எந்திரனின் அமோக வசூலால் திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சி! மதுரையில் நடந்த கூட்டத்தில் அறிவிப்பு!!

ந்திரன் வசூல் குறித்து அறிவிக்கவேண்டியவர்களே அறிவித்துவிட்டார்கள்.

திரையரங்கு உரிமையாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் மதுரையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. தங்களுக்கு தொடர்ந்து நஷ்டத்தை ஏற்படுத்தி வந்த ஒரு நடிகரின் படத்தை ரிலீஸ் செய்வது குறித்து நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில், மேற்படி நடிகர் நஷ்டத்தை ஈடு செய்யாவிட்டால் அவரது படத்தை ரிலீஸ் செய்யமாட்டோம் என்று அறிவித்துள்ளனர். மேலும், எந்திரனின் அமோக வசூலால் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். அது தவிர, தனக்கு தொடர்பு இருக்கிறதோ இல்லையோ தனது படங்களால் நஷ்டம் ஏற்பட்ட போது அதை சூப்பர் ஸ்டார் ரஜினி ஈடு செய்ததையும் சுட்டிக்காட்டி பாராட்டியிருக்கின்றனர். திரையரங்கு உரிமையாளர்களின் நோக்கம் எதுவோ நமக்கு தெரியாது… ஆனால் எந்திரனின் வசூல் சாதனை பற்றிய ஒரு மிகப் பெரிய உண்மையை கூட்டத்தில் அறிவித்ததற்கு நம் நன்றி.

DSC 8791 D  எந்திரனின்  அமோக வசூலால் திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சி! மதுரையில் நடந்த  கூட்டத்தில் அறிவிப்பு!!

மகாபாரதத்தின் உண்மையான ஹீரோ – சூப்பர் ஸ்டார் யாரென்றால் அது – கர்ணன் தான். மகா பாரதத்தை முழுதும் அறிந்தவர்கள் இதை மறுக்க மாட்டார்கள். கர்ணன் புகழ் பெற்றது வெறும் கொடையால் மட்டுமல்ல.. தியாகம், வீரம், நேர்மை, வாய்மை, வாக்கை காப்பாற்றுவது, பெரியோரை மதிப்பது, நட்பை போற்றுவது, வந்த பாதையை மறக்காது நினைவில் வைத்திருந்தது, உள்ளிட்ட பல நற்பண்புகளால் தான். சூப்பர் ஸ்டாரும் அந்த கர்ணனை போல தான். ஆகையால் தான் கலியுக கர்ணன் என்று நமது தளத்தில் வெளியாகும் ஒரு தொடருக்கு கூட பெயரிட்டுள்ளோம். ஆனால் இங்கு சில நடிகர்கள், கர்ணனின் குணநலன்களை சிறிது கூட நிஜத்தில் பின்பற்றாது அவரது பெயருக்கு மட்டும் ஆசைப்படுகின்றனர். வேறு என்னத்தை சொல்ல….

———————————————————————-
மதுரை – தினகரன் 28/11/2010 செய்தி

“பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே விஜய் படங்களை திரையிடுவோம்”
மதுரை, நவ. 28:

பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே நடிகர் விஜய் நடித்த திரைப்படங்களை திரையிடுவோம் என தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மதுரை மாநகர் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சிறப்புக் கூட்டம் மதுரையில் நடந்தது. தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். மதுரை மாநகர செயலாளர் கஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாநகர சங்கத்தலைவர் முத்துக்கிருஷ்ணன் துணைத்தலைவர் ரமேஷ், பொருளாளர் வெற்றிவேல், சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Dinakaran Madurai 28 11 10  pt 640x777  எந்திரனின் அமோக வசூலால் திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சி!  மதுரையில் நடந்த கூட்டத்தில் அறிவிப்பு!!

சங்க மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது: நடிகர் விஜய் நடித்து வெளிவந்த திரைப்படங்களால் தியேட்டர் உரிமையாளர்கள் நஷ்டம் அடைந்து வருகிறோம். மதுரையில் 52 தியேட்டர்கள் இயங்கி வந்த நிலையில் தற்போது, 32 தியேட்டர்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. மினிமம் கியாரண்டி முறையில் படங்களை திரையிடுவதன் மூலம் தியேட்டர் உரிமையாளர்கள் நஷ்டத்தை மட்டுமே சந்திக்க நேரிடுகிறது. ஒரு படத்தை மினிமம் கியாரண்டி முறையில் வாங்கி திரையிட்டால் அந்தப்படம் நஷ்டம் அடையும் போது, அந்தநஷ்டத்தை தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் ஈடு செய்வது இல்லை. அதேநேரத்தில் அந்தப்படம் லாபத்தில் ஓடினால் அதில் மட்டும் பங்கு கேட்கின்றனர்.

DSC 8791 E  எந்திரனின்  அமோக வசூலால் திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சி! மதுரையில் நடந்த  கூட்டத்தில் அறிவிப்பு!!

எனவே முன்பு போலவே விகிதாச்சார முறையில் திரையிட்டால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் வராது. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் டிக்கெட் கட்டணத்தையும் வெகுவாக குறைக்க முடியும். அனைத்து தியேட்டர்களிலும் விகிதாச்சார முறையில் திரைப்படங்களை வெளியிட தமி ழக அரசும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

நடிகர் ரஜினி நடித்த எந்திரன் படம் தியேட்டர் உரிமையாளர்களுக்கு அமோக வசூலை தந்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர் உரிமையாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் ரஜினிநடித்த பாபா, குசேலன் போன்ற படங்கள் நஷ்டத் தில் ஓடிய போது எங்களுக்கு உரிய நஷ்டத்தை ரஜினி கொடுத்து விட்டார். அதே போல் நடிகர் விஜய் நடித்த திரைப்படங்களால் எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தையும் அவர் எங்களுக்கு ஈடுசெய்து கொடுக்க வேண்டும்.

இதுகுறித்து நடிகர் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். பேச்சுவார்த்தைக்கு பின்னரே அவர் நடித்த திரைப்படங்களை தியேட்டர்களில் திரையிடுவது என முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
———————————————————————-

[END]

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...