புதிய பாட்ஷாவில் காத்திருக்கும் ஆச்சரியங்கள் – சுரேஷ் கிருஷ்ணா தகவல் & எந்திரன் பார்ட் 2 பற்றி ஷங்கர் கூறுவது என்ன?

லைவர் மற்றும் அவரது படங்ளை பற்றி மற்றுமொரு செய்தி தொகுப்பு. இந்த செய்திகளில் சில லேட்டாக உங்கள் கவனத்துக்கு வந்தாலும் லேட்டஸ்டாக  – கூடுதல் தகவல்களுடன் – அவை இருக்குமாறு பார்த்துக்கொண்டுள்ளேன். thanks.

1) ரஜினியின் படங்கள் என்றுமே தங்கச் சுரங்கங்கள் தான் — நிரூபிக்கும் பாட்ஷா!
1995 ஆம் ஆண்டு பாட்ஷா ரிலீசான போது, அதன் பிரம்மாண்ட வெற்றியின் மூலம் தமிழ் சினிமாவில் அது பரபரப்பை ஏற்படுத்தயது. ரஜினியின் ஸ்டைலும் அவர் பேசிய பன்ச் வசனமும் (நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி!) ரசிகர்களிடம் பலத்த வரவேற்ப்பை பெற்று, சூப்பர் ஸ்டாரை எங்கோ கொண்டு சென்றது.
Baasha Article P 640x428  Tidbits # 51 : புதிய பாட்ஷாவில் காத்திருக்கும் ஆச்சரியங்கள் – சுரேஷ் கிருஷ்ணா தகவல் & எந்திரன் பார்ட் 2 பற்றி ஷங்கர் கூறுவது என்ன?
உடனடியாக அதை ஹிந்தியில் வெளியிட விரும்பி அதன் ரீமேக் உரிமைகள் அபாரமாக விற்பனையாகின. அமிதாப் பச்சான் அதில் நடிப்பதாக இருந்தது. ஆனால் படத்தை பார்த்த அமிதாப், “ரஜினி பின்னி பெடலெடுத்திருக்கிறார். அவர் போல நிச்சயம் என்னால் செய்யமுடியாது” என்று நடிக்க மறுத்துவிட்டார். தனது ஏ.பி.சி.எல். நிறுவனம் சார்பாக அதை உடனடியாக டப் செய்து வெளியிட்டார். அது நிறைய பேருக்கு தெரியாது.
இந்நிலையில், அதன் ரீமேக் மற்றும் ஹிந்தி வெளியீட்டு உரிமையை வைத்திருக்கும் பத்ரகாளி வர பிரசாத் ராவ் அதை கிராபிக்ஸ் மூலம் கலர்புல் ஆக்கி விரைவில் வெளியிட இருக்கிறார். இது குறித்து பிரசாத் ராவ்  கூறுகையில், “தமிழில் பாட்ஷா ரிலீசாகி வெற்றி பெற்ற சூட்டோடு, அமிதாப்ஜியை வைத்து ஹிந்தியில் இதை நான் வெளியிட நினைத்தது உண்மைதான். ஆனால்; அமிதாப் அதற்க்கு பிறகு தீவிர அரசியலில் குதித்தால், அதை வெளியிட முடியவில்லை. ஹிந்தில் ‘எந்திரன்’ என்ற பெயரில் ரிலீசாவதற்கு முன்பே, பாட்ஷாவின் ஹிந்தி உரிமை மற்றும் டப்பிங் ரைட்ஸை நான் வாங்கி வைத்திருந்தேன். தமிழ் மட்டுமல்லாது ஹிந்தியிலும் ரஜினிக்கு மார்க்கெட் அபாரமாக இருக்கிறது. எனவே பாட்ஷாவை ரிலீஸ் செய்ய இது தான் சரியான தருணம்.”
