You Are Here: Home » Fans' Corner, Featured » அண்ணா அஸாரேவின் ஊழலுக்கெதிரான சத்தியாக்கிரகம்… தலைவரின் நிலைப்பாடு என்ன?
காந்தியவாதி அண்ணா அஸாரே அவர்களின் ஊழலுக்கு எதிரான சத்தியாகிரகம் நாடெங்கிலும் நாளுக்கு நாள் எழுச்சியை ஏற்படுத்தி வருகிறது. அனைத்து தரப்பிலிருந்தும் அவருக்கு ஆதரவு குவிந்து வருகிறது. தினந்தோறும் லட்சகணக்கானோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சமூக அக்கறையில் யாருக்கும் சளைக்காத ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் ஊழலுக்கு எதிரான இந்த போரில் பங்கு பெறுவது குறித்து எண்ணம் இல்லாதிருக்குமா அல்லது அது பற்றி எதிர்பார்ப்பு தான் இல்லாதிருக்குமா?இந்தியத் திருநாட்டிற்கு நலம் பயக்கும் எதற்குமே நமது தளத்தின் ஆதரவு நிச்சயம் உண்டு. அண்ணா ஹசாரே அவர்களின் இந்த சத்தியாக்கிரகத்துக்கு நமது முழு ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்நிலையில் நம் தளத்தில் அண்ணா அஸாரே இந்த அறப்போராட்டம் குறித்து பதிவு ஒன்றை அளிக்கவேண்டும் என்றும் தலைவரின் நிலைப்பாடு இதில் என்ன என்று கேட்டும் நாள்தோறும் நம் நண்பர்கள் கேட்டு வருகிறார்கள். இந்த சத்தியாக்கிரகம் மற்றும் அது தொடர்பாக தங்களின் கருத்துக்களை, ஆதங்கத்தை என்னிடம் தொலைபேசியிலும், இ-மெயிலிலும் பகிர்ந்துகொண்ட நம் நண்பர்களுக்கு என் நன்றி. தலைவரைப் பற்றி என்னிடம் பேசியபோது நான் அடைந்த சந்தோஷத்தை விட, இந்த அறப்போர் பற்றி என்னிடம் பேசியபோது நான் அதிகமாக சந்தோஷப்பட்டேன்.
தலைவரை நன்கு புரிந்துகொண்டு, அவரையும் அவரது செயல்பாடுகளையும் கூர்ந்து கவனித்து வரும் – அவர் மீது பேரன்பும் பற்றும் கொண்ட ஒரு சராசரி ரசிகனாக – இந்த விஷயத்தில் என்னுடைய கருத்துக்களை சொல்லியிருக்கிறேன்.
குறைகள் இருந்தாலோ அல்லது உங்கள் எதிர்ப்பார்ப்புக்களை நிறைவு செய்வதில் தவறியிருந்தாலோ மன்னியுங்கள்.
இருப்பினும் தலைவரின் மனதில் என்ன இருக்கிறது, இது தொடர்பாக அவரின் தீர்க்கமான முடிவு என்ன என்பதை அந்த ஆண்டவன் மட்டுமே அறிவான்.நாளை அவர் என்ன செய்வார் என்பதையும் அவன் மட்டுமே அறிவான்.
(நீங்கள் இந்தப் பதிவை படிக்கும் நேரம் அண்ணா அஸாரேவின் சத்தியாகிரகம் ஒருவேளை முடிவுக்கு வந்திருக்கலாம். இதை நான் டைப் செய்துகொண்டிருந்த நேரம், அரசாங்கம் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டுவிட்டதாக செய்திகள் வந்துகொண்டிருந்தன.)
அண்ணா அஸாரே… தலைவர் என்ன கருதுகிறார்?
நாட்டு நடப்புக்களையும், அன்றாட செய்திகளையும் தலைவரைப் போல விரல் நுனியில் வைத்திருப்பவர்களை பார்ப்பது மிகவும் அரிது. மிக மிக பிசியாக ஷூட்டிங்கில் இருக்கும் நாட்களில் கூட தம்மை அவர் அப்டேட் செய்துகொள்ள தவறியதில்லை.
நீங்கள் புதிதாக எதையுமே அவரிடம் சொல்லிவிட முடியாது. நமக்கு முன்பாகவே அவற்றை தெரிந்துவைத்திருப்பார் அவர். அப்படியிருக்கும் சூழ்நிலையில் நாட்டையே தம்மை நோக்கி திரும்பி பார்க்க வைத்திருக்கும் – பவர்ஃபுல் அரசியல்வாதிகளை எல்லாம் ஒரே நேரத்தில் அலற வைத்திருக்கும் ஒரு காந்தியவாதியின் உண்ணா விரதத்தை பற்றி தெரிந்து கொள்ளாதிருப்பாரா? சொல்லப் போனால் உங்களை விட என்னை விட, அந்த பெரியவரின் உண்ணாவிரதம் வெற்றியடையவேண்டும் என்று நினைப்பார். அவரின் மானசீக ஆதரவு அவருக்கு எப்போதோ கிடைத்துவிட்டது. அந்த பெரியவரின் உண்ணாவிரதம் வெற்றியடைந்தால், லட்சகணக்கான இந்தியர்களின் பிரார்த்தனையுடன் சூப்பர் ஸ்டாரின் பிரார்த்தனையும் அதில் கலந்திருக்கும்.
சரி… அப்படியானால் ஏன் பகிரங்க குரல் கொடுக்கவில்லை? என்று உங்களிடம் கேள்வி எழக்கூடும்…..
