சூப்பர் ஸ்டாரின் அறிக்கையால் விரக்தியின் உச்சிக்கு தள்ளப்பட்ட நண்பர் ஒருவர் எனக்கு மெயில் அனுப்பியிருந்தார்.
நல்லது நடக்கும் என்று ஆரூடம் சொன்ன என் போன்றவர்களை அதில் பரிகாசம் செய்திருந்தார்.
யாரும் பரிகாசம் செய்யும் அளவிற்கோ பரிதாபப்படும் அளவிற்கோ அந்த அறிக்கையில் எதுவும் இல்லை. அப்படி அம்போவென்று அவர் நம்மை கைவிட்டுவிடவுமில்லை.
“மத்தவங்க வர்றாங்க என்பதால நான் வரமுடியாது. நான் எப்போ நினைக்கிறேனோ அப்போ தான் வருவேன். அப்போ யாராலயும் தடுக்க முடியாது. அதாவது யாருக்காகவும் நான் பயப்படமாட்டேன். இப்போ வேணாம்னு நினைக்கிறேன் அவ்வளவுதான்.
இப்போ நான் எந்திரனில் நடிக்கிறேன். அது பெரிய ப்ராஜெக்ட். அது முடியட்டும். அதுக்கு பின்னாடி பார்க்கலாம். அதுவரைக்கும் வேற ஏதாவது அரசியல் கட்சியில சேர ஆசைப்பட்டீங்கன்னா தாராளமா போங்க. நான் அரசியலுக்கு வந்தா திரும்பி வாங்க. நான் சந்தோஷமா ஏத்துக்குவேன்.
அதுக்கு நடுவுலே என் பேரை, படத்தை யூஸ் பண்ணி கட்சி, கொடி அது இதெல்லாம் ரெடி பண்ணி என்னை சங்கடப்படுத்தாதீங்க. பொது மக்கள் நம்மள உன்னிப்பா கவனிக்கிறாங்க. நாம கட்டுப்பாடோட இருக்கணும்.”
இது தான் அவர் சொன்னது. இதுல என்னய்யா தப்பு?
உங்ககிட்ட ஒரு பொருள் இருக்கு. அதை உங்கவீட்டு விசுவாசமான வேலைக்காரன் விரும்புறான். அவனுக்கே அதை நீங்க சர்ப்ரைசா தரணும்னு நினைக்கிறீங்க. இந்த சூழ்நிலைல அந்த வேலைக்காரன் அவசரப்பட்டு அதை உங்க கிட்ட இருந்து திருட முயற்சி பண்ணினா நீங்க என்ன பண்ணுவீங்க? (அதாவது கொடுக்குறதுக்குள்ள எடுத்தா என்ன செய்வீங்க?)
கொடுக்குறதுன்னு முடிவாய்டுச்சே …சரி எடுத்துகட்டும்முன்னு அப்படியே விட்டுடுவீங்களா?…….. மாட்டீங்கல்ல?? அட்லீஸ்ட் அவுனுக்கு புத்தி புகட்டிட்டவது - அவன் செஞ்சது தப்புன்னு புரியவெச்ச பிறகுதான் கொடுப்பீங்கல்ல? .அதுப் போலதான் இதுவும்…அதுதாங்க இப்போ நடந்துச்சு….
ரசிகர்களின் வேண்டுகோள்கள் எல்லை மீறியபோது நம் கவலையை நாம் சரியாக பகிர்ந்துகொண்டோம். (அதை பதிவுகளில் நீங்கள் காணலாம்.) மேலும் எதிர்மறை விளைவுகளை இது ஏற்படுத்தலாம் என்று நாமும் நம் நண்பர்களும் எச்சரித்திருந்தோம்.
நம் அச்சம் உண்மையாகிவிட்டது.
ரசிகர்கள் தற்போது உணர்ச்சிமயமாக இருக்கிறார்கள். எது பற்றியும் கூற இது சரியான தருணம் அல்ல. சற்று ஒத்திபோடுவோம் என்று சூப்பர் ஸ்டார் நினைத்திருக்கலாமே?
