பொதுமக்களிடம் ரஜினியின் இமேஜை வெகுவாக உயர்த்தியுள்ள அறிக்கை!!


கை மீறி சென்ற நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது சூப்பர் ஸ்டாரின் அறிக்கை. இது ஒரு வகை அறுவை சிகிச்சை தான். தேவையற்ற குழப்பங்களுக்கும், கோரிக்கைகள் என்ற பெயரில் நிகழ்ந்த அத்துமீறல்களுக்கும் சூப்பர் ஸ்டார் முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

நாம் சொன்னது என்ன?
சூப்பர் ஸ்டார் அறிக்கை வெளியிட்டவுடன் - அதற்க்கு ஏற்ற வகையில் என்னை சமதானப்படுத்திகொண்டு நான் பேசுகிறேன். சமாளிக்கிறேன் - என்று என் மீது விமர்சனம் வைக்கிறார்கள்.
நிச்சயமாக அல்ல. எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை ஏற்படும் வரையில் அவ்வளவு எளிதில் நான் எதிலும் சமாதானம் அடைவது இல்லை.
இப்பவும் சொல்கிறேன். சூப்பர் ஸ்டார் நேரடியாக் தடாலென்று கட்சி ஆரம்பித்துவிடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் எதிர்ப் பார்த்தது எல்லாம் - 2011 க்குள் - ஆட்சியை பிடிப்பதற்கான ஆயத்தப் பணிகளை இப்போது துவக்குவார் என்று தான். அதாவது மன்றஒருங்கிணைப்பு அல்லது ஒரு சேவை அமைப்பு துவக்குவார் என்று தான் நான் கருதினேன். ஒரு சில ரசிகர்களின் அத்துமீறல்களால் அந்த முயற்சிக்கு ஒரு தற்காலிக முட்டுக்கட்டை எழுந்துள்ளது. (கவனிக்க - தற்காலிக)
இந்த முறை ஏதாவது நடக்கும் என்று நான் நம்பியது - இந்த ஆயத்த பணிகள் குறித்து தான். (மன்ற ஒருகிணைப்பு மற்றும் சீரமைப்பு அல்லது சேவை அமைப்பு)

ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புக்களை முழுதும் உணர்ந்துள்ள ரஜினி
தனது அரசியல் பிரவேசம் குறித்து ரசிகர்களுக்குள் எழுந்திருக்கும் எதிர்ப்பார்ப்புக்கள் சூப்பர் ஸ்டாருக்கு முழுதும் புரிந்துள்ளது - என்று - அவரது அறிக்கையை பார்த்தாலே சிறு குழந்தைக்குகூட புரியும்.
அரசியல் பிரவேசம் இப்போதைக்கு இல்லை - அவ்வளவு தான். (எந்திரனில் முழு ஈடுபாட்டுடன் நடித்துகொண்டிருப்பதால்.)
இப்படி ஒரு முடிவை எடுத்ததற்கான காரணம்?
மேலும் இப்படி ஒரு முடிவை அவர் எடுத்ததற்கு காரணம் உண்டு: “நல்ல தலைவன்யா இவன். இவன் என்ன செய்யனும்னு அவன் ரசிகர்கள் அவனுக்கு கத்துகொடுக்குறாங்க” - என்ற ஒரு விமர்சனம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது. சரிதானே?
மிரட்டல்களுக்கு பணியும் ஆள் நான் இல்லை
எனவே நிர்பந்தத்திற்கு மிரட்டல்களுக்கு பணியும் ஆள் நான் இல்லை என்று அவர் மக்களிடம் அவர் நிரூபிக்கவேண்டும். (ஒரு தலைவனுக்குரிய முக்கிய குணம் ஆயிற்றே அது!!) எனவே தான் இந்த கண்டிப்பான அறிக்கை. யார் என்ன சொன்னாலும் சாட்டையை நான் தான் வைத்திருக்கிறேன் என்று அவர் அனைவருக்கும் உணர்த்திவிட்டார்.
