“கொஞ்சம் பொறுங்கள்!!” - ரசிகர்களை சமாதானப்படுத்தும் தளபதி சத்தி


சூப்பர் ஸ்டார் வந்து மூன்று நாட்களாகிவிட்டது. தளபதி சத்தியுடன் நேற்று சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார் என்று கூறப்படுகிறது. ஆனால் அதை உறுதி செய்யமுடியவில்லை.
ஆலோசனையில் ரஜினி?
தற்போது, தனது நலம் விரும்பிகளுடன் சூப்பர் ஸ்டார் ஆலோசனை நடத்திகொண்டிருப்பதாகவும், விரைவில் ரசிகர் சந்திப்பு தேதி பற்றி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. (சூப்பர் ஸ்டாரின் ஆலோசகர் வட்டத்தில் சௌந்தர்யா ரஜினியும் தற்போது சேர்ந்துள்ளதாகவும், தந்தைக்கு சில முக்கிய ஆலோசனைகளை அவர் வழங்கியுள்ளதாகவும் வேறு சில தகவல்கள் கூறுகின்றன.)

நோ ரெஸ்பான்ஸ்! விரக்தியில் பத்திரிகையாளர்கள்!!!
இந்த நொடிவரை, சூப்பர் ஸ்டார் தரப்பிலிருந்து ஒரு பாசிடிவ்வான தகவல் கூட இல்லை. ஏன், அறிகுறியே கூட இல்லை எனலாம்.
மண்டபத்துக்கு போன் செய்யும் பத்திரிக்கையாளர்களுக்கோ அல்லது செய்தி சேகரிக்க அங்கு செல்லும் பத்திரிக்கையாளர்களுக்கோ பதில் சொல்ல கூட ஆள் இல்லை. தமிழகத்தின் மிகப்பெரிய நடிகர். சூப்பர் ஸ்டார். அவரது தற்போதைய மூவ்வை தெரிந்துகொள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் உட்பட பலர் காத்திருக்கும் இன்றைய தேதியில் நிலவும் சூழ்நிலை இது.
தலைமை மன்றத்திடமோ அல்லது ரஜினிக்கு நெருக்கமானவர்களிடமோ செய்தி சேகரிக்க திண்டாடும் பத்திரிகையாளர்கள், ரசிகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு விசாரித்துவருகின்றனர். யாராலும் எதையும் உறுதியாக கூறமுடியவில்லை. (விரக்தியில் உள்ள ரசிகர்கள் எதையாவது கூறப்போக, செய்தி கிடைக்காத ஆதங்கத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் தங்கள் இஷ்டத்திற்கு அதை திரித்து எழுதும் அபாயம் இருக்கிறது.) தேவையற்ற எதிர்மறை செய்திகள் வருவது இப்படித்தான். இதனால் தான், நான் முன்பே கூறினேன், சூப்பர் ஸ்டாருக்கு ஒரு செய்தி தொடர்பாளர் மற்றும் பி.ஆர்.ஒ கண்டிப்பாக தேவை என்று.
சரி, இப்படிப்பட்ட பதிவுகள் மூலமாகவாவது செய்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு சென்று சேராதா என்று தான் இந்த பதிவையே நான் அளிக்கிறேன்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...