பலத்த எதிர்ப்பார்ப்புகிடையே ‘எந்திரன்’ படப்பிடிப்பை முடித்துக்கொண்டு நேற்று நள்ளிரவு சூப்பர் ஸ்டார் சென்னை திரும்பினார்.
வந்தவர் தன்னை பற்றி பத்திரிக்கைகளில் சமீபத்தில் வந்த செய்திகள் அனைத்தையும் படித்தார்.
ஜூவி, ரிப்போர்டர், நாளிதழ்கள், மற்றும் வெப் சைட்டுகள் - அனைத்திலும் வெளியான அவர் சம்பந்தப்பட்ட முக்கிய செய்திகள் எல்லாம் அவர் பார்வைக்கு வைக்கப்பட்டதாக தகவல். அனைத்தையும் பொறுமையாக படித்தவர் - எந்த ரிஆக்க்ஷனும் காட்டியதாக தகவல் இல்லை.
ரசிகர்களின் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் குறித்தும் அவரது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. (மேற்கண்ட போஸ்டர் எங்கு ஒட்டப்பட்டுள்ளது என்று தெரிகிறதா?)
முதல் பணியாக நாளை ராகவேந்திர மண்டபத்தில் அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சத்யநாராயனனுடன் ஆலோசனை நடத்துகிறார். ரசிகர்களிடம் நிலவி வரும் எதிர்ப்பார்ப்பு குறித்து சத்தி எடுத்து கூறுவார் என்று தெரிகிறது.
ரசிகர்கள் சந்திப்பு குறித்து அநேகமாக அதிகாரப்பூர்வமாகவே பத்திரிக்கைகளுக்கு செய்தி வழங்கப்படலாம்.
இதனிடையே சூப்பர் ஸ்டாரை உசுப்பேத்தும் வகையில் தலைநகரில் அப்பட்டமான சதி வேலைகள் நடைபெற்று வருகின்றன. அவரது பொறுமை ரொம்பவே சோதிக்கப்படுகிறது (நம்முடையதும்தான்). இதுவரை மறைமுகமாக குழி தோண்டிக்கொண்டிருந்தவர்கள் நேரடியாகவே - மிகவும் தைரியத்துடன் - அதை செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
மேலும் செய்திகள் விரைவில்…
No comments:
Post a Comment