1) ரஜினியின் ஒழுக்கத்தையும் அர்பணிப்பையும் பார்த்து வியந்திருக்கிறேன் - அமிதாப் பச்சன்பத்திரிக்கை பேட்டி, தனது ப்ளாக், ஷூட்டிங், மகன் மற்றும் மருமகளுடன் சினிமா விழாக்கள் என்று படு பிசியாக இருக்கிறார் அமிதாப் பச்சன்.
ப்ரோகெரியா என்னும் நோயால் பாதிக்கபட்டு இளைமையிலேயே முதுமை தோற்றம் ஏற்படும் 14 வயது சிறுவனாக இவர் நடித்துள்ள “பா” படம் தான் பாலிவுட்டின் லேட்டஸ்ட் சென்சேஷன். இப்படத்திற்கு இசை நம்ம இசைஞானி இளையராஜா என்பது கூடுதல் தகவல்.
படம் குறித்தும் இதர விஷயங்கள் குறித்தும், Times of India வுக்கு அமிதாப்ஜி அளித்துள்ள பேட்டியில் சூப்பர் ஸ்டார் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். “ரஜினி கமல் இருவருடனும் எனக்கு நெருங்கிய நட்பு உண்டு. ரஜினி சிவாஜியை முடித்து ரிலீஸ் செய்த சமயத்தில், நாங்கள் மும்பையில் சந்தித்தோம். எனக்கு திரையிட்டு காண்பிப்பதற்காக சிவாஜி படச் சுருளை மும்பைக்கு கொண்டுவந்தார் ரஜினி. நான் அவருடன் மூன்று படங்களில் நடித்திருக்கிறேன். அவரது ஒழுக்கத்தையும் அர்பணிப்பையும் பார்த்து வியந்திருக்கிறேன். அவருக்கென்று விஷேஷ தேவைகள் எதுவும் தேவைப்படாது. ஷூட்டிங்கிர்க்கு நன்றாக தயார் செய்து கொண்டு வந்து அவர் காட்சிகளை அனாயசமாக முடிப்பார். அது தான் ரஜினி. கமல்… அவர் கூட என் நெருங்கிய நண்பர் தான். சமீபத்தில் நடைபெற்ற கமல் - 50 பாராட்டு விழாவில் நான் கலந்துகொள்வதாக இருந்தது. கடைசி நேரத்தில் வரமுடியாது போய்விட்டது.”
2) ரஜினியுடன் டூயட் - தமன்னாவின் லட்சியம்
தமிழ் சினிமாவில் நடிக்கும் அனைத்து நடிகைகளுக்கும் ஒரு லட்சியம் இருக்கும் - சூப்பர் ஸ்டாருடன் ஒரு படத்திலாவது ஜோடி சேர்வது தான் அது. காரணம் ஒரே படத்தில் உலகப் புகழ், A B C என மூன்று சென்டர்களிலும் பாப்புலாரிட்டி இப்படி பல இருந்தாலும் முக்கிய காரணம் சூப்பர் ஸ்டாருடன் நடிக்காமல் அவர்களது திரையுலக வாழ்க்கை நிறைவு பெறுவதில்லை என்பது தான்.
தமிழ் திரையுலகின் லேட்டஸ்ட் சென்சேஷன் தமன்னா மட்டும் விதிவிலக்கா என்ன? எப்படியாவது சூப்பர் ஸ்டாருடன் ஒரு படத்திலாவது ஜோடி சேர்ந்துவிட வேண்டும் என்ற தீராத ஆசை இருக்கிறதாம் இந்த தேவதைக்கு. “அது தாங்க எல்லா நடிகைகளோட லட்சியமா இருக்கும்” என்கிறார் அம்மணி. லட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள்.
