சூப்பர் ஸ்டார் ரஜினியும் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினும் சந்தித்தால் ? ஒரு ஜாலி தொகுப்பு!

நாம் அண்ணாந்து பார்த்து வியக்கும் சில பிரபலங்களை நமது சூப்பர் ஸ்டார் சந்திக்க நேர்ந்தால் எப்படியிருக்கும் என்ற எண்ணம் நமக்கு எப்போதாவது தோன்றுவதுண்டு. அந்த பிரபலங்கள், அவரவர் மனநிலை மற்றும் ஆர்வத்துக்கேற்ப நபருக்கு நபர் மாறும். கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் போற்றும், மதிப்பு வைத்திருக்கும் ‘God of the cricket’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரும்,  ‘DEMIGOD’  ஸ்டேட்டஸில் இருக்கும் நம் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினியும் சந்தித்தால் எப்படியிருக்கும்?
இந்த சுவாரஸ்யத்துக்கு விடை தந்திருக்கிறார்கள் http://crazycricketlover.blogspot.com/ என்ற பிளாக் வலைத்தளத்தில். தினேஷ் என்பவர் நடத்தி வரும் இந்த தளத்தில் அவரது நண்பர்கள் சாய், ராமசுப்ரமணியன் ஸ்ரீனிவாசன், ஜெயராமன், அர்விந்த், கிருஷ்ணன் ஆகியோர் இனைந்து கிரிக்கட் பற்றிய இந்த பிளாக்கை நடத்தி வருகின்றனர். கிரிக்கட் பற்றிய பிளாக்காக இருந்தாலும் சுவாரஸ்யத்துக்கும் நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை.
Sachin SuperstarJ 640x286  சூப்பர் ஸ்டார் ரஜினியும் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினும் சந்தித்தால் ? ஒரு ஜாலி தொகுப்பு!
தளம் முழுக்க சுவாரஸ்யமான கிரிக்கட் கட்டுரைகளுக்கு நடுவே, கற்பனைக்குதிரையில் நகைச்சுவை மற்றும் நையாண்டியையும் சேர்த்து தட்டிவிட்டிருக்கிறார்கள்.
தோனிக்கு நடத்தும் ஒரு பாராட்டு விழா எப்படி பாசத்தலைவனுக்கு நடத்தும் பாராட்டு விழாவாக மாறுகிறது என்பதை சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கிறார்கள்.
மேலும் இந்தியா-இங்கிலாந்து தொடரை அடிப்படையாக சில பதிவுகள் (தொடர்கதை பாணியில்) வெளியிடப்பட்டிருக்கிறது.
http://crazycricketlover.blogspot.com/2011/07/blog-post_20.html
http://crazycricketlover.blogspot.com/2011/07/england-2.html
இவர்கள் வாழ்வில் அடுத்த கட்டத்துக்கு சென்று மேன்மேலும் சிறக்க, தங்கள் எழுத்துக்களால் வஞ்சகமில்லாத – அடுத்தவர் மனதை புண்படுத்தாத – சிரிப்பை அனைவருக்கும் வாரி வழங்க வாழ்த்துவோமாக.
தற்போது சச்சின்-சூப்பர் ஸ்டார் சந்திப்பை பார்ப்போம். உண்மையில் இருவரும் சந்தித்தால் இப்படி தான் அந்த சந்திப்பு இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கட்டுரையாளருக்கு நம் வாழ்த்துக்கள்.
- சுந்தர்
—————————————————————————-

சூப்பர் ஸ்டார் – சச்சின் அதிரடி சந்திப்பு

சாதனை மன்னன் ஸ்டைல் மன்னனை சந்தித்த போது நடந்த ஒரு சுவாரஸ்யமான கலந்துரையாடல்:
வணக்கம் ரஜினிஜி,
ஓ, வாங்க வாங்க மிஸ்டர் கிரிக்கெட்.
சச்சின் முகம் சிவக்கிறது, அதே நேரத்தில் மெல்லிய சிரிப்பும்
(இருவரும் ஆரத் தழுவிக்கொள்கின்றனர், பின்னர் இருவரும் அமர்ந்து உரையாடத் துவங்குகின்றனர்)
சச்சின் துவங்குகிறார், ” இப்போ எப்படி இருக்கீங்க?”
“சொல்றேன், அதுக்கு முன்னாடி என்ன சாப்பிடறீங்க?”