படத்தை கலர் கரக் ஷன்  செய்வதற்கு பெரிய தொகையை செலவிட்டிருக்கிறார் பிரசாத் ராவ். “Colour Restoration மற்றும் DI Correction என்று சொல்லப்படும் இரண்டையும் செய்திருக்கிறேன். இடையிடையே வரும் பிளாஷ் பேக் நெகடிவ் காட்சிகளை மாற்றி புதிய முறையில் அமைத்திருக்கிறேன். டைட்டில் கிராப்க்ஸை புதிதாக செய்திருக்கிறேன். (ஒரிஜினல் படத்திலேயே இவையெல்லாம் பிரமாதாமாக இருக்கும். அதை மேலும் மேருகேற்றியிருக்கிறார்கள் என்றால், எப்படி இருக்கும்? வாவ்!) தவிர ஒரிஜினல்; மோனோ சவுன்ட்டில் வெளியானது. ஆனால் தற்போது ஸ்டீரியோ இசையில் 5.1 சானலில் இசை புதிதாக கோர்க்கப்பட்டுள்ளது. ஒரிஜினல் படத்திற்கு இசையமைத்த தேவா, ஹிந்திக்கும் பின்னணி இசை சேர்த்திருக்கிறார். ஆடியன்சுக்கு படத்தை புதிதாக பார்ப்பது போல இருக்கும்.” என்று கூறுகிறார் பிரசாத் ராவ்.
அவர் மேலும் கூறியதாவது, மே முதல் வாரத்தில் ஹிந்தி பதிப்பின் இசை வெளியீடு நடைபெறும் எனவும், இதை வெளியிட சூப்பர் ஸ்டாரை அனுகப்போவதாகவும் கூறுகிறார். படம் மே இறுதியில் உலகம் முழுதும் வெளியாகும் எனவும் கூறும் பிரசாத் ராவ், தமிழ் மற்றும் தெலுங்கிலும் வெளியிட தயாராக இருப்பதாகவும் ஆனால் ரீமேக் உரிமைகள் தம்மிடம் இல்லை எனவும் அதை பெற முயற்சித்து வருவதாகவும் கூறுகிறார் பிரசாத் ராவ்.
(தயாரிப்பாளர் நொந்து நூலான வேற சிலரோட படங்களையும் இதே மாதிரி நாங்க வெளியிடப்போறோம்னு பில்டப் கொடுப்பானுங்களே… என்ன செய்ய…)
2) புதிய பாட்ஷாவில் சேர்க்கப்பட்டுள்ள டைட்டில் பாடல் — சுரேஷ் கிருஷ்ணா தகவல்!
பாட்ஷா (ஹிந்தி) புதிய பொலிவுடன் டிஜிட்டல் ப்ரிண்ட்டில் ரிலீசாவது பற்றி இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் நமது தளம் சார்பாக கேட்டபோது அவர் கூறியதாவது: “இந்த PROCESSல் படம் முழுக்க டிஜிட்டலுக்கு மாற்றப்படும். கீறல்கள், கோடுகள், மற்றும் தேவையற்ற ஜாயின்ட்டுகள் இவை அனைத்தையும் நீக்கி, புதிய பிரிண்ட் போல படத்தை மாற்றிவிடுவார்கள். படத்தையும் மேலும் கலர்புல்லாக மாற்றிவிடுவார்கள். மோனோ ட்ராக் இசைக்கு பதில் DTS ஒலிப்பதிவு செய்யப்படும். பாடல் மற்றும் பின்னணி இசை இரண்டுமே இப்போது DTS. படத்தில் புதிதாக டைட்டில் சாங் சேர்க்கப்பட்டுள்ளது. முழு பாடலாக இல்லாமல், படத்தில் இடம்பெறும் பல்வேறு டயலாக்குகள், பின்னணி இசை மற்றும் பன்ச்களை வைத்தே இந்தப் பாடலை தயார் செய்துவிட்டோம். ஒரிஜினலுக்கு இசையமைத்த தேவா தான் இதற்கும் இசையமைத்தார். படமே உங்களுக்கு முதல் முறையாக பார்ப்பது போல ஃப்ரெஷ்ஷாக இருக்கும்!” என்றார்.
