ஜக்குபாய் ப்ரீமியரில் சூப்பர் ஸ்டார் - உற்சாகத்தில் மிதந்த சத்யம் வளாகம்! Pics!!



சத்யம் திரையரங்கில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற ஜக்குபாய் பிரீமியர் நட்சத்திரங்களின் அணிவகுப்பால் களைகட்டியிருந்தது. எனினும் ஆயிரம் நட்சத்திரங்கள் இருந்தாலும் துருவ நட்சத்திரத்துக்கு ஈடாகுமா? சூப்பர் ஸ்டாரின் வருகையால் உற்சாக அலையில் மூழ்கியது சத்யம் வளாகம் என்றால் மிகையாகாது.

நீண்ட நாட்கள் கழித்து ஒரு பிரீமியர் ஷோவில் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி ரேகைகள் (பதட்டமின்றி) தெரிவது இங்கு தான். தவிர சூப்பர் ஸ்டாரின் வருகையால் ‘ஜக்குபாய்’ ப்ரீமியருக்கு ஊடகத்தில் முதன்மை முக்கியத்துவம் கிட்டியது என்று சொல்லவும் வேண்டுமா என்ன?

தனது மகளின் பட ரிலீசை வைத்துகொண்டு, மற்றொரு படத்தின் ப்ரீமியருக்கு தலைவர் வந்தார் என்றால், அது அவரது பரந்த மனப்பான்மையை தான் காட்டுகிறது.
சரத்தும் ராதிகாவும் ஓடோடி சென்று தலைவரை வரவேற்று அழைத்துவந்தனர். படத்தை பார்த்துவிட்டு, சரத்தையும், ராதிகாவையும், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரையும் வெகுவாக பாராட்டினார் சூப்பர் ஸ்டார். முன்னதாக முதலமைச்சர் நிவாரண நிதி உண்டியலில் சூப்பர் ஸ்டார் தனது நன்கொடையை செலுத்தினார்.




நீண்ட நாளுக்கு பிறகு, பிற நட்சத்திரங்களுடன் சூப்பர் ஸ்டார் பார்க்கும் பிரீமியர் இது. அதுவும் சத்யம் வளாகத்தில். (மாறுவேடத்தில் இடையில் வந்திருக்கலாம்!) சூப்பர் ஸ்டாரை தங்கள் திரையரங்கிற்கு வரவழைத்ததற்கு சரத்க்கும், ராதிகாவுக்கும் சத்யம் நன்றி சொல்லவேண்டும்.
முழு கேலரி + பிற தகவல்கள் விரைவில்…
(கோவா ப்ரீமியரில் சூப்பர் ஸ்டார் - நமது தளத்தின் முதல் விஷேஷ புகைப்படங்களை

‘கோவா’ சிறப்புக் காட்சியில் சூப்பர் ஸ்டார்! SUPER EXCL. PICS!





































கோவா படத்தின் சிறப்புக் காட்சி சூப்பர் ஸ்டாருக்காக பிரதேயேகமாக திரையிடப்பட்டது. சூப்பர் ஸ்டார் & அவரது குடும்பத்தினர் மற்றும் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு உள்ளிட்ட கோவா டீம் இந்த பிரத்யேக காட்சியை கண்டுகளித்தனர்.
அடுத்த நாள் நடைபெற்ற சிறப்புக் காட்சிக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் வந்திருந்தனர்.
நகைச்சுவையோடு கூடிய ஒரு பொழுதுபோக்கு சித்திரமாக கோவா வந்திருப்பதாக கூறப்படுகிறது.
பிரத்யேக புகைப்படங்கள் முதன் முதலில் நமது தளத்தில்…. உங்களுக்காக!!
குறிப்பு: ‘ஜக்குபாய் ப்ரீமியரில் சூப்பர் ஸ்டார்’ புகைப்படங்கள் என்னாச்சு? சத்தத்தையே காணோமேன்னு பாக்குறீங்களா? வேலையை முடித்துவிட்டு வந்து அதை ரெடி பண்றதுக்குள்ளே லேட்டாயிடிச்சு. அதனாலென்ன? இதோ அதை விட லேட்டஸ்ட்டான ‘கோவா’ பிரீமியர் ஸ்டில்கள். கூடுதல் தகவல்களுடன் ஜக்குபாய் பிரீமியர் புகைப்படங்கள் நம் தளத்தில் விரைவில் வெளியாகும். கொஞ்சம் பொறுமையா இருங்க. ஓகே? (லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோம்ல!!)

Shankar’s secret plans

It seems Shankar has learnt a lesson or two from the leak of ‘Jaggubhai’ on the net. The filmmaker, who had already tasted the bitterness of piracy when a couple of songs from ‘Sivaji’ made their way to the web, has now decided to implement some strict measures on his production ventures.
If sources are to be believed, the final print of 'Rettai Suzhi', whose shoot was completed a month ago, has been kept in a confidential place. And plans are on to perform post production works outside Tamil Nadu, or if possible outside India, to prevent any leakage.
The director-producer, who is currently busy with the shoot of his magnum opus ‘Endhiran’, starring Superstar Rajinikanth and Aishwarya Rai in lead roles, would take a final decision on ‘Rettai Suzhi’ post production works soon, sources say.
Directed by Thamira, the film has veteran directors K Balachandar and Bharathiraja in lead roles. The tile has now been changed to ‘Imayamum Sigaramum Irattaisuzhi’, reflecting the sobriquets of the ace filmmakers.

‘சிவாஜி வசூல் தான் டாப்பு’ மகதீரா தயாரிப்பாளர் ஒப்புதல் & கோவாவுக்கு ‘A’ - சூப்பர் ஸ்டாரின் கருத்து என்ன



1) ‘சிவாஜி’ தான் டாப்பு மத்ததெல்லாம் டூப்பு - மகதீரா தயாரிப்பாளர் ஒப்புதல்
சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் நடிப்பில் வெளியான ‘மகதீரா’ தென்னிந்தியா திரை வரலாற்றில் சிவாஜியின் சாதனையை முறியடித்துவிட்டதாக ஊடகத்தில் ஒரு பிரிவில் வெளியான செய்திக்கு, மகதீரா தயாரிப்பாளர் அல்லு சிரீஷே தனது வலைத்தளத்தில் மறுப்பு தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமா? சிவாஜி தான் இது வரை வெளியான படங்களில் அதிக பட்ச லாபத்தை வெளியீட்டாளர்களுக்கு ஈட்டி தந்தது எனவும் கூறியிருக்கிறார்.

Advance booking crowd at Udhayam for Sivaji
சிவாஜிக்கு பிறகு வெளியான வேறு சில நடிகர்களின் சில வெற்றிப் படங்கள்(?!) சிவாஜியின் வசூலில் கால்பங்கு கூட எட்டாத நிலையில், கற்பனையான எண்ணிக்கைகளை வசூல் கணக்காக கூறிக்கொண்டு தங்களை தாங்களே தேற்றிக்கொண்டனர் சிலர்.
இந்நிலையில் வெற்றிக்கான அளவுகோலாகவும், வசூலின் இலக்கணமாகவும் தமிழ் திரையுலகிற்கு மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிற்கும் சிவாஜியே இருப்பது திரு.அல்லு சிரீஷ் அவர்களின் இந்த ப்ளாக் வரிகளே சான்று. (அவர் ப்ளாக் வரிகளை இங்கு தந்திருக்கிறேன்!).
சிவாஜி வசூல் குறித்த உண்மையை பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்ட அல்லு சிரீஷ் அவர்களுக்கு நம் நன்றிகள்!!
———–You know what? Though Ghajini is the ‘highest grossing Indian film of all time’,its not the biggest money spinner in India? Rajinikanth’s Sivaji is. The movie’s share from both languages (Tamil and Telugu) is 64 crores. Till 3 Idiots arrived, this movie holds the number one spot in actual revenues. Our very own telugu film Magadheera amassed a share of Rs 58 crores. Wondering how South Indian films are able to generate revenues matching that of Hindi cinema, despite having a far lesser reach? My next article on how Southern cinema (esp Telugu) is a goldmine that needs to be tapped.———–
http://www.allusirish.in/2010/01/indian-govt-ghajini-profit-boxoffice-101/
(ரொம்ப சவுண்ட் உடுற பார்டிகள் முதல்ல சிவாஜி அட்வான்ஸ் புக்கிங் ரெக்கார்டை ஈக்வல் பண்ண முடியுமான்னு பாருங்க)
2) கோவாவுக்கு ‘A’ - சூப்பர் ஸ்டாரின் கருத்து என்ன?
‘கோவா’ திரைப்படம் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர் மாணவியரிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கிட்ட தட்ட கோவா ஜூரம் அனைவரையும் பிடித்திருக்கிறது என்றால் மிகையாகாது. வெங்கட் பிரபு நிச்சயம் இதன் மூலம் ஹாட்-ட்ரிக் அடிப்பார் என்பது உறுதி. (படம் நம்மை போல இளைஞர்களுக்கானது என்பதால் வரும் சனிக்கிழமையே பார்த்துவிடுவது என முடிவுசெய்திருக்கிறேன்!!)