ரசிகர்களை சந்தித்த பிறகு அவர் இதை சொல்லியிருக்கலாமே என்று சிலர் கேட்கிறார்கள். அப்படி சொன்னால் - ரஜினிக்கு சுயமாக எதுவும் சிந்திக்க தெரியாது என்று மக்கள் நினைக்கலாம். ரசிகர்களும் நினைக்கலாம். மேலும் இந்த சந்திப்பிற்கு முன்பு - இந்த இரண்டு மூன்று நாட்களில் என்னென்ன செய்திகள் வருமோ? முதலில் அதற்கொரு முற்றுப் புள்ளி வைப்போம் என்று அவர் நினைத்திருக்கலாம்.)
மேலும் அவர் நிச்சயம் ரசிகர்களை சந்திப்பார். அவர்களது கோரிக்கைகளை கேட்பார். அதில் மாற்றமிருக்காது. ஆனால் உடனடியாக எதுவும் செய்யமாட்டார். சிறிது அவகாசத்திற்கு பிறகு ஏதாவது செய்வார் - என்று நான் நினைக்கிறேன்.

பொதுமக்கள் பாராட்டும் அறிக்கை
பொது மக்கள் இது குறித்து அலட்டிக்கொள்ளவேயில்லை. பொருட்படுத்தவும் இல்லை. அவர்களுக்கு மின்வெட்டு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட ஆயிரம் ஆயிரம் பிரச்னைகள். அவருக்கும் ரசிகர்களுக்கும் உள்ள தனிப்பட்ட விஷயம் இது. நமக்கு இதனால் ஏதும் பயன் உண்டா? என்று அவர்கள் நினைக்கின்றனர்.
ஆனால், நாட்டு நடப்பை தெரிந்துகொள்ளும் ஆர்வமுள்ள பொதுமக்களில் ஒரு சிலரிடம் பேச்சு கொடுத்ததில் அவரது அறிக்கை - அவர்களிடம் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது தெரிகிறது. உண்மையாகவே. நான் ஒரு மினி சர்வேயே இன்று காலை எடுத்துவிட்டேன். (அதானால் தான் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்). ரஜினியின் இமேஜை இந்த அறிக்கை பலமடங்கு உயர்த்தியிருக்கிறது என்று மட்டும் தெரிகிறது. அவரது தைரியத்திற்காக. யார்க்கும் கட்டுப்படும் ஆள் நான் இல்லை என்று உணர்த்தியதற்காக.
அதிருப்தி ரசிகர்கள் - கவலை வேண்டாம் ப்ளீஸ்
ரசிகர்களில் ஒரு சாரார் கடும் அதிருப்தியிலும் விரக்தியிலும் இருப்பது உண்மை. (ஒரு சில நல்ல ரசிகர்கள் backfire ஆனது மிகவும் வருத்தம்.) அவர்கள் வருத்தப்படும் அளவிற்கோ வெறுத்துபோகும் அளவிற்கோ எதுவும் நடக்கவில்லை. எனினும் அவர்களை எப்படி சமதானப்படுத்தேவேண்டும் என்று ரஜினிக்கு தெரியும். கண்டிப்பாக ஏதாவது அவர் இதற்க்கு செய்வார் என்று எதிர்ப் பார்க்கலாம்.
இந்த அரசியல் பிரவேசம் குறித்து எழுந்த செய்திகள், ரசிர்கர் மன்ற அத்துமீறல்கள் - ஆகியவற்றால் பொதுமக்கள் மத்தியில் சரிந்துவிட்ட அவரது இமேஜை முதலில் தூக்கி நிறுத்துவது அவசியம் என்று அவர் கருதியதால் அதற்கான நடவடிக்கை தான் இந்த சூடான அறிக்கை.
ரசிகர்களை பிறகு கூட கவனித்துக்கொள்ளலாம். என்ன, கொஞ்சம் கோபப்படுவார்கள். இரண்டு நாட்கள் நம்மை திட்டிகொண்டிருப்பார்கள். மற்றபடி அவர்கள் எங்கும் போய்விட மாட்டார்கள். அவர்களை சமாதானப்படுத்துவது எளிது. அப்படியே போனாலும் அதுவும் நல்லதுக்குத்தான். தேவையில்லதாவங்களை, பில்டர் பண்ண மாதிர் ஆச்சு. என்று அவர் நினைப்பதாக எனக்கு தோன்றுகிறது.
