் தலைவர் அ.தமிழன்பன் தலைமையுரையாற்றினார். செயலாளர் ரவிஷங்கர் நன்றி கூறினார்.துணைத் தலைவர் வி.கே.சுந்தர், இணைச் செயலாளர்கள் ராதாராஜ், ஜெ. பிஸ்மி, பொருளாளர் மேஜர்தாசன் ஆகியோர் விருந்தினர்களை கெளரவித்தனர். வண்ணத்திரை பொறுப்பாசிரியர் நெல்லை பாரதி நிகழ்ச்சியை மிகச் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.

அறிக்கை குறித்து மீடியாவின் பார்வை - ஒரு எச்சரிக்கை!!


ரஜினியின் அறிக்கையை ஒவ்வொரு பத்திரிக்கையும் அவரவர்களுக்கு ஏற்ற வகையில் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டு வருகின்றனர்.

அவர்களின் நோக்கம் :
ரசிகர்ளுக்கு ரஜினி மீது வெறுப்பு வரச் செய்யவேண்டும். அவரைத் தனிமைப் படுத்தவேண்டும். அந்த நடிகருக்கு இதன் மூலம் ஏதாவது ஆதாயம் கிடைக்கவேண்டும். ரஜினியின் அரசியல் குறித்து பொதுமக்களுக்கு உச்சகட்ட சலிப்பை வரவழைக்கவேண்டும்.
உண்மை ரசிகர்கள் அவர்களின் சூழ்ச்சிக்கு பலியாகிவிடக் கூடாது. தலைவரை அவரது அறிக்கையை முழுமையாக படிக்கவும்.(சன் டி.வி. செய்தி பார்த்து விரக்தியடைந்ததாக அருள் என்னும் நண்பர் முந்தைய பதிவில் தனது கமெண்ட்டில் கூறியிருப்பதை கவனிக்கவும். முழு அறிக்கையும் படித்த பின்பு அவர் சாந்தமடைந்திருப்பதாக கூறியிருக்கிறார். பெரும்பாலான ரசிகர்கள் இப்படித்தான்.)
டி.வி.சேனல்கள் செய்த அநியாயம்
சன் -டி.வி. தனது செய்தியில், ரசிகர்கள் எங்கிருந்தாலும் நான் அரசியலுக்கு வருகையில் திரும்பவும் ஏற்றுக் கொள்வேன் என்று கூறியதை இருட்டடிப்பு செய்துவிட்டனர். ரசிகர்களுக்கு ரஜினி எச்சரிக்கை, ரசிகர்கள் மீது வழக்கு என்று திரும்ப திரும்ப செய்தி வெளியிட்டு தற்காலிக சந்தோஷமடைந்தனர். அவர்கள் நோக்கம் ரஜினியை வெறுத்து அவர் ரசிகர்கள் அந்த நடிகர் பின்னால் வரமாட்டார்களா என்ற நப்பாசைதான். (அந்த நடிகரை முதல்வராக்கியே தீருவது என்று சன் குழுமம் கங்கணம் கட்டிக்கொண்டு அலைவது தெரிந்ததே!!)
ஜெயா. டி.வி. - ரஜினி இப்போதைக்கு நான் அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னதை நான் அரசியலுக்கே வரமாட்டேன் என்று சொன்னதாக ஹைலைட் செய்தது. ரஜினியின் அறிக்கை முக்கிய செய்தியாக அதன் செய்தியில் இடம்பெற்றது. ரஜினி மீது தவறான எண்ணம் ஏற்படும் வகையில் அந்த செய்தி கூறப்பட்டது. (நீங்க திருந்தவே மாட்டீங்க….)
இதே போல் ஒவ்வொரு சேனலும் ரசிகர்களை ரஜினிக்கு எதிராக தூண்டிவிடுவதிலேயே தங்கள் செய்தி நேரத்ததை செலவிட்டன.
பத்திரிக்கைகள் கேட்கவேண்டாம். தினத்தந்தியும் ஹிந்துவையும் (தினமலர் உண்மையில் ஆச்சர்யம்) மற்றும் ஒரு சில பத்திரிக்கைகளையும் தவிர்த்து பார்த்தால் அனைவரும் ரஜினிக்கு எதிராக நம்மை திசைத் திருப்ப முயல்வதும், அவர் அரசியலுக்கே எப்பவும் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டது போலவும் பிரச்சாரம் செய்வது கண்கூடாக தெரிகிறது. சில வெப்சைட்டுகளும் இதில் அடக்கம். ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ செய்தி மிகப் பெரிய அதிர்ச்சி.
ஆடுங்கள்…எல்லாரும் ஆடுங்கள்…இன்னும் சில காலம் தானே…
குறிப்பு: நேற்று சற்று கோபத்துடன் இருந்த ரசிகர்கள் இன்று கொஞ்சம் கூலாகியிருப்பது தெரிகிறது. அறிக்கையை இன்னொரு முறை படியுங்கள். உங்கள் கோபம் போயே போய்விடும்.
Related Posts Plugin for WordPress, Blogger...