இந்நிலையில் கோவா படத்துக்கு ‘A’ சான்றிதழ் கிடைத்தது குறித்து கோவா டீம் பெரிதாக அலடிக்கொள்ளவில்லை. மிகவும் கேசுவலாக இருக்கிறார்கள். சரி, இது பற்றி சூப்பர் ஸ்டாரின் கருத்து என்னவாக இருக்கும் என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறீர்கள் அல்லவா?
குடியரசு தினத்தன்று (Jan 26) அன்று ஒளிபரப்பான தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெங்கட் பிரபு இது பற்றி கூறியதாவது: படத்துக்கு சென்சார்ல ‘A’ சர்டிபிகேட் கிடைச்சதை பத்தி சூப்பர் ஸ்டார் கிட்டே சொன்னோம். அவரு, “டோன்ட் வொரி. ‘கோவா’ன்னு பேர் வெச்சிட்டு அதுக்கு ‘A’ சர்டிபிகேட் கிடைக்கலேன்னா அது தான் அதிசயம். கிடைச்சது அதிசயம் இல்லே. தவிர ‘GOA’ ன்ற பேர்லயே ‘A’ இருக்கே…!!” ன்னு அவரு ஸ்டைல்ல சிரிச்சிக்கிட்டே சொன்னாரு. அவர் சொல்றது உண்மை தானே… மொத்தத்துல நம்ம பாணில இது ஒரு ‘A CLASS ENTERTAINER’.” என்று சொல்லி முடித்தார் வெங்கட் பிரபு.
(All the best Venkat Prabu சார் & Goa team.)
3) “எந்திரனுக்கு பிறகு தான் சுல்தான் ரிலீஸ்” - சௌந்தர்யா
மீடியாவின் ஒட்டுமொத்த அட்ராக்ஷன் இப்போ சௌந்தர்யா ரஜினி தான். சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் காதலுக்கு கௌரவம் சேர்ப்பவர் தான் சூப்பர் ஸ்டார். இருவீட்டாரும் கலந்து பேசி வரும் பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி நிச்சயத்திற்கு நாள் குறித்துவிட்டார்கள்.
இந்நிலையில் Times of India நாளிதழுக்கு சௌந்தர்யா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “எனக்கேற்ற என்னை புரிந்துகொண்ட சரியான நபர் அஸ்வின். அஸ்வினின் பெற்றோரும் என் பெற்றோரும் ஏற்கனவே குடும்ப நண்பர்கள் தான். எனவே இது வீட்டார் ஏற்பாடு செய்யும் ஒரு காதல் திருமணம். நான் பேசிக்களாகவே ஒரு ப்ரைவேட் பர்சன். என் அலுவலகத்தில் இல்லையென்றால் என் வீட்டிலோ அல்லது நண்பர்களுடனோ இருப்பேன். வேறெங்கும் என்னை பார்க்கமுடியாது.
திரைத்துரையே சேர்ந்த ஒருவரை மணமுடிக்க நான் விரும்பியதே கிடையாது. நான் என் சொந்த பிஸினசில் இருப்பதால், என்னை போலவே என்னவரும் பிசினஸ் துறையில் இருக்கவேண்டும் என்று விரும்பினேன். அப்பாவுக்கு என் சாய்ஸ் இரட்டிப்பு மகிழ்ச்சி.
திருமணம் எப்பொழுது என்று இப்போ கூற இயலாது. அதை பெரியோர்கள் தான் முடிவு செய்து அறிவிக்கவேண்டும். ஆனால் நிச்சயமாக இந்த ஆண்டுக்குள் இருக்கும் என்று கூறமுடியும். இப்போதைக்கு அவர் என்னிடம் தன் காதலை சொன்னபொழுது எனக்கு பரிசளித்த மோதிரத்தை ரசித்து கொண்டிருக்கிறேன்.
எந்திரனுக்கு பிறகு தான் சுல்தான்: தவிர, என் திருமணத்தை தவிர என் மனதை வேறு சில விஷயங்கள் இப்போதைக்கு ஆக்கிரமித்துள்ளன. ஒன்று கோவா. அதற்கடுத்து எந்திரன் படத்துக்கான கிராபிக்ஸ் பணி. எந்திரன் கிராபிக்ஸ் எனது ஆக்கர் ஸ்டுடியோவில் தான் நடைபெறவுள்ளது. எனது முதல் படமான சுல்தானை அப்பாவின் எந்திரனுக்கு பிறகு தான் ரிலீஸ் செய்வேன். பிறகு, கௌதம் மேனனுடன் அடுத்து ஒரு படத்துக்கான ஒப்பந்தம் ஒன்று செய்யவிருக்கிறேன். தவிர வேறொரு படத்திற்காக புனீத் ராஜ்குமாருடனும், இயக்குனர் ப்ரேமுடனும் பேச்சு நடந்து வருகிறது.
(’கோவா’ படத்தை அஸ்வின் பாத்துட்டாரா ? என்ன சொன்னாரு?)
4) முதல்வருக்கு பாராட்டு விழா : சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் கமல் உள்ளிட்டோர் பங்கேற்பு
திரைப்பட துறையினருக்கு 90 ஏக்கர் நிலம் ஒதுக்கிய முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு வருகிற பிப்ரவரி 6-ந் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடக்கிறது. முதல்வருக்கு நடக்கும் இந்த பாராட்டுவிழாவில் பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.
விழா ஏற்பாடுகள் விறு விறுப்பாக நடந்து வருகின்றன. நடிகர், நடிகைகளின் நடனம், கலைநிகழ்ச்சிகள், நாடகம், பாடல், பிரபல இசையமைப்பாளர்களின் இசை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறுகின்றன. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பெப்சி, தியேட்டர் அதிபர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் உள்ளிட்ட திரையுலகின் அனைத்து சங்கத்தை சேர்ந்தவர்களும் இதில் கலந்து கொள்கின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல், அஜீத், விக்ரம், நயன்தாரா, திரிஷா, ஸ்ரேயா போன்ற முன்னணி நடிகர், நடிகைகள் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களும் பங்கேற்கின்றனர். இதற்காக 6-ந் தேதி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன. நட்சத்திரங்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் இதில் கலந்துகொள்வதன்பொருட்டு இந்த மாத இறுதியில் இருந்து பிப்ரவரி 6 ஆம் தேதி வரை வெளிநாட்டு படப்பிடிப்பு எதையும் வைத்துக்கொள்ளவேண்டாம் என திரை துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது பற்றி பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் கூறியதாவது:-
“திரையுலகினரின் 20 ஆண்டுகால நிறைவேறாத கனவை முதல்-அமைச்சர் கலைஞர் நிறைவேற்றி இருக்கிறார். விலை உயர்ந்த ஓ.எம்.ஆர். ரோட்டில் நிலம் ஒதுக்கி கொடுத்துள்ளார். நான் தலைவராக பொறுப்பேற்று முதல்வரை சந்தித்ததும் இது பற்றி கோரிக்கை வைத்தேன். ஓரிரு மாதங்களிலேயே அரசாணை வெளியிட்டு நிலம் ஒதுக்கி விட்டார். தனிப்பட்ட முறையில் அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஒட்டுமொத்த திரையுலகமும் இணைந்து அவருக்கு பாராட்டு விழா நடத்துகின்றன. அனைத்து நடிகர் நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என திரையுலகை சார்ந்த பலரும் கலந்து கொள்கின்றனர். கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.” இவ்வாறு அவர் கூறினார்.
(இந்த விழாவுல தலைவரோட பேச்சை கேட்க இப்போவே ரொம்ப ஆவலாயிருக்கு…)
5) ரசிகரின் குடும்பத்திற்கு தலைவர் அளித்த இன்ப அதிர்ச்சி
சென்ற வாரம் நடந்தது இது.
உங்கள் குடும்பத்துடன் நீங்கள் காரில் போய்கொண்டிருக்கும்போது, அருகே சூப்பர் ஸ்டாரின் கார் கடந்து சென்றால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அப்படி ஒரு அனுபவம் சமீபத்தில் ஏற்பட்டது நம் ரசிகர் ஒருவருக்கு.
சென்னை நகரின் பிசியான போக்குவரத்தில் நீந்தியபடி நம் ரசிகர் ஒருவர் தன் குடும்பத்துடன் வேனில் வெளியூர் போய்கொண்டிருக்கிறார். வாகனம் தேனாம்பேட்டையை கடக்கையில் அவர்களை முந்தி சென்றது ஒரு TAVERA. ஏதோ ஒன்று நம் ரசிகருக்கு பொறி தட்ட - அந்த வாகனத்தை உற்று பார்க்கிறார். வாவ்…. ஆம்… சூப்பர் ஸ்டார் அந்த வேனில் !! சந்தோஷம் பிடிபடவில்லை அந்த ரசிகருக்கு. அந்த வேனை ஒட்டி சீக்கிரம் செல்லும்படி டிரைவரை கேட்டுக்கொள்ள, அவரும் அவ்வாறே லாவகமாக ஓட்டுகிறார். கடைசீயில் சைதாபேட்டை சிக்னல் அருகே சூப்பர் ஸ்டாரின் வாகனத்திற்கு அருகே இவர்கள் வாகனம் நிற்க, நம் ரசிகரின் குடும்பத்திற்கு, “அதோ பாருங்க… தலைவரை…” என்று உள்ளே புத்தகம் எதையோ படித்துக்கொண்டிருந்த சூப்பர் ஸ்டாரை காட்ட, இவர்கள் உற்சாகத்தில், “ஐ… ரஜினி உட்கார்ந்திருக்காரு பாருங்க….” என்று கூக்குரலிட, இவர்களை ஒரு கணம் பார்த்த சூப்பர் ஸ்டார் சிரித்தபடி உடனே இருகரங்களையும் தூக்கி வணக்கம் வைக்க, இவர்களின் உற்சாக கூக்குரல் அதிகமானது. இதற்குள் சிக்னலில் க்ரீன் விழ, அருகிலிருந்த மற்ற வாகனத்தினர் என்ன நடக்கிறது என்று யூகிக்கும் முன்னர், சூப்பர் ஸ்டாரின் வாகனம் வேகமெடுத்து போக்குவரத்தில் மறைந்தது.
மீனம்பாக்கம் அருகே நடைபெறும் ‘எந்திரன்’ ஷூட்டிங்கிர்க்கோ அலது ஏற்போர்ட்டுக்கோ தலைவர் அப்போது போயகொண்டிருந்திருக்கலாம் என தகவல்!!
(அந்த குடும்பத்தினர் அன்று அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை. கேக்குற நமக்கே இப்படி இருக்கே, அவங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?)

