Tidbits # 55 : சூப்பர் ஸ்டார் வென்ற மற்றுமோர் விருது & ‘எந்திர’ நம்பிக்கையில் விஷூவல் எஃபக்ட்ஸில் அதிக முதலீடு செய்யும் பாலிவுட்!

தோ மற்றுமொரு TIDBITS செய்தித் தொகுப்பு. இதில், இடம்பெற்றுள்ள சில செய்திகள் குறித்து நாம் ஏற்கனவே நமது டிவிட்டரில் தெரிவித்துவிட்டோம். இருப்பினும் இன்னும் சற்று விசாரித்து, செய்திகளை சேகரித்து தந்திருக்கிறோம்.
1) என்.டி.டி.வி.-ஹிந்துவின் ‘Most ஸ்டைலிஷ்’ நடிகர் விருதை வென்றார் சூப்பர் ஸ்டார் ரஜினி!
என்.டி.டி.வி.-ஹிந்து தொலைக்காட்சி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விருது Life Style awards வழங்கி கவுரவித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி ஸ்டைலிஷான நடிகர் விருதை பெற்றுள்ளார். இதன் மூலம் என்.டி.டி.வி. குழுமத்தின் மூன்றாவது விருதை பெறுகிறார்.
DSC 3576 640x424  Tidbits # 55 : சூப்பர் ஸ்டார் வென்ற மற்றுமோர் விருது & ‘எந்திர’ நம்பிக்கையில் விஷூவல் எஃபக்ட்ஸில் அதிக முதலீடு செய்யும் பாலிவுட்!
Aiswarya Dhanush @ NDTV - Hindu LifeStyle awards function
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி தற்போது பார்க் ஷெராட்டன் ஓட்டலில் நடைபெற்று வருகிறது. சூப்பர் ஸ்டாருக்கு ‘Most Stylish’ நடிகர் விருது அறிவிக்கப்பட்டது. சூப்பர் ஸ்டாரின் சார்பாக இந்த விருதை அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ் பெற்றுக்கொண்டார்.  “இந்த விருது அவரது ஸ்டைலுக்கு மட்டுமல்ல. அவர் ஒரு மிகச் சிறந்த மனிதர் என்பதாலும் தான்.” என்று தொகுப்பாளர் கூறி தான் ஐஸ்வர்யாவை விருது பெற அழைத்தார்.
கார்த்தி சிதம்பரம், த்ரிஷா, தோட்டா தரணி உள்ளிட்டோர் இந்த விருதை அளிக்கும்போது மேடையில் இருந்தனர்.
ஐஸ்வர்யா தனுஷ் விருதை பெற்றுக்கொண்டு பேசுகையில் “இந்த விருது கிடைத்தது குறித்து அப்பா தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். இந்த விருதை அவர் சார்பாக இங்கு பெற்றுக்கொள்வதை நான் மிகப் பெரிய கௌரவமாக கருதுகிறேன். அப்பா, தற்போது நலம் பெற்று ஓய்வெடுத்து வருகிறார். தன் மீது அன்பும் பாசமும் வைத்து தனக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் தனது நன்றியினை தெரிவிக்க சொன்னார். இந்த விருதை அளித்த என்.டி.டி.வி.-ஹிந்து குழுமத்திற்கு எங்கள் நன்றி.” என்று கூறினார்.
இதையடுத்து நிகழ்ச்சி தொகுப்பாளர் சஞ்சய் பின்டோ பார்வையாளர்கள் அனைவரையும் எழுந்து நின்று கைதட்ட சொன்னார். (Standing Ovation). பார்வையாளர்களும் உடனடியாக மகிழ்ச்சியாக எழுந்து நின்று கை தட்டினார்கள்.
சிறந்த ஸ்டைலிஷ் நடிகைக்கான விருதை பெற்ற த்ரிஷா அது பற்றி கூறியபோது, “ஸ்டைல் என்பது அணியும் உடை மட்டும் ஒருவர் மாட்டிச் செல்லும் பை மட்டுமல்ல. அது ஒரு ஒட்டுமொத்த PERSONA. ஒருவரது பர்சனாலிட்டி மற்றும் ஒருவர் தன்னை வெளிப்படுத்தும் பாங்கும் ஸ்டைல் தான்.”
நிகழ்ச்சிக்கு த்ரிஷா மிகவும் கவர்ச்சியாக உடையணிந்து வந்திருந்தார். (அது ஸ்டைலிஷா என்பது எனக்கு தெரியாது..!)