அரசியல் நோக்கி வந்திருக்கும் ரஜினி
அறிக்கையை கூர்ந்து படிப்பவர்கள் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளவேண்டும். அவர் அரசியலிலிருந்து விலகி செல்லவில்லை. அதை நோக்கி உண்மையில் பல அடிகள் வந்திருக்கிறார்.

இதில் கவலைப்பட என்ன இருக்கு?

சூப்பர் ஸ்டாரின் அறிக்கையால் விரக்தியின் உச்சிக்கு தள்ளப்பட்ட நண்பர் ஒருவர் எனக்கு மெயில் அனுப்பியிருந்தார்.
நல்லது நடக்கும் என்று ஆரூடம் சொன்ன என் போன்றவர்களை அதில் பரிகாசம் செய்திருந்தார்.
யாரும் பரிகாசம் செய்யும் அளவிற்கோ பரிதாபப்படும் அளவிற்கோ அந்த அறிக்கையில் எதுவும் இல்லை. அப்படி அம்போவென்று அவர் நம்மை கைவிட்டுவிடவுமில்லை.
“மத்தவங்க வர்றாங்க என்பதால நான் வரமுடியாது. நான் எப்போ நினைக்கிறேனோ அப்போ தான் வருவேன். அப்போ யாராலயும் தடுக்க முடியாது. அதாவது யாருக்காகவும் நான் பயப்படமாட்டேன். இப்போ வேணாம்னு நினைக்கிறேன் அவ்வளவுதான்.
இப்போ நான் எந்திரனில் நடிக்கிறேன். அது பெரிய ப்ராஜெக்ட். அது முடியட்டும். அதுக்கு பின்னாடி பார்க்கலாம். அதுவரைக்கும் வேற ஏதாவது அரசியல் கட்சியில சேர ஆசைப்பட்டீங்கன்னா தாராளமா போங்க. நான் அரசியலுக்கு வந்தா திரும்பி வாங்க. நான் சந்தோஷமா ஏத்துக்குவேன்.
அதுக்கு நடுவுலே என் பேரை, படத்தை யூஸ் பண்ணி கட்சி, கொடி அது இதெல்லாம் ரெடி பண்ணி என்னை சங்கடப்படுத்தாதீங்க. பொது மக்கள் நம்மள உன்னிப்பா கவனிக்கிறாங்க. நாம கட்டுப்பாடோட இருக்கணும்.”
இது தான் அவர் சொன்னது. இதுல என்னய்யா தப்பு?
உங்ககிட்ட ஒரு பொருள் இருக்கு. அதை உங்கவீட்டு விசுவாசமான வேலைக்காரன் விரும்புறான். அவனுக்கே அதை நீங்க சர்ப்ரைசா தரணும்னு நினைக்கிறீங்க. இந்த சூழ்நிலைல அந்த வேலைக்காரன் அவசரப்பட்டு அதை உங்க கிட்ட இருந்து திருட முயற்சி பண்ணினா நீங்க என்ன பண்ணுவீங்க? (அதாவது கொடுக்குறதுக்குள்ள எடுத்தா என்ன செய்வீங்க?)
கொடுக்குறதுன்னு முடிவாய்டுச்சே …சரி எடுத்துகட்டும்முன்னு அப்படியே விட்டுடுவீங்களா?…….. மாட்டீங்கல்ல?? அட்லீஸ்ட் அவுனுக்கு புத்தி புகட்டிட்டவது - அவன் செஞ்சது தப்புன்னு புரியவெச்ச பிறகுதான் கொடுப்பீங்கல்ல? .அதுப் போலதான் இதுவும்…அதுதாங்க இப்போ நடந்துச்சு….
ரசிகர்களின் வேண்டுகோள்கள் எல்லை மீறியபோது நம் கவலையை நாம் சரியாக பகிர்ந்துகொண்டோம். (அதை பதிவுகளில் நீங்கள் காணலாம்.) மேலும் எதிர்மறை விளைவுகளை இது ஏற்படுத்தலாம் என்று நாமும் நம் நண்பர்களும் எச்சரித்திருந்தோம்.
