‘சிவாஜி வசூல் தான் டாப்பு’ மகதீரா தயாரிப்பாளர் ஒப்புதல் & கோவாவுக்கு ‘A’ - சூப்பர் ஸ்டாரின் கருத்து என்ன



1) ‘சிவாஜி’ தான் டாப்பு மத்ததெல்லாம் டூப்பு - மகதீரா தயாரிப்பாளர் ஒப்புதல்
சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் நடிப்பில் வெளியான ‘மகதீரா’ தென்னிந்தியா திரை வரலாற்றில் சிவாஜியின் சாதனையை முறியடித்துவிட்டதாக ஊடகத்தில் ஒரு பிரிவில் வெளியான செய்திக்கு, மகதீரா தயாரிப்பாளர் அல்லு சிரீஷே தனது வலைத்தளத்தில் மறுப்பு தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமா? சிவாஜி தான் இது வரை வெளியான படங்களில் அதிக பட்ச லாபத்தை வெளியீட்டாளர்களுக்கு ஈட்டி தந்தது எனவும் கூறியிருக்கிறார்.

Advance booking crowd at Udhayam for Sivaji
சிவாஜிக்கு பிறகு வெளியான வேறு சில நடிகர்களின் சில வெற்றிப் படங்கள்(?!) சிவாஜியின் வசூலில் கால்பங்கு கூட எட்டாத நிலையில், கற்பனையான எண்ணிக்கைகளை வசூல் கணக்காக கூறிக்கொண்டு தங்களை தாங்களே தேற்றிக்கொண்டனர் சிலர்.
இந்நிலையில் வெற்றிக்கான அளவுகோலாகவும், வசூலின் இலக்கணமாகவும் தமிழ் திரையுலகிற்கு மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிற்கும் சிவாஜியே இருப்பது திரு.அல்லு சிரீஷ் அவர்களின் இந்த ப்ளாக் வரிகளே சான்று. (அவர் ப்ளாக் வரிகளை இங்கு தந்திருக்கிறேன்!).
சிவாஜி வசூல் குறித்த உண்மையை பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்ட அல்லு சிரீஷ் அவர்களுக்கு நம் நன்றிகள்!!
———–You know what? Though Ghajini is the ‘highest grossing Indian film of all time’,its not the biggest money spinner in India? Rajinikanth’s Sivaji is. The movie’s share from both languages (Tamil and Telugu) is 64 crores. Till 3 Idiots arrived, this movie holds the number one spot in actual revenues. Our very own telugu film Magadheera amassed a share of Rs 58 crores. Wondering how South Indian films are able to generate revenues matching that of Hindi cinema, despite having a far lesser reach? My next article on how Southern cinema (esp Telugu) is a goldmine that needs to be tapped.———–
http://www.allusirish.in/2010/01/indian-govt-ghajini-profit-boxoffice-101/
(ரொம்ப சவுண்ட் உடுற பார்டிகள் முதல்ல சிவாஜி அட்வான்ஸ் புக்கிங் ரெக்கார்டை ஈக்வல் பண்ண முடியுமான்னு பாருங்க)
2) கோவாவுக்கு ‘A’ - சூப்பர் ஸ்டாரின் கருத்து என்ன?
‘கோவா’ திரைப்படம் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர் மாணவியரிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கிட்ட தட்ட கோவா ஜூரம் அனைவரையும் பிடித்திருக்கிறது என்றால் மிகையாகாது. வெங்கட் பிரபு நிச்சயம் இதன் மூலம் ஹாட்-ட்ரிக் அடிப்பார் என்பது உறுதி. (படம் நம்மை போல இளைஞர்களுக்கானது என்பதால் வரும் சனிக்கிழமையே பார்த்துவிடுவது என முடிவுசெய்திருக்கிறேன்!!)

இந்நிலையில் கோவா படத்துக்கு ‘A’ சான்றிதழ் கிடைத்தது குறித்து கோவா டீம் பெரிதாக அலடிக்கொள்ளவில்லை. மிகவும் கேசுவலாக இருக்கிறார்கள். சரி, இது பற்றி சூப்பர் ஸ்டாரின் கருத்து என்னவாக இருக்கும் என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறீர்கள் அல்லவா?
குடியரசு தினத்தன்று (Jan 26) அன்று ஒளிபரப்பான தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெங்கட் பிரபு இது பற்றி கூறியதாவது: படத்துக்கு சென்சார்ல ‘A’ சர்டிபிகேட் கிடைச்சதை பத்தி சூப்பர் ஸ்டார் கிட்டே சொன்னோம். அவரு, “டோன்ட் வொரி. ‘கோவா’ன்னு பேர் வெச்சிட்டு அதுக்கு ‘A’ சர்டிபிகேட் கிடைக்கலேன்னா அது தான் அதிசயம். கிடைச்சது அதிசயம் இல்லே. தவிர ‘GOA’ ன்ற பேர்லயே ‘A’ இருக்கே…!!” ன்னு அவரு ஸ்டைல்ல சிரிச்சிக்கிட்டே சொன்னாரு. அவர் சொல்றது உண்மை தானே… மொத்தத்துல நம்ம பாணில இது ஒரு ‘A CLASS ENTERTAINER’.” என்று சொல்லி முடித்தார் வெங்கட் பிரபு.