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம் சார்”
“நோ நோ, யு ஆர் மை கெஸ்ட், மணி, இங்க வாங்க”
“சார்”
“ரெண்டு கிரீன் டீ, அப்புறம் கொஞ்சம் dry fruits”
“ஓகே சார்”
“நல்லா இருக்கேன், நிறைய இம்ப்ரூவ் ஆயிருக்கேன், ஆண்டவன் மனசு வெச்சா அடுத்த மாசத்துலேர்ந்து ராணா ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணிடுவேன்”
ஆண்டவன் மனசு வெச்சாவா? அப்போ உன் வாழ்க்கை உன் கையில்னு சொன்னீங்களே? அது?
இப்பவும் அதான் சொல்றேன், நம்ம வாழ்க்கை நம்ம கையில, ஆனா நாம ஆண்டவன் கையில
நல்லாத்தான் பேசறீங்க
“இந்தியனாச்சே, ஹஹஹஹா”
டீ வருகிறது, இருவரும் அருந்துகின்றனர்
உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்குமா?
Definitely, வேர்ல்ட் கப் பைனல்ஸ் மும்பைல பார்த்தேனே! அமேசிங் மேட்ச்!!
சச்சின் சிரித்துக்கொண்டே, “நீங்க இருந்ததால தான் நாங்க ஜெயிச்சோம்னு வேற நிறைய பேர் சொன்னாங்க”
“ஹஹஹா” “இந்த மாதிரி ஆளுங்க கிட்டேர்ந்து ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்”
இந்தியன் கிரிக்கெட்ல உங்களுக்கு யாரை ரொம்ப பிடிக்கும்?
“சேவாக், டிராவிட், ம்ம்ம்….தோனி – ஹி இஸ் கிரிக்கெட் சாணக்யா”
“அப்போ என்னைப் பிடிக்காதா?”
“ஐயோ வம்புல மாட்டி விட்டுடாதீங்க, நான் சொன்னது உங்களைத் தவிர, I like all players, young blood like raina, ashwin, ..
எல்லாம் csk ஆளுங்களா சொல்றீங்க?”
தமிழனாச்சே, ஹஹஹஹா”
நீங்க என் படம் ஏதாவது பார்த்திருக்கீங்களா?
of course, எந்திரன். எந்திரன் மாதிரி ஒரு வித்யாசமான படம் பண்ணணும்னு உங்களுக்கு எப்படி தோணிச்சு?
வித்யாசமான படமான்னு எனக்குத் தெரியல, ஏன்னா, அதுல நான் வழக்கமா பண்ற எல்லா சமாச்சாரங்களும் இருக்கு, பட் ரோபோ பண்ற மாதிரி இருக்கும்.
அதான் ஏன்னு கேக்கறேன்? ரஜினியாவே பண்ணியிருக்கலாமே?
See, என்னோட தீவிர ரசிகர்கள்னு பார்த்தீங்கன்னா அவங்க ஒரு 30 -40 வயசு க்ரூப்ல இருப்பாங்க. அதுவும் family people . நான் இன்னும் சினிமாவுல நிலைச்சு இருக்கணும்னா புதுசா ரசிகர்களை உருவாக்கணும். அடுத்த தலைமுறையை டார்கெட் பண்ணணும். அவங்களுக்கு புடிச்ச மாதிரி, புரியற மாதிரி படம் பண்ணணும். இதை ஒரு முக்கியமான காரணமா சொல்வேன், personally speaking . இப்போ நான் பண்ணப் போற ராணாவில் கூட இந்த மாதிரி ஐட்டம்ஸ் இருக்கு
ரஜினி கேட்கிறார் “நீங்க எப்படி இந்த வயதிலும் அதே திறமையோட விளையாடறீங்க?”
“சார், எனக்கு 38 வயசு தான் ஆவுது”
“பட் இந்த வயசில கிரௌன்ட்ல போய் நின்னு ஒரு நாள் முழுக்க விளையாடறதுன்னா – இட்ஸ் நாட் ஜோக்”
“நான் இஷ்டப்பட்டு பண்றேன் சார், வேலை செய்யறவனுக்குத் தான் retirement , நான் கிரிக்கெட்டை வேலையா செய்யறதில்லை. Moreover, I take lot of inspiration from everyone. Even you have inspired me a lot.
“நானா? எப்படி?”
