ஷங்கருக்கு மறுத்த ஐஸ்வர்யாராய்!
ஐஸ்வர்யா ராய்க்காக எந்திரன் ஷூட்டிங்கை வேக வேகமாக முடித்தாராம் இயக்குநர் ஷங்கர்.
அமெரிக்கா, பிரேசில் மற்றும் பெரு நாடுகளில் கடந்த ஒரு மாத காலமாக நடந்தது ரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் – தி ரோபோ ஷூட்டிங்.
கடந்த 27-ம் தேதி ரஜினி - ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்த காட்சிகள் அனைத்தையும் படமாக்கி முடித்துவிட்டார் ஷங்கர். ஆனால் ஐஸ்வர்யா ராய் பங்கேற்கும் தனிக் காட்சிகள் சில படமாக்கப்பட வேண்டி இருந்ததாம்.
இதற்காக கூடுதலாக சில தினங்கள் அமெரிக்காவில் தங்கி படப்பிடிப்பை முடித்துக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டாராம் ஐஸ்வர்யாவை இயக்குநர் ஷங்கர்.
ஆனால் அதற்கு மறுத்துவிட்ட ஐஸ், தனது கணவர் அபிஷேக் பச்சன் நடிக்கும் துரோணா திரைப்படம் அக்டோபர் 1-ம் தேதி வெளியாக இருப்பதால் உடனே மும்பைக்கு திரும்ப வேண்டும் என உறுதியாகச் சொல்ல, வேறு வழியின்றி அவர் தொடர்பான காட்சிகளை இரண்டே நாளில் முடித்துவிட்டு, நேற்று மும்பைக்கு அனுப்பி வைத்து விட்டாராம் ஷங்கர்.
இந்தப் படத்துக்காக ஐஸ்வர்யா ராய்க்கு 6 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. எந்திரனுக்கு 200 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment