சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினியை, பிரபல அரசியல் கட்சியின் வேட்பாளர்களும் தலைவர்களும் சந்தித்து வாழ்த்து பெற ஆர்வம் காட்டி வருகின்றனர். தேர்தல் சமயத்தில், வீண் சர்ச்சைகளையும் தொந்தரவுகளையும் தவிர்க்க வெளிநாட்டில் இருக்கும் ரஜினி, இம்முறை மாறாக இங்கேயே இருந்து அரசியல் பரபரப்புக்களை உன்னிப்பாக கவனித்து வருகிறார்.
தன்னை சந்திக்க அப்பாயிண்ட்மென்ட் கேட்டு வாழ்த்து பெற வரும் அரசியல் கட்சி வேட்பாளர்களை, கட்சி பேதமில்லாமல் சந்தித்து வருகிறார். வரும் வேட்பாளர்களிடம் சும்மா, சால்வை போத்தினோமா, வணக்கம் சொன்னோமா என்று இல்லாது, அவர்கள் சார்ந்த கட்சியின் தேர்தல் அறிக்கை மற்றும் வாக்குறுதிகள் மற்றும் தொகுதி நிலவரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் விபரமாக கேட்டு தெரிந்துகொள்கிறார்.
DSCF10261 640x479  சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்!
நண்டு, சிண்டு, நார்த்தங்காய்கள் எல்லாம் அரசியலில் குதித்து அலப்பறை பண்ணிக்கொண்டிருக்க, மாபெரும் மக்கள் சக்தியையும், ரசிகர்களின் படையும் வைத்துள்ள நம் தலைவர் நாட்டில் நடக்கும் அக்கிரமங்களைஎல்லாம் இப்படி அமைதியாக இருக்கிறாரே…. என்று ரசிகர்கள் புழுங்கி தவிக்கின்றனர். ரஜினி மீதான இவர்களின் எதிர்ப்பார்ப்பு சில சமயம் ஏமாற்றங்களை தருவதையடுத்து, விரக்தியின் விளிம்பிற்கு சென்று ரஜினியையே விமர்சித்து வருகின்றனர். அவர்களின் உணர்வுகள் புரிந்துகொள்ளகூடியதே.
ஆனால், ரசிகர்கள் நல்லது நடக்கும் என்று நம்பிக்கை வைக்கவேண்டும். தலைவர் மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும். நேற்று நாம் தலைவரின் நெருங்கிய நண்பர் ஒருவரை நமது பேட்டிக்காக சந்தித்த போது,  ரசிகர்கள் மீதும் தமிழக மக்கள் மீதும் தலைவர் வைத்துள்ள அன்பை பற்றி பல உண்மைகளை சொல்லும்போது எனக்கு கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. உடனிருந்த நண்பர் மேட்டு தெரு முத்து, ஹரி சிவாஜி, கண்ணன் ஆகியோரே சாட்சி. தலைவர் எத்தகு சூழ்நிலையில் அனைவரையும் அரவணைத்து செல்கிறார் என்று விமர்சிப்பவர்களுக்கு புரியாது.
தலைவர் நிச்சயம் தமிழக மக்களை கைவிடமாட்டார். அவர்களின் நலன் பற்றி தான் அவரது சிந்தனை இருக்கிறது, எதற்கும் சரியான நேரம் வேண்டும்.
நேற்று கூட இது தொடர்பாக தனது குமுறல்களை வெளியிட்ட நண்பர் ஒருவருக்கு பதில் கூறியிருந்தேன். இதோ நமது வார்த்தைகளை மெய்யாக்கும் விதமாக  பி.ஜே.பி. தலைவர்  நிதின் கட்காரி கூறயுள்ள விஷயங்களை படியுங்கள்.
இதை முழுவதுமாக படியுங்கள்….. புரியும்….!
சமீபத்தில் அவரை சந்தித்தவர் பி.ஜே.பி.யின் அகில இந்திய தலைவர் நிதின் கட்காரி. சென்னையில் செதியாளர்களிடம் நிதின் பேசுகையில், “மும்பையில் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தை ரஜினி குடும்பத்துடன் அமர்ந்து ரசித்து கொண்டிருந்தார். போட்டி முடிந்ததும், மைதானத்தை விட்டு அவரால் வெளியேறமுடியாது, ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கிக்கொண்டார். நான் தான் அவரையும் அவரது குடும்பத்தினரியும் எஸ்கார்ட் செய்து, என் காரில் என் வீட்டுக்கு அழைத்து சென்றேன். அவருக்கு தேநீர் கொடுத்து உபசரித்தேன். சென்னை வந்தால் தன் வீட்டுக்கு வருமாறு அழைப்பு விதித்திருக்கிறார் ரஜினி.” என்று கூறினார்.
இதையடுத்து, போயஸ் கார்டனில் உள்ள சூப்பர் ஸ்டாரின் வீட்டுக்கு சென்றார் நிதின் கட்காரி. அவரை வரவேற்று உபசரித்த உபாசித்த ரஜினி அவருக்கு பொன்னாடை போர்த்தினார். இருவரும் அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பேசியதாக  கூறபடுகிறது.
