“அரசியலுக்கு வரப்போவதை பற்றி ரஜினி வரும் அக்டோபரில் அறிவிப்பாராம் அல்லது ஒரு புது சேவை அமைப்பை துவக்குவது பற்றி முடிவெடுப்பாராம்.” தற்போது பத்திரிக்கைகள் செய்யும் இந்த பில்டப்பை பார்த்தால் செப்டம்பர் மாதம் 1995ஆம் ஆண்டு எனக்கு ஞயாபகத்திற்கு வருகிறது…
முத்து படத்தில் ரஜினி நடிக்க துவங்கிவிட்ட நிலையில், ஆர்.எம்.வீரப்பன் சர்ச்சை கொடிகட்டி பறந்தது….ரஜினி அரசியலுக்கு வருவார்…கட்சி துவக்குவார்…கொடி ரெடி, பிரசார வேன் கூட ரெடி என்று இதே ஜூவிக்களும் குமுதங்களும் கவர் ஸ்டோரியாக எழுதி தள்ளி நன்றாக கல்லா கட்டின.
தினமும் நாளிதழ்களில் ரஜினிதான் முதல் பக்க செய்தி. கிட்ட தட்ட 3 மாதங்கள் தொடர்ந்து இப்படிப்பட்ட செய்திகள். ஆனால் சூப்பர் ஸ்டாரோ இப்போது் போல அப்போதும் மௌனம்தான். அது அவர்களுக்கு இன்னும் வசதியாக போய்விட்டது.
ஒரு கட்டத்தில் செய்திகள் எல்லை மீறி போயின…அரசியல் கனவில் மிதந்தனர் ரசிகர்கள். பொது மக்களும் மிகவும் ஆவலுடன் ரஜினியின் அரசியல் அறிவிப்பை எதிர்ப்பார்த்தனர்.
ரஜினிக்கு வர விருப்பம் இல்லையென்றாலும், இப்படி ஒரு நிர்பந்தத்தை அவருக்கு அளித்து அரசியலுக்கு அவரை இழுத்துவிடுவதுதான் பத்திரிகைகளின் திட்டம். காரணம் அப்போதைய அ.தி.மு.க. அரசின் பத்திரிக்கைகளுக்கு எதிரான அடக்கு முறை. (ஜெயா அரசால் நூற்றுகணக்கான வழக்குகள் முன்னணி பத்திரிக்கைகள் மீது போடப்பட்டன. ஹிந்து கூட தப்பவில்லை!)
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜெவுக்கு எதிராக பகிரங்கமாக பாட்ஷா விழாவில் அவரது அமைச்சரை வைத்துகொண்டே குரல் கொடுத்த ரஜினி அவர்களுக்கு ஆபத்பாந்தவனாக தெரிய, அவருக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ கெட்டியாக பிடித்துகொண்டார்கள் அவரை.
ரஜினிக்கு ஏற்பட்ட நிர்ப்பந்தம்
அதற்க்கு பிறகு இவர்கள் போட்டி போட்டுகொண்டு வெளியிட்ட செய்திகளால் - அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ, இவர்களின் நிர்பந்தத்தால், ஒரு பிரஸ் மீட்டாவது வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார் ரஜினி.
செப்டம்பர் 27 அன்று பிரஸ் மீட் நடைபெறும் என்று நாள் குறிக்கப்பட, இப்போது எப்.எம். ரேடியோக்கள் செய்வதை போல முன்னணி நாளிதழ்களும் அன்றைய முன்னணி சானல்களும் பிரஸ் மீட் குறித்து கவுண்ட் டவுன் கொடுத்தன.
வேறு வழியின்றி செப்டம்பர் 27 அன்று செய்தியாளர்களை சந்தித்தார் சூப்பர் ஸ்டார்.
வரலாற்று புகழ் வசனம்
அந்த பிரஸ் மீட்டில்தான் தான் வரலாற்று புகழ் மிக்க, ஒரு வலிமையான அரசையே தூக்கியெறிய காரணமான “மறுபடியும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது!!” என்கின்ற ரியல் லைப் பஞ்ச் வசனத்தை கூறினார்.
மற்றபடி தனது அரசியல் பிரவேசம் குறித்து பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் தனக்கு மிகவும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன என்றும், அரசிய்லுக்கு வருவதைபற்றியோ, ஆட்சியை பிடிப்பதை பற்றியோ தான் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை என்று அந்த பிரஸ் மீட்டில் கூறினார் ரஜினி.
பத்திரிகைகளின் முயற்சி தற்காலிகமாக ஓய்ந்தாலும் பின்னர் நரசிம்ம ராவ் புண்ணியத்தால் ரஜினி அரசியலில் தலையிட்டு தா.மா.காவை தோற்றுவிக்க காரணமாகியது.