STRIKER TAKES ON RAJINI!


The box office will witness a peculiar war of sorts next week. An unassuming flick, titled Striker directed by Chandan Arora, starring Boys Siddharth is releasing on February 5, 2010. On the same day, the dubbed Hindi version of Rajini’s blockbuster Sivaji is being released too. So it’s Rajini versus Siddharth at the turnstiles.Striker is a sports movie about a carom fanatic hero, portrayed by Siddharth. Interestingly, Aamir Khan, who watched the movie recently congratulated Sid on his performance predicting that the movie will become an instant hit.

RAJINI AND KAMAL AT JAGGUBHAI PREMIERE




The Jaggubhai premiere show for the film fraternity was held at Satyam Theatre in Chennai on January 27th, 2010. And as mentioned by Sarathkumar earlier, a 'hundi' was placed at the venue to facilitate the stars to contribute to the Chief Minister’s relief fund.Superstar Rajinikanth, Ulaganayagan Kamal Haasan, KS Ravi Kumar, Rama Narayanan, Trisha, Shriya, Simran, Radhika Sarath Kumar and a host of other film stars were also present to watch the show and contribute to the fund.Jaggubhai, which is produced by Raadan TV and UTV Motion Pictures, will hit the screens on January 29th, 2010. The film stars Sarath and Shriya in the lead roles.

RAJINI AND KAMAL WILL BE THERE


A grand function is being organized on February 6th, 2010 to honor the Chief Minister of Tamil Nadu for allocating land to the deserving film and small screen technicians, actors and producers. The event will be held at the Nehru Indoor Stadium. All the associations of the film and small screen industry including the Nadigar Sangam, FEFSI, Producers’ Council have joined together to felicitate the CM. A mega cultural event is also planned on the same day. Following this, the associations have requested the all the film directors and producers to cancel shootings that are scheduled to take place in locations outside the city. Veteran actors Rajinikanth and Kamal Haasan are also expected to grace the occasion.

Rajnikanth’s breathtaking train stunt sequence in ‘Endhiran’



Though Superstar Rajnikanth has been well known for his astounding action sequences in almost all his films. But ‘Murattu Kaalai’ has been considered as the best one in his entire career as the stunts were so naturalistic and outmatched every films.
But now director Shankar assures that Rajnikanth’s stunt sequences in ‘Endhiran’ will overshadow ‘Murattu Kaalai’ itself. Director Shankar had recently shot a stunt sequence across the moving train on a exotic hill station. Usually, such sequences are canned across Ooty train passages, but this time the filmmaker has opted for Konkan Railways and felt more difficult to obtain permission from Central Railways Department.
Finally, after affording big sum, the crew could somehow make it happen and the stunt shots have been brilliantly performed by Rajnikanth. This will be one of the best highlighting features in this film.

எந்திரன் பாட்டு லீக்?