இத்துனை ஆண்டுகள் கழித்து ஒரு படம் இப்படி செலவு செய்து ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறதே அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது, “ரஜினி சாரின் பழைய படங்களுக்கு கூட வரவேற்பு எப்போதுமே இருக்கும். அதுவும் பாட்ஷா பற்றி கேட்கவே வேண்டாம். அவரது புகழை உச்சிக்கு கொண்டு சென்ற படம் அது. தவிர, தற்போது உலகெங்கிலும் ஹிந்தி பேசும் மக்களிடமெல்லாம் ரஜினி புகழ் பெற்றுவிட்டார். அவர்களுக்கு ‘The Power of Rajinikanth’ பற்றி தெரிந்துகொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும்” என்றார்.
3) மேன் மக்கள்… மேன் மக்களே….!
பெரிய மனிதர்கள் பெரிய மனிதர்கள் தான் என்பது மற்றொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டாரின் ரோபோ ரிலீசானதில் இருந்தே அவரை மையமாக வைத்து அவரை ஒரு சூப்பர் மேனாக சித்தரித்து வட இந்திய ஊடகங்களில் ஜோக்குகள் வரத் துவங்கின. இங்கும் அது போன்ற எஸ்.எம்.எஸ்.கள் வளம் வரத் துவங்கின.
செயற்கரிய செயல்களை செய்யும் ஒரு சூப்பர் மேனாக தான் அவற்றில் ரஜினி சித்தரிக்கப்பட்டிருப்பார். ஒரு சிலர் அதை கிண்டலாக நினைத்தாலும் பெரும்பான்மையானவர்கள் அதை அவருக்கு சூட்டும் புகழாரமாகவே கருதுகின்றனர். மேலும் அந்த SMS கள் அவரது நடிப்பையோ திறமையையோ எப்போதுமே குறைத்து மதிப்பிட்டதில்லை.
இந்த சூழ்நிலையில், இடையில் சிறிது காலம் நின்றுபோயிருந்த இந்த எஸ்.எம்.எஸ். ஜோக்குகள், இந்திய-இலங்கை உலகக் கோப்பை போட்டியை நேரடியாக பார்க்க சூப்பர் ஸ்டார் வந்ததையடுத்து, மீண்டும் வளம் வரத் துவங்கின. அவற்றில் குறிப்பிடத்தக்க சில : ‘சச்சின் டெண்டுல்கரின் அம்மாவின் பெயர் ரஜினி டெண்டுல்கர்’, ‘ரஜினி மேட்ச்சை பார்க்கவில்லை. மேட்ச் தான் ரஜினியை பார்த்துக்கொண்டிருந்தது’. போன்ற ஜோக்குகள் அடங்கும்.
Rajini BigB  Tidbits # 51 : புதிய பாட்ஷாவில் காத்திருக்கும் ஆச்சரியங்கள் – சுரேஷ் கிருஷ்ணா தகவல் & எந்திரன் பார்ட் 2 பற்றி ஷங்கர் கூறுவது என்ன?
இது போன்ற ஜோக்குகளை பல பாலிவுட் ஸ்டார்கள் ஏற்கனவே அனுப்பிவருகின்றனர். அதில் லேட்டஸ்ட்டாக சேர்ந்திருப்பவர், அமிதாப் பச்சன்.
சமீபத்தில் தனக்கு மொபைலில் வந்த ஒரு ரஜினி ஜோக்கை அவர் தனது டுவிட்டரில் டுவீட் செய்திருந்தார். “அலெக்சாண்டர் கிரகாம்பல் தொலைபேசியை கண்டுபிடித்தபோது, அதில் ரஜினியிடமிருந்து இரண்டு மிஸ்டு கால்கள் வந்திருப்பதை பார்த்தார்” என்பது தான் அது.
