ஐம்பது நாட்களை எந்திரன் தாண்டியிருக்கும் நிலையில், எந்திரன் இதுவரை குவித்துள்ள வசூல் – OFFICIAL வசூல் – எவ்வளவு தெரியுமா ? ரூ.350 கோடிகள்.
இது பற்றிய சன் குழுமத்தின் DINAKARAN.COM இல் வந்த செய்தி கடைசியில் தரப்பட்டுள்ளது. எந்திரனை ரோபோவின் தாயகமான ஜப்பானில் வெளியிட முயற்சிகள் நடப்பதாக கூறப்பட்டுள்ளதை கவனியுங்கள்.
50 வது நாளை தாண்டி வசூல் ரீதியாக எந்திரன் இப்படி ஒரு மகத்தான சாதைனையை செய்திருந்தாலும், அதிகப்படியான திரைகளில் சில ஸ்டேஷன்களில் படம் நீக்கப்பட்டதை (அதுவும் 50 நாட்கள் வெற்றிகரமாக ஓடியபின்பு) பற்றி நம் ரசிகர்கள் குறைப்பட்டுக்கொள்கிறார்கள். அது தேவையற்ற ஒன்று. இந்தியா முழுதும் வெற்றிகரமாக ஓடி, வசூலில் சாதனை படைத்துள்ள ALL-TIME BLOCKBUSTER களான டபாங், த்ரீ இடியட்ஸ் போன்ற படங்களுக்கு இது போன்று சென்டர் லிஸ்ட்டுகளையா உதாரணமாக கூறுகிறார்கள்? அதெல்லாம் பழைய காலம் தம்பிகளா.
இப்போல்லாம் GROSS COLLECTIONS தான் பேசும். WIDE RELEASE. QUICKER REVENUE. SECURED INVESTORS என்ற வார்த்தைகள் தான் இப்போ திரைப்பட வெளியீடுகளில் கடைப்பிடிக்கப்படும் மந்திரம். சும்மா ‘அங்கே ஓடிச்சு, இங்கே ஓடிச்சு’ ன்னு சொல்லிக்கிட்டு இருக்குறதெல்லாம் சின்னப்பிள்ளைத்தனம். வசூல் எவ்ளோ? அது தான் மேட்டர்.
தமிழ் சினிமாவின் ட்ரென்டையே எந்திரன் தற்போது மாற்றிவிட்டுள்ளது. மார்க்கெட் உள்ள முன்னணி நட்சத்திரங்களின் (?!!) திரைப்படங்கள் அனைத்தும் இனி (எந்திரன் அளவுக்கு இல்லாவிட்டாலும்) அதிகப்படியான தியேட்டர்களில் தான் ரிலீசாகும். (ஓடுமா ஓடாதான்னு என்னை கேட்க்காதீங்க!).
இருப்பினும் சென்டர்கள் பற்றி ஆதங்கப்படும் நம் ரசிகர்களுக்காக இதை தருகிறேன். இதில் கூட நம் சாதனையை யாரும் நெருங்க வில்லை.
இன்றைய நிலவரத்துக்கு (30/11/2010) எந்திரன் ஓடிக்கொண்டிருக்கும் நேரடி (Released in 430 screens) திரையரங்குகள் எவ்வளவு தெரியுமா?
சென்னை, செங்கல்பட்டு g (C C) – 17
வட ஆற்காடு, தென் ஆற்காடு (N A )- 8
நெல்லை, கன்னியாகுமரி (T K) – 3
மதுரை, ராம்நாட் (M R) – 7
கோவை, சேலம் (C S) – 7
திருச்சி, தஞ்சாவூர் (T T) – 8
———————————–
மொத்தம் 50 திரையரங்குகள் (60 ஆம் நாளில்)-
———————————–
குறிப்பு :
* தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மேற்கூறிய இந்த ஆறு விநியோக வட்டங்களுக்குள் அடங்கிவிடும்.
* வெளிமாநிலங்கள், மற்றும் அயல்நாடுகள் இதில் சேர்க்கப்பவில்லை.
* ரிலீஸ் ஆனா நாள் முதல் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர்களே மேற்கண்ட பட்டியலில் உள்ளது. ஷிப்டிங் முறையில் ஓடிக்கொண்டிருக்கும் திரைகள் இதில் சேர்க்கப்படவில்லை.