ரஜினிகாந்த்- ஷங்கர் கூட்டணியில் உருவாகும் மெகா படைப்பான எந்திரன் – தி ரோபோ படத்தின் பாடல் என்ற பெயரில் ஒரு ஆடியோ ஃபைல் இணைய தளங்களில் உலா வரத் துவங்கியுள்ளது.
படம் வெளியாகும் முன்பே அதை இணைய தளங்களில் லீக் செய்வது வாடிக்கையாகிவிட்டது.
முன்பு சிவாஜி படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள், பாடல்கள் அனைத்தும் படம் வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் லீக்காகி பரபரப்பேற்படுத்தின. தரம் மோசமாக இருந்தாலும், முன் கூட்டிய படத்தின் பாடல்களை தெரிந்து கொள்வதில் உள்ள த்ரில் காரணமாக பலரும் இவற்றை டவுன்லோடு செய்து வந்தனர்.
இந்த பப்ளிசிட்டியைப் பார்த்த கவுதம் மேனன் போன்ற சில இயக்குநர்கள் இதனை ஒரு விளம்பர உத்தியாகவே பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். வாரணம் ஆயிரம், விண்ணத் தாண்டி வருவாயா படங்களில் இதை பெரும் பப்ளிசிட்டியாக்க முயன்றார் அவர். ( சரத்குமாரின் ஜக்குபாய் சமாச்சாரம் இதில் சோராதுங்ணா!)
இந் நிலையில் இப்போது மீண்டும் ரஜினியின் எந்திரன் பட பரபரப்பு ஆரம்பித்துள்ளது. முதலில் பெருவில் எடுக்கப்பட்ட எந்திரன் படப்பிடிப்பு காட்சிகளின் வீடியோவை உலாவிட்டவர்கள், இப்போது, அதன் ஆடியோ என்று ஒரு பாடலை லீக் செய்துள்ளனர்.‘என் உயிரிடம் ஒரு கேள்வியைக் கேட்டேன்…’ என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடல் 3.16 நிமிடங்கள் ஒலிக்கிறது.
இந்தப் பாடலின் ஒலி (பாடகர் குரல்) தெளிவாக இல்லை. ரஹ்மான் ட்ராக் பாடியதை அப்படியே எடுத்து இணையத்தில் விட்டுவிட்டார்களோ எனும் அளவுக்குதான் உள்ளது.

Endhiran Story Revealed



Robots have been a thing of Hollywood films for long. Among the films which had Robots as central characters Steven Spielberg’s Artificial Intelligence is considered the best by World Science-fiction Forum. But director Shankar confidently says once his super star Endhiran is released even that will join the club of best films with Robots.
So what is the story of Endhiran? People who have been following each and every moment of the film’s progress have put together all the pieces and made a story. It is this.
Rajni plays dual roles in Endhiran. One is a scientist and the other is a Robot. Scientist Rajni creates a Robot with artificial intelligence – like that of sixth sense in humans – to help human beings and to the development of the country. But its silicon heart falls in love with Aishwarya Rai. Writes romantic poems and the Robot behave just like a human being. Knowing about the extra ordinary intelligence of the Robot the villains try to get control of the Robot. Scientist Rajni fights to save the Robot falling into the hand of the enemies and destroys the evil forces using the Robot itself.
Wow!!! We just cant wait any longer Shankar Sir!

Enthiran Audio Release On April 2010


As the D- day is nearing we have more on Endhiran coming out. Now it is about the theme music. AR Rahman who is working on Endhiran songs from London has completed the theme music first at the behest of director Shankar. The theme music comes where ever the Robot Rajni appears. Shankar will plan and film the visual sequences based on the music. The story boards for the sequences are being readied at a frantic pace by the team of Shankar.Apart from its music Endhiran is also is special for its choreography by Prabhu Deva, lyrics by Vairamuthu, art direction by Sabu Cyril and cinematography by Ratnavelu. Another specialty will be the exclusive sound effects crafted by the Oscar winner Resul Pookutty. Pookutty creates the unique metallic sound effects for the Robot charcter.Other than the Endhiran team there is one more person who very closely following Endhiran developments right from its scratch. That is the chief minister M. Karunanidhi. He had already enquired about the release date to Rajnikanth many times.With plans perfect Shankar has allotted six months only for the graphics, animation and other special effects. So the release may be pushed little further than previously expected. Our sources tell us the music will rock in April and the film is a Diwali pleasure.

Soundarya Rajinikanth speaks about her marriage

Rajini's second daughter, Soundarya Rajinikanth isgetting ready for marriage and the betrothel will be held on 17th Feb 2010.
HosurOnline approached Soundarya to detail more on the events that lead to the marriage of her with Aswin.
After initial hesitations, she agreed to speak to the senior reporter Mr. Richard of HosurOnline and here below are the details:
HosurOnline: Why its Aswin?
Soundarya: Aswin's family and mine are close friends. My father liked the family of Aswin and hence he decided for the marriage.
HosurOnline: Is Aswin your childhood day friend?
Soundarya: No, I met Aswin only a year ago. We became friends after that.
HosurOnline: You said, both of your families are friends, then how come you met Aswin only a year ago?
Soundarya: What you guess is right! Its me, who introduced Aswin's family to my parents.
HosurOnline: Then, is this a love marriage?
Soundarya: Partially Yes and Partially No. Even though I liked Aswin, its my parents who arranged for this marriage.
HosurOnline: After marriage, will you live in Chennai or prefer to move to someother country?
Soundarya: We will live in Chennai.
HosurOnline: It is said that the financial trouble between you and your friend and the news that came in news channels made the announcement of yourmarriage too quick by your father. Is that true?
Soundarya: Sorry, no comments.

Not a youth anymore after Endhiran?

We must have learnt that Rajini is donning the role of a Scientist in Shankar’s ‘Endhiran’, but actually we will get to see a never-seen-before, young and smart Rajini. Shankar who made Superstar as fair as a European is working on boosting the youth factors of our Superstar in ‘Endhiran’.
But, it’s the last time that we will enjoy it all…
As Rajini has decided to take up roles that will suit his real age after the release of ‘Endhiran’, he wanted to be showed as young and smart as possible. So, he had asked Shankar to pay extra attention towards his looks. And only after this, Shankar has modified his character as a scientist student.
We might have been shocked by Rajini’s unexpected choice of doing roles that suits his age; however, his close friends say that it’s been a long since our Superstar had decided this. Looks like he had shared the same with his buddy Amitabh Bachchan, while he was working for ‘Endhiran’ in Lonawala.
So, after ‘Endhiran’ we can see Rajini doing dignified character roles like Amithji…

'AO' isn't like a Hollywood film: Rajini



"Aayirathil Oruvan is not like a Hollywood film. But it is out and out a Hollywood film, made in accordance with the Hollywood standards", said Superstar Rajinikanth, after watching the movie at a special screening recently.
The top actor is all praise for Karthi, the protagonist of the film. "Karthi has proved himself in his debut movie 'Paruthiveeran' itself. He has repeated the magic in 'Aayirathil Oruvan' too. Hats off to him."
Rajini added: "Tamil film industry should make sure that Karthi's talent is utilised well. My congratulations to director Selvaraghavan and producer R Raveendran for coming out with such a quality product."
Meanwhile, about 20 minutes of the movie has been trimmed to honour the reaction of film-buffs and critics. Attempts are also being made to get a U/A certificate from the Censor Board to reach large number of the audience.