நம் அச்சம் உண்மையாகிவிட்டது.
ரசிகர்கள் தற்போது உணர்ச்சிமயமாக இருக்கிறார்கள். எது பற்றியும் கூற இது சரியான தருணம் அல்ல. சற்று ஒத்திபோடுவோம் என்று சூப்பர் ஸ்டார் நினைத்திருக்கலாமே?
மேலும் தலைவனை மீறி ரசிகர்கள் கட்சி கொடி என்று அறிவித்தது மிகப் பெரிய தவறு. அப்புறம் தலைவனுக்கு என்ன மரியாதை? எனவே சூப்பர் ஸ்டார் தனது முடிவை ஒத்திப்போட்டிருக்கலாம்.
ஒரு தலைவன் - பிறரை வழி நடத்தும் பொறுப்பில் இருப்பவன் - இப்படித்தானே செய்யவேண்டும். அது தானே அவனுக்கு அழகு? அவன் ஆளும் தன்மைக்கு அழகு!!
ரசிகர்களை சந்தித்துவிட்டு அதன் முடிவில் இதை தெரிவித்திருக்கலாமே என்று கேட்கிறார்கள். அங்கும் ரசிகர்கள் இதைத்தான் கேட்கபோகிறார்கள். அதற்க்கு பதில் சொல்ல சந்திப்பு வேறு தனியாக வேண்டுமா என்று நினைத்திருக்கலாம். (சந்திப்பு இருக்கிறதா இல்லையா என்பது குறித்து முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை. எனவே இது குறித்து கூறுவதே தவறு!)
ரஜினியின் இந்த அறிக்கையை - ஒவ்வொரு டி.வி. சேனலும் தங்கள் வசதிக்கேற்ப திரித்து கூறிவருகின்றனர். அவர்களின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். ரசிகர்களை ரஜினிக்கு எதிராக திருப்பவேண்டும். அதுவும் இந்த சன், ஜெயா - இரண்டு சானல்களும் ரொம்ப மோசம். (ஜெ..திருந்தவே மாட்டாரோ?)
பத்திரிக்கைகள் தரப்பில் - இந்த ஒரு அறிக்கையை வைத்து இதை நாம் விரும்பும் அந்த நடிகருக்கு சாதகமாக திருப்ப முடியுமா என்று தினமலரும், தினகரனும் முயன்று வருகின்றன. அதர்கேற்றார்போல தலைப்பு தயார் செய்யப்படும்.
ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் உறுதி: ரஜினியின் இந்த முடிவால் (ரசிகர்களின் நிர்பந்தத்திற்கு பணியமுடியாது) பொதுமக்கள் மத்தியில் அவருடைய இமேஜ் வெகுவாக உயர்ந்துள்ளது. இது முற்றிலும் உண்மை. இன்னும் சில நாட்களில் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.
கடைசியாக:
ஆரம்ப காலம் முதலே சூப்பர் ஸ்டார் விஷயத்தில் 100% துல்லியமான செய்திகளை - இது தான் நடக்கும் என்று - யாராலுமே கணித்து சொல்லிவிடமுடியாது. அப்படி ஒரு பத்திரிக்கையோ அல்லது வெப்சைட்டையோ நீங்கள் பார்க்கவும் முடியாது. ஏனெனில் ரஜினி என்பவர் யூகங்களுக்கு அப்பாற்ப்பட்டவர்.
ரஜினிக்காகவே அவரை பற்றிய ஆதாரப் பூர்வமான செய்திகளை பகிர்ந்துகொள்வதற்காக நடத்தபடுகிற நமது வலைத்தளங்களில் வெளியாகிற செய்திகளில் உள்ள உண்மைகளில் 10% கூட பிற தளங்களிலோ பத்திரிக்கைகளிலோ உங்களால் பார்க்க முடியாது என்று என்னால் உறுதியாக கூறமுடியும். நான் கேள்விப் பட்ட பல விஷயங்களை ‘இவற்றில் உண்மை இருக்காது’ என்று தவிர்த்திருக்கிறேன். தயவு செய்து அதை புரிந்துகொள்ளுங்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...