(All the best Venkat Prabu சார் & Goa team.)
3) “எந்திரனுக்கு பிறகு தான் சுல்தான் ரிலீஸ்” - சௌந்தர்யா
மீடியாவின் ஒட்டுமொத்த அட்ராக்ஷன் இப்போ சௌந்தர்யா ரஜினி தான். சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் காதலுக்கு கௌரவம் சேர்ப்பவர் தான் சூப்பர் ஸ்டார். இருவீட்டாரும் கலந்து பேசி வரும் பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி நிச்சயத்திற்கு நாள் குறித்துவிட்டார்கள்.
இந்நிலையில் Times of India நாளிதழுக்கு சௌந்தர்யா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “எனக்கேற்ற என்னை புரிந்துகொண்ட சரியான நபர் அஸ்வின். அஸ்வினின் பெற்றோரும் என் பெற்றோரும் ஏற்கனவே குடும்ப நண்பர்கள் தான். எனவே இது வீட்டார் ஏற்பாடு செய்யும் ஒரு காதல் திருமணம். நான் பேசிக்களாகவே ஒரு ப்ரைவேட் பர்சன். என் அலுவலகத்தில் இல்லையென்றால் என் வீட்டிலோ அல்லது நண்பர்களுடனோ இருப்பேன். வேறெங்கும் என்னை பார்க்கமுடியாது.
திரைத்துரையே சேர்ந்த ஒருவரை மணமுடிக்க நான் விரும்பியதே கிடையாது. நான் என் சொந்த பிஸினசில் இருப்பதால், என்னை போலவே என்னவரும் பிசினஸ் துறையில் இருக்கவேண்டும் என்று விரும்பினேன். அப்பாவுக்கு என் சாய்ஸ் இரட்டிப்பு மகிழ்ச்சி.
திருமணம் எப்பொழுது என்று இப்போ கூற இயலாது. அதை பெரியோர்கள் தான் முடிவு செய்து அறிவிக்கவேண்டும். ஆனால் நிச்சயமாக இந்த ஆண்டுக்குள் இருக்கும் என்று கூறமுடியும். இப்போதைக்கு அவர் என்னிடம் தன் காதலை சொன்னபொழுது எனக்கு பரிசளித்த மோதிரத்தை ரசித்து கொண்டிருக்கிறேன்.
எந்திரனுக்கு பிறகு தான் சுல்தான்: தவிர, என் திருமணத்தை தவிர என் மனதை வேறு சில விஷயங்கள் இப்போதைக்கு ஆக்கிரமித்துள்ளன. ஒன்று கோவா. அதற்கடுத்து எந்திரன் படத்துக்கான கிராபிக்ஸ் பணி. எந்திரன் கிராபிக்ஸ் எனது ஆக்கர் ஸ்டுடியோவில் தான் நடைபெறவுள்ளது. எனது முதல் படமான சுல்தானை அப்பாவின் எந்திரனுக்கு பிறகு தான் ரிலீஸ் செய்வேன். பிறகு, கௌதம் மேனனுடன் அடுத்து ஒரு படத்துக்கான ஒப்பந்தம் ஒன்று செய்யவிருக்கிறேன். தவிர வேறொரு படத்திற்காக புனீத் ராஜ்குமாருடனும், இயக்குனர் ப்ரேமுடனும் பேச்சு நடந்து வருகிறது.
(’கோவா’ படத்தை அஸ்வின் பாத்துட்டாரா ? என்ன சொன்னாரு?)
4) முதல்வருக்கு பாராட்டு விழா : சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் கமல் உள்ளிட்டோர் பங்கேற்பு
திரைப்பட துறையினருக்கு 90 ஏக்கர் நிலம் ஒதுக்கிய முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு வருகிற பிப்ரவரி 6-ந் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடக்கிறது. முதல்வருக்கு நடக்கும் இந்த பாராட்டுவிழாவில் பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.