2) எந்திரன் தந்த நம்பிக்கை – விஷுவல் எஃபக்ட்ஸ் துறையில் துணிந்து முதலீடு செய்யும் பாலிவுட்!
வியாபாரம், விநியோகம், ஆடியோ உரிமை, ரிலீஸ் தியேட்டர்கள் எண்ணிக்கை, விளம்பர ஒப்பந்தம், அயல்நாட்டு உரிமம், மற்றும் ரிலீஸ் சென்டர்கள் இப்படி பல விஷயங்களில் தமிழ் மற்றும் தென்னிந்திய திரையுலகில் முன்மாதிரி ஏற்படுத்தி – அனைவருக்கும் வெளிச்சத்தை காட்டியவை – சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் நடித்த படங்களே.
குண்டு சட்டியில் குதிரை ஒட்டிக்கொண்டிருந்த தமிழ் சினிமா வர்த்தகத்தை உலக அளவில் கொண்டு சென்று, சர்வதேச பார்வையாளர்களை தமிழ் சினிமாவுக்கு பெற்றுத் தந்தது நம் படங்களே.
Arima1 640x445  Tidbits # 55 : சூப்பர் ஸ்டார் வென்ற மற்றுமோர் விருது & ‘எந்திர’ நம்பிக்கையில் விஷூவல் எஃபக்ட்ஸில் அதிக முதலீடு செய்யும் பாலிவுட்!
100 கோடிக்கு மேல் ஒரு தமிழ் திரைப்படத்தின் பட்ஜெட் எதிர்காலத்தில் இருக்கும் என்று சில வருடங்களுக்கு முன்பு வரை தமிழ் சினிமா ஆர்வலர்கள் யாருமே கற்பனை கூட செய்து பார்த்திருக்க முடியாது. ஆனால், எந்திரன் அந்த சாதனையை படைத்தது.
100 கோடிகள் பட்ஜெட் என்றால், அதில் கணிசமான ஒரு பங்கு படத்தின் விஷுவல் எஃபக்ட்ஸ் செலவுக்கே சென்றது. அந்த தொகையில் இரண்டு மெகா பட்ஜெட் படங்கள் எடுத்துவிடலாம்.
இந்த சூழ்நிலையில், எந்திரன் படத்தின் பிரமாண்ட வெற்றி தந்திருக்கும் நம்பிக்கையில் ஒரு படத்தின் விஷூவல் எஃபக்ட்ஸுக்கு  பெரிய தொகையை தைரியமாக செலவழிக்கலாம் என்ற முடிவிற்கு பாலிவுட் வந்துள்ளது.
இது தொடர்பாக பிசினஸ் ஸ்டாண்டர்ட் நாளிதழ் கூறியிருப்பதாவது :
ஷாரூக் கானின் ரா-ஒன் படத்தின் ட்ரெயிலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்த படத்தில் காணப்பட்ட விஷூவல் எஃபக்ட்டுகள் பரபரப்பாக திரை ஆர்வலர்களால் பேசப்படுகிறது.
பாக்ஸ் ஆபீசில் சூறாவளியாக சுழன்று கலக்கு கலக்கிய எந்திரனில் கூட விஷூவல் எஃபக்ட்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. ஆனால், அதில் 2000 ஷாட்டுக்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால ரா-ஒன்னில் 3500 ஷாட்டுக்கள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஸ்பெஷல் எபக்ட் காட்சிகளுக்காக இந்தியா, கனடா, தாய்லாந்து, பிரான்ஸ், யூ.எஸ். உள்ளிட்ட நாடுகளில் சுமார் 750 நிபுணர்கள் பணியாற்றிவருகின்றனர்.
இன்று ஒரு படத்தின் ஸ்பெஷல் எபகடுகளுக்கு இத்துனை செலவு செய்கின்றனர். ஆனால் சில வருடங்களுக்கு முன்னர் நிலைமையே வேறு.
நிஜத்தில் எடுக்கக முடியாத, ஆல்லது செலவ அதிகம் பிடிக்கக்கூடிய காட்சிகளை தான் VFX எனப்படும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எடுப்பார்கள்.
ஸ்பெஷல் எபக்டுகளை அதிகளவில் பயன்படுத்தி சாந்தினி சவுக் டு சைனா, ப்ளூ, அலாதின், குஷாரிஷ், உள்ளிட்ட பல படங்கள் வெளியான போதும், அவை எதுவும் பாக்ஸ் ஆபீசில் வெற்றிபெறவில்லை. அப்படத்தில் பயனப்டுத்தபப்ட்ட VFX ஷாட்டுக்கள், விழலுக்கிறைத்த நீராய் வீணாகப் போயின. தயாரிப்பாளர்களுக்கும் பெருத்த நஷ்டத்தை தந்தன. ஆகையால் VFX இல் பணத்தை செலவு செய்வது வீண் வேளை என்று முடிவுக்கு வந்தனர் பாலிவுட்டில். இந்நிலையில், எந்திரன் பெற்ற பிரம்மாண்ட வெற்றி அதன் போக்கையே மாற்றியது.