சிவாஜிக்கு பிறகு எந்திரன் தான்!2007 ஆம் ஆண்டுக்கு பிறகு – சிவாஜிக்கு பிறகு – அதிக திரையரங்குகளில் 60 ஆம் நாள் காணும் ஒரே படம் – எந்திரன் தான். எந்திரன் தான். எந்திரன் தான். இடையில் மெகா பட்ஜெட் படங்கள் சில ரிலீசாயின என்பது குறிப்பிடத்தக்கது. சிவாஜியின் சாதனையை அவை தொடக்கூட முடியவில்லை. எந்திரன் சாதனையையும் அவை நெருங்க முடியவில்லை. எல்லாப் புகழும் இறைவனுக்கே!
“இன்றைய ட்ரெண்டில் 50 நாட்கள் ஓடினாலே 100 நாட்கள் ஓடியதற்கு சமம்” – மாயாஜால் மீனாக்ஷி சுந்தரம்
மாயாஜால் மேலாளர் திரு.மீனாக்ஷி சுந்தரம் நமது தளத்திற்காக நேற்று அளித்த விசேஷ தகவல் :
“இப்போல்லாம் ஒரு படம் 50 நாட்கள் ஓடினாலே நூறு நாட்கள் ஓடியதற்கு சமம். காரணம் அதிகரித்துவிட்ட ரிலீஸ் ஸ்டேஷன்கள். சூப்பர் ஹிட் என்று வர்த்தகத்தால் டிக்ளேர் செய்யப்பட்ட படங்கள் கூட 50 நாட்கள் தாண்டி தற்போது எடுபடுவதில்லை. எந்திரனை பொறுத்தவரை தமிழகம் முழுதும் பல திரையரங்குகளில் 50 நாட்கள் தாண்டியிருக்கிறது. அவற்றை நூறு நாட்கள் என்று தான் கணக்கில் கொள்ளவேண்டும். எங்கள் மல்டிபிளெக்ஸை பொறுத்தவரை ரிப்பீட் ஆடியன்ஸ்களால் எந்திரன் இன்னும் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. அனைத்து காட்சிகளும் பெரும்பாலும் ஃபுல்லாகிவிடுகிறது. நூறு நாட்கள் கியாரண்டி.” என்று முடித்துக்கொண்டார் திரு.மீனாக்ஷி சுந்தரம்.
(இன்றைய ட்ரெண்டுக்கு நூறு நாட்கள் ஒரு படம் ஓடுதுன்னு சொன்னா அது சில்வர் ஜூபிலி தான்! வேறென்ன வேண்டும்?)
————————————————————————————————
//சிலிக்கான் சிங்கத்தின் அசத்தல் வெற்றி!
Dinakaran.com 11/19/2010 5:46:57 PM
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் பிரம்மாண்ட தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய சூப்பர் ஸ்டாரின் எந்திரன் திரைப்படம் உலகம் முழுக்க 50 நாட்களை கடந்து வெற்றி நடைபோடுகிறது. கடந்த அக்டோபர் 1-ம் தேதி உலகம் முழுக்க 3000 திரையரங்குகளில் வெளியாகி வசூலில் புதிய சரித்திரம் படைத்தது. உள்நாடு, வெளிநாடு இரண்டிலும் சேர்த்து இந்தப் படத்தின் மொத்த வசூல் ரூ 350 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாரான படம் மட்டுமல்ல… இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவித்த படமும் எந்திரனே. தெலுங்கில் புதிய வசூல் சாதனை நிகழ்த்தியுள்ள ரோபோ, இன்னும் பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆந்திராவில் மகதீரா படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது ரோபோ. குஜராத், ஹரியானா போன்ற வெளி மாநிலங்கள், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் சில குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டும் இந்தப் படம் 50 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருப்பதாக சன் பிக்சர்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் எந்திரன் படத்தை ஜப்பானில் வெளியிடும் முயற்சிகளில் உள்ளது சன் பிக்சர்ஸ்.
அரிமா அரிமா பாடலில் ரஜினியை வைரமுத்து சிலிக்கான் சிங்கம் என எழுதியுள்ளார். இந்த சிலிக்கான் சிங்கத்திற்கு ஓய்வு கிடையாது என்பதை எந்திரன் நிரூபித்துள்ளது.//
————————————————————————————————
[END]
No comments:
Post a Comment