தமிழ்சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கருக்கு சிந்தனையும் பிரமாண்டம். 'எந்திரன்' படப்பிடிப்பை எப்போதுமே இன்டோரில் நடத்திவிட முடியாது. அவுட்டோர் வந்தால், பார்வையாளர்கள் தங்கள் செல்போனில் அதை படம் பிடித்து உலகம் முழுக்க பரப்பிவிடும் அபாயமும் இருக்கிறது. சிவாஜி படப்பிடிப்பின் போது, செல்போனில் ரஜினி, ஸ்ரேயாவின் டூயட்டுகளை படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிட்டு, ஷங்கரை டென்ஷனுக்குள்ளாக்கியது போல, இனிமேல் முடியாது.
இதற்கு தனி யுக்தியை கண்டுபிடித்திருக்கிறார் ஷங்கர். வி.வி.ஐ.பிகளின் பாதுகாப்புக்கு ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலைவர்களின் காருக்கு முன்னே கம்பீரமாக வரும் ஒரு வாகனத்தில் பொறுத்தப்பட்டுள்ள இக்கருவியின் பெயர் ஜாமர். செல்போன் மூலம் வெடிகுண்டுகளை வெடிக்க செய்கிற தீவிரவாதிகளின் கொட்டத்தை அடக்குவதற்காகவே உருவாக்கப்பட்ட நவீன இயந்திரம் இது. ஜாமர் செயல்படும்போது அருகில் இருக்கும் செல்போன்கள் இயங்காது.
இப்படி ஒரு ஜாமர் கருவியைதான் தனது 'எந்திரன்' படத்திற்காக வாங்கப் போகிறாராம் ஷங்கர். படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் இதை பொறுத்திவிட்டால் செல்போன்கள் இயங்காது படப்பிடிப்பை செல்போனில் சுடவும் முடியாது. ஷாட்டுக்கு வராமல் வளவளவென்று செல்போனில் கடலை போடும் ஹீரோ, ஹீரோயின்களை சமாளிக்கவும் ஜாமர் கருவிகளை பொறுத்தலாமே!
-ஆர்.எஸ்.
No comments:
Post a Comment