விழா ஏற்பாடுகள் விறு விறுப்பாக நடந்து வருகின்றன. நடிகர், நடிகைகளின் நடனம், கலைநிகழ்ச்சிகள், நாடகம், பாடல், பிரபல இசையமைப்பாளர்களின் இசை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறுகின்றன. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பெப்சி, தியேட்டர் அதிபர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் உள்ளிட்ட திரையுலகின் அனைத்து சங்கத்தை சேர்ந்தவர்களும் இதில் கலந்து கொள்கின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல், அஜீத், விக்ரம், நயன்தாரா, திரிஷா, ஸ்ரேயா போன்ற முன்னணி நடிகர், நடிகைகள் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களும் பங்கேற்கின்றனர். இதற்காக 6-ந் தேதி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன. நட்சத்திரங்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் இதில் கலந்துகொள்வதன்பொருட்டு இந்த மாத இறுதியில் இருந்து பிப்ரவரி 6 ஆம் தேதி வரை வெளிநாட்டு படப்பிடிப்பு எதையும் வைத்துக்கொள்ளவேண்டாம் என திரை துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது பற்றி பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் கூறியதாவது:-
“திரையுலகினரின் 20 ஆண்டுகால நிறைவேறாத கனவை முதல்-அமைச்சர் கலைஞர் நிறைவேற்றி இருக்கிறார். விலை உயர்ந்த ஓ.எம்.ஆர். ரோட்டில் நிலம் ஒதுக்கி கொடுத்துள்ளார். நான் தலைவராக பொறுப்பேற்று முதல்வரை சந்தித்ததும் இது பற்றி கோரிக்கை வைத்தேன். ஓரிரு மாதங்களிலேயே அரசாணை வெளியிட்டு நிலம் ஒதுக்கி விட்டார். தனிப்பட்ட முறையில் அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஒட்டுமொத்த திரையுலகமும் இணைந்து அவருக்கு பாராட்டு விழா நடத்துகின்றன. அனைத்து நடிகர் நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என திரையுலகை சார்ந்த பலரும் கலந்து கொள்கின்றனர். கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.” இவ்வாறு அவர் கூறினார்.
(இந்த விழாவுல தலைவரோட பேச்சை கேட்க இப்போவே ரொம்ப ஆவலாயிருக்கு…)
5) ரசிகரின் குடும்பத்திற்கு தலைவர் அளித்த இன்ப அதிர்ச்சி
சென்ற வாரம் நடந்தது இது.
உங்கள் குடும்பத்துடன் நீங்கள் காரில் போய்கொண்டிருக்கும்போது, அருகே சூப்பர் ஸ்டாரின் கார் கடந்து சென்றால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அப்படி ஒரு அனுபவம் சமீபத்தில் ஏற்பட்டது நம் ரசிகர் ஒருவருக்கு.
சென்னை நகரின் பிசியான போக்குவரத்தில் நீந்தியபடி நம் ரசிகர் ஒருவர் தன் குடும்பத்துடன் வேனில் வெளியூர் போய்கொண்டிருக்கிறார். வாகனம் தேனாம்பேட்டையை கடக்கையில் அவர்களை முந்தி சென்றது ஒரு TAVERA. ஏதோ ஒன்று நம் ரசிகருக்கு பொறி தட்ட - அந்த வாகனத்தை உற்று பார்க்கிறார். வாவ்…. ஆம்… சூப்பர் ஸ்டார் அந்த வேனில் !! சந்தோஷம் பிடிபடவில்லை அந்த ரசிகருக்கு. அந்த வேனை ஒட்டி சீக்கிரம் செல்லும்படி டிரைவரை கேட்டுக்கொள்ள, அவரும் அவ்வாறே லாவகமாக ஓட்டுகிறார். கடைசீயில் சைதாபேட்டை சிக்னல் அருகே சூப்பர் ஸ்டாரின் வாகனத்திற்கு அருகே இவர்கள் வாகனம் நிற்க, நம் ரசிகரின் குடும்பத்திற்கு, “அதோ பாருங்க… தலைவரை…” என்று உள்ளே புத்தகம் எதையோ படித்துக்கொண்டிருந்த சூப்பர் ஸ்டாரை காட்ட, இவர்கள் உற்சாகத்தில், “ஐ… ரஜினி உட்கார்ந்திருக்காரு பாருங்க….” என்று கூக்குரலிட, இவர்களை ஒரு கணம் பார்த்த சூப்பர் ஸ்டார் சிரித்தபடி உடனே இருகரங்களையும் தூக்கி வணக்கம் வைக்க, இவர்களின் உற்சாக கூக்குரல் அதிகமானது. இதற்குள் சிக்னலில் க்ரீன் விழ, அருகிலிருந்த மற்ற வாகனத்தினர் என்ன நடக்கிறது என்று யூகிக்கும் முன்னர், சூப்பர் ஸ்டாரின் வாகனம் வேகமெடுத்து போக்குவரத்தில் மறைந்தது.
மீனம்பாக்கம் அருகே நடைபெறும் ‘எந்திரன்’ ஷூட்டிங்கிர்க்கோ அலது ஏற்போர்ட்டுக்கோ தலைவர் அப்போது போயகொண்டிருந்திருக்கலாம் என தகவல்!!
(அந்த குடும்பத்தினர் அன்று அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை. கேக்குற நமக்கே இப்படி இருக்கே, அவங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?)

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...