நேற்று நடந்த ஒரு தோல்விப் படத்தின் வெற்றி விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரு.பாலச்சந்தர், தொடர் தோல்விக்கு சொந்தக்காரரான அந்த நடிகரை ‘அடுத்த சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து மகிழ்ந்திருக்கிறார்.
அதற்க்கு அவர் அளித்துள்ள விளக்கம் கொடுமை. “நான் விஜயை ‘Superstar in the making’ என்று கூறியிருந்தேன். அது சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும் அது தான் உண்மை” என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்.
அடுத்த சூப்பர் ஸ்டார் ?
கடந்த வருடம் ஒரு வாரப் பத்திரிக்கையின் பேட்டியில் கூட “அடுத்த சூப்பர் ஸ்டார் என்னும் இலக்கை விஜய் வேகமாக அடைந்துகொண்டிருக்கிறார்” என்று கூறியிருந்தார். கொதித்துப்போன நம் ரசிகர்கள் வழக்கம் போல் பிறகு அடங்கிப் போனார்கள்.
நான் கே.பி. அவர்களை கேட்க்க விரும்புவது இது தான்:
“சும்மா அதிர்ஷடத்தால் வந்ததா சூப்பர் ஸ்டார் பட்டம் ரஜினிக்கு?”
சூப்பர் ஸ்டார் பட்டத்தை ஏற்க மறுத்த ரஜினி
தனது வாழ்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும், பல்வேறு துவேஷ பிரச்சாரங்களுக் கிடையே எதிர் நீச்சல் போட்டு வெற்றிகளை குவித்து பெற்ற அந்தஸ்து அது.
கலைப்புலி தாணு அவருக்கு பைரவி படத்தின் போது இதை அளித்தாலும், (ரஜினி அதை ஏற்க மறுத்தது தனிக் கதை.) அது அப்போது ஒரு பட்டம் என்ற அளவிலேயே இருந்தது. பிறகு மக்களாக அவருக்கு விரும்பி அதை அவருக்கு ஒரு ‘அந்தஸ்தாக’ அளித்தார்கள்.
வெறும் பட வெற்றிகளால் கிடைத்ததா இந்த பட்டம்?
மேலும் ஏதோ பட வெற்றிகள் மூலம் கட்டப்பட்டதல்ல இந்த சூப்பர் ஸ்டார் சிம்மாசனம். அவரது அவரது பல்வேறு நற்பண்புகளால் கட்டப்பட்டது. அவரது நடிப்புக்காக அவரது ரசிகர்களாக ஆனவர்களைவிட அவரது குணத்துக்காக ரசிகர்கள் ஆனவர்கள் தான் நிறைய.
சூப்பர் ஸ்டாரின் சிம்மாசனம் ஆனது எதனால்?
வெற்றி, பொறுமை, சகிப்புத்தன்மை, பெருந்தன்மை, தன்னிலும் எளியவரிடம் பரிவு காட்டுவது, ஈகை, துணிவு, கொடை, எளிமை, அடக்கம், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதிருத்தல், பக்தி, குடும்ப நலன், தேசப்பற்று, தெய்வ பக்தி இப்படி பல நற்குணங்களால் கட்டப்பட்டுள்ள சிம்மாசனம் அது. அதை போய் ஒரு தொடர் தோல்வி தந்துகொண்டிருக்கும் சுய விளம்பரத்துக்கு அலையும் ஒரு நடிகருக்கு வாரி வழங்குகிறீர்களே இது நியாயமா? மேற்கூறிய ஏதாவது ஒரு குணம் இருக்குமா அந்த நடிகரிடம்? சரி வணிக வெற்றிக்காக வழங்கப்படும் பட்டம் சூப்பர் ஸ்டார் பட்டம் என்றே வைத்துக்கொள்வோம். அந்த நடிகரிடம் அது கூட இல்லையே? தொடர்ந்து இரு பெரும் தோல்வி படம் கொடுத்த நடிகராயிற்றே அவர். எப்படி சார் எப்படி மனம் வந்தது உங்களுக்கு? சூப்பர் ஸ்டார் தங்களின் சீடர் என்பதாலேயே நீங்கள் இப்படி நடந்துகொள்கிறீர்களா?
தேவையெனில் வேறு ஏதாவது ஒரு பட்டத்தை அவருக்கு நீங்கள் வழங்கியிருக்கலாமே? யார் தடுக்க போகிறார்கள்?
