அன்னா ஹசாரே, ஊழல், விலைவாசி உயர்வு, விவசாயம், கிராமப் புற வளர்ச்சி — வாக்களித்த பின்னர் மனம் திறந்த சூப்பர் ஸ்டார் ரஜினி!

மிகுந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை ஸ்டெல்லா மாரிஸ் வாக்குச் சாவடியில் வாக்களித்தார் ரஜினி. சூப்பர் ஸ்டார் எப்போது வாக்களிக்க வருவார் என்று அவரை காண ஆவலோடு காத்திருந்தார்கள் ரசிகர்களும் பத்திரிக்கையாளர்களும்.
அதிமுக தலைவர் ஜெயலலிதா வாக்களித்துவிட்டு சென்ற பின்னர், சுமார் 10.45 மணிக்கு சூப்பர் ஸ்டார் ஸ்டெல்லா மாரீஸ் வந்தார். அவர் மட்டுமே வந்தார். (குடும்பத்தினர் பிறகு தனியாக வந்து வாக்களித்தனர்.)
DSC 2894 640x424  அன்னா ஹசாரே, ஊழல், விலைவாசி உயர்வு, விவசாயம், கிராமப் புற வளர்ச்சி — வாக்களித்த பின்னர் மனம் திறந்த சூப்பர் ஸ்டார் ரஜினி!
சூப்பர் ஸ்டார் வருவதை எதிர்பார்த்து கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஸ்டெல்லா மாரிஸில் காத்திருந்தனர். அவர் வந்தவுடன் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி கொண்டார். ரசிகர்கள் மத்தியில் நீந்தி தான் அவர் வாக்குச்சாவடிக்குள் பிரவேசிக்க முடிந்தது.
அசத்தலான நீல நிற சட்டை மற்றும் கறுப்பு நிற பேண்ட்டில் காணப்பட்ட ரஜினி சற்று இறுக்கமாக காணப்பட்டார். வாக்களித்த பின்னர் இரு கைகளையும் உயர்த்தி அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார். சூப்பர் ஸ்டார் வாக்களித்தபோது இருந்த கூட்டமும் பரபரப்பும் வேறு யாருக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டு வாயிலில் ஹைட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது :
(கடந்த சில நாட்களாக ஜலதோஷம் மற்றும் காய்ச்சலால் ரஜினி பாதிக்கப்பட்டிருந்தார். அவரது குரல் சற்று கரகரப்பாக இருந்தது.)
தமிழ நாட்டின் தற்போதைய பற்றியெரியும் பிரச்னை விலைவாசி உயர்வு தான். அடித்தட்டு மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். ஆகையால் அடுத்து ஆட்சிக்கு வருவோர் அதை முதலில் கவனிக்க வேண்டும்.
ஊழலுக்கெதிரான அண்ணா ஹசாரே உண்ணாநோன்பு மேற்கொண்ட போது, நானும் அவரை சென்று பார்ப்பதாக இருந்தேன். ஆனால் கடந்த சில நாட்களாக எனக்கு உடல்நிலை சரியில்லை. ஆகையால் சென்று சந்திக்கமுடியவில்லை. இருப்பினும் எனது ஆதரவு அவருக்கு உண்டு. ஊழலுக்கெதிராக தனியாக இயக்கம் ஆரம்பிக்க வேண்டியதில்லை. அண்ணா ஹசாரேவின் இயக்கத்திலேயே நானும் சேருவேன்.
DSC 2901 640x515  அன்னா ஹசாரே, ஊழல், விலைவாசி உயர்வு, விவசாயம், கிராமப் புற வளர்ச்சி — வாக்களித்த பின்னர் மனம் திறந்த சூப்பர் ஸ்டார் ரஜினி!
ஊழலுக்கெதிரான சட்டம் கொண்டு வருவது அத்துணை எளிதல்ல. அரசியல் வாதிகள் அதற்க்கு முட்டுக்கட்டை போட்டுக்கொண்டேயிருப்பார்கள். ஆனால் அதையெல்லாம் மீறி நாம் அதை நிறைவேற்ற வேண்டும்.
ஊழல் நிச்சயம் தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் மிகப் பெரிய பிரச்னை தான்.
அடுத்து வரப்போகும் ஆட்சி, விவசாயிகளின் பிரச்னையை தீர்க்கவேண்டும். விவசாயம் தான் நமது நாட்டி முதுகெலும்பு என்று மகாத்மா காந்தியடிகள் சொன்னதை மறந்துவிடக்கூடாது. அதே போல, கிராமப்புற வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தப்படவேண்டும்.
ரானாவை பொறுத்தவரை இன்னும் திரைக்கதையை இறுதி செய்வதில் தான் இருக்கிறோம் என்றார் சூப்பர் ஸ்டார்.
[END

1 comment:

  1. லோக்பால் மசோதா சட்டமாகிவிட்டால் அடுத்த நொடியே நாட்டில் ஊழல் இல்லாமல் ஒழிந்துவிடும் என்பதுபோல அன்னா ஹசாரே மக்களை ஏமாற்றிவருகிறார். காங்கிரஸ் ஊழலை ஒழிக்க முன் வரும் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றத்தையே தரும். காரணம் சோனியா மீது ஊழல் புகாரும், கருப்புப்பண புகாரும் ஆதாரத்துடன் உள்ளது. ஆனால் அன்னா ஹசாரே ஏன் சோனியா ஊழல் குறித்து பேச மறுக்கிறார் என்பது புரியவில்லை. அதுமட்டுமல்ல ஊழலை ஒழிக்க அவருக்கு கடிதம் எழுதுவது ஏன் என்றும் புரியவில்லை. மத்திய அரசு தன்னுடன் பேசி ஊழலுக்கு எதிராக லோக்பால் சட்டம் இயற்றப் போவதாக ஒரு குழு அமைத்து போட்ட நாடகத்தை நம்பிய அன்னா ஹசாரே இன்று அரசு தங்களை ஏமாற்றிவிட்டதாக புலம்புகிறார்.

    நல்லையா தயாபரன்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...