பிக் பியின் டுவீட்டை பார்த்த நம் ரசிகர்கள் சிலர், “நீங்கள் கூடவா சார் ரஜினி கிண்டலடிக்கவேண்டும்…? எங்கள் மனம் மிகவும் புண்படுகிறது” என்று அவருக்கு கூற, பதறிப் போன பிக் பி,  “இனி அதுபோல செய்ய மாட்டேன். ரஜினியை கிண்டல் செய்வது என் நோக்கமல்ல… சொல்லப்போனால் அவரது அசாத்திய சக்திகளையும், மேன்மைகளையும் குறிப்பிடுவது தான் அவை. ரஜினி மிகச் சிறந்த மனிதர். எளிமையானவர். அடக்கமானவர். கடவுளை போல கொண்டாடப்படும் ஒரு நபர். அவர் மீது நான் பெருமதிப்பு வைத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நன்றி பிக் பி அவர்களே.
(மேன் மக்கள்… மேன் மக்களே….!)
4) சரி… தன்னைப் பற்றி இது போன்று வரும் எஸ்.எம்.எஸ். ஜோக்குகளை பற்றி ரஜினி என்ன நினைக்கிறார்?
சில மாதங்களுக்கு முன்பு, மும்பையில் இருந்து வெளிவரும் Filmstreet Journal என்ற சினிமா பத்திரிக்கையின் ஆசிரியருக்கு (பாரதி எஸ்.பிரதான்) சூப்பர் ஸ்டார் அளித்த பேட்டியில் இந்த எஸ்.எம்.எஸ். ஜோக்குகள் பற்றி கேட்டப்போது, “அதெல்லாம் வெறும் ஜோக்குகள் தானே. இன்றைய இளைஞர்களை பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்படுகிறேன். எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா… செம ஷார்ப்!” என்றார் கேஷூவலாக.
Rajini Jokes AutographJ2 640x440  Tidbits # 51 : புதிய பாட்ஷாவில் காத்திருக்கும் ஆச்சரியங்கள் – சுரேஷ் கிருஷ்ணா தகவல் & எந்திரன் பார்ட் 2 பற்றி ஷங்கர் கூறுவது என்ன?
தலைவர் தன்னைப் பற்றிய ஜோக்குகள் மீது, ஆட்டோகிராப் போட்டிருக்கும் Filmstreet Journal பத்திரிக்கையின் ஸ்கேன் பக்கம் உங்களுக்காக. அந்த ஆசிரியர் தன்னிடம் பேட்டி எடுத்தபோது தலைவர் போட்ட ஆட்டோகிராப் இது.
இது தொடர்பாக நமது தளத்தின் HOME PAGE ல் POLL ஒன்று வைத்துள்ளோம். உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.
(ஒரு லேட்டஸ்ட் ரஜினி ஜோக் சொல்லட்டுமா? “Rajini once played cricket. The first ball he hit fell in US and thus Grand Canyon was created!”)
5) எந்திரன் 2 – ஷங்கர் சொல்வது என்ன?
எந்திரன் 2 ல் நடிக்க சூப்பர் ஸ்டார் ஒப்புக்கொண்டுவிட்டதாகவும், ராணாவுக்கு பிறகு அது தான் என்றும் கிட்டத்தட்ட நம் ரசிகர்கள் முடிவே செய்துவிட்டனர். அது தொடர்பாக விவாதங்களும் நடந்து வருகின்றன. ஆனால் உண்மையில் அப்படி எதுவும் இல்லை. எந்திரன் முதல் பாகம் தந்த அற்புதமான அனுபவத்தில் திளைத்துப் போயிருக்கும் படக்குழுவினர் (ஜாக்பாட் அடித்த சன் பிக்சர்ஸ் உட்பட)எந்திரன் 2 வந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுவதன் வெளிப்பாடு தான் இதுவரை வந்த எந்திரன் 2 செய்திகள்.
robo audio 28 640x425  Tidbits # 51 : புதிய பாட்ஷாவில் காத்திருக்கும் ஆச்சரியங்கள் – சுரேஷ் கிருஷ்ணா தகவல் & எந்திரன் பார்ட் 2 பற்றி ஷங்கர் கூறுவது என்ன?