தொலைபேசியில் உரையாடிய சூப்பர் ஸ்டார்; சிலிர்த்து போன சன் மியூசிக் தொகுப்பாளர்

பொங்கல் வெளியீடான ‘குட்டி’ நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. தேவி திரையரங்கில் சனிக்கிழமை இரவு நமது நண்பர்களுடன் படத்தை பார்த்து ரசித்தோம் நாம். படத்தை உங்கள் குடும்பத்துடன் தாராளமாக கண்டு ரசிக்கலாம். படத்தின் முதல் பாதி சூப்பர். இரண்டாம் பாதி சற்று ட்ரிம் செய்யப்பட்டால் நன்றாக இருக்கும் என்பது பலரது அபிப்ராயம். இடைவேளைக்கு பிறகு படத்தின் வேகத்தை பாதிக்கும் சில காட்சிகளை நீக்கி ட்ரிம் செய்து, படத்தை நன்கு PROMOTE செய்தால் படம் சூப்பர் ஹிட் பட்டியலில் இடம் பிடிப்பது உறுதி.
குட்டி படத்தின் சிறப்பு நிகழ்ச்சி பொங்கல் நிகழ்சிகளில் சன் மியூசிக்கில் இடம்பெற்றது. நடிகர் தனுஷ் மற்றும் தொகுப்பாளர் ஆடம்ஸ் பங்கேற்றனர். நேயர்களுடன் தொலைபேசியில் உரையாடினார் தனுஷ்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் சூப்பர் ஸ்டார் திடீரென தொடர்புகொள்ள, நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆடம்சுக்கு தலை கால் புரியவில்லை.
நா…குழறி… சிலிர்த்து, விக்கித்து போய்விட்டார் ஒரு நிமிடம்.
இந்த வீடியோவை பார்க்கையில் தலைவரின் குரலை கேட்க்கும்போது, நமக்கே ஒரு வித பரவசம் வந்துவிடுகிறது. அப்போது போனில் கேட்கும் ஆடம்சுக்கு எப்படி இருந்திருக்கும்?
யாத்ராவுடன் தாம் மழலை பேசிக்கொண்டிருந்ததை குறிப்பிட்டுள்ளார் சூப்பர் ஸ்டார். குட்டி படத்தை முன் தினம் தான் பார்த்ததாகவும் படம் மிக நன்றாக இருப்பதாகவும், தனுஷின் நடிப்பை தாம் மிகவும் ரசித்ததாகவும் படம் வர்த்தக ரீதியில் நன்கு போகும் என்றும் கூறியிருக்கிறார் தலைவர். மேலும், தனுஷிடம் தமக்கு பிடித்த விஷயமாக அவர் கூறியது: புதுப் புது விஷயங்களை கற்றுக்கொள்ளும், தெரிந்து கொள்ள விழையும் அவரின் ஆர்வத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

Shankar pens on ‘Endhiran’


Rajinikanth-starrer ‘Endhiran’, is going to be a visually wowee and technically super rich film. Get ready for an ultra-technical film that will be simply spellbinding. Yes, what do you say about a film, which some renowned technicians of the world-famous Stan Winston Studios have called as a movie that has made maximum use of the animatronics technique? Director Shankar, in his blog, recently stated that the film makes use of the aforementioned technique and that its use is effective in Endhiran. "Endhiran is the first Indian movie to use Stan Winston Studio’s Animatronics technology. We all are proud and happy to be associated with the number one Hollywood studio who did a great job in movies like Jurassic Park, Predator, Terminator, Ironman and the recent Avatar," Shankar wrote in his blog. Around 22 scenes of the movie have been shot using the technique. It reportedly took 30 months of planning and conceptualisation for a group of technicians, who came to Chennai's Sun Stuios to work for a period of 4 months to execute it. Gasp! In his blog, Shankar has even put some of the exclusive pics where we see him with the Hollywood technicians, Rajini and others.

Rajinikanth watches AO!



There was a special screening of Selvaraghavan’s Aayirathil Oruvan for superstar Rajinikanth at AVM preview theatre on Friday (Jan 15) evening.
Those who attended the screening and welcomed Rajini included producer R Raveendran, hero of the film Karthi and guest Arya.
Selvaraghavan who was not present at the venue later caught up with Rajinikant and they discussed the finer points of the film with him.

Rajinikanth, Shankar At Stanwinston Studios in Endhiran Shooting Photo Gallery
















































எந்திரன் படப்பிடிப்பு மற்றும் இறுதி கட்ட பணிகளில் பிசியாக இருக்கும் இயக்குனர் ஷங்கர், இரு வாரங்கள் கழித்து மீண்டும் தனது ப்ளாக்கை அப்டேட் செய்திருக்கிறார். அசத்தலான படங்களோடு. ஆனால், இம்முறை On-screen படங்கள் அல்ல.
சூப்பர் ஸ்டாருடன் ஷங்கர் தலைமையில் எந்திரன் குழுவினர் PRE-PRODUCTION மற்றும் மேக்கப் டெஸ்ட்டுக்காக லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டூடியோவிற்கு எந்திரன் துவங்குவதற்கு முன்பு சென்று வந்ததை பற்றி தனது அனுபவங்களை சொல்லியிருக்கிறார்.
புகழ் பெற்ற அந்த ஸ்டூடியோவில், சூப்பர் ஸ்டார் மற்றும் எந்திரன் குழுவினர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இது தான் தொழில் பக்தி!
இன்னொரு சேதி அவர் சொல்லியிருக்கிறார். சூப்பர் ஸ்டாரின் தொழில் பக்தியை பறைசாற்றும் செய்தி அது. ஊரெல்லாம் விடுமுறையில் பொங்கல் திருநாளை கொண்டாடிக்கொண்டிருக்க, சூப்பர் ஸ்டாரோ இன்று எந்திரன் படப்பிடிப்பில் இருக்கிறாராம். எந்திரன் குழுவினருடன் தான் அவருக்கு இன்று பொங்கல். தொழில் பக்திக்கு இதைவிட சிறந்த சான்று இருக்க முடியுமா?
ஷங்கர் தனது ப்ளாக்கில் ஆங்கிலத்தில் எழுதியுள்ள பதிவின் தமிழாக்கம் இது.Over to ஷங்கர் @ www. directorshankaronline.com
ஹாய்,
உபயகுசலோபரி (நலம் நலமறிய அவா),
உங்களில் நிறைய பேர், ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டூடியோ பற்றி கேட்டிருக்கிறீர்கள்.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் பிரசித்தி பெற்ற ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டூடியோவின் அனிமேட்ரானிக்ஸ் தொழில் நுட்பத்தை இன்டிஹியாவில் முதன்முதலில் பயன்படுத்துவது நம் எந்திரன் படம் தான். ஜூராசிக் பார்க், Terminator, Predator உள்ளிட்ட பல படங்களில் பணிபுரிந்தது இந்த ஸ்டூடியோ தான்.

ஜூலை 2008 ஆம் ஆண்டு, நானும் சூப்பர் ஸ்டார் ரஜினியும், எந்திரன் குழுவினரும் ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டூடியோவிற்கு ஸ்கேனிங், மேக்கப் டெஸ்ட் மற்றும் படத்தின் Pre-Production பணிகளுக்காக சென்றிருந்தோம். இதற்காக சில வாரங்கள்அங்கு செலவிட்டோம். ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரூன், அர்னால்ட் போன்றோர் பணிபுரிந்த ஸ்டூடியோவில் நாமும் பணிபுரிவது எங்களுக்கு உண்மையில் மிகப் பெறும் பெருமை.
ஒன்றரை வருடங்களாக நடந்த பயிற்சிக்கு பிறகு, ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டூடியோவில் இருந்து இங்கு சன் ஸ்டூடியோஸ் செட்டுக்கு வந்து கிட்ட தட்ட நான்கு மாதங்கள் பணிபுரிந்தனர். எந்திரன் படத்தின் கிட்டத்தட்ட 22 காட்சிகள் இந்த அனிமேட்ரானிக்ஸ் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சூட் செய்யப்பட்டது. இதற்காக சூப்பர் ஸ்டாருக்கு விஷேஷ மேக்கப் போடப்பட்டது. பெருமபாலான காட்சிகள் ரஜினி சாரை வைத்து ரியல்லாக ஷூட் செய்தோம். காட்சிகள் தத்ரூபமாக இருக்கவேண்டும் என்பதற்காக இந்த காட்சிகளில் கிராபிக்ஸை பயன்படுத்தாது இந்த அனிமேட்ரானிக்ஸ் தொழில் நுட்பத்தை பயன்படுத்தினோம்.
முடிவில், ஸ்டான்வின்ஸ்டன் ஸ்டூடியோ ஊழியர்கள், அசந்து போய் “அனிமேட்ரானிக்ஸ் தொழில் நுட்பத்தை மிக சரியாக, அநேக இடங்களில் பயன்படுத்தியிருக்கிறீர்கள்” என்று எங்களுக்கு பாராட்டு தெரிவித்தீர்கள். ஹாலிவுட்டில் கூட இது அரிது.
உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட எந்திரன் குழுவினருடன் தான் என்னுடைய பொங்கல் இருக்கும். ஆம்.. இன்று எங்களுக்கு படப்பிடிப்பு இருக்கிறது.
கூடுமானவரை உங்களை மறுபடியும் சீக்கிரம் சந்திக்கிறேன்.
உங்கள் அன்புள்ள,ஷங்கர்.

