
எந்திரன் படம் எப்பொழுது வரும் என்ற நமது பெரும்பாலானோரது ஏக்கத்திற்கு, கேள்விக்கு சூப்பர் ஸ்டாரே தமது சமீபத்திய கேரள பயணத்தின்போது பதிலளித்திருக்கிறார்.
எந்திரன் படத்தை விரைவாக முடிக்க வேண்டி, அதன் கிராபிக்ஸ் பணிகள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட இடங்களில் பிரித்தளிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவற்றில் ஒன்று சௌந்தர்யா ரஜினிகாந்தின் ஆக்கர் ஸ்டூடியோஸ். டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் சௌந்தர்யா இதை கூறியுள்ளார்.
இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கொழக்குட்டோம் Film and Video பார்க்கில் உள்ள, பிரசாத் லேப்பில் கூட எந்திரன் படத்திற்கான MOTION CAPTURING மற்றும் இதர கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகின்றன.
இதில் பங்கேர்ப்பதர்காக திருவனந்தபுரம் செல்வதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினி நேற்று முன்தினம் மாலை சென்னை விமான நிலையம் வந்தார். சிங்கார சென்னையின் போக்குவரத்து நெரிசலில் அவர் மாட்டிக்கொண்டு, சற்று தாமதமாக விமான நிலையம் சென்றார் சூப்பர் ஸ்டார். அதற்குள் அவர் பயணம் செய்யவிருந்த விமானத்தின் புறப்பாடு நேரம் நெருங்கிவிட்ட படியால் விமானத்தை தவறவிட்டார் சூப்பர் ஸ்டார். இதையடுத்து விமான நிலையமே பரபரப்படைந்தது. விமான நிலைய ஊழியர்கள் மூலம் விஷயம் ஊடகத்திற்கும் நாளிதழ்களுக்கும் தெரியவர, சூப்பர் ஸ்டார் விமனாத்தை தவறவிட்ட சம்பவம் தலைப்பு செய்தியானது. (மாலை சுடர் நாளிதழ் போஸ்டரில் மேற்ப்படி செய்தி இடம் பெற்றது. இது எப்படி இருக்கு?) ஆனால் சூப்பர் ஸ்டாரோ சிறிது அலட்டிக்கொள்ளாது, அடுத்த விமானத்தில் திருவனந்தபுரம் சென்றார் தலைவர்.
வெள்ளை சட்டையும் ஜீன்சும் அணிந்து தனியாளாக திருவனந்தபுரம் சென்று இறங்கிய ரஜினியை அடையாளம் கண்டுகொண்ட திருவனந்தபுர, விமான நிலைய ஊழியர்கள் ஏகப்பட்ட பேர், ஆர்வத்துடன் அவரை சுற்றி வளைத்து ஆட்டோகிராப் கேட்டபடி மொயத்துவிட்டனர். விமான நிலையத்தில் அவரை சூழ்ந்துகொண்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்த ரஜினி, பின்னர் அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். ரசிகர்களுடன் உற்சாகமாக பேசிய அவர், “நல்ல கதை, கதாபாத்திரம், இயக்குநர், தயாரிப்பாளர் கிடைத்தால் மலையாள படத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன். ‘எந்திரன்’ படம் ஜூலையில் ரிலீசாகும்” என்றார்.
கால் டாக்சியில் பயணம் செய்த சூப்பர் ஸ்டார்
சிறிது முகம் சுளிக்காது அனைவருக்கும் நிதானமாக ஆட்டோகிராப் போட்டு கொடுத்த தலைவர், பின்னர் அங்கிருந்து வாடகை கார் (CALL TAXI) மூலம் KINFRA PARK அமைந்திருக்கும் கொழக்குட்டோம் சென்றார். (தினத் தந்தி செய்தி இது). திருவனந்தபுரத்தில்ரிந்து சுமார் பத்து கி.மி. தொலைவில் உள்ள இந்த அதி நவீன தொழில்நுட்ப பூங்காவில் தான் பிரசாத் லேப் அமைந்துள்ளது.
‘எந்திரன்’ படத்தின் கிராபிக்ஸ் பணிகள், கின்ஃபிரா பிலிம் அண்ட் வீடியோ பார்க்கில் இயக்குநர் ஷங்கர் முன்னிலையில் கடந்த சில தினங்களாக நடந்து வருவது குறிப்படத்தக்கது. தற்போது மோஷன் கேப்சரிங் பணிகள் நடக்கிறது. ரஜினிகாந்தின் ஒவ்வொரு அசைவுகளையும் பல கேமராக்கள் மூலம் பதிவு செய்து, அனிமேஷன் காட்சிகளாக மாற்றப்பட்டன.
கின்ப்ராவிலும் ரசிகர்களின் அன்பு வெள்ளத்தில் சிக்கி தவித்தார் தலைவர். அங்கு பணிபுரியும் கம்ப்யூட்டர் வல்லுனர்கள் (Techies) ஏராளமானோருக்கு ஆட்டோகிராப் கேட்டு சூப்பர் ஸ்டாரை மொய்த்தனர். பலர் அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டனர்.
இதற்கப்புறம் தான் செய்தியே… இவர் KINFRA வில் இருப்பது தெரிந்து, ஏராளமானோர் KINFRA வுக்கு வெளியே திரண்டுவிட்டனர். (சுமார் 5000 பேர் என்று புள்ளி விபரம் தருகிறது SIFY.) செக்யூரிட்டிகளும் காவலர்களும் எத்தைனையோ கேட்டுக்கொண்டும் தலைவரை பார்க்காது நகர்வதில்லை என்பதில் உறுதியாக இருந்தனர் ரசிகர்கள். கடைசீயில் தலைவர் வெளியே வந்து கையசைத்த பின்பு தான் கூட்டம் கலைந்தது. கவனிக்க இது நடந்தது கேரள மாநிலத்தில். கேரளத்தை பத்தி தெரியுமில்லே? சினிமாவையோ ஷூட்டிங்கையோ நடிகர்களையோ பெரிதாக கண்டுகொள்ளாத மக்கள் உள்ள மாநிலம் அது. அங்கேயே தலைவருக்கு இப்படி என்றால்? காரணம் நடிகர், சூப்பர் ஸ்டார் என்ற நிலைகளையெல்லாம் தாண்டி அவர் எங்கோ சென்றுவிட்டது தான்.
நேற்று மாலை வரை பட பணிகளில் பங்கேற்றுவிட்டு, இரவு சென்னை திரும்பினார் சூப்பர் ஸ்டார்.
No comments:
Post a Comment