உங்களோட ஹீரோயினா நடிச்ச நடிகைங்க எல்லாம் உங்களுக்கு அக்காவா, தங்கச்சியா, அண்ணியா, ஏன், அம்மாவா கூட நடிச்சிட்டாங்க, ஆனா நீங்க மட்டும் இன்னும் ஹீரோவாவே நடிக்கறீங்க. அது கூட ஒரு இன்ஸ்பிரேஷன் தான்.
“well said well said” ரஜினி மெய் சிலிர்க்கிறார். “”புத்தி, knowledge, அதான்,… உண்மையான சொத்து, சந்தோஷம் எல்லாமே”
நீங்க கூடத் தான் இந்த வயதிலும் ஸ்ரேயா, ஐஸ்வர்யா ராய்னு ஆட்டம் போடறீங்க
“ஐயோ, 60 வயசுல சினிமாவுல ஆட்டம் போடலாம், நிஜத்துல தான் ஆட்டம் போடக் கூடாது.”
“இருந்தாலும் உங்களுக்கு ஒரு மாதிரியா இருக்காதா?”
“அமித்ஜிக்கும் அபிஷேக் பச்சனுக்கும் தான் ஒரு மாதிரியா இருக்கும், நமக்கென்ன போச்சு? ஆ… இது எப்படி இருக்கு!”
நீங்க யாரை போட்டியாளரா நினைக்கறீங்க?
” என்னைத் தான் ”
“எப்படி”
என்னுடைய முந்தைய படங்கள் தான் எனக்கு போட்டி. முன்னாடியெல்லாம் நான் வாழ்க்கையில எதாச்சும் சாதிக்கணும் அப்படின்னு சொல்லிட்டு வெற்றிப் படங்கள் குடுத்தேன், இப்போ நான் ஒரு வியாபாரப் பொருளா ஆயிட்டேன், என்னை நம்பி பெரிய வர்த்தகமே நடக்குது, சினிமாவுல ஈடுபட்டிருக்கற பல குடும்பங்கள் பொழைக்குது, அதுக்காக நான் ஹிட் குடுக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கேன். ராணா எந்திரனை விட பெரிசா வந்தாத் தான் மரியாதை, புகழ், பணம் எல்லாமே, இல்லேன்னா வீட்டுக்குப் போக சொல்லிடுவாங்க
உங்களைக் கூடவா?
உங்களையும் சேர்த்து தான் சொல்றேன், நீங்களும் நானும் கிட்டத் தட்ட ஒரே கேஸ் தான். நீங்க இப்போ இங்கிலாந்து டூர்ல சரியா விளையாடலைன்னா உங்க மதிப்பு குறைய வாய்ப்பு இருக்கு.
ஆமாங்க, ஏற்கனவே ரொம்ப ஓவர் பில்ட் அப் பண்ணி முதல் டெஸ்ட் சொதப்பிட்டாங்க. எனக்கு வேற உடம்பு சரியில்லாம போயிடுச்சு
மேற்கொண்டு கிரிக்கெட்ல என்ன சாதிக்கலாம்னு இருக்கீங்க? எந்த record எடுத்துப் பார்த்தாலும் உங்க பேர் இருக்கு.
சாதனைகள் தானா அமையுது, நானா யோசிச்சு எதுவும் செய்யறதில்ல. எனக்குத் தெரிஞ்சது கிரிக்கெட் ஒண்ணு தான். முடிஞ்ச வரைக்கும் நல்லபடியா கிரிக்கெட் விளையாடிட்டு நல்ல பேரோட போயிடணும்.
நான் கூட இப்ப நிறைய படங்கள் பண்றதில்ல, வருஷத்துக்கு மூணு படம் பண்ணிக்கிட்டிருந்தேன், இப்போ 3 வருஷத்துக்கு ஒரு படம் பண்றேன். நமக்கும் வயசு ஏறிக்கிட்டே போகுதே!!!
பாலிவுட்ல யார் ஸ்டார்னு பெரிய போட்டியே நடக்குது. பட் நீங்க எப்படி இவ்ளோ வருஷமா சூப்பர் ஸ்டாரா இருக்கீங்க? எனக்காச்சும் அடுத்த தலைமுறை பிரஷர் இருக்கு, உங்களுக்கு அது கூட இல்ல. உங்க படம் வருதுன்னா முன்னாடி ரெண்டு மாசம், பின்னாடி ரெண்டு மாசம் எந்தப் படமும் ரிலீஸ் ஆகறதில்ல.