Hi Everyone…
Ubhayakusalobhari!!! (UBKS)(Its a Sanskrit word used by Ambi in ANNIYAN. Meaning: – I am fine… Everything ok here… Hope you and your family doing well… etc… etc…)
Most of you have asked about Stanwinston Studios role in Endhiran.
Yes. Endhiran is the first Indian movie to use Stanwinston Studio’s Animatronics technology. We all are proud and happy to be associated with No.1 Hollywood studio who did a great job in movies like Jurassic Park, Predator, Terminator, Ironman and the recent Avatar.
Myself, Rajini sir and our Technical crew have been at Los Angeles for couple of weeks at Stanwinston Studios for scanning, make-up test and preproduction works in July 2008. We all are excited that we are working at the place where Steven Spielberg, James Cameron and Arnold Schwarzenegger have worked.
After 1½ half years of preparatory work a group of top technicians came to Sun Studio’s Chennai sets and worked around for 4 months. 22 scenes of Endhiran Movie have been shot using Animatronics and Special Make-ups. Most of Important scenes was shot lively with Rajini sir using Animatronics without CGI.
At the end of the day Stanwinston people told that they are very happy that Endhiran movie utilized maximum animatronics techniques in so many scenes in all possible ways, which is very rare in Hollywood too… Cool….
Wish you all a very very Happy Pongal…!!!
And my pongal is on the sets with Rajini Sir, Ash and Endhiran crew.Today we are having shooting.








Flash & Exclusive: எந்திரன் எப்போ ரிலீஸ்? சூப்பர் ஸ்டார் பதில்!



எந்திரன் படம் எப்பொழுது வரும் என்ற நமது பெரும்பாலானோரது ஏக்கத்திற்கு, கேள்விக்கு சூப்பர் ஸ்டாரே தமது சமீபத்திய கேரள பயணத்தின்போது பதிலளித்திருக்கிறார்.
எந்திரன் படத்தை விரைவாக முடிக்க வேண்டி, அதன் கிராபிக்ஸ் பணிகள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட இடங்களில் பிரித்தளிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவற்றில் ஒன்று சௌந்தர்யா ரஜினிகாந்தின் ஆக்கர் ஸ்டூடியோஸ். டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் சௌந்தர்யா இதை கூறியுள்ளார்.
இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கொழக்குட்டோம் Film and Video பார்க்கில் உள்ள, பிரசாத் லேப்பில் கூட எந்திரன் படத்திற்கான MOTION CAPTURING மற்றும் இதர கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகின்றன.
இதில் பங்கேர்ப்பதர்காக திருவனந்தபுரம் செல்வதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினி நேற்று முன்தினம் மாலை சென்னை விமான நிலையம் வந்தார். சிங்கார சென்னையின் போக்குவரத்து நெரிசலில் அவர் மாட்டிக்கொண்டு, சற்று தாமதமாக விமான நிலையம் சென்றார் சூப்பர் ஸ்டார். அதற்குள் அவர் பயணம் செய்யவிருந்த விமானத்தின் புறப்பாடு நேரம் நெருங்கிவிட்ட படியால் விமானத்தை தவறவிட்டார் சூப்பர் ஸ்டார். இதையடுத்து விமான நிலையமே பரபரப்படைந்தது. விமான நிலைய ஊழியர்கள் மூலம் விஷயம் ஊடகத்திற்கும் நாளிதழ்களுக்கும் தெரியவர, சூப்பர் ஸ்டார் விமனாத்தை தவறவிட்ட சம்பவம் தலைப்பு செய்தியானது. (மாலை சுடர் நாளிதழ் போஸ்டரில் மேற்ப்படி செய்தி இடம் பெற்றது. இது எப்படி இருக்கு?) ஆனால் சூப்பர் ஸ்டாரோ சிறிது அலட்டிக்கொள்ளாது, அடுத்த விமானத்தில் திருவனந்தபுரம் சென்றார் தலைவர்.
வெள்ளை சட்டையும் ஜீன்சும் அணிந்து தனியாளாக திருவனந்தபுரம் சென்று இறங்கிய ரஜினியை அடையாளம் கண்டுகொண்ட திருவனந்தபுர, விமான நிலைய ஊழியர்கள் ஏகப்பட்ட பேர், ஆர்வத்துடன் அவரை சுற்றி வளைத்து ஆட்டோகிராப் கேட்டபடி மொயத்துவிட்டனர். விமான நிலையத்தில் அவரை சூழ்ந்துகொண்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்த ரஜினி, பின்னர் அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். ரசிகர்களுடன் உற்சாகமாக பேசிய அவர், “நல்ல கதை, கதாபாத்திரம், இயக்குநர், தயாரிப்பாளர் கிடைத்தால் மலையாள படத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன். ‘எந்திரன்’ படம் ஜூலையில் ரிலீசாகும்” என்றார்.
கால் டாக்சியில் பயணம் செய்த சூப்பர் ஸ்டார்
சிறிது முகம் சுளிக்காது அனைவருக்கும் நிதானமாக ஆட்டோகிராப் போட்டு கொடுத்த தலைவர், பின்னர் அங்கிருந்து வாடகை கார் (CALL TAXI) மூலம் KINFRA PARK அமைந்திருக்கும் கொழக்குட்டோம் சென்றார். (தினத் தந்தி செய்தி இது). திருவனந்தபுரத்தில்ரிந்து சுமார் பத்து கி.மி. தொலைவில் உள்ள இந்த அதி நவீன தொழில்நுட்ப பூங்காவில் தான் பிரசாத் லேப் அமைந்துள்ளது.
‘எந்திரன்’ படத்தின் கிராபிக்ஸ் பணிகள், கின்ஃபிரா பிலிம் அண்ட் வீடியோ பார்க்கில் இயக்குநர் ஷங்கர் முன்னிலையில் கடந்த சில தினங்களாக நடந்து வருவது குறிப்படத்தக்கது. தற்போது மோஷன் கேப்சரிங் பணிகள் நடக்கிறது. ரஜினிகாந்தின் ஒவ்வொரு அசைவுகளையும் பல கேமராக்கள் மூலம் பதிவு செய்து, அனிமேஷன் காட்சிகளாக மாற்றப்பட்டன.
கின்ப்ராவிலும் ரசிகர்களின் அன்பு வெள்ளத்தில் சிக்கி தவித்தார் தலைவர். அங்கு பணிபுரியும் கம்ப்யூட்டர் வல்லுனர்கள் (Techies) ஏராளமானோருக்கு ஆட்டோகிராப் கேட்டு சூப்பர் ஸ்டாரை மொய்த்தனர். பலர் அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டனர்.

இதற்கப்புறம் தான் செய்தியே… இவர் KINFRA வில் இருப்பது தெரிந்து, ஏராளமானோர் KINFRA வுக்கு வெளியே திரண்டுவிட்டனர். (சுமார் 5000 பேர் என்று புள்ளி விபரம் தருகிறது SIFY.) செக்யூரிட்டிகளும் காவலர்களும் எத்தைனையோ கேட்டுக்கொண்டும் தலைவரை பார்க்காது நகர்வதில்லை என்பதில் உறுதியாக இருந்தனர் ரசிகர்கள். கடைசீயில் தலைவர் வெளியே வந்து கையசைத்த பின்பு தான் கூட்டம் கலைந்தது. கவனிக்க இது நடந்தது கேரள மாநிலத்தில். கேரளத்தை பத்தி தெரியுமில்லே? சினிமாவையோ ஷூட்டிங்கையோ நடிகர்களையோ பெரிதாக கண்டுகொள்ளாத மக்கள் உள்ள மாநிலம் அது. அங்கேயே தலைவருக்கு இப்படி என்றால்? காரணம் நடிகர், சூப்பர் ஸ்டார் என்ற நிலைகளையெல்லாம் தாண்டி அவர் எங்கோ சென்றுவிட்டது தான்.
நேற்று மாலை வரை பட பணிகளில் பங்கேற்றுவிட்டு, இரவு சென்னை திரும்பினார் சூப்பர் ஸ்டார்.

