ஆக்க பொறுத்த ரசிகர்கள் ஆறப் பொறுக்க கூடாதா?


‘ஆந்திராவில் பிரஜா ராஜ்ஜியம்; தமிழகத்தில் ரஜினி ராஜ்ஜியம்’ என்று சில நாட்களுக்கு முன்பு போஸ்டர் ஒட்டி பரபரப்பு ஏற்படுத்திய கோவை ரசிகர்கள் தற்போது ஒரு படி மேலே சென்று ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்து அதற்கென தனியாக ஒரு கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். செய்தியாளர்களிடம் இதை தெரிவித்துள்ள கோவை ரசிகர்கள், ரஜினி இதை ஏற்க மறுக்கும் பட்சத்தில் உண்ணாவிரதம் உள்ளிட்ட அறப்போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளனர்.
கோவை ரசிகர்களின் இந்த செயல் மற்ற ரசிகர்களை திடுக்கிட வைத்துள்ளது. தனது அரசியல் பிரவேசம் மற்றும் நிலைப்பாடு குறித்து ரஜினியாகவே அறிவிப்பார் என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை போய்விட்டது தெரிகிறது. எனவே பொறுமை இழந்த அவர்கள் இந்த அளவிற்க்கு போயிருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம், நியாயமான முறைகளில் அரசியலுக்கு ரஜினி வர வேண்டும் என்று போராடிகொண்டிருக்கும் ரசிகர்களின் முயற்சிகளுக்கு இதன் மூலம் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்த செயலின் விளைவுகள் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை? சூப்பர் ஸ்டாருக்கு கடும் கோபத்தை வரவழைக்குமா அல்லது நிலைமையின் தீவிரத்தை அவர் உணர்ந்து அதற்க்கு ஏற்ற வகையில் ஏதாவது நடவடிக்கை எடுப்பாரா என்று தெரியவில்லை…
கோவா படப்பிடிப்பிலிருந்து சூப்பர் ஸ்டார் திரும்பியவுடன் நிச்சயம் சந்திப்பு நடக்கும் என்ற நிலையில், அதற்குள் அவசரப்பட்டு ரசிகர்கள் இப்படி செய்தது வருத்ததிற்குரியது.
ஆக்க பொறுத்தவர்கள், ஆற பொறுக்க கூடாதா? இப்படியா, வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைப்பது?

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...