“எல்லாம் ஆண்டவன் அருள், கொஞ்சம் உழைப்பு, நம்பிக்கை, அவ்ளோ தான், கடவுள் நம்பிக்கை இல்லேன்னா அதிர்ஷ்டம்னு வெச்சுக்கலாம்
“என்ன சார், வடா பாவ்க்கு ரெசிபி சொல்ற மாதிரி சொல்றீங்க”
“வேறென்னங்க சொல்ல, உங்களை மாதிரி கடுமையா பயிற்சி பண்ணி, ,… அது என்ன சொல்றது, அப்டியே ஒரு தவம் மாதிரி எல்லாம் செஞ்சு நான் வரலை. , நான் பாட்டுக்கு ஜாலியா விசிலடிச்சிக்கிட்டு இருந்தேன், அப்புறம் ஒரு நல்ல நண்பர் அறிவுரை சொன்னாரு, சினிமாவுல முயற்சி செஞ்சேன், சான்ஸ் கிடைச்சுது, அப்ப கூட நான் இவ்ளோ பெரிசா வரணும்னு எல்லாம் யோசிச்சதே கிடையாது. தினசரி கொஞ்சம் பீருக்கும் அப்புறம் கொஞ்சம் சோறுக்கும் வழி பொறந்தாப் போதும்னு தான் இருந்தேன். ஆனா இன்னிக்கு உலக அழகி என் கூட நடிக்கற அளவுக்கு ஒரு பெரிய நடிகனா வளர்ந்திருக்கேன். நான் இதுவரைக்கும் சொல்லிக்கற மாதிரி எந்த அவார்டும் வாங்கினது இல்ல, ஒரு நடிகனுக்குண்டான எந்த தகுதியும் என்கிட்டே கிடையாது. அப்படின்னா இது கடவுள் அருள் தானே?
அப்போ மனுஷனுக்கு லக் முக்கியம்னு சொல்றீங்களா?
கண்டிப்பா. நீங்களே பாக்கலாம், லார்ட்ஸ்ல சச்சின் செஞ்சுரி அடிக்கலைன்னு தான் பேசறாங்களே தவிர டிராவிட் அடிச்ச செஞ்சுரியப் பத்தி யாரும் பேசறதில்ல. என்ன சொல்ல வர்றேன்னா உங்க அளவுக்கு அவருக்கு மாஸ் கிடைக்கல.Though he is as qualified as you are .
Rajini,” BTW, உங்களுக்கு ஆன்மீகத்துல எப்படி ஈடுபாடு வந்தது?”
எல்லாம் சின்ன வயசுப் பழக்கம் தான். அது ஒரு சப்போர்ட், நமக்கு நாமே மோடிவேட் பண்ணிக்கற மாதிரி.
பட் ஒரு விஷயம் கண்டிப்பா சொல்லணும், நீங்க ஆடும் போது நாடே உங்களுக்காக வேண்டுது. அது ரொம்பப் பெரிய விஷயம், In fact , நிறைய தடவை பொறமை கூட பட்டிருக்கேன், என்னதான் பெரிய ஸ்டாரா இருந்தாலும் இப்படி ஒரு கெளரவம் எனக்கெல்லாம் கிடைக்கவே கிடைக்காது.
“நீங்க ரொம்ப புகழறீங்க”
No No, Its true, yeaaah,
சரி சார், நான் கிளம்பறேன், ஆல் தி பெஸ்ட், நெக்ஸ்ட் டைம் நீங்க ஹிமாலயாஸ் போகும்போது சொல்லுங்க சார், நானும் உங்க கூட வரேன், எனக்கும் அந்த அனுபவம் வேணும்
கண்டிப்பா கண்டிப்பா, ஒரு நிமிஷம் சச்சின், (ரஜினி அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து அதை சச்சினுக்கு அளிக்கிறார்). “இது பகவத் கீதை பற்றிய ஒரு புதிய புத்தகம், சின்மயானந்தா எழுதியது, நீங்க கண்டிப்பா படிக்கணும். you will definitely feel the essence of god. its a must read book.
Thank you very much, வர்றேன் சார்,
Rajini, “எப்ப ரிடையர் ஆகலாம்னு இருக்கீங்க?”
சச்சின் திரும்பி, நீங்க எப்ப அரசியலுக்கு வரலாம்னு இருக்கீங்க?
மறுபடியும் trademark சிரிப்பு.
Source: http://crazycricketlover.blogspot.com/2011/07/blog-post_26.html
[END]

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...