Soundarya speaks about her marriage



The wedding engagement of the industrialist Aswin and Rajni’s daughter Soundarya is to take place on 17th February. Soundarya wile speaking about this said,” I know Aswin for the past one year.
My parents and his parents are good family friends. When I told my father about our love, he agreed. This love marriage has taken place with both the parents’ approval.
I am really that I have chosen Aswin. I did not have the intention of selecting a bridegroom from my profession. At the same time Aswin respects my profession. After marriage we will be staying in Chennai.His business and my business are in Chennai. Where else can we go? The engagement function is to take place on February 17th. The date of the marriage is yet to be fixed. The marriage will also take place this year. The final stage work of the film Goa is going on. This film will be released by end of this month.”

ARR’S ‘Endhiran’ Treat With Super 8


Every time, A.R. Rahman fetches an accolade, very few people strike his mind about whom he sings praises of. Firstly, it’s ‘Ella Pugazhum Iraivan Oruvanukke’ (All praise to the Almighty God), followed by his sweet mom. Obviously, Manirathnam and Shankar would be the other personalities to be uttered about.Indeed, they remain so special and close to Rahman’s heart as he keeps ready with dozens of tunes much before they approach him.Much alike his previous films with these directors, A.R. Rahman has assured that his ‘Raavana’ and ‘Endhiran’ will be certainly gratifying.Buzzes are that the academy award winner has roped in 8 best singers from Mumbai for crooning a song in Rajnikanth starrer ‘Endhiran’. Much impressed with the song, director Shankar and art director have grandiosely erected mind-boggling sets to can this song.

Rajini Speech Not Acceptable - Theater owners association


ரஜினி பேசியது சரியல்ல - திரையரங்க உரிமையாளர் சங்கம்மரம்


சும்மாயிருந்தாலும், காற்று அதை விடுவதே இல்லை என்றொரு கவிதை உண்டு. ரஜினி சும்மாயிருந்தாலும், வலிய வரும் வம்புகள் அவருக்கு சிக்கலையே தேடி தருகின்றன என்பதற்கு லேட்டஸ்ட் உதாரணம் ஜக்குபாய் விவகாரம்.இது தொடர்பான கண்டன கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ரஜினி, திரையரங்க உரிமையாளர்கள் மனமும் புண்படுகிற மாதிரி சில வார்த்தைகளை பேசிவிட்டார். திருட்டு வி.சி.டி கள் திரையரங்குகளில்தான் பதிவு செய்யப்படுகின்றன என்பதை போலிருந்தது அவரது பேச்சின் சாரம்சம்.இதையடுத்து அவசரமாக கூடிய திரையரங்கு உரிமையாளர் சங்க நிர்வாகிகள் ரஜினியை கண்டித்து அறிக்கை அனுப்பியுள்ளனர். விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் திருட்டு விசிடி காரர்களுக்கு துணை போவது போல பேசியிருக்கிறார் ரஜினி. எனவே அவர் இதற்கு உடனடியாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது அந்த அறிக்கையில்.இதே நிகழ்ச்சியில் அவர் ஜக்குபாய் படத்தின் கதை எந்த ஆங்கில படத்திலிருந்து சுடப்பட்டது என்பதையும் வெளிப்படையாக கூறியிருந்தார் அல்லவா? அதற்கும் சேர்த்து தனது கண்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறது திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்.

Aishwarya Rai In ’27 Dresses’


Let’s guess what should have strike your minds on glimpsing this title. Obviously, with Hindi film industry acquiring remake rights over international projects at an ease, it’s almost entailing that she is probably casted in the remake of Hollywood’s blockbuster ’27 Dresses’.If so, it’s not even close to the right call. This is all about Aishwarya Rai’s Endhiran-bounded factor. It looks like director Shankar has been extravagantly spending more on Aishwarya Rai’s costumes and makeovers.It seems that the beauteous missy appears in ’27 dresses’ for a particular song that’ll turn to be one of the highlighting attribute. What would make your hearts skip several beats is about each costume costing Rs 2.5Lakhs.Earlier, Shankar had delineated Aishwarya with more costumes for the song ‘Poovukkul’ (Jeans), which was pictured across 7 wonders of the World.

Rajnikanth’s younger daughter Soundarya to get married



For Rajni 2010 will be the most unforgettable year. Since his most expected film Endhiran is being released this year and his younger daughter Soundarya is also getting married.
Soundarya’s marriage engagement is to take place on 14th February. The bridegroom Aswin is the son of the popular builder Ram Kumar. Aswin after completing his engineering has finished is MS at Stanford University in America.Soundarya wanted her marriage after completing the animation film Sultan the Warrior. Rajni wanted to complete Endhiran before his daughter’s marriage. The work of Endhiran, Sultan the Warrior and Soundarya’s marriage is taking place in a rapid pace

32 ரசிகர்களுக்கு இலவச வீடு கட்டி தரும் ரஜினி!


ரஜினிக்கு உண்மையான ரசிகர்களாக இருந்தவர்கள், இப்போது அதற்குரிய பலனை அனுபவிக்கும் நேரம் போலிருக்கிறது!தனது கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்குப் பக்கத்திலேயே 1 ஏக்கர் நிலத்தை ரசிகர் மன்ற நிர்வாகிகள் 32 பேருக்கு இலவசமாகக் கொடுத்துள்ள ரஜினி, அதில் அவர்களுக்கு தனது சொந்த செலவில் வீடும் கட்டித் தருகிறார். கேளம்பாக்கம் பண்ணை வீடுதான் இப்போது ரஜினி பெரும்பாலும் தங்கும் இடம். இந்த வீட்டுக்குப் பின்புறம் உள்ள ஒரு ஏக்கர் நிலத்தை, அரை கிரவுண்டுகளாக சமமாககப் பங்கிட்டு, ஆரம்பத்திலிருந்து தன்னை நம்பி உடன் வந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் 32 பேருக்குக் கொடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன் படி ராகவேந்திரா மண்டப நிர்வாகிகள் மிக சமீபத்தில் பிரித்துக் கொடுத்துள்ளனர்.அத்துடன் நில்லாத ரஜினி, அவர்களுக்கு ஒரு இனிய அதிர்ச்சியையும் தந்துள்ளார். அனைவருக்கும் தனது சொந்த செலவில் வீடு கட்டித் தருவதாகவும் அறிவித்துள்ளார். கேளம்பாக்கம் பகுதியில் கிரவுண்ட் விலை கோடியைத் தாண்டி விற்பனையாகும் இந்தக் காலத்தில் அரை கிரவுண்ட் நிலம் என்பது சாமானியர்களால் நினைத்துப் பார்க்க முடியாத கனவாகும். அதிலும் வீடு கட்டுவதெல்லாம் எவ்வளவு பெரிய விஷயம்?தங்களுக்காக இவ்வளவு செய்த தங்கள் தலைவரின் பெயரில் இந்தப் பகுதி அமைய வேண்டும் என்பதற்காக ரஜினி அவென்யூ என பெயர் சூட்டியுள்ளனர் ரசிகர்கள். ஆனால் 'இதெல்லாம் வேண்டாம்பா... இந்தப் பெயர் வைக்கலேன்னா நீங்க என் நண்பர்கள் இல்லேன்னு ஆகிடுமா?' என்று தன் பாணியில் கேட்ட ரஜினி, பெயர் வைக்க மறுப்பு தெரிவித்துள்ளாராம்‍‌!

