பொதுவாக செய்திகள் நமக்கு கிடைத்தவுடன் அதன் நம்பகத் தன்மை பற்றி ஆராய்ந்து, அது பற்றிய ஆதாரங்கள் எல்லாம் திரட்டி, பின்னர் உங்களுக்கு அளிப்பது தான் நம் வழக்கம். ஆனால் அதற்குள் சில செய்திகள் பழையதாகிவிடுகிறது. ஆகையால் வேகமாக மாறிவரும் இந்த அவசர உலகத்தின் தன்மைக்கும் சூழலுக்கும் ஏற்ப, செய்திகள் கிடைத்தவுடன் உடனுக்குடன் உங்களிடம் பகிர்ந்துகொள்ள இந்த புதிய பகுதி தொடங்கப்படுகிறது. இந்த பகுதியில் இடம்பெறும் செய்திகளின் FOLLOW-UP செய்திகள் மற்றும் புகைப்படங்கள், கூடுதல் தகவல்கள் திரட்டப்பட்டு வேறு பதிவுகளில் அடுத்து வெளியிடப்படும். ஓகே?
1) எந்திரன் ஆகஸ்ட் 15 ரிலீஸ் ?
ஒரு அலுவல் விஷயமாக பார்க் ஷெரட்டன் ஓட்டலுக்கு நேற்று வந்திருந்த சூப்பர் ஸ்டாரை ஒரு செய்தியாளர் தற்செயலாக சந்தித்தார்.
வேகமாக சென்ற சூப்பர் ஸ்டாரிடம் சில வார்த்தைகளை பைட்டுகளாக அந்த செய்தியாளர் பெற்றார். சூப்பர் ஸ்டார் அவரிடம் கூறியதிலிருந்து, “எந்திரன் முடிவடையும் தருவாயில் உள்ளது. ஆகஸ்ட் 15 ரிலீஸ் செய்ய உத்தேசித்திருக்கிறோம். நான் 100% சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் ரசிகன். அடுத்த படத்தை பற்றி இதுவரை யோசிக்க வில்லை.”
இந்த செய்தி நேற்று NDTV-HINDU தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது.
சூப்பர் ஸ்டாரின் முதல் படமான ‘அபூர்வ ராகங்கள்’ 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 தான் ரிலீசானது என்பது குறிப்பிடத்தக்கது. தவிர வேறு சூப்பர் ஸ்டாரின் சில சூப்பர் ஹிட் படங்களும் ஆகஸ்ட் 15 ரிலீஸ் ஆகியிருக்கிறது.
2) சூப்பர் ஸ்டார் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்ற ஆஷ்ரம் பள்ளி ஆண்டு விழாவில் மூத்த கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்
ஆஷ்ரம் பள்ளியின் ஆண்டு விழா நேற்று முன்தினம் மாலை (20/04/2010) சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் இதே தருணங்களில் இப்பள்ளியின் ஆண்டுவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
அஸ்வின், சௌந்தர்யா, தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், மதுவந்தி அருண் உள்ளிட்ட சூப்பர் ஸ்டாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள், திரையுலக பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
விழாவில் பிரபல இந்தி நடிகர் தேவ் ஆனந்த, வைஜயந்திமாலா பாலி, Dr. பாலமுரளிகிருஷ்ணா, ரங்கநாயகி ஜெயராமன், சித்ராலயா கோபு, கே.வி. சேஷாத்ரிநாத சாஸ்த்ரிகள் ஆகியோர் விருதுகள் தரப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டாரும், திருமதி லதா ரஜினியும் பேசினர்.
(Thanks to : Times of India)