ஷங்கர் தற்போது ஜீவாவை வைத்து இயக்கி வரும் ‘நண்பன்’ படத்தில் பிசியாக இருக்கிறார். சூப்பர் ஸ்டார், ராணாவின் திரைக்கதையை இறுதி செய்யும் பணியில் இருக்கிறார். இந்த நிலையில், இவர்களுக்கு எந்திரன் 2 ஐ பற்றி சிந்திக்க நேரம் ஏது? மேலும் சூப்பர் ஸ்டார் ஒரு படத்தில் நடிக்கும்போது அடுத்த படத்தை பற்றி சிந்திக்கமாட்டார் என்பது அவரையரிந்தவர்கள் உணரும் உண்மை.
சரி… உண்மையில் எந்திரன் 2 பற்றி என்ன தான் சொல்கிறார் ஷங்கர் ?
ஊட்டியில் நடைபெறும் ‘நண்பன்’ ஷூட்டிங் இடைவெளியில், அவர் அளித்த பத்திரிக்கை பேட்டி ஒன்றில் இது தொடர்பாக கூறியுள்ள ஷங்கர், “எல்லோரோட எதிர்பார்ப்பும் எந்திரன் 2 ஐ பற்றி தான் இருக்கு. ஆனா ஆசைப்படுறது முக்கியமில்லே. முதல்ல நல்ல கதை வேணும்ல. இந்தப் படத்தை முடிச்சிட்டு அப்புறம் அதைப் பத்தி யோசிக்கணும்,” என்று கூறியிருக்கிறார்.
(கதையே ரெடியாகலையாம் தம்பிகளா… தெரிஞ்சிக்கோங்க!)
6) மூன்றாம் தலைமுறையின் சாய்ஸும் சூப்பர் ஸ்டார் தான்!
தமன்னா, அசின், சாய்னா நேவால், த்ரிஷா etc. etc. இவர்களையடுத்து சூப்பர் ஸ்டாருடன் நடிக்கவேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தியிருப்பவர் யார் தெரியுமா? மூன்றாம் தலைமுறையை சேர்ந்த நடிகை கார்த்திகா. ‘கோ’ படத்தில் ஜீவாவின் ஜோடியாக அறிமுகமாகும் இவர் சூப்பர் ஸ்டாருடன் பல படங்களில் ஜோடியாக நடித்த நடிகை ராதாவின் மகளாம். (அது யாருங்க ராதா? நம்ம பெரிய அண்ணன்களுக்கு தெரியுமா?)
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “தமிழில் முதல் படமான கோ எனக்கு நல்ல பெயரையும் அறிமுகத்தையும் பெற்றுத் தரும் என்பதில் மிகுந்த நம்பிக்கையோடிருக்கிறேன். பொதுவாக ரஜினி அங்கிளின் காந்தக் கண்களில் ஒரு வசீகரம் இருக்கிறது என்று அனைவரும் சொல்ல கேட்டிருக்கிறேன். சமீபத்தில் ரஜினி அங்கிள், என் அம்மாவை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோது, என் கண்களில் கவர்ச்சியும், உயிரோட்டமும் இருப்பதாக சொன்னாராம். ரஜினி சாரின் இந்த சர்டிபிகேட்டை கேட்டு நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவருடன் நடிக்க மிகவும் ஆசையாயிருக்கிறது.”
“தமிழ் சினிமாவில், அம்மா, பெரியம்மா (ராதா, அம்பிகா) போல நான் நல்ல பெயருடன் வரவேண்டும் என்று விரும்புகிறேன். இப்போதைய ஹீரோக்களில் நான் யாருடன் நடிக்க விரும்புகிறேன் என்பதைவிட எப்படிப்பட்ட கேரக்டரில், கதையில் நடிக்கிறேன் என்பதில் தான் நான் கவனம் செலுத்துவேன்” என்கிறார் இந்த ஸ்வீட் ஸ்டார்.
(ரானாவுல நிறைய ஹீரோயின்ஸ் தேவையாம்ல…. தெரியுமா?)
இது தொடர்பாக நமது தளத்தின் HOME PAGE ல் POLL ஒன்று வைத்துள்ளோம். உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

Overall rating


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...