Rajni’s robot get ups uploaded illegally in websites



Shankar was secretly shooting the film Endhiran. Rajni has donned two roles in this film. One is of a scientist and other of a robot.
Shankar was very careful that these getups should not be leaked. He even engaged security men at shooting spots to prevent people taking photos in their cell phones. Most of the shooting of Endhiran took place in software companies. Only the scientist portions were shot in public.
Rajni’s getups including the robot getup were uploaded in the websites. The crew is shocked about this leak. Few months ago the song sequence featuring Rajni and Aishwarya Rai was shot in Peru. These stills also found their way to the net a few months ago.Shankar also conducted an enquiry regarding this. Endhiran stills are constantly being uploaded in the net in spite of severe vigilance.

Rajini releases ‘Goa’ music



At a time when everyone was expecting a grand audio launch function of ‘Goa’, since it is the maiden production venture of Soundarya Rajinikanth’s Ocher Studios, the film had its music launch in a simple way on Monday.
The music album of the movie was released by Superstar Rajinikanth at his residence in Chennai. The simple function was attended by the cast and crew of the film directed by Venkat Prabhu, besides officials from Sony Music.
Says Venkat Prabhu, “I feel proud that Goa’s audio was released by the Superstar. He is always there to encourage us right from the days of ‘Chennai 6000028’. He is hopeful that ‘Goa’ would become a super hit.”
On the film’s music, he says, “Yuvan always comes up with special tunes for my films. He has repeated the magic in ‘Goa’ too. All the songs have come out well. They would rock audio charts soon.”

Kollywood Gets Charged-Up Against Piracy


“When nothing seems to be curtailing the evil acts of prevailing piracies, it’s necessary to take severe actions within amongst ourselves to ensure that it doesn’t happen anymore in future”. This happened to be the most commonality of everyone’s speech during the immediate meet of all the associations of Tamil film industry with accordance to the film ‘Jaggubhai’ illegally leaked on the internet.Sarath Kumar and Radhika, Rajnikanth, Kamal Hassan, KS Ravikumar, RB Chowdary, AR Murgadoss, Suriya, Cheran, Sathyajothi Thyagarajan, Rama Narayana and other members of production house, RK Selvamani, KRG, Lizzy Priyadarshan and many others were present for the occasion.Sarath Kumar came up with a touching speech stating that the pirates should understand the backbreaking jobs and sufferings undertaken by the technicians and artists during each and every filmmaking. Killing us mortally would’ve been a better option for them instead of committing such acts.Actor Surya was so spotted with a strained style of speaking as he was really shocked with such acts would doubtlessly stop the development of Tamil Cinema. Padmashree Kamal Haasan had hit the bull’s eye by pointing out the strong fact that money earned through pirated videos are donated for the funds to facilitate terror attacks.Superstar Rajnikanth was there to fill Sarath Kumar’s face with literal smile that this would indirectly lead to film’s success with lots of publicities bounded to it. But he requested the entire council members to take strict actions rather than appealing this to Chief Minister and other Government Officials as they can perceive this to one of their tasks and not as the main course…

ஷங்கரின் பரவசப்படுத்தும் புத்தாண்டு பரிசு - எந்திரன் விஷேஷ படங்களுடன் புதிய ப்ளாக்




















இந்த செய்தியை உங்களிடம் முதன்முதலில் பகிர்ந்துகொள்வதில் பெருமையடைகிறோம். வாய்ப்பு ஏற்படுத்தி தந்த நம் தள வாசகர் முத்துவிற்கு நம் மனமார்ந்த நன்றி!!!!
Film-making சார்ந்த நவீன தொழில் நுட்பத்தை தனது படங்களில் புகுத்தி தமிழ் சினிமாவை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ஷங்கர் என்றால் மிகையாகாது. கிராபிக்ஸை படங்களில் சரியாக பயன்படுத்துவது முதல் காமிரா ஆங்கிள்கள் வரை இவரது பிரம்மாண்டத்துக்கு இந்தியா சினிமாவில் ஈடு இணையில்லை. கடின உழைப்பு மற்றும் இடையறாத முயற்சி மூலம் ஷங்கர் இன்று இந்த நிலையைஅடைந்திருக்கிறார். இவருக்கு ரசிகர்கள் வைத்திருக்கும் செல்லப் பெயர் “இந்தியாவின் ஸ்பீல்பெர்க்”.

தனது படங்களின் சக்சஸ் ரேட் அதிகபட்சம் உள்ள இயக்குனரும் இவர் தான். இத்துனை சிறப்புக்கள் ஒருங்கே பெற்ற நம் இயக்குனர், வளர்ந்துவரும் நவீன தொடர்பு சாதனமான இண்டர்நெட்டை மட்டும் விட்டு வைப்பாரா என்ன? நம் எல்லோரது ஆவலை பூர்த்தி செய்யும் வகையில், தனது திரைப்படங்கள் மற்றும் தன்னை பற்றிய செய்திகளை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ள, இப்புத்தாண்டு முதல் ஒரு அசத்தலான அட்டகாசமான ப்ளாக்கை துவக்கியிருக்கிறார்.
(ஏற்கனவே அவர் www.directorshankar.com மற்றும் www.spictures.org என்ற தளங்களை துவக்கியிருந்தாலும், நம்முடன் ஒரு INTERACTIVE MODE க்கு வருவது இந்த புதிய ப்ளாக் www.directorshankaronline.com மூலமாகத் தான்.) அவருக்கு நம் தளம் சார்பாக வாழ்த்துக்கள்.
ப்ளாக்கின் அட்ராக்க்ஷனாக எந்திரன் படத்தின் சில ON-LOCATION ஸ்டில்ல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சூப்பர் ஸ்டார் எத்துனை இளமையாக இருக்கிறார் பாருங்கள்… தலைவருக்குள் இருக்கும் இளமையை வெளியே கொண்டுவந்து நமக்கு விருந்து வைத்தமைக்கு ஷங்கருக்குகோடி நன்றிகள்.

சரி, புதிய ப்ளாக்கில் முதல் பதிவில் அவர் தெரிவித்திருப்பது என்ன?
http://www.directorshankaronline.com/
எந்திரன் ஷூட்டிங் 90% முடிந்தது
“வணக்கம். நான் ஷங்கர் பேசுகிறேன். இப்போ தான் சக நட்சத்திரங்களுடன் எந்திரன் படத்துக்காக ஒரு சண்டைக் காட்சியை முடித்துவிட்டு பூனே & லோனோவாலாலிருந்து வருகிறேன். இத்துடன் எந்திரன் ஷூட்டிங் 90% முடிந்தது.
நான் இயக்கும் அனைத்து படங்களுக்கும் 24 மணிநேரமும் இடைவிடாது எனது கவனம் தேவைப்படுவதால், என்னை பற்றியும் எனது படங்களை பற்றியும் எனது விருப்பு வெறுப்புக்களை பற்றியும் தெரிந்துகொள்ள விரும்பும் என் ரசிகர்களுடன் என்னால் பேச முடிவதில்லை. அந்த குறையை இந்த ப்ளாக மூலம் போக்க முடிவு செய்திருக்கிறேன்.
நீங்கள் உங்கள் சந்தேகங்களை கேளுங்கள். என்னால் எப்பொழுதெல்லாம் முடிகிறதோ அப்பொழுதெல்லாம் பதில் கூறுகிறேன். அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.”
- ஷங்கர்.

“This is Shankar. Just back from Pune & Lonavala after finishing an action sequence with both my stars and with this I finished 90% of “Endhiran”
All the movies I direct demands 24 x 7 attention and I don’t get enough time or opportunity to interact with my audience, the film lovers who seek and wish to know about my movies, myself, my likings, my thoughts etc.,
I hope blogging will serve the purpose.
You ask I answer as and when it’s possible.
A VERY HAPPY NEW YEAR TO ALL!!!
- Shankar”

Related Posts Plugin for WordPress, Blogger...