2009 ஆம் ஆண்டு இந்த VFX சந்தையில் சந்தையில் மொத்த முதலீடு 320 கோடியாக இருந்தது. 2010 ஆம் ஆண்டு அது 420 கோடியாக உயர்ந்தது. 2015 ஆண்டில் இந்த துறையில் மொத்த முதலீடு ரூ.5590 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
3) சூப்பர் ஸ்டார் ரஜினி நலம் பெற்றதையடுத்து பழனியில் ஒரே நேரத்தில் 1008 பேர் மொட்டை!
திருப்பூர் ரஜினிகாந்த் தொழிலாளர் சங்கம் சார்பாக பழனியில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை), ஒரே நேரத்தில் 1008 பேர் மொட்டை போட்டுக்கொள்கின்றனர். திருப்பூர் ரஜினிகாந்த் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.எஸ்.முருகேஷ், செயலாளர் ஈஸ்வர் உள்ளிட்டோரும் மொட்டை போட்டுக்கொள்கின்றனர்.
இது தொடர்பான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுவிட்டன. 1008 பேர் என்பதால் திங்கள் இரவு தொடங்கி மறுநாள் மதியம் வரை விடிய விடிய இந்த நிகழ்வு நடைபெறும். தவிர திருப்பூர் ரஜினிகாந்த் தொழிலாளர் சங்கத்தினர் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் ஆராதனைகளை ஏற்பாடு செய்துள்ளனர்.
தனிநபர் ஒருவருக்காக இதுவரை இந்தியாவின் எந்த கோவிலிலும் இத்துனை பேர் ஒரே நேரத்தில் மொட்டை போட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
4) தென்னிந்திய ஆடியோ மார்கெட் முழுதும் சோனி வசம் – எந்திரனை தவிர!
ஆடியோ மார்கெட்டில் முன்னணியில் இருக்கும் ‘சோனி மியூசிக்’ நிருவனம், சமீபத்தில் சத்யம் சினிமாஸின் ‘திங்க் மியூசிக்’ நிறுவனத்திடமிருந்து சுமார் 146 படங்களின் உரிமையை வாங்கியுள்ளது. ஆனால் இந்திய திரையுலக சரித்திரத்தில் மிகப் பெரிய படமான எந்திரனை மட்டும் கோட்டைவிட்டுவிட்டது.
கடந்த ஆண்டு எந்திரனின் இசை வெளியான சமயம், அதன் ஆடியோ வெளியீட்டு உரிமையை பெற சோனி ம்யூசிக் மற்றும் ‘திங்க் மியூசிக்’ ஆகிய நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவியது நினைவிருக்கலாம். இறுதியில் மிகப் பெரிய தொகையை (ரூ.7 கோடி) கொடுத்து எந்திரனை பெற்றது ‘திங்க் மியூசிக்’.
Robot 2 200027 640x426  Tidbits # 55 : சூப்பர் ஸ்டார் வென்ற மற்றுமோர் விருது & ‘எந்திர’ நம்பிக்கையில் விஷூவல் எஃபக்ட்ஸில் அதிக முதலீடு செய்யும் பாலிவுட்!
“திங்க் மியூசிக்கிடமிருந்து நாங்கள் வாங்க வேண்டிய படங்களை பற்றி பேச்சு வார்த்தை நடைபெற்று அது இறுதியடைந்த போது, எந்திரன் ஆடியோ வெளியாகவில்லை. ஆகையால் இந்தப் பட்டியலில் அது சேரவில்லை” என்று இந்த டீல் குறித்து சோனி இந்தியாவின் தலைவர் ஸ்ரீதர் சுப்பிரமணியம் கூறுகிறார்.
சோனி இப்படி கூறினாலும், உண்மையில் எந்திரன் இசை உரிமை மிகவும் காஸ்ட்லி என்பதால் சோனி வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேற்படி ஆடியோ உரிமைகள் தவிர ஐங்கரனிடமிருந்து பல்வேறு (100) தமிழ் திரைப்படங்களின் டிஜிட்டல் உரிமையை சோனி பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அதில் சூப்பர் ஸ்டாரின் சந்திரமுகியும் அடங்கும். திரை இசை மட்டுமல்லாது, கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசையில் முன்னணியில் இருக்கும் கீதாஞ்சலி நிறுவனத்திடமிருந்து சுமார் 800 க்கும் மேற்பபட்ட டைட்டில்களை வாங்கியுள்ளது சோனி.