இதை இப்போது என் இங்கு கூறுகிறேன் என்றால், அந்தி பிரஸ் மீட்டுக்கு ஜூவி உள்ளிட்ட பத்திரிக்கைகள் செய்த பில்டப் மிகவும் ஓவர்.
தற்போது….2008 இல்
அதே போல் தற்போது - ரஜினி அரசியலுக்கு வருவதை பற்றி அக்டோபரில் அறிவிப்பார் என்றும் அல்லது ரசிகர்களை சந்தித்தது பேசி ஒரு அமைப்பையாவது துவக்குவார் என்றும் செய்தி பரப்பி வருகின்றன பத்திரிக்கைகள்.
உண்மையில் ரஜினி, ரசிகர்களை சந்திப்பதாக மட்டுமே வாக்களித்திருக்கிறார். “உங்கள் கோரிக்கைகளை அப்போது அவரிடம் நேரடியாக சொல்லுங்கள்” என்று மட்டுமே தளபதி சத்தி கூறியிருக்கிறார்.
தற்போது சத்தியிடம் கெஞ்சி கூத்தாடி ஜூவி ஒரு பேட்டியை வாங்கியுள்ளது. நான் கூறியதையே அந்த பேட்டியிலும் அவர் கூறியிருப்பதாக தகவல். நாளை கடைகளுக்கு வரும் அந்த இதழில் கவர் ஸ்டோரி இது தான். “அக்டோபர் புரட்சிக்கு தயாராகும் ரஜினி?” சத்யநாரயணா பேட்டி.
அக்டோபர் என்ன நடக்கும்?
ரசிகர்களை சந்தித்தது மனம் விட்டு ரஜினி பேசி நீண்ட நாட்களாகிவிட்டபடியால் இம்முறை அனைத்து மாவட்ட ரசிகர்களையும் சந்திக்கிறார். ஒப்போது ரசிகர்கள் சில கோரிக்கைகளை முன் வைப்பார்கள் அவ்வளவே. ரஜினி தரப்பிலிருந்து அதற்க்கு பிறகு அறிவிப்பு வருவது கேள்விக்குறியே.
வீண் பரபரப்புக்களை ரசிகர்கள் நம்ப வேண்டாம். அப்படி உண்மையில் அறிவிப்பு ஏதும் வந்தால், முதல் ஆளாக நான் கூற முயற்சி செய்கிறேன். ஓகே?
படம் நடிக்கமலிருந்தாலே ரஜினி இதுபோன்ற அறிவிப்பு எதையும் வெளியிடுவது அரிது. அப்படியிருக்கையில் தற்போது மிகப்பெரிய பட்ஜெட்டில் ஒரு படம் நடித்து வரும் நிலையில் இது போன்ற சர்ச்சைக்கு இடமளிக்கும் எதையும் செய்யமாட்டார் அல்லது கூறமாட்டார் என்பது என் போன்றவர்கள் கணிப்பு.
1995 ஆம் ஆண்டு பத்திரிக்கைகள் ஏற்படுத்திய பரபரப்பு
இதற்கிடையே பத்திரிக்கைகள் 1995 ஆம் ஆண்டு செய்த வீண் பரபரப்புகளுக்கு உதாரணம் தான் இணைக்கப்பட்டுள்ள மாலை முரசு முதல் பக்க செய்தி தாள். (இந்த பத்திரிகையின் பொழைப்பு ஓடியதே ரஜினி ரசிகர்களால் தான். ஆனால் நன்றி மறந்து இன்று ரஜினிக்கு எதிரான கடும் அவதூறுகளை பரப்பி வருகிறது இந்த மாலை நாளிதழ். )
இத்தகைய செய்திகளை தினமும் பத்திரிக்கைகளில் படித்துவிட்டு கடைசியில் ரஜினி அரசியலுக்கு வரவில்லையென்றதும் பொது மக்களுக்கு எப்படி இருந்திருக்கும்?
அந்த மன நிலை தான் மக்களிடம் இன்றும் தொடர்கிறது.
இதனிடையே ரஜினியின் 1995 செப்டம்பர் பிரஸ் மீட்டுக்கு பிறகு வந்த ஜூவி மிகவும் சுவாரசியம். ஏனெனில் ரஜினி அரசியல் கட்சி கட்டாயம் ஆரம்பித்துவிடுவார் என்று சத்தியம் செய்தது அவர்கள் தானே. அந்த இதழ் + நாளை வெளிவரவிருக்கு இதழ் பற்றி பதிவு நாளை காண்க.

No comments:
Post a Comment