சூப்பர் ஸ்டாருக்கு கூட ஒரு நடிகை கூட நடிக்கிறதுன்னு ஒரு லட்சியம் இருக்கு. தெரியுமுங்களா? மீனாவுக்கு மகனா ஒரு படத்திலாவது நடிக்கனும்கிறது தான் அது. அட நெசமாத்தாங்க. ஒரு விழாவுலே தலைவரே சொன்னது இது… (உனக்கிருக்கும் இளமைக்கு மீனா என்ன ஸ்ரேயாவுக்கே மகனா நீங்க நடிக்கலாம் தலைவா…!!)
3) “ரஜினியின் படங்கள் எதையும் நான் மிஸ் செய்வதில்லை” - Ethical Hacker அங்கித் ஃபாடியாமென்பொருள் மற்றும் கணினித் துறையில் புகழ் பெற்ற ஒரு சொல் “Ethical Hacking”. இதை செய்பவர்களுக்கு பெயர் Ethical Hacker. இந்த துறையில் புகழ் பெற்றவர் தான் அங்கித் ஃபாடியா என்னும் இந்த 24 வயது இளைஞர். MTv யில் What the hack என்ற இவர் நிகழ்ச்சி ரொம்ப பிரபலம். தவிர பல பெரிய கார்பரேட் கம்பெனிகளுக்கு Hacking செக்யூரிட்டி ஆலோசகராக உள்ளார். மும்பை குண்டுவெடிப்பு உள்ளிட்டட பல வழக்குகளில் போலீசாருக்கு இவர் மெயில்களை ட்ரேஸ் செய்ய உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் சென்னை வந்த அங்கித் ஃபாடியா, செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியது, “எனக்கு திரைப்படங்கள் பார்ப்பது மிகவும் பிடித்த ஒரு விஷயம் அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படங்கள் என்றால் கொள்ளைப் பிரியம். அவர் படங்கள் ஒன்றை கூட நான் மிஸ் செய்ததில்லை. சிவாஜி தி பாஸ் உட்பட.” - (Source Deccan Chronicle)
யார் இந்த அங்கித் ஃபாடியா? இவர் ரஜினியை பத்தி ஏதோ ரெண்டு வார்த்தை பேசினதெல்லாம் ஒரு விஷயமா என்று எண்ண வேண்டாம். அங்கித் ஃபாடியா யார் என்பதையும் அவர் செய்யும் பணி, இருக்கும் துறை எத்தகையது என்பதையும் பற்றி முழுமையாக தெரிந்துகொண்டால், அப்பொழுது புரியும் இப்படி ஒருத்தர் நம்ம தலைவருக்கு ரசிகரா இருக்கிறது நமக்கு பெருமை என்று. (A B C என ALL CLASS MASS இருக்குறவராச்சே தலைவர்!!)
கொசுறு தகவல்: அங்கித் ஃபாடியா பிறந்தது நம்ம தமிழநாட்டில் - கோயமுத்தூரில் தாங்க.
What is Ethical Hacking?
http://ezinearticles.com/?What-Is-Ethical-Hacking?&id=8424844) சிறந்த நடிகர் விருது - ரஜினி வரும் 8 ஆம் தேதி பெறுகிறார்தமிழக அரசின் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசு திரைப்பட விருதுகளில் அதிகபட்சமாக சிவாஜி திரைப்படம் பல்வேறு துறைகளில் ஆறு விருதுகளை அள்ளியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2005 ஆம் ஆண்டிற்கான “சிறந்த நடிகர்” விருதைப் பெரும் சூப்பர் ஸ்டார்
விருது வழங்கும் விழா வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி, செவ்வாய்கிழமை அன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. தமிழ முதல்வர் மு.கருணாநிதி கலந்து கொண்டு விருதுகளை வழங்குகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினி உட்பட பல்வேறு கலைஞர்கள் இதில் பங்கேற்று விருதுகளை பெறவுள்ளனர்.
சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளுக்கு நான்கு நாட்கள் முன்னதாக நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால் சூப்பர் ஸ்டாரின் உரையை கேட்டக்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
5) எந்திரன் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கலாம் - Economic Timesதென்னிந்தியா திரைப்படங்களின் வருவாய் மற்றும் வசூல் குறித்த அலசல் கட்டுரை ஒன்றை The Economic Times நாளிதழ் நேற்று முன் தினம் வெளியிட்டது. (தினத் தந்தியில் அதன் தமிழ் மொழி பெயர்ப்பு நேற்று வெளியானது.) அக்கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது:
“மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் அசோக வனம் மற்றும் ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் எந்திரன் ஆகியவை இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. வர்த்தக ரீதியில் இந்த இரண்டு திரைப்படங்களும் சாதனை படைக்கும் என்று கூறப்படுகிறது. புத்தாண்டில், தென் மாநிலங்களின் திரைப்பட துறைகள் ஈட்டும் மொத்த வருவாயில், இவ்விரண்டு திரைப்படங்களின் பங்களிப்பு யாரும் எதிர்பாராத அளவுக்கு இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.”
6) ரஜினி படித்த முதல் தமிழ் நாவல்சூப்பர் ஸ்டாருக்கு இருக்கும் இலக்கிய ஆர்வம் நாம் அனைவரும் அறிந்ததே. தமிழில் வெளியாகியுள்ள தலை சிறந்த படைப்புக்களை பெரும்பாலும் அவர் படித்திருப்பார். அந்தளவு அவர் ஒரு இலக்கிய ஆர்வலர். அமரர் கல்கியின் எழுத்திற்கு அவர் மிகப் பெரிய ரசிகர் என்பதை அவரே கூறியிருக்கிறார். அது சரி… சூப்பர் ஸ்டார் படித்த முதல் தமிழ் நாவல் எது தெரியுமா? தலைவர் படித்த முதல் தமிழ் நாவலா? கேக்கவே ஆர்வமா இருக்கிறதல்லவா?
இது நடந்தது 1978 ஆம் ஆண்டு.
சந்திரகாந்தம் என்னும் நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் ஒரு முறை இம்பீரியல் ஓட்டலுக்கு உணவருந்த இயக்குனர் மகேந்திரனுடன் வந்தார் ரஜினி. மறுநாள் ரஜினி இருவரையும் தனது வீட்டிற்கு உணவருந்த அழைத்தார்.
இலக்கிய ஆர்வலரான மகேந்திரன் அப்போது ரஜினியிடம் கேட்டார், “ரஜினி, நீங்க தி.ஜானகிராமன் எழுதிய “அம்மா வந்தால்” நாவலை படித்திருக்கிறீர்களா?”“இல்லே… இது வரை படிச்சதில்லே” என்று சொல்லிவிட்டு “அந்தப் புத்தகம் கிடைச்சா படிச்சி பாக்கிறேன்,” என்றார் தனக்கே உரிய ஸ்டைலில் ரஜினி. இதைக்கேட்ட மகேந்திரனுடன் வந்த நண்பர் அடுத்த நாள் காலையே அந்த நாவலை கடையில் வாங்கி அதனை ஒரு தயாரிப்பு நிர்வாகி மூலம் ரஜினிக்கு கொடுத்தனுப்பினார்.
சில மாதங்கள் கழித்து மீண்டும் ரஜினியை சந்தித்தபோது, “சார்… தி.ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவலை படிச்சி பார்த்தீங்களா?”
“கையில் கிடைச்சவுடன் படிச்சிட்டேன். நான் படிச்ச முதல் தமிழ் நாவலும் அது தான்” என்றார் முகமெல்லாம் மலர. தி.ஜானகிராமன் எழுதிய அந்த நாவல் தான் ரஜினிக்கு மேலும் பல தமிழ் நாவல்களை படிக்கும் ஆர்வத்தை தூண்டியது என்று கூறலாம். தி.ஜானகிராமனை பின்னர் ஒரு சமயத்தில்நண்பர் சந்தித்தபோது இதை கூற மிகவும் மகிழ்ந்தார் தி.ஜா. அப்போது ஜானகிராமன் அகில இந்திய வானொலியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். (’அமுதசுரபி’ தீபாவளி மலரில் படித்தது இது.)
*More pictures to be added later in this p