மேலும் தலைவனை மீறி ரசிகர்கள் கட்சி கொடி என்று அறிவித்தது மிகப் பெரிய தவறு. அப்புறம் தலைவனுக்கு என்ன மரியாதை? எனவே சூப்பர் ஸ்டார் தனது முடிவை ஒத்திப்போட்டிருக்கலாம்.
ஒரு தலைவன் - பிறரை வழி நடத்தும் பொறுப்பில் இருப்பவன் - இப்படித்தானே செய்யவேண்டும். அது தானே அவனுக்கு அழகு? அவன் ஆளும் தன்மைக்கு அழகு!!
ரசிகர்களை சந்தித்துவிட்டு அதன் முடிவில் இதை தெரிவித்திருக்கலாமே என்று கேட்கிறார்கள். அங்கும் ரசிகர்கள் இதைத்தான் கேட்கபோகிறார்கள். அதற்க்கு பதில் சொல்ல சந்திப்பு வேறு தனியாக வேண்டுமா என்று நினைத்திருக்கலாம். (சந்திப்பு இருக்கிறதா இல்லையா என்பது குறித்து முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை. எனவே இது குறித்து கூறுவதே தவறு!)
ரஜினியின் இந்த அறிக்கையை - ஒவ்வொரு டி.வி. சேனலும் தங்கள் வசதிக்கேற்ப திரித்து கூறிவருகின்றனர். அவர்களின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். ரசிகர்களை ரஜினிக்கு எதிராக திருப்பவேண்டும். அதுவும் இந்த சன், ஜெயா - இரண்டு சானல்களும் ரொம்ப மோசம். (ஜெ..திருந்தவே மாட்டாரோ?)
பத்திரிக்கைகள் தரப்பில் - இந்த ஒரு அறிக்கையை வைத்து இதை நாம் விரும்பும் அந்த நடிகருக்கு சாதகமாக திருப்ப முடியுமா என்று தினமலரும், தினகரனும் முயன்று வருகின்றன. அதர்கேற்றார்போல தலைப்பு தயார் செய்யப்படும்.
ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் உறுதி: ரஜினியின் இந்த முடிவால் (ரசிகர்களின் நிர்பந்தத்திற்கு பணியமுடியாது) பொதுமக்கள் மத்தியில் அவருடைய இமேஜ் வெகுவாக உயர்ந்துள்ளது. இது முற்றிலும் உண்மை. இன்னும் சில நாட்களில் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.
கடைசியாக:
ஆரம்ப காலம் முதலே சூப்பர் ஸ்டார் விஷயத்தில் 100% துல்லியமான செய்திகளை - இது தான் நடக்கும் என்று - யாராலுமே கணித்து சொல்லிவிடமுடியாது. அப்படி ஒரு பத்திரிக்கையோ அல்லது வெப்சைட்டையோ நீங்கள் பார்க்கவும் முடியாது. ஏனெனில் ரஜினி என்பவர் யூகங்களுக்கு அப்பாற்ப்பட்டவர்.
ரஜினிக்காகவே அவரை பற்றிய ஆதாரப் பூர்வமான செய்திகளை பகிர்ந்துகொள்வதற்காக நடத்தபடுகிற நமது வலைத்தளங்களில் வெளியாகிற செய்திகளில் உள்ள உண்மைகளில் 10% கூட பிற தளங்களிலோ பத்திரிக்கைகளிலோ உங்களால் பார்க்க முடியாது என்று என்னால் உறுதியாக கூறமுடியும். நான் கேள்விப் பட்ட பல விஷயங்களை ‘இவற்றில் உண்மை இருக்காது’ என்று தவிர்த்திருக்கிறேன். தயவு செய்து அதை புரிந்துகொள்ளுங்கள்.
No comments:
Post a Comment