மேற்படி பரிவர்த்தனைகள் மூலம் ஆடியோ உலகில் சோனி புது சக்தியாக உருவெடுத்திருக்கிறது.
(என்ன இருந்து என்ன? எந்திர ஜாலம் இல்லையே…!)
5) ரஜினியின் இடத்தை பிடிக்க எனக்கு இன்னும் 20 ஆண்டுகள் தேவை – சல்மான் கான்
“பாடி கார்ட்” என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா மும்பையில் சமீபத்தில் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய கரீனாகபூர், இந்தி திரையுலகின் ரஜினி சல்மான்கான் என்று புகழ்ந்தார். இன்னும் பலர் இது போல் ரஜினியுடன் சல்மானை ஒப்பிட்டு பேசினர்.
இதற்கு பதில் அளித்து சல்மான் கான் பேசியதாக பல தகவல்கள் வெளியாயின. உண்மையில் சல்மான் கான் பேசியது என்ன?
“ரஜினியுடன் என்னை ஒப்பிட்டு யாரும் பேச வேண்டாம். அவருடைய ரேஞ்சே வேறு. அவருடைய இடத்துக்கு யாரும் போக முடியாது. அவருடைய இடத்தை நான் எட்ட எனக்கு இன்னும் 20 ஆண்டுகள் தேவைப்படும். நான் என்னுடைய இடத்தில் இப்போது இருக்கிறேன். இதுவே எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.”  என்றார் சல்மான்.
6) “அக்டோபரில் படப்பிடிப்பு துவங்கவிருப்பது உண்மை. ஆனால் ராமோஜிராவில் செட்டிங் எதுவும் போடப்படவில்லை” -  கே.எஸ்.ரவிக்குமார் விளக்கம்!
தலைவரின் ஓரிரு மாதங்கள் ஓய்வுக்கு பின்னர் அக்டோபரில் ராணாவை மீண்டும் துவக்கவுள்ளார் கே.எஸ்.ரவிக்குமார். ராமாஜி ராவ் ஸ்டூடியோவில் அமைக்கப்பட்டுவரும் பிரம்மாண்டமான மாளிகை மற்றும் கப்பல் செட்டிங்கில் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக கூறப்பட்டது.
இது பற்றி இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் இதை மறுக்கிறார். ஆங்கிலப் ஆட்டீறீ௮ஆஈ ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது : “ராணா படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்க இருப்பது உண்மை தான். படப்பிடிப்பு துவங்கிவிட்டதும் தங்கு தடையின்றி செல்ல விரும்புகிறோம். இன்னும் லொக்கேஷன்கள் இறுதி செய்யப்படவில்லை. ரஜினி சார் முழுக்க முழுக்க தயாரானதும் தான் மேற்கொண்டு எதையும் என்னால் உறுதியாக கூறமுடியும்.  ஆனால் இப்போதைக்கு படத்தின் ஸ்க்ரிப்ட் மற்றும் பாடல்கள் கம்போசிங்கில் தான் கவனம் செலுத்தி வருகிறோம். ராமோஜி ராவில் செட்டிங்குகள் எதுவும் அமைக்கப்படவில்லை. ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கனவே பாடல்களுக்கு இசையமைக்கும் பணியை தொடங்கிவிட்டார்.” என்று கூறுகிறார்.
இசைப்புயல் ரஹ்மான் ஏற்கனவே ராணாவுக்காக நான்கு பாடல்கள் பதிவு செய்துவிட்டார். மீதமுள்ள பாடல்கள் கம்போசிங், சூப்பர் ஸ்டார் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் முன்னிலையில் நடைபெறும் என்று தெரிகிறது.
ஷூட்டிங் துவங்குவதற்கு முன்னர் தலைவர் திருப்பதி செல்வார் என்று தெரிகிறது. (சமீபத்தில் அவர் திருப்பதி சென்றதாக வந்த செய்தி தவறானது.)
————————————————————
For Flash news & Instant updates always
check our twitter @ http://twitter.com/thalaivarfans

To follow us in India pls type in your mobile
follow thalaivarfans
and send it to 53000
You will get instant updates in your mobile thru sms.
————————————————————
[END]

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...