இதில் கூறியுள்ள தகவல்கள், பி.ஜே.பி. வாட்டாரங்கள் தெரிவித்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது. ஆகையால் அதன் நம்பகத்தன்மை குறித்து நம்மால் எதுவும் உறுதியளிக்க முடியாது.
இது குறித்து, செய்தி வெளியிட்டுள்ள ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ், கூறியிருப்பதாவது :
ரஜினியின் அடுத்த டேக் — அரசியல்!
இரண்டு வருடங்கள் கழித்து – தனது கடைசிப் படத்தை முடித்த பின்பு – ரஜினி முழு நேரத்தில் அரசியலில் குதிக்கிறார். இதை தான் அவர் தன்னை சந்தித்த பி.ஜே.பி.யின் அகில இந்தியா தலைவர் நிதின் கட்காரியிடம் கூறியிருக்கிறார்.
மும்பையில் உலகாக்கொப்பை முடிந்த பின்பு, ரசிகர்களின் கூட்டத்தில் இருந்து ரஜினியை காப்பாற்றி தன் வீட்டுக்கு அழைத்து சென்றார் நிதின் கத்காரி. அதை தொடர்ந்து ரஜினியின் அழைப்பின் பேரில் அவரை அவரது வீட்டில் கடந்த வெள்ளியன்று சந்தித்தார் நிதின்.
அப்போது அரசியல், சினிமா, வாழ்க்கை,  என பல்வேறு விஷயங்களை பற்றி இருவரும் பேசியுள்ளனர் என்று பி.ஜே.பி. வட்டாரங்கள் கூறியுள்ளன.
தமிழக மக்கள் முன்பு தற்போதுள்ள வாய்ப்புக்கள் மேல் சூப்பர் ஸ்டாருக்கு திருப்தி இல்லை எனவும் நிச்சயம் மக்களை வழி நடத்த, ஒரு மூன்றாம் சக்தி தேவைப்படுகிறது என்றும் அந்த சூழ்நிலையில் மக்களை நான் கைவிடமாட்டேன் என்றும் அவர் நிதினிடம் கூறியதாக தெரிகிறது.
இதுவரையில், ரஜினி அரசியல் குறித்த தனது நிலைப்பாட்டை ரகசியமாக வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
துணை முதல்வர் முதல் அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் வரை அவரை சந்தித்து வாழ்த்து பெரும் இந்த சூழ்நிலையில், “என் கடைசிப் படம் முடிவடைந்த வுடன் நான் அரசியலுக்கு வருவது பற்றி யோசிப்பேன். அது இரண்டு ஆண்டுகளில் நடக்கலாம்.” என்று ரஜினி கூறியதாக தெரிகிறது.
DSCF10071 640x457  சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதி — நிதின் கட்காரி உடைக்கும் ரகசியங்கள்!
அவர்களின் உரையாடல் அரசியலை சுற்றி திரும்பியபோது, நாட்டில் தற்போது நிலவும் ஊழலுக்கெதிரான மக்களின் மனநிலைக்கு தாம் தலைவணங்குவதாகவும் அண்ணா ஹாசாரேவின் போராட்டம் தம்மை வெகுவாக பாதித்துள்ளதாகவும் கூறினார். மக்களை வாட்டிவரும் வறுமை, லஞ்சம் மற்றும் ஊழல், குடிநீர் பற்றாக்குறை, சுற்றுப் புற சூழல் சீர்கடு இவற்றைப் பற்றி தாம் மிகவும் கவலைப்படுவதாகும் இது குறித்து உடனடியாக ஏதேனும் செய்யப்படவேண்டியது அவசியம் என்றும் கூறினார் ரஜினி.
உரையாடலின்போது, நாக்பூரில் தமது சமூக நலத்திட்டப்பநிகளின் வளர்ச்சி மற்றும் தாம் நிறுவியுள்ள மாற்று-எரிபொருள் திட்டங்களையும் ரஜினி வந்து பார்க்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் நிதின்.
தமிழக மக்கள் மத்தியில் இன்னும் பிராந்திய உணர்வு ஆழமாக இருப்பதாக ரஜினி கருதுகிறார். எனவே ஏதாவது ஒரு தேசியக் கட்சியில் சேர்வதைவிட சொந்தமாக ஒரு கட்சி துவக்குவதில் தான் ரஜினிக்கு ஆர்வமிருப்பதாக தெரிகிறது என்று நிதின் கத்காரி கருத்து தெரிவித்தாராம்.
கட்காரி விடைபெறும்போது அவருக்கு எந்திரன் பட டி.வி.டி. ஒன்று பரிசளித்தாராம் ரஜினி.
“நான் எப்போ வருவேன்…. எப்படி வருவேன்… யாருக்கு தெரியாது. வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்… ” என்று அவர் கூறிய பிரபல வசனம் அர்த்தம் பொதிந்த ஆழமான ஒன்று. நடக்கும்போது தான் அதன் வலிமை புரியும்.
பொறுத்தார் பூமியாள்வார்.
Source : http://www.hindustantimes.com/Take-2-for-Rajni-in-politics/Article1-683354.aspx

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...