தங்களுக்கு உதவப் போய் குசேலனுக்காக கால்ஷீட் அளித்த ஒரு காரணத்தினாலேயே ரஜினி பலவற்றை இழந்துவிட்டார். இதை நீங்களே வேதனையுடன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தீர்கள். (குசேலனில் நடந்த பல திரைமறைவு சம்பவங்கள் ரசிகர்களுக்கு இன்னும் தெரியாது. அது ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளும் புரியாது.) இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு தான்தோன்றி நடிகரை பார்த்து “அவர் சூப்பர் ஸ்டார்” என்கிறீர்கள். இது தான் நீங்கள் ரஜினிக்கு செய்யும் கை மாறா? அதுவும் குறுக்கு வழிகளில் முயன்று, ரஜினி பீல்டில் இருக்கும்போதே அவரை குப்புற தள்ளி அந்த நாற்காலியை அடையத்துடிக்கும் ஒரு பேராசை பிடித்த நடிகருக்கு?
உங்களின் இந்த பேச்சு எத்தனை ரசிகர்களை புண்படுத்தியிருக்கிறது தெரியுமா?
இப்படி ஒரு கதை உண்டு…
“இது போல நீங்கள் ஏதாவது புகழ்ந்து பேசி அந்த நடிகருக்கு பூஸ்ட் கொடுப்பீர்கள் என்ற ஒரே காரணத்தினாலேயே சென்ற வருடம் போக்கிரி படத்தின் வெள்ளி விழாவுக்கு (??!!!!) தங்களை தலைமை தாங்க அழைத்தார்கள். தாங்களும் சென்றீர்கள். ஆனால் மிகவும் சாமர்த்தியமாக அந்த நடிகரை ‘சூப்பர் ஸ்டார்’ அப்படி இப்படி என்று புகழ்ந்து பேசுவதை தவிர்த்தீர்கள். அதற்க்கு பதில் அந்த பட நாயகியை நீங்கள் அவரது ரசிகன் என்று புகழ்ந்து பேசி சமாளித்தீர்கள். அதை நாங்கள் மிகவும் ரசித்தோம். (அப்பா மகன் இருவரும் நன்கு ஏமாந்தார்கள்).” - இப்படி ஒரு கதை உண்டு கோடம்பாக்கத்தில்.
“தற்போது வேலை முடிந்துவிட்டது. இதோ இன்னும் ஒன்றிரண்டு படங்களே நடிக்க இருக்கும் சூப்பர் ஸ்டாரை வைத்து ஒரு படமும் எடுத்து அதை நல்ல விலைக்கு விற்று லாபமும் பார்த்துவிட்டீர்கள். இனி அவர் தேவையில்லை. எனவே கண்டவர்களுக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தை வாரி வழங்குகிறீர்கள்..” என்று நான் அப்படி கூட நினைக்கவில்லை. பல ரசிகர்கள் நினைக்கிறார்கள்.
உங்களுக்கு உரிமை உண்டு
இத்தனைக்கும் பிறகும், உங்கள் மேல் மிகவும் மரியாதை வைத்திருக்கிறோம். சூப்பர் ஸ்டாரின் ரசிர்கர்களல்லவா நாங்கள். அவரது குணங்களின் தாக்கம் எங்களிடம் சிறிதாவது இருக்காதா என்ன? சூப்பர் ஸ்டாரின் இந்த வாழ்வு நீங்கள் கொடுத்தது என்று நாங்கள் நன்கு அறிவோம். தலைவரின் மேல் தங்களுக்கு உள்ள உரிமையை நாங்கள் என்றும் மறுக்கவில்லை, மறைக்கவில்லை. அவரை விமர்சிப்பதற்கான முழு உரிமையும்கூட தங்களுக்குத்தான் உண்டு. ஆனால் அவர் கடினமாக உழைத்து பெற்ற பட்டத்தை தகுதியற்றவர்களுக்கு வாரி வழங்க அல்ல. அதனால் தான் சற்று உரிமையுடன் உங்களிடம் பேசுகிறோம். வேண்டுகோள் வைக்கிறோம்.
Daily Thanthi Kuruviyaar Ques & Answer (05/10/08)
சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது கோடிக்கணக்கான ரஜினி ரசிகர்களின் உணர்வு, உரிமை சம்பந்தப்பட்டது. அதை அவரே விரும்பினாலும் நாங்கள் யாருக்கும் விட்டுதர முடியாது. சிறிதளவு தகுதியானவர்களுக்கே அதை தரமுடியாத பட்சத்தில் ரஜினியின் கால் தூசுக்கு கூட சமமாகதவர்களுக்கு எப்படி அதை தர முடியும்?
குறிப்பு:அடுத்த சூப்பர் ஸ்டார் என்று மீடியாவாலும், திரையுலகப் பிரமுகர்களாலும் பல்வேறு காலகட்டத்தில் அழைக்கப்பட்ட கீழ் கண்ட நடிகர்கள் இப்போது எங்கே? யாராவது சொல்லுங்களேன்…
மோகன், முரளி, ராஜ்கிரண், பிரபுதேவா, ராமராஜன், விக்ரம், பிரஷாந்த் etc.etc.,

No comments:
Post a Comment