தலைவர் வழி நின்று தவறாது வாக்களிப்பீர்; பொறுப்புமிக்க குடிமகன் என்பதை நிரூபிப்பீர்!!

நாளை தமிழகத்தின் பொது தேர்தல். வாக்களிக்க உங்கள் முன் உள்ள OPTIONs மிகவும் குறைவு. நாம் முன்பே சொன்னது போல, ரஜினி ரசிகர்களுக்கு இது ஒரு சிக்கலான தேர்தல். பல்வேறு காரணங்களால் யாருக்கு வாக்களிப்பது என்று – இதற்கு முன் இல்லாத அளவிற்கு – விழி பிதுங்கி போயிருக்கிறார்கள்.
இருப்பினும், உணர்சிகளுக்கு இடம் கொடாமல், தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து வாக்களியுங்கள். இப்போது விட்டால் அடுத்து 5 ஆண்டுகளுக்கு பிறகு தான் உங்களுக்கு இந்த வாய்ப்பு.
“ஓட்டுப் போடாத ஒரு நல்ல குடிமகன் மூலம் ஒரு அயோக்கியன் தேர்ந்தெடுக்கப்படுகிறான்”  என்ற பொன்மொழியை நினைவில் வைத்திருக்கவும். ஆகையால் தவறாது உங்கள் ஜனநாயாக கடமையை ஆற்றிடவும்.
சூப்பர் ஸ்டார் ரஜினி ஒவ்வொரு தேர்தலிலும் தவறாது வாக்களிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். எந்த ஊரில் எந்த நாட்டில் இருந்தாலும் தேர்தல் நாளன்று தவறாது சென்னைக்கு வந்து வாக்களிப்பார்.
முன்பெல்லாம் தேர்தல்களில் சூப்பர் ஸ்டார் தனியாக தான் வந்து வாக்களிப்பார். அவருக்கு பிறகு அவரது குடும்பத்தினர் வந்து வாக்களிப்பார்கள். ஆனால், 2006 ஆம் ஆண்டு முதல், குடும்பத்தோடு வந்து வாக்களித்து வருகிறார்.
சென்ற 2006 சட்டமன்றத் தேர்தலில், வாக்களித்துவிட்டு வந்தவரிடம், செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டனர். “உங்களைப் போலவே நானும் இந்த தேர்தல் முடிவை தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்” என்று மட்டும் குறிப்பிட்டார். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலிலும், குடும்பத்தினரோடு வந்து வாக்களித்தார்.
rajini votes2  தலைவர் வழி நின்று தவறாது வாக்களிப்பீர்; பொறுப்புமிக்க குடிமகன் என்பதை நிரூபிப்பீர்!!
சுதந்திரத்தை பற்றி ஒரு முறை மகாத்மா காந்தியடிகள், “என்றைக்கு இந்த நாட்டில் ஒரு பருவப் பெண், கழுத்தில் நிரம்ப நகைகளுடன், இரவில் தனியாக, அச்சமின்றி சாலையில் நடந்து செல்கிறாரோ அன்றைக்கு தான் நமக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்” என்று குறிப்பிட்டார். சுதந்திரத்துக்கு இதைவிட விளக்கம் வேறு யாராலும் கொடுத்துவிட முடியாது.
அது போலவே, என்றைக்கு நமது நாட்டில் 95% க்கும் மேல் வாக்குகள் பதிவாகிறதோ அன்றைக்கு தான் உண்மையான ஜனநாயகம் மலரந்ததாக அர்த்தம். அந்த திருநாளுக்கு நாமும் உறுதுணையாக இருப்போம். வாக்களிப்பீர் தவறாது; பொறுப்புமிக்க இந்தியக் குடிமகன் என்பதை நிரூபிப்பீர்.
ஜெய் ஹிந்த்!
———————————————————————-
From our archives:
2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சூப்பர் ஸ்டார் வாக்களித்த புகைப்படங்கள்

வரலாற்று நாயகன் வாக்களித்தபோது…

http://onlysuperstar.com/?p=3696

———————————————————————–
[END]

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...