பத்திரிக்கைகள் மேலும் பெரிதுபடுத்தி மக்களை குழப்பிவிட்டுவிடுவார்களோ என்கின்ற அச்சத்தில் சூப்பர் ஸ்டார் தனது “வருத்தம்” பற்றிய சர்ச்சைக்கு விரிவான விளக்கம் ஏதும் அளிக்கவில்லை. மௌனமே சிறந்தது என்று இருந்துவிட்டார்.
இந்நிலையில் தனது ”வருத்தம்” சர்ச்சை பற்றி சூப்பர் ஸ்டார் கருத்து கூறினால் என்ன கூறுவார்?
மேலே கொடுக்கபட்டுள்ள தினமலர் செய்தியில் அமிதாப் கூறியதுதான் ரஜினியின் கருத்தாகவும் இருக்கும்.
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் போன்றே ஒரு “மன்னிப்பு” சர்ச்சையில் அமிதாப் சிக்கிக்கொண்டார்.
தனது ரசிகர்களோ அல்லது வேறு யாராவதோ ரத்தம் சிந்துவதை சிறிதும் விரும்பாத அமிதாப் தனது இமேஜை தூக்கி தூர போட்டுவிட்டு “மன்னிப்பு” கேட்டு சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்திருக்கிறார்.
இக்கட்டான பல சந்தர்ப்பங்களில் அமிதாப்பை நான் கவனித்திருக்கிறேன். அவரது நடவடிக்கைகளில் ஒரு தேர்ந்த முதிர்ச்சி தெரியும். அவரது தீவிர ரசிகரான சூப்பர் ஸ்டாரிடமும் அந்த குணம் இருப்பது வியப்பில்லை. சில சரிவர புரிந்துகொள்ளாமல் அமிதாப் குறித்து தவறான தகவல்கள் பரப்புகின்றனர். அவர்கள் அறியாமையை நினைத்து சிரிக்கிறேன். அவ்வளவே. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் திவாலானபோது, ஓடி ஒளியாமல், தனக்கு ஏற்பட்ட சூழ்நிலையை நேர்வழியில் எதிர் கொண்டு, பல திரைபடங்களில் இரவு பகல் பாராமல் நடித்து, க்ரோர்பதி நிகழ்ச்சிசியில் கலந்துகொண்டு தனக்கு தேவையான பணத்தை திரட்டி தனது கடனையெல்லாம் அவர் அடைத்தார்.
எல்லாருக்கும் பிரச்சனை வரும். அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதில் தான் இருக்கிறது சூட்சுமம்.
சூப்பர் ஸ்டார் கேட்டது அமிதாப்பை போல மன்னிப்பல்ல, ஒரு ஆழ்ந்த வருத்தம். அவ்வளவே. அதற்கே நம் பத்திரிக்கைகள் அவரை பாடாய் படுத்திவிட்டன.
2002ல் சூப்பர் ஸ்டாரின் காவிரி உண்ணாவிரதத்தில் காணப்பட்ட ஒரு பேனரில் படித்த வாசகம் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. “பிறர் நலனுக்காக தன்னை வருத்திகொள்பவனே சிறந்த தலைவன். தூண்டிவிடுபவன் துரோகி!” - எவ்வளவு உண்மை…!!
………………………………………………………………………………………………………………
நண்பர்கள் கூறுவது என்ன?
நண்பர் வினோ இது குறித்து தனது வலைத்தளத்தில் ஒரு அருமையான பதிவை தந்திருக்கிறார். கீழ் கண்ட முகவரியை க்ளிக் செய்து மிஸ் பண்ணாமல் அதை படிக்கவும்.
மிச்சமிருக்கும் மனிதநேயம்!
அப்படியே சூப்பர் ஸ்டாரின் அடுத்த அதிரடி குறித்தும் ஒரு பதிவு தந்திருக்கிறார். அதையும் படிக்கவும்.
ச்சும்மா அதிருதில்ல…!
அதே போல் விகடனின் பரிதாப நிலையை நண்பர் கிரி புட்டு புட்டு வைத்திருக்கிறார். அத்தோட நாக்கை பிடுங்கி சாவதைபோல நாலு கேள்வி அவர்களை கேட்டுள்ளார். கீழ் கண்ட முகவரியை க்ளிக் செய்து அதையும் படிக்கவும்.
நீங்க நல்லாத்தான் “எழுதறீங்க” விகடன் சார்!
No comments:
Post a Comment