எந்திரன்: ஹவாயில் இரண்டாவது டூயட்!
ரஜினி-ஐஸ்வர்யா ராய் பச்சன் நடிக்கும் எந்திரன்- தி ரோபோ படத்தின் இரண்டாவது டூயட் பாடல் காட்சியை ஹவாய் தீவுகளில் படமாக்குகிறார் இயக்குனர் ஷங்கர்.எந்திரன் படப்பிடிப்பு இப்போது வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களின் எழில்மிகு இயற்கை காட்சிகளின் பின்னணியில் படமாக்கப்பட்டு வருகிறது.கடந்த 8ம் தேதி தொடங்கிய எந்திரன் படப்பிடிப்பின் முதல் பகுதி வரும் அக்டோபர் 5க்குள் முடிவடைகிறது. அதற்குள் மூன்று பாடல் காட்சிகள் மற்றும் ரோபோ ரஜினியின் வடிவமைப்பு போன்றவற்றை முடித்துவிடும் திட்டத்திலிருக்கிறார் ஷங்கர்.6 பாடல்கள் இடம்பெற உள்ள இந்தப் படத்துக்கு இதுவரை 3 பாடல்களை போட்டுக் கொடுத்து விட்டாராம் ரஹ்மான். இன்னும் 3 பாடல்கள் மற்றும் ரோபோ ரஜினிக்கான அதிரடி தீம் மியூசிக் என ரஹ்மானுக்கு எக்கச்சக்க வேலை வைத்திருக்கிறாராம் ஷங்கர்.இப்போதைக்கு ட்ராக் மட்டும்தான் போட்டுக் கொடுத்துள்ளாராம் ரஹ்மான். பின்னர் இந்தப் பாடல்களை லண்டனில் உள்ள தனது விருப்ப ஸ்டுடியோவில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்து தரப் போகிறாராம்.முதல் டூயட் பாடலை தென் அமெரிக்காவிலுள்ள பெரு நாட்டின் புகழ்பெற்ற வரலாற்று நினைவிடமான மாச்சு பிக்கு மற்றும் அமேசான் காடுகளில் வைத்துப் படமாக்கிய ஷங்கர், அடுத்த டூயட் பாடலை அமெரிக்காவின் உல்லாச உலகமான ஹவாய் தீவுகளில் வைத்துப் படமாக்கி வருகிறாராம்.மூன்றாவது பாடல் எந்திரன் ரஜினி பங்கேற்கும் அதிரடிப் பாடல். இது ஹாலிவுட் ஸ்டுடியோவில் படமாகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment