டைம்ஸ் ஆப் இந்தியா குழுமம், கடந்து சென்ற 2010 ஆம் ஆண்டில், பாலிவுட் வானில், பிரகாசித்த நட்சத்திரங்களின் பவர் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது. அதில் மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார் 61 வயது நிரம்பிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இது மிகப் பெரும் சாதனையாகும்.
இந்த லிஸ்ட்டில் இருப்பவர்கள் வெளியேறினால், பாலிவுட்டே காணாமல் போகக்கூடும். குறைந்த பட்சம் தனது அங்கீகாரத்தை அது இழக்கும். அது தான் இந்த லிஸ்ட்டில் இருப்பவர்கள் தனிச்சிறப்பு. இவர்களால் மலையை நகர்த்துவது, தண்ணீரில் நடப்பது போன்ற அற்புதங்களை செய்ய முடியாது. ஆனால், இவர்கள், தங்களுக்கிருக்கும் அந்த வசீகரத்தை வைத்து சாதிக்கும் விஷயங்கள் பிரமிப்பானவை.
அதுவும் முதல் டாப் 10 இல் இருப்பவர்கள் – நாம் கூறுவதை போல – சூப்பர் நோவா – என்ற பதத்துக்கு மிகவும் பொருத்தமானவர்கள். (நோவா என்றால் – சூப்பர் நட்சத்திரம் என்று பொருள்). பாலிவுட்டின் போக்கை, அதன் அதிர்ஷ்டத்தை மாற்றும் மந்திரக்கோல் இவர்களிடம் உள்ளது.
ஒரே ஒரு படத்திலேயே சோனாக்ஷி சின்ஹா என்னும் முற்றிலும் புதியமுகத்தை பட்டி தொட்டிமுதல் பட்டணம் வரை இந்தியா முழுதும் பிரபலப்படுத்தி, தனது முன்னாள் காதலிக்கும் (கத்ரீனா கைப்) தான் இல்லாவிட்டால், பாலிவுட்டில் தாக்குபிடிக்க முடியாதென்பதை உணர்த்திய சல்மான்கானாகட்டும், அல்லது மார்கெட்டிங்கில் தன்னைப் போல புலி யாரும் என்பதை நிரூபிக்கும் ஆமீர் கானாகட்டும், கிட்டத்தட்ட ஒரு கடவுள் ரேஞ்ஜூக்கு ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினியாகட்டும், பட்டியலில் ஒரு சில இடங்கள் கீழே இருந்தாலும் ஓவர்சீஸ் மார்கெட்டில் இன்னும் கொடிகட்டி பறக்கும் சிறந்த PR (Public Relations) எனப்படும் ஷாருக்கானாகட்டும், இவர்கள் அனைவரும் தான் ஆட்ட நாயகர்கள்.
ஸ்லம் டாக் மில்லினைர் என்னும் படத்தை தனது இசையால் ஆஸ்கார் விருதுக்கு தகுதியாக்கிய ஏ.ஆர்.ரஹ்மான், தீஸ் மார் கான் என்னும் படத்தை தனது அறிமுக ஆட்டத்தை தூக்கி நிறுத்திய கத்ரீன கைப், (பட்டியலில் டாப் டெண்னுக்குள் உள்ள ஒரே நடிகை இவர் தான்) இவர்களும் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து பாலிவுட்டை தாங்கி பிடிக்கிறார்கள் என்றால் மிகையாகாது.
ஏனெனில், மேற்படி லிஸ்ட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினி இடம் பிடித்திருப்பது மிகப் பெரிய சாதனையாகும். காரணம் தென்னிந்தியாவிலிருந்து மேற்படி லிஸ்ட்டில் இடம் பிடித்திருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமே. (இசை பிரிவில் ஏ.ஆர்.ரஹ்மான் இடம்பெற்றுள்ளார்). மற்றவர்கள் அனைவரும் பாலிவுட்டை சேர்ந்தவர்கள் தான்.
எந்திரனின் அசாத்திய வெற்றியும், சூப்பர் ஸ்டாருக்கு பாலிவுட்டில் இருக்கும் strong hold ம் தான் இதற்க்கு காரணமாக இருக்கமுடியும். இரண்டாவது, சூப்பர் ஸ்டார் மொழி, இனம், வட்டா, மாநில எல்லைகளை கடந்து அனைத்து தரப்பு மக்களாலும் – நாடு முழுவதிலும் – ரசிக்கப்படுபவர் என்பதும் காரணம். ஆகையால் தான் பாலிவுட் முக்கியஸ்தர்கள் கோலோச்சும் ஒரு லிஸ்ட்டில் – பல ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளி – இவரால் மூன்றாவது இடத்தை பிடிக்க முடிந்தது.
பட்டியலில் நம்ம தீப்ஸ் 12 வது இடத்தை பிடித்திருக்கிறார் என்பது கவனத்திற்குரியது. சே.. டாப் டென்னுக்கு ஜஸ்ட் மிஸ்ஸாயிடிச்சுப்பா…!
(Don’t miss the count down programme of above ‘Super Nova Top 50 Power List’ in ZOOM Tv tonight 10.30 pm)
[END]

No comments:
Post a Comment