பதவிக்காக காத்திருப்பர் சிலர் கணக்காக…ஆனால் அந்த பதவியே காத்திருக்குது உனக்காக!


ஆயுத பூஜை சிறப்பு திரைப்படமாக இன்று சன் டிவியில் ஒளிபரப்பான ‘முத்து’ திரைப்படத்தை பார்த்துகொண்டிருந்தேன்.

காமெடி கலந்த அப்பாவி கேரக்டரில் சூப்பர் ஸ்டார் வெளுத்துக் கட்டியிருப்பார். சும்மா சொல்லக்கூடாது. இத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் படம் ப்ரெஷாக இருக்கிறது. (பின்னே ஜப்பானையே மயக்கிய படமாயிற்றே இது)
படத்தில் உள்ள பல காட்சிகள் தற்போதுள்ள சூழ்நிலைக்கு பொருத்தமாக இருப்பதாகப்பட்டது. அதிலும் ஒரு காட்சி மிகவும் பொருத்தம்.
மீனாவுடன் குதிரை ரதத்தில் தப்பிக்கும் அந்த காட்சி….
மீனா: “எங்கேயா போற? வண்டி பாட்டுக்கு போய்கிட்டே இருக்கு?”
ரஜினி: “யாருக்கு தெரியும்…?! போற ரூட்டை பத்தி என்னைக்குமே நான் கவலைப்பட்டது கிடையாது. ஆண்டவன் மேல பாரத்தை போட்டு வண்டியை விட வேண்டியது தான். அது போற ரூட்டு போகட்டும்.”
நிஜத்திலும் சூப்பர் ஸ்டாரின் நிலை இதையே தெரிவிப்பதாக நான் நினைக்கிறேன்.
இப்போதுகூட ஆண்டவன் மேல் பாரத்தை போட்டுவிட்டுதான் தற்போது தனது கடமையை (எந்திரனில் நடிப்பது) செய்துகொண்டிருக்கிறார். விரைவில் ஆண்டவன் அவரை சேர்க்க வேண்டிய ரூட்டில் சேர்ப்பான் என நம்பலாம்.
தலைவா, பதவிக்காக காத்திருப்பர் சிலர் கணக்காக…ஆனால் அந்த பதவியே காத்திருக்குது உனக்காக!
நடப்பதெல்லாம் நன்மைக்கே!!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...