இந்த உண்ணாவிரதத்துக்கு குரல் கொடுத்திருக்கும் நடிகர்கள் யார் மீதும் மக்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை. வருங்காலத்தில் தலைமை ஏற்கக்கூடிய வாய்ப்பும் இல்லை. ஒரு சராசரிக் குடிமகனாக – பொறுப்பு மிக்க குடிமகனாக மட்டுமே மேற்படி நடிகர்கள் தங்கள் ஆதரவை அந்த பெரியவருக்கு கொடுத்திருக்கிறார்கள். அவர்களை குறை கூறுவதற்காக இதை சொல்லவில்லை. யதார்தத்தை கூறுகிறேன்.
ஆனால், தலைவரைப் பொறுத்தவரை அவர் தற்போது இருக்கும் நிலை வேறு. அவர் மீது மக்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு எல்லைகளை கடந்தது. மக்கள் முன் இனி ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பதெல்லாம் எடுபடாது. அவையெல்லாம் வெற்று ஸ்டண்ட்டாகவே கருதப்படும். விமர்சிக்கப்படும். மக்கள் எதிர்பார்ப்பது ஆக்க்ஷன் தான். அதும் ரஜினியிடமிருந்து நிச்சயம் நேரடி ஆக்ஷனை தான் எதிர்பார்க்கிறார்கள். ஆகையால் தான் அவர் பொறுமையாக இருக்கிறார்.
கொஞ்சம் நினைத்து பாருங்கள்… அண்ணா அஸாரேவுக்கு ஆதரவு கொடுத்த பின்னர்… தலைவர் அடுத்து என்ன செய்ய வேண்டியிருக்கும் தெரியுமா? மக்களிடம் எதைப் பற்றி பேசவேண்டியிருக்கும் தெரியுமா? கடைசியில் அதன் பலன் யாருக்கு போகும் தெரியுமா?
ஒரு மாபெரும் புரட்சிக்கு பிள்ளையார் சுழி போட்டுவிட்டு, அதன் பலனை தவறான ஒரு நபருக்கு அளிக்க முடியுமா? இத்துணைக் காலம் அதற்காகவா காத்திருந்தோம்? அதை விட கொடுமை வேறென்ன இருக்க முடியும்? சிந்திப்பீர் ரசிகர்களே…
நம் எல்லோரையும் விட தலைவர் இந்நாட்டின் மீதும் மக்கள் மீதும் மாறாத அன்புகொண்டுள்ளார். ஊழலற்ற ஒரு தேசமாக இந்தியா இருக்கவேண்டும் என்று விரும்புகிறார். “அரசியலில் எனக்கு பிடிக்காதது இரண்டு விஷயங்கள். ஊழல் மற்றும் வன்முறை” என்று அவர் 2004 ஆம் தேர்தலில் முழங்கியது நினைவிருக்கிறதா?
ஆகையால், தலைவர் இனி எது செய்தாலும் அது நேரடியாக இருக்கும். ஆனால் அதற்கு காலம் வரும். காத்திருப்போம். அதுவரை அவரவர் கடமையை செய்வோம்.
ஏப்ரல் 13 அன்று உங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற மறக்காதீர்கள். நாடும் வீடும் நலம்பெற சிந்தித்து வாக்களிப்பீர். உங்கள் வாக்குகளை எக்காரணத்தை கொண்டும் விலை போக அனுமதிக்காதீர்கள்.
தமிழகத்தில் தினமலர் மற்றும் ஹிந்து உள்ளிட்ட சில ஆங்கில் பத்திரிக்கைகளை தவிர வேறு யாரும் அண்ணா அண்ணா சத்தியாக்கிரகம் பற்றிய செய்திகளை கவர் செய்யவில்லை. காரணத்தை நாம் சொல்லவேண்டுமா என்ன?
நம் ரசிகர்கள் அண்ணா ஹாசாரே அவர்களைப் பற்றியும், அவரது போராட்டத்திற்கான காரணங்கள் பற்றியும் அறிந்துகொள்ள கீழ்கண்ட லிங்க்குகளையும், செய்தித் தாள் கட்டிங்குகளையும் தந்திருக்கிறேன். லிங்க்குகளை அனுப்பிய நண்பர்களுக்கு நன்றி.
கீழ்கண்ட லின்க்கை க்ளிக் செய்து பெட்டிஷனை பிரதமருக்கு அனுப்பவும்.
http://www.avaaz.org/en/stand_with_anna_hazare/97.php?cl_tta_sign=a214ccf1314371ad92ff346fc8bd592f
மேலும் விபரங்களுக்கு :
India Today, “Lokpal vs Jan Lokpal: A study in contrast”:
http://indiatoday.intoday.in/site/Story/134429/latest-headlines/lokpal-vs-jan-lokpal-a-study-in-contrast.html
The Hindu Business Line, “Anna Hazare on fast-unto-death demanding Jan Lokpal Bill”:
http://www.thehindubusinessline.com/industry-and-economy/article1602555.ece
Times of India, “On day Anna Hazare begins fast, NAC too calls for lokpal debate”:
http://timesofindia.indiatimes.com/india/On-day-Anna-Hazare-begins-fast-NAC-too-calls-for-lokpal-debate/articleshow/7880511.cms
Tehelka, “Social activists come together to show flaws in Lokpal Bill”:
http://tehelka.com/story_main49.asp?filename=Ws050411ACTIVISM.asp
Anna Hazare’s fast against corruption strikes huge chord
http://www.ndtv.com/article/india/anna-hazares-fast-against-corruption-strikes-huge-chord-96593